திங்கள், 16 ஜனவரி, 2012
பராக் ஒபாமா - (புதைந்து கிடக்கும் மர்மங்கள்)
ஞாயிறு, 15 ஜனவரி, 2012
இரவானால் இருளில் மூழ்கும் அல்லாஹ்வின் இல்லம்
எமது பிரதேசத்திலுள்ள மஸ்ஜிதுகளுள் ஒன்றான, OXFORD சர்வதேச பாசாலைக்கு அருகிலுள்ள, மஸ்ஜிதுல் ஹிக்மா பள்ளிவாயல் இரவானால் இருளில் மூழ்கி விடுவதாகவும், அதற்கு ஒளியூட்டுவதற்கு அப்பகுதி வாழ் மக்களில் எவரும் முன்வராதிருப்பது குறித்தும் மக்கள் விசனப்படுகின்றனர்.
ஏழைகள் திலகம் நஜீம் நானா வழங்கும் கல்விச் சகாய நிதி
அத்தனகல்ல பிரதேச சபையில் எமது ஊரைப் பிரதிநிதித்துவப் படுத்துகின்ற ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர், ஏழைகளின் தோழன், ஜனாப் நஜீம் நானா அவர்கள் வழங்கியிருந்த தேர்தல் வாக்குறுதிக்கு ஏற்ப, தனது மாதாந்த சம்பளத்தை வறிய மாணவர்களுக்கு வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்தை ஆரம்பித்து வைத்துள்ளார்.
இதன் முதல் கட்ட நிகழ்வு சமீபத்தில் ஹொரகொல்ல கிராமத்தில் இடம்பெற்றது. இப்பிரதேசத்தைச் சேர்ந்த எம்.எஃப்.எம். ஸாஜித் என்பவரே இந்நிகழ்ச்சித் திட்டத்தின் மூலம் நஜீம் நானாவின் உதவு தொகையைப் பெற்றுக் கொண்ட முதல் மாணவராவரர்.
இந்த நிகழ்வையே மேலேயுள்ள புகைப் படத்தில் நீங்கள் காண்கிறீர்கள்.
இவரது இந்த உதவு தொகை எதிர்வரும் நான்கு வருடங்களுக்கு, ஒவ்வொரு மாதமும் ஐந்து மாணவர்களுக்கு தலா ரூபா 1000 வீதம், தொடராக வழங்கப்பட இருப்பதாக நஜீம் நானா பளிச்சிடம் தெரிவித்தார்.
வாழ்க நஜீம் நானாவின் கல்விப் பணி!
சனி, 7 ஜனவரி, 2012
இலங்கையில் இஸ்லாம்
இலங்கையில் இஸ்லாம் பரவியமை பற்றியும், இலங்கை முஸ்லிம்கலளின் ஆரம்பகால வரலாறு பற்றியும் அறிவதற்குத் துனணயாகக் கூடிய ஆதார நூல்கள் மிகக் குறைவாகவவே உள்ளன. மிக அண்மைகாலம் வ்ரை இலங்கை முஸ்லிம்கள் தம் வரலாறு பற்றி அறியக்கூடிய தகவல்களைப் போதியளவு விட்டுச்செல்லவில்லை. இதனால் அரபுப் பிர்யாணிகளின் குறிப்புகள், சிங்கள இலக்கியங்கள், ஐரோப்பிய ஆட்சியாளர்கள் விட்டுச்சென்ற தகவல்கள் என்பன கொண்டே இலங்கை முஸ்லிம்களின் வறலாற்றைக் கட்டி எழுப்ப வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக ஆரம்பகால முஸ்லிம்களின் வரலாற்றை அறிய அறபுப் பிரயாணிகள் விட்டுச்சென்ற குறிப்புக்களே பெரிதும் உதவுகின்றன.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)

