வியாழன், 28 ஏப்ரல், 2011

'யஹபத் பாஸல'

இது, 'மாணவர்களுக்கு சகல வசதிகளுடனும் கல்வியயை வழங்குவதற்காக' என்ற அறிவிப்புடன் அரசாங்கம் அறிமுகப்படுத்துகின்ற புதிய கல்வி முறை.

இதன்படி, நாட்டில், 'யஹபத் பாஸல' என்று அழைக்கப்படும் 1000 பாடசாலைகள் இருக்கும்.

ஆறாம் வகுப்புக்கு மேற்பட்ட அனைவரும் இந்தப் பாடசாலைகளிலேயே படிக்க வேண்டும்.

இந்தப் பாடசாலைகளில் இஸ்லாம், சைவம், பௌத்தம், கத்தோலிக்கம் என்ற வேறுபாடுகளோ, அல்லது ஆண் , பெண் என்ற வேறுபாடுகளோ இருக்காது. அனைவரும் ஒன்றாகவே கற்க வேண்டும்.

எனவே, பெரும்பாலான சந்தர்ப்பங்களில், ஆறாம் வகுப்புக்கு மேற்பட்ட மாணவர்கள் ஊரை விட்டு வெளியே செல்ல வேண்டி ஏற்படும்.

அத்துடன், எமது ஊர்ப் பாடசாலைகள் வெறும் Primary பாடசாலைகளாக மாறக்கூடிய வாய்ப்புகள் இருக்கின்றன.

பருவ வயது மாணவ, மாணவிகள்தான் வெளியே செல்ல வேண்டி ஏற்படுகிறது.

இது எமக்கு ஒழுக்கம் சார்ந்த பிரச்சினைகளையும், பதுகாப்பு சார்ந்த பிரச்சினைகளையும் மற்றும் பொருளதாரம் சார்ந்த பிரச்சினைகளையும் நிச்சயமாகத் தோற்றுவிக்கும்.

வளர்ந்து வருகின்ற எமது ஊரின் கல்வியில், அரசின் இந்தத் தீர்மானங்கள் எந்தளவு பாதிப்பை ஏற்படுத்தும்?

சற்று யோசியுங்கள்......................!
 

சனி, 23 ஏப்ரல், 2011

குழந்தைக்குப் பாடம் சொல்லிக் கொடுப்பதெப்படி?

குழந்தைக்குப் பாடம் சொல்லிக் கொடுக்க வேண்டுமா?

குழந்தைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கிறதுக்குள்ள போதும் போதும்ன்னு ஆயிடுது. வெகு சகஜமாக அம்மாக்கள் சலித்துக் கொள்வது இது. குழந்தைகளுக்கு எதையாவது கற்றுக் கொடுப்பது ஒரு மாபெரும் கலை. சில அம்மாக்கள் அதில் வெகு கெட்டிக்காரர்கள். பல அம்மாக்களுக்கு அந்த சூட்சுமம் பிடிபடுவதில்லை. குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுப்பதைப் போல சுவாரஸ்யம் வேறு எதிலும் இல்லை. "அம்மா.." என குழந்தை மழலை வாயால் அழைக்கும் போது சிலிர்க்காத அம்மாக்கள் இருக்கவே முடியாது.

சீரழிக்கும் சீரியலும் சினிமாவும், சீரழியும் முஸ்லிம் சமூகமும்.

‘(நபியே!) தங்களது பார்வையைத் தாழ்த்திக் கொள்ளும் படியும், தங்களது வெட்கஸ்தலங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் படியும் கூறுவீராக!’ (24:31)
மனிதர்களால் உணரப்படாத மற்றும் அதிகமாக புரியப்படுவதுமான பெரும் பாவங்களுள் ஒன்றான இந்த சீரியல், சினிமாவைப் பற்றி

இஸ்லாமிய சினிமா

சினிமா என்பது நவீன கதை சொல்லும் வடிவம். மக்கள் கலையாகிப் போன ஒரு தனியான மொழி. கலைகளை நோக்கிய உள்ளீடு, அதன் இயல்புக்கும், உள்ளிடுவோரின் உணர்வுகளுக்கும் ஏற்ப பல்வேறு பண்புகளுடனான வெளியீடுகளாக உலகை அலங்கரிக்கும் சூழலில், சினிமா எனும் பரந்த களத்தில் ஊன்றப்படும் முரண்பட்ட விதைகளிலிருந்தும் வேறுபட்ட இயல்புக் கலவைகள் உயிர்ப்பெடுப்பது இயல்பானதாகும். மாற்றுச் சினிமா தொடர்பான கதையாடல்களில் இஸ்லாமிய சினிமா என்ற எண்ணக்கரு முகிழ்ப்பதும் அது போன்றதே.

சினிமா ஹராமா? (By: ஆளூர் ஷாநவாஸ்)

அண்மையில் அம்பேத்கர் திரைப்படத்தைப் பார்த்தேன்.

ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்குரலாய் ஒலித்த புரட்சியாளர் அம்பேத்கர்,
தன் வாழ்க்கையின் ஒவ்வொரு அசைவுகளிலும் சந்தித்த நெருக்கடிகள், அவமானங்கள், இழப்புகள் ஆகியவற்றையும்,
எல்லா இடர்களையும் எதிர் கொண்டு அவர் எழுந்து நின்ற வீர வரலாற்றையும் துல்லியமாகப் பதிவு செய்திருந்தனர்.
இந்தியாவின் தலைசிறந்த திரைக்கலைஞரான ‘மம்முட்டி’ அம்பேத்கராகவே உருமாறியிருந்தார்.
அம்பேத்கரின் சாயலை ஒத்திருந்த அவரது முகத் தோற்றமும், உடல் மொழியும் அச்சு அசலாக அம்பேத்கரைப் பார்ப்பது போலவே இருந்தது.
ஒரு காட்சியில் கூட மம்முட்டி என்ற நடிகர் நம் நினைவுக்கு வராத அளவுக்கு, அம்பேத்கரை நம் கண் முன் கொண்டு வந்து நிறுத்திய அவரது கடும் உழைப்பும், நடிப்புத் திறனும் மகத்தானது; போற்றுதலுக்குரியது.

ஆனால், படத்தின் காட்சியமைப்பில் குறிப்பாக,அதன் தமிழ் மொழியாக்கத்தில் முஸ்லிம் வெறுப்பு அப்பட்டமாகவே வெளிப்படுகிறது. கூர்ந்து கவனித்தால் அது திட்டமிட்டே திணிக்கப்பட்டது போல் தோன்றுகிறது.



வட்டமேசை மாநாட்டில்

ஞாயிறு, 17 ஏப்ரல், 2011

நோன்பும் சுக வாழ்வும்

நோன்பு முஸ்லிம்களாகிய நமக்கு ஒரு புனித அமல். இறைவனின் கட்டளை என்பதற்காக அதன் நன்மைகளைப் பற்றி அறியாமலேயே நாம் நோன்பு வைக்கிறோம். ஆனால், வல்ல நாயன் நோன்பின் மூலம் நமக்கு தரும் நன்மைகள், ஏராளம், ஏராளம்! அவற்றுள் சில இதோ... 

 நோன்பு என்றவுடன் உடலுக்கு தீங்கு விளைவிக்கும், சத்து குறைந்து போகும், உடல் மெலிவு உண்டாகும் என்று பல வகைகளில் கருதுபவர்கள் உண்டு. இயற்கை மருத்துவத்தில் நம்பிக்கை கொண்ட பலர் நோன்பை சீராக கடைப் பிடித்து, நோயின் தாக்குதலின்றி ஆரோக்கியமாக வாழ்ந்து கொண்டிருப்பது உண்மை.

சனி, 16 ஏப்ரல், 2011

விஞ்ஞானப் புனைகதை எழுத்தாளர் ஆர்தர் சி. கிளார்க்

இருபதாம் நூற்றாண்டில் விஞ்ஞானப் புனைகதையுலகில் கொடிகட்டிப் பறந்த முக்கியமான மூலவர்களாக மூவர் குறிப்பிடப்படுவார்கள். ஒருவர் ஐசக் அசிமோவ். இவர் ரஷிய நாட்டவர். அடுத்தவர் அமெரிக்கரான ரொபேட் ஏ றெய்ன்லெய்ன். இவர் மிசூரியைச் சேர்ந்தவர். அடுத்தவர் ஆர்தர் சி.கிளார்க் (Arthur C. Clarke). இவர் பிரிட்டனைச் சேர்ந்தவர். ஆர்தர் சி. கிளார்க் ஐம்பதுகளின் நடுப்பகுதியிலிருந்து அண்மையில் மறையும் வரையில் இலங்கையில் வசித்து வந்தாலும்....

பிரபாகரன் இருக்கிறானா இல்லையா?


கவியரங்கம் தொடங்குமுன் - ஒரு
கண்ணீர் அஞ்சலி..
ஒரு
புலிப் போந்தை ஈன்று
புறந்தந்து -
பின் போய்ச் சேர்ந்த
பிரபாகரன் தாய்க்கு; அந்தப்
பெருமாட்டியைப் பாடுதலின்றி
பேறு வேறுண்டோ எனது வாய்க்கு..?

* * * * *

வியாழன், 14 ஏப்ரல், 2011

ராசபக்சே வேண்டப்படாத விருந்தாளியாக வலம் வருகிறார்

நம் நாட்டு ஜனாதிபதி அவர்கள் பற்றி "உயிர் மை" எனும்  இந்திய சஞ்சிகை கடந்த ஃபெப்ரவரியில் வெளியிட்டிருந்த விமர்சன ரீதியான செய்தியொன்றை வாசகர்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

Rajapaksa as the Unwanted Guest around the World - Tamil Poltics News Article

புதன், 13 ஏப்ரல், 2011

அக்கன்னா


எங்கள் குடும்பம்
தமிழ்க் குடும்பம்

ஒவ்வொருவர்
ஒவ்வொர் இனம்

மாமியார்
கசடதபற

பாரதிக்காக மீசை குறைத்த பாரதிதாசன் : வாலி (கவிதை)

செம்மொழி மாநாட்டின் இன்றைய(26ந் தேதி) நான்காம் நாள் விழாவில்,  “தமிழுக்கு அமுதென்று பேர்” என்ற தலைப்பில் நடைபெற்ற கவியரங்கத்திற்கு  கவிஞர் வாலி தலைமை தாங்கி,   தனது தலைமைக் கவிதையினை வாசித்தார்.

செவ்வாய், 12 ஏப்ரல், 2011

THE TEN PRICIPLES OF SUCCESS

1. Begin from the possible
2. Find the advantage in every disadvantage
3. Change the place of action
4. Find the good in people
5. Turn a negative into positive
6. The power of peace is stronger than violence
7. Don't be a dichotomous  thinker
8. Bring the battle to your field
9. Gradualism instead of radicalism
10. Be progmatic in controversial matters (www.alrisla.org)

செவ்வாய், 5 ஏப்ரல், 2011

"ClassiC DefinitionS & CooL MeaningS"




1. Cigarette : A pinch of tobacco rolled in paper with fire at one end & a fool at the other.
2. Love affairs : Something like cricket where one-day internationals are more popular than a five day test.
3. Marriage : It's an agreement in which a man loses his bachelor degree and a woman gains her master
4. Divorce : Future tense of marriage

வெள்ளி, 1 ஏப்ரல், 2011

அல்லாஹ்வின் அருளை அளவிடலாமா?

எழுபது வயதான ஒரு முதியவருக்கு ஒரு நோய் ஏற்பட்டது. அவரால் சிறு நீர் கழிக்க முடியவில்லை. வைத்தியரிடம் சென்ற போது, ஒரு சத்திர சிகிச்சைக்குத் தயாராகும் படி கூறப்பட்டது. இந்த நோய் அவருக்கு தாங்க முடியாத வலியையும் ஏனைய பல பிரச்சினைகளையும் பல நாட்களாக ஏற்படுத்தி இருந்ததால், சத்திர சிகிச்சைக்கு முதியவர் உடன்பட்டார்.