திங்கள், 27 டிசம்பர், 2010

இஸ்லாமிய நாகரிகம்

நாகரிகம், கலாசாரம், பண்பாடு முதலாம் பதங்கள் அநேகமாக ஒரே பொருளிலேயே கையாளப்படுகின்றன. எனினும், நாகரிகம் எனும் சொல் ஏனைய இரு சொற்களிலும் இருந்து வித்தியாசமான பொருளையே தருகிறது. புண்பாடு, கலாசாரம் என்பன பெரும்பாலும் இன்று ஒத்தகருத்திலேயே பயன்படுத்தப்படுகின்றன.
  
நாகரிகம் (CIVILIZATION)
  - காட்சிக்கோட்பாட்டை
நாகரிகம் என்பர்
  -   இச்சொல் சங்ககாலம் முதல் வழக்கில் இருந்து வருகின்றமை.
  -   According to சென்னை பல்கலைக்கழக தமிழ்ப் பேரகராதி :
      நகர ஒழுக்கம், நகர மக்களின் தன்மைகள்
  -  இப்னு கல்தூன் :
      நகர வாழ்வின் விளைவுகள் அல்லது பெறுபேறுகளே நாகரிகமாகும்.
  -  கலாநிதி அமீர் ஹஸன் ஸித்தீகி :

    ஓர் இனத்தின் அல்லது ஒரு வர்க்கப் பிரிவின் பண்புகளை சுட்டும் ஒரு பொதுச் சொல்லான நாகரிகம் என்பது கண்களுக்குப் புலப்படக் கூடிய சடப்பொருட்களின் அபிவிருத்தியையும் பொது வாழ்வின் முன்னேற்றத்தையும் குறிக்கிறது.
  -  According to Sociologists :
     சுமூக வளர்ச்சியின் முன்னேற்றமடைந்த கட்டத்தை நாகரிகம் எனும் பதம் சுட்டிக்காட்டுகிறது. நுடை, உடை, பாவனைகள், அறிவியல் முயற்சிகள், அழகியற் கலைகள், சட்டம், சமூகப் பழக்கவழக்கங்கள் போன்றவற்றை உள்ளடக்கிய மனித இனத்தின் வளர்ச்சியை நாகரிகம் எனும் பதம் குறித்துக் காட்டுகிறது.
  -   நாகரிகம் என்ற இந்தச் சொல் இன்றைய சூழலில் புதுமை எனும் கருத்தில் பயன்படுத்தப்பட்ட போதும் மனிதனின் வெளிவாழ்க்கையின் வளர்ச்சியோடும் மாற்றங்களோடும் புரிந்துகொள்ளப்படுவதையும்






கலாசாரம் (CULTURE)
     - கலாசாரம் என்பது கருத்துக் கோட்பாடு.
     - கலாசாரம், பண்பாடு என்பன Culture எனும் ஆங்கிலப் பதத்துக்கு நிகரான தமிழ் வார்த்தைகளாக  கருதப்படுகின்றன.

     - பண்பட்ட மனிதன் என்ற தொடர் முன்னேற்றம் கண்ட, சீராகச் சிந்திக்கும் ஆற்றலும், அறிவும் உடையஒருவனையே இது   சுட்டுகின்றது.

     - “மனித இன வரலாறு நெடுகிலும் மனிதன் செய்து கொண்ட கருவிகள் அவன் வாழ்ந்த சமூகத்தின் பழக்க வழக்கங்கள், அவனது சமயக் கொள்கைகள், நம்பிக்கைகள் முதலியன புலப்படுத்தும் அறிவு நிலையே கலாசாரம் ஆகும்.”  (மானிடவியலாளர்கள்;)

     - “மனிதர்களது அறிவு நலம், கருத்து நலம், வாழ்க்கை நலம் போன்றன மேலும் மேலும் திருந்தி வரும் திருத்த நிலை   என்பதே கலாசாரம் ஆகும்.”          ( இலக்கியப் பேராசிரியர் : Mathew Arnold )

    - “ பண்பட்ட நிலை, மனப் பயிற்சியால் ஏற்படும் திருத்த வளம், அறிவு வளர்ச்சி, நாகரிகமான தன்மை, நாகரிகத்தின் பயனான நயம், மேன்மை” என்று ஆங்கிலத் தமிழ் அகராதி ஒன்று குறிப்பிடுகின்றது.

     - “மானிடவியலாளர்கள் சுட்டிக் காட்டும் பழக்க வழக்கங்கள், நம்பிக்கைகள், சமயக் கருத்துக்கள் என்பனவும் மன வளர்ச்சியோடு தொடர்புடையனவே” என்கிறார் கலாநிதி ஆறூர் இராமநாதன்.

    - நல்ல பழக்க வழக்கங்கள,; நன்நயத்தல், சீரான சிந்தனை முதலியவற்றின் ஊடாகப் புலப்படக்கூடிய உளப்பாங்குதான்   கலாசாரம் ஆகும்.          (கலாநிதி அமீர் ஹஸன் ஸித்தீகி)

    - திருத்த நிலை அல்லது செம்மை நிலை அடைந்த ஒழுக்கவியல், ஆன்மீகவியல், சமூகவியல், அழகியல்   முதலானவற்றின் சங்கமமான நிலையே கலாசாரமாகும்.  (சமூகவியலாளரும், வரலாற்றாசிரியருமான இப்னு கல்தூன்)

    - அறிவு, வணக்க வழிபாடுகள், ஒழுக்கவியல், பழக்க வழக்கங்கள், நீதி, கலைகள், சமூக உறுப்பினன் என்ற வகையில்  மனிதன் அடைந்த அனுபவங்கள், திறமைகள், ஆற்றல்கள் என்பவற்றை கலாசாரம் எனும் பதம் உணர்த்துகின்றது.  ( E.B. Tyler, Premitive Culture – புராதன கலாசாரம் - 1871)

    - இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் கலாசாரம் என்பது பின்வரும் வகையில் புரிந்து கொள்ளப்பட்டது.

        “அறிவு, நம்பிக்கை, கலைகள், ஒழுக்கவியல் சட்டங்கள், சம்பிரதாயங்கள், சடங்குகள், சமூக உறுப்பினன் என்ற வகையில் மனிதன் அடைந்த ஆற்றல்கள், திறன்கள்.”

கலாசாரங்களதும், நாகரிகங்களதும் வளர்ச்சிக்குத் துணை நின்ற மூன்று முக்கிய அம்சங்கள்.
 1. மனித சிந்தனை, புத்திக் கூர்மை, ஆராய்ச்சி என்பன மூலம் கிடைக்கும் அறிவு.
 2. சமூகங்கள் பெற்றுக் கொள்ளும் அனுபவத் திரட்டு
 3. வஹி அல்லது இல்ஹாம் மூலம் கிடைக்கும் அறிவு.

வரலாற்றுக் கால நாகரிகங்கள் சில…….
இந்த ஒவ்வொரு நாகரிகத்திற்கும், ஒவ்வொரு முக்கிய பண்பு அடிப்படையாக அமைந்திருந்தது. அப்பண்பு தான் அந்த நாகரிகத்தின் உந்து சக்தியாகவும், சவால்களை எதிர்கொள்ளும் கேடயமாகவும், அதன் வளர்ச்சிக்கான நடைபாதையாகவும் அமைந்திருந்தது.

1. கிரேக்க நாகரிகம்
- இதன் அடிப்படைப் பண்பு அறிவியல் என்பதால் அந்நாகரிகம் வளர்ச்சி கண்ட போது, அதன் அடிப்படைப் பண்பை ஒட்டி கணிதம், மருத்துவம், இரசாயனவியல் போன்ற அறிவியல், அழகியற் கலைகள் வளர்ச்சி கண்டன.

2. உரோம நாகரிகம்
- அடிப்படைப் பண்பு : இராணுவப் பலம். இதனால் இராணுவத்தைப் பிரயோகித்து அயல் நாடுகளைக் கைப்பற்றி பாரிய சாம்ராஜ்ஜியம் ஒன்று உhக்கப்பட்டது.

3. இந்திய நாகரிகம்
- அடிப்படைப் பண்பு : துறவறம். இதன் விளைவாக உடலியல் தேவைகள் புறக்கணிக்கப்பட்டு, ஆசைகளும், உணர்வுகளும் அடக்கப்பட்டு துறவு மார்க்கமும், ஆன்மீகம் பற்றிய சிந்தனையும் வளர்ச்சி கண்டது.

4. நவீன மேல்நாட்டு நாகரிகம்
- அடிப்படைப் பண்பு : உலகியற் கல்வி.
   புலன் இன்பங்களைத் திருப்திப்படுத்துவதற்காகவும், சுகம் அனுபவிப்பதற்காகவும், பிரபஞ்சத்திலுள்ள அனைத்து வளங்களையும் அது கண்டறிய முயற்சிக்கிறது.
- அதற்காகவே பிரபஞ்ச வளங்களைச் சுரண்டுகிறது. - இதற்காகவே நவீன கருவிகளையும் கண்டுபிடிக்கிறது.


இஸ்லாமிய நாகரிகத்தின் சிறப்பம்சங்கள்.
  
குர்ஆனையும் சுன்னாவையும் அடிப்படையாகக் கொண்ட உலக நோக்கின் அடிப்படையில் இஸ்லாமிய வரலாற்றில் தோன்றிக் கால வளர்ச்சியோடு ஒட்டி வளர்ந்த நாகரிகமே இஸ்லாமிய நாகரிகமாகும். இந்தவகையில் பின்வரும் சிறப்பம்சங்கள் ஏனைய நாகரிகங்களிலிருந்து இஸ்லாமிய நாகரிகத்தை வேறுபடுத்திக் காட்டும் அம்சங்களாகும்.

1. இஸ்லாமிய நாகரிகம் சக்தி ஆற்றல் பலம் ஆகியவற்றுக்குப் பதிலாக, உண்மை நேர்மை சத்தியம் என்பனவற்றின் அடிப்படையில் எழுப்பப்பட்டுள்ளது.  எனவே சத்தியத்தின் அடிப்படையில் இந்த நாகரிகத்தில் நீதி;;, சமநிலை என்பன உருவாகின்றன. இதன் மூலமாக சாந்தியும் சமாதானமும் உருவாகின்றன.

2. இஸ்லாமிய நாகரிகம் வெறுமனே,    தனி மனித நலனை மட்டும் நோக்காது தனி மனித மேம்பாட்டையும் இலக்காகக் கொள்கிறது.  இதன் விளைவாகவே மக்கள் மத்தியில் பரஸ்பர அன்பும் நேசமும் நெருக்கமும் நல்லுறவும் உருவாகின்றன. இவை பகைமையையும் கசப்புணர்வையும் இல்லாமல் செய்து மகிழ்ச்சியையும் நிறைவையும் ஏற்படுத்துகின்றன.

3. இந்த நாகரிகம் மனித இனத்தை மதத்தின் அடிப்படையிலும், விசுவாசத்தின் அடிப்படையிலும் இணைக்கின்றது.  இது குறுகிய இனவாதம் தேசியவாதம் என்பவற்றை மிகைத்த ஒரு கூட்டிணைப்பைத் தோற்றுவிக்கின்றது.  இத்தகைய நாகரிகமே மனித இனத்துக்கு நிம்மதியையும், சமாதானத்தையும்,சுபீட்சத்தையும், மகிழ்ச்சியையும் வழங்க முடியும்.   (ஸஈத் நூர்ஸி)

1.    தெய்வீக வழிகாட்டல்(ரப்பானிய்யத்)  Divine
2.    இன்ஸானிய்யத் (மனிதத்துவம் வாய்ந்தது)
3.    இறைத் திருப்தியை இலக்காகக் கொள்ளுதல்.
4.    உலகியலும் ஆன்மீகமும் சமநிலையில் இணைந்துள்ளமை.
5.    நெகிழும் - நெகிழா( மாறும் மாறாத் தன்மைகளைக் கொண்ட அம்சங்களைக் கொண்டுள்ளன.
6.    சர்வதேசிய, சர்வ கால மயமாக இருக்கின்றமை. (அகிலத்துவம் சார்ந்தது)
                   அல்குர்ஆன்     : huதன் லின்னாஸ்
                    நபி                       : ரஹ்மதுன் லில் ஆலமீன்
                   அல்லாஹ்        : ரப்புன்னாஸ்

   உலகம் முழவதிலும் வாழ்கின்ற
7.    எளிமையான தன்மைகளைக் கொண்டுள்ளமை.
8.    யதார்த்த பூர்வமானது --- நடைமுறைப்படுத்த இலகுவானது.
9.    முழுமையானது – Way of Life
10.    வெகுமதி பற்றிய கோட்பாடு
11.    அத்துன்யா மஸ்ரஅதுல் ஆகிரா

Written By: MSM Boosary BA Hon, Kahatowita.  (0725461154 / 0718203627 / 0333332604)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக