- இபாதத் பற்றிய விளக்கம்
“அபத” என்ற வினையடியில் தோன்றியதே “இபாதா” எனும் பதமாகும்.
- “அப்து” என்பதற்கு அடியான், ஊழியன், பணியாளன், அடிமை என்று பொருள்.
- எனவே இபாதா என்பது அடிபணிதல், பணிபுரிதல், ஊழியம்
செய்தல், அடிமையாக இருத்தல் முதலாம் கருத்துக்களை மொழி ரீதியாக குறித்து நிற்கும்.
- இஸ்லாமிய ஷரீஅத் கண்ணோட்டத்தில் இபாதா எனும் இப்பதத்திற்குப் பின்வருமாறு விளக்கமளிக்கலாம்.
- இஸ்லாத்தைப் பின்பற்றி வாழ்கின்ற ஒரு முஸ்லிம் அல்லாஉற்வின் கட்டளைக்கு முற்றுமுழுதாக அடிபணிந்து, வழிபட்டு நடத்தலாகும்.
- ஒருவன் ஓர் எஜமானுக்கு அடிமையாக இருந்தால் அவனிட்ட பணியை சிரமேற்தாங்கிச் செயலாற்றுவது அவன் மீது கடமையாகும்.
- மனிதர்கள் இறைவனின் படைப்புக்கள், அவனின் அடியார்கள் என்ற வகையில் தம்மைப் படைத்துப் பரிபாலிக்கும் இறைவனின் கட்டளைக்குச் சிரம் பணிந்து நடப்பது அவர்களின் கடமையாகும்.
- இதனால் இறைவனும் தனக்கு இபாதத் செய்வதைத் தவிர்த்து வேறு எந்த நோக்கிற்காகவும் தான் மனிதனை படைக்கவில்லை என்று அல்குர்ஆனில் குறிப்பிடுகிறான்.
- என்னை வணங்கி வழிபடுவதற்காகவே (இபாதத் செய்வதற்காகவே) அன்றி நான் ஜின்களையும், மனிதர்களையும் படைக்கவில்லை. (51 : 56)
- மனிதன் படைக்கப்பட்ட நோக்கத்தை உறதீஸ் குத்ஸி ஒன்று பின்வருமாறு குறிப்பிடுகிறது.
- என் அடியார்களே நிச்யமாக நான் உங்களைக்கொண்டு என் தனிமையைப் போக்கிக்கொள்ளவோ, படைப்பினங்களின் தொகையை அதிகரிக்ககவோ, என்னால் இயலாமல் போன ஒரு செயலில் உங்களின் உதவியைப்பெறவோ, ஒரு நன்மையைக் கொண்டு வரவோ, ஒரு தீமையைத் தடுக்கவோ உங்களைப் படைக்கவில்லை. ஊங்களைப் படைத்ததெல்லாம் நீங்கள் என்னை வணங்கிக்கொண்டே இருக்கவேண்டும் என்பதற்காக, அதிகமாக என்னை நினைவுபடுத்துவதற்காக
- இபாதத் எனும் பதத்துக்கான அடிப்படை விளக்கமொன்றை மௌளானா மௌதூதி பின்வருமாறு குறிப்பிடுவது நோக்கத்தக்கது.
- ஒருவனின் மேம்பாட்டுக்கும் அதிகாரத்துக்கும் மனிதன் கட்டுப்படுவதே இபாதத் ஆகும். இறைவனுக்காக மனிதன் தன் முழுச் சுதந்திரத்தையும் முழுமையாக விட்டுக்கொடுப்பான். அவனுக்கு முன்னால் தன் அனைத்து எதிர்ப்புக்களையும் முரண்பாடுகளையும் கைவிட்டுவிட்டு உள்ளத்தின் நிறைவான நன்றியுணர்வோடு அவனுக்கு வழிப்படுபவனாக இருப்பதுடன். உள்ளத்தளவிலும் பணிவுள்ளவனாகத் திகழ்வான்.
- அறிஞர் இப்னு தைமியா அவர்கள் இபாதா என்ற பதத்தை மிகவும் விரிவாகவும் ஆழமாகவும் நோக்கியுள்ளார்கள்.
- அவர்களது கருத்துப்படி அடிப்படையில் அல்லாஉற்வுக்கு வழிப்படுதல் (தாஅத்), அடிபணிதல் (குழூஃ) முதலாம் அம்சங்களை உள்ளடக்கிய இபாதாவானது ஹுப்பு எனப்படும் இறைநேசத்தையும் கொண்டிருத்தல் வேண்டும்.
- இறைவன் மீது அன்பு செலுத்திய நிலையில் மேற்கொள்ளப்படும் இபாதாவே உயிரோட்டம் மிக்கதாய் அமையும் என்றும், இபாதாவோடு இணைந்த இறைநேசம் பற்றியும் அறிஞர் தைமியா அல் உபூதிய்யா எனும் தனது நூலில் மிகச் சிறப்பாக விளக்கியுள்ளார்.
- இறைவனுக்கு முற்றிலும் அடிபணிந்து முழுமையான இறை அன்புடன் மேற்கொள்வதே இபாதாவாக அமையும் என்பதனையும் இறைநேசமும் பணிவுமின்றி மேற்கொள்ளப்படும் எந்தச் செயலும் இபாதாவாக அமையமாட்டாது என்பதனையும் இக்கருத்தினூடாகப் புரிந்து கொள்ள முடிகிறது.
- இபாதா பற்றிய இந்தப் பரந்த கண்ணோட்டத்தின் அடிப்படையில் இபாதாவானது முக்கிய இரு அம்சங்களைக் கொண்டதாக அமைந்துள்ளதைக் காணலாம்.
- இறைவன் விதித்ததும் அவனது தூதர் காட்டியதுமான வழியைபின்பற்றி வழிப்படல்
- இறை நெறியைப் பின்பற்றுவதில் இறை நேசத்துடனும் உள விருப்பத்தோடும் செயற்படுதல்.
- தொடர்ச்சியான அன்பின் அல்லது நேசத்தின் இறுதி விளைவே பணிவும் கீழ்ப்படிவுமாகும்.
- ஆரம்பத்தில் அன்பு ஏற்பட்டு அதனைத் தொடர்ந்து அன்பு கொண்டவர் மீது கீழ்ப்படிவோடு நடப்பதே ஒழுங்கானதும் சரியானதுமான வழிமுறையாகும்.
- இந்த நேசம் கலந்த அன்பையே இபாதாவும் வேண்டி நிற்கின்றது என்பதை அல்குர்ஆன் மிகத் துல்லியமாக விளக்குகிறது.
- (நபியே) நீர் கூறும், உங்களது தந்தைமாரும் பிள்ளைகளும் சகோதரர்களும் மனைவிமாரும் குடும்பத்தாரும் நீங்கள் திரட்டிய செல்வங்களும், நஷ்டம் வந்துவிடுமா என்று நீங்கள் அஞசுகின்ற உங்களது
வியாபாரமும், நீங்கள் திருப்தியோடு வசிக்கும் உங்களது வீடுகளும் அல்லாஉற்வையும் அவனது தூதரையும் அவன் பாதையில் அறப்போர் புரிவதைவிடவும் உங்களுக்கு மிகவும் விருப்புக்குரியனவாக அமையுமானால் வெகு சீக்கிரத்தில் அல்லாஉற்வுடைய சோதனை உங்களை வந்தடையும் என்பதை எதிர்பார்த்திருங்கள். (9 : 24)
- இக்கருத்தை நபியவர்கள் பின்வருமாறு வலியுறுத்துகிறார்கள்.
- உங்களில் அல்லாஉற்வையும் அவனது தூதரையும் தவிர வேறு எவனையும் நேசிப்பவர் ஈமான் கொண்டவராக ஆக மாட்டார். (முஸ்னத் அஉற்மத்)
- இதனையே சமகால இஸ்லாமிய அறிஞர் யூஸப் அல் கர்லாவி பின்வருமாறு குறிப்பிடுகிறார்கள்.
- இஸ்லாத்தில் இபதாவானது முக்கிய இரண்டு அடிப்படைகளைக் கொண்டுள்ளது. அல்லாஉற்வை முற்றிலும் நேசித்த நிலையில் அவனை வழிப்படுவதே அவை இரண்டுமாகும். (அல் இபாதா பில் இஸ்லாம்)
- பேரறிஞர் இமாம் கஸ்ஸாலி அவர்கள் தனது இஉற்யாவில், “முஸ்லிம் சமூகமானது அல்லாஉற்வின் மீதும் அவனது தூதர் மீதும் நேசம் வைப்பது கடமையாகும் என்பதை முஸ்லிம் சமூகம் ஏற்றுக் கொண்டுள்ளது” என இபாதா பற்றிக் குறிப்பிடுகிறார்கள்.
- இபாதத்தின் அடிப்படை அல்லாஉற்வை நேசித்தல் ஆகும். அதாவது அவனைத் தவிர வேறு எவரையும் நேசிக்காமல் அவனை மாத்திரமே நேசித்தல் இபதாவாகும் என இமாம் இப்னுல் கையும் மதாரிஜுஸ் ஸாலிகீனில் வலியுறுத்துவது நோக்கத்தக்கது.
- இந்த இறையன்பு அல்லது இறை நேசம் ஒருவனில் தோன்றுவதற்கு அவன் தன் மீது இறைவன் சொரிந்துள்ள அருட்கொடைகளை உணர்வது அவசியமாகும்.
- மனிதனது இந்த உணர்வுக்கு ஏற்பவே அவனது இறைநேசமும் வித்தியாசப்பட்டிருக்கும்.
- இபாதத் செய்தல், வழிப்படுதல் என்பதன் கருத்து ஒருவன் தான் மேற்கொள்ளும் வணக்கங்களை ஆசையோடும் விருப்பத்தோடும் நிறைவேற்றுதல் என்பதாகும். இதன் போது அவன் எதிர் நோக்கும் சகல இடர்பாடுகளையும் தியாக உணர்வோடு சகித்துக்கொள்வானே தவிர அதனால் உண்டாகும் சிரமங்களை ஒரு பொருட்டெனக் கருதமாட்டான்.
- இஸ்லாத்தில் இபாதாவின் தளம் மிகவும் விரிந்ததாகும். இந்த வகையில் அல்லாஉற் விரும்புகின்ற உள்ரங்கமானதும், வெளிரங்கமானதுமான அனைத்து அம்சங்களயும் உள்ளடக்கியதே இபாதாவாகும்.
உதாரணமாக,
- கடமையான வணக்கங்களுடன் உண்மை பேசுதல், விசுவாசமாக நடத்தல், பெற்றோருக்கு உபகாரம் செய்தல், வாக்குறுதியை நிறைவேற்றல், நன்மையை ஏவித் தீமையைத் தடுத்தல், இறைவழியில் போராடுதல், அயலார், அநாதைகள்,ஏழை, வழிப்போக்கர், மனிதனல்லாத இதர ஜீவராசிகள் மீது இரக்கம் காட்டுதல், பரார்த்தனை செய்தல், அல்குர்ஆன் பாராயணம் செய்தல், அல்லாஉற்வின் மீதும் அவன் தூதர் மீதும் நேசம் கொள்ளல், இறையச்சம், தவக்குல், செயற்பாடுகளில் தூய்மையான எண்ணம் கொள்ளல், இறைவனது ஏற்பாட்டில் சகிப்புத் தன்மை காட்டல், இறையருக்கு நன்றி செலுத்துதல், அவனது அருளில் அபிலாசை லைத்தல்.
- இவ்வாறு இபாதத்தின் பரப்பெல்லை பரந்து, விரிந்து விசாலித்து நிற்கின்றது என அல்லாமா இப்ன் தைமியா விளக்கமளிக்கின்றார்கள்.
- இறைச்சட்டங்களுக்குக் கட்டுப்பட்டு நடப்பதும் இபாதாவாகும். இதனை அல்குர்ஆன் பின்வருமாறு குறிப்படுகிறது.
- அல்லாஉற்வும் அவனது தூதரும் ஒரு விடயத்தைப்பற்றிக் கட்டளையிட்டால் அவ்விடயத்தில் வேறு அபிப்பிராயம் கொள்வதற்கு உங்களில் எவருக்கும் அதிகாரம் இல்லை. (23:36)
- இஸ்லாத்தின் பார்வையில் சமூக மேம்பாட்டுக்காக உழைப்பதும் இபாதாவாகும்.
உதாரணமாக,
- கவலையிலுள்ள ஒருவனின் கண்ணீரைத் துடைத்தல்
- பசித்தவனுக்கு உணவளித்தல்
- அநீதி இழைக்கப்பட்டவனுக்கு உதவுதல்
- அறிவீனனுக்குக் கற்பித்தல்
- இக்கருத்தை வலியுறுத்தும் வகையிலேயே நபியவர்களின் பின்வரும் உறதீஸ் அமைந்துள்ளமை நோக்கத்ததக்கது.
- “நல்ல வார்த்தை மொழிதலும், சகோதர மனிதனின் முகத்தைப் பார்த்துப் புன்னகைப்பதும் ஸதகாவாகும்.”
- இஸ்லாம் எடுத்தியம்பும் இபாததாவானது வெறுமனே மறுமையோடு தொடர்புடையதாக மட்டுமன்றி உலகியலோடும் தொடர்புடையதாய் அமைந்துள்ளமை அதன் தனிச்சிறப்பம்சமாகும்.
- இதனை நபியவர்கள் பின்வருமாறு குறிப்பிட்டார்கள்.
- “ ஈமான் 60 அல்லது 70க்கும் மேற்பட்ட கிளைகளைக் கொண்டதாகும். அவற்றில் “லாஇலாஉற இல்லல்லாஉற்” என்பது மிகவும் உயர்ந்ததாகும். அதன் குறைந்த தரம் பாதையில் கிடக்கும் துன்பம் தரும் பொருளை அகற்றி விடுவதாகும்.” (புகாரீ)
- இவ்வாறு உலகியற் செயற்பாடுகள் இபாதத்தில் இழையோடி இருப்பதால் அவ்வாறான உலகியற் செயற்பாடொன்று “இபாதத்” எனும் பெறுமானத்தைப் பெறுவதற்கு கீழ் வரும் நிபந்தனைகளுக்கு அது உட்பட்டிருக்க வேண்டும் என இஸ்லாமிய அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர்.
- குறித்த செயல் ஷரீஆவின் அங்கீகாரத்தைப் பெற்றிருத்தல் வேண்டும்
- அதில் தூய எண்ணம் பிரதிபலிக்க வேண்டும்.
- குறித்த அந்த செயற்பாட்டை முடிந்தளவு நேர்த்தியாகவும் ஒழுங்காகவும் சிறப்பாகவும் செய்தல்.
- இந்த உலகியல் செயல்பாட்டை மேற்கொள்ளும்போது இறைவன் விதித்த வரையறைகளை மீறாமல் முற்றாக பேணிக் கொள்ளுதல்.
- அடிப்படை வணக்கங்களுக்கு அல்லது கடமைகளுக்கு தடைப்பாடுகளை அல்லது இடைஞ்சல்களை ஏற்படுத்தும் வகையில் குறித்த உலகியல் செயல்பாடு அமையக் கூடாது.
- இபாத்துகள் எனப்படுபவை எவ்வாறு முழு மனித வாழ்வையும் உள்ளடக்கியிருக்கின்றனவோ முற்றிலும் அதுபோலவே அவை சிந்தனையின் அடியாகப் பிறக்கின்ற மனித நிலைப்பாடுகளையும் தன்னகத்தே சுமந்துள்ளன.
- இதனையே நபியவர்கள், “ஓர் இரவு நின்று வணங்குவதை விட அல்லாஉற்வின் படைப்புக்களைப் பற்றி ஒரு கணம் சிந்திப்பது சிறந்ததாகும்” எனக் குறிப்பிட்டார்கள்.
உஷாத்துணைகள்
1. ஜவாத் முஉறம்மத்,எம் , இபாதத், கிலாபத், இமாரத் ஆகியவற்றுக்கிடையே மனித வாழ்க்கை, அல் ஜாமிஆ 1995 (பக்கம் 55 )
2. தூது சஞ்சிகை, ஜுலை – செப்டெம்பர் 1992.
3. கைருல் பஷர், எச்.ஐ., வாழ்வும் வழிபாடும், அல் ஜாமிஆ 1992
4. இஸ்லாம், க. பொ. த. உயர்தரப் பரீசக்கான வழிகாட்டல்கள், வெளியீடு தேசிய கல்வி நிறுவகம், மஉறரகம
5. அக்ரம், முஉறம்மத், நடைமுறைக்கேற்ற இஸ்லாம், பாகம் 2ஸ
6. மௌதூதி, அபுல் அஃலா குத்பாப் பேருரை, இஸ்லாமிய நிறுவனம் ட்ரஸ்ட், சென்னை 78
By : MSM BOOSARY B.A. (Hons) Cey - Sp. in Islamic Civilization
Tel : 071 820362, 033 3332604
E-mail : mbshaishoumaz@gmail.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக