திங்கள், 11 அக்டோபர், 2010

இலங்கையில் இஸ்லாம் அறிமுகம்

இலங்கை அரேபியர் உறவின் வரலாற்றுத் தொன்மை  
  1.  அரபு நாடு கடலால் சூழப்பட்டுள்ளமை     
  2. கடல் மார்க்க வணிகத்தில் அரபுகள் சிறப்புற்று விளங்கியமை
  3. கிழக்கிலும், மேற்கிலும் இருந்த பாரசீகத்துடனும் எகிப்துடனும் கொண்டிருந்த வர்த்தகத் தொடர்பு
  4.  ஈரானின் கரையோர நகர்களுடாக இந்து சமுத்திர நாடுகளுக்குச் சென்றமை
  5. கிரேக்கருக்கு முன்னரே அரபுகள் இந்தியாவை அறிந்திருந்தமை  
  6. ஆரியர் இலங்கைக்கு வருமுன்னரே அரபுகள் இங்கு குடியிருந்தமை (வில்லியம் கைகர்)
  7. அனுரதபுரத்தில் அரபுகளின் வீடுகள் அழகாகக் காணப்பட்டன. (சீன யாத்திரிகன் பாகியன்)
  8.  விஜயனும் அவனது 100 தோழர்களும் இலங்கைக்கு வருமுன்பே யெமனியர் இலங்கையில் இருந்தனர். (கைகர்)
  9. கடந்த 2000 ஆண்டுகளாக அரபுகள் இலங்கையில் குடியிருப்பதால் வேடரையும் ஏனைய இலங்கையின் பழங்குடி மக்களைப்போல அவர்களும் இந்நாட்டின் பழங்குடிகளே. (முன்னாள் அகழ்வாராய்ச்சியாளர் கலாநிதி பாலேந்திரா)
  10. கிறிஸ்தவ ஆண்டு தொடங்கு முன்னரே அரேபியர் இலங்கையில்  குடிகளாக  வாழ்ந்தனர். (பிளினி)
  11. கி.மு 377ல் அனுரதபுரத்தில் அரபுகளுக்கெனத் தனியான வீடுகள் இருந்தன. (கலாநிதி அந்திரியஸ் நெல்)
  12. இலங்கை நாடு எந்தளவு பழமை வாய்ந்ததோ அந்த அளவுக்கு இங்கு வாழ்கின்ற அரபுகளும் பழமைவாய்ந்தவர்களே.(SWRD)
  13. ஐரோப்பாவில் நடைபெற்ற மாணிக்கக் கல் கண்காட்சி    

. இலங்கையில்  இஸ்லாம் தோற்றம் பெறத் துணை நின்ற காரணிகள்:
  1.  மேற்கூறப்பட்ட அனைத்துக் காரணிகளும் பின்புலமாக அமைந்தமை
  2. நபி (ஸல்) அவர்களின் காலத்திலேயே இலங்கையில் இஸ்லாம் அறிமுகமாகியமை
   Eg:  
  • உற_ஸைன் இப்னு முஉறம்மத் கோர்வை செய்த அல்கியா பாகறி எனும் நூலில் இருப்பதாக சித்திலெப்பை குறிப்பிடும் சம்பவம் (முஸ்லிம் நேசன், 1898.10.22).
  • இச்சம்பவத்தை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ள, T.W.Arnold    தனது The Preaching of Islam நூலில் குறிப்பிடும் சம்பவம்
  • இப்னு ஷஉற்ரயார் தனது அஜாஇபுல் உறிந்து எனும் நூலில் குறிப்படும் சம்பவம் (இங்கு வாழ்ந்த அரபுகள் தமக்கு அறியக்கிடைத்த இஸ்லாம் பற்றிய தகவலை அறிந்து வருதற்கு இருவரை அரேபியாவுக்கு அனுப்பி  வைத்தமை.)
  • நபித் தோழர்களான தமீம் அன்ஸாரீ, உக்காஸா முதலானவர்களின் அடக்கஸ்தலங்கள் கோவளத்திலும் பறங்கிப் பேட்டையிலும் அமைந்துள்ளமை.
3. வியாபாரத்தின் இங்கு தங்கிய சில அரபு வணிகர்கள் இந்நாட்டு சுதேசப் பெண்களைத் திருமணம் செய்து குடிகளாக வாழ்ந்தமை
4. உமையாக்களின் (அப்துல் மலிக், உறஜ்ஜாஜ்) கொடுமைக்கு அஞ்சி உறாஷிமீக்கள் வெளியேறியமை. ( Tennent – Ceylon,  வாண்சாண்டர் - சோனகம்)
5. வரலாற்றாசிரியர் பலதூரியின் புதூஉற{ல் புல்தானிலிருந்து,
  - இலங்கை மன்னன் மானவர்மன் (684 – 719) அல்லது 2ம் தாதோபதிஸ்ஸ காலத்தில் இங்கிருந்த அரபு வணஜகர்கள்  சிலரின் பெண்களை அரேபியாவுக்கு அனுப்பி வைத்தல்.
  - அவர்கள் Daybal   அருகே கொள்ளையடிக்கப்படலும் இந்தியா கைப்பற்றப்படக் காரணமாய் அமைதலும்
  - அரபுக் குடும்பம் மூலம் இஸ்லாம் பரவியிருக்கலாம்.
6. உறிஜ்ரி 2ம், 3ம் நூற்றாண்டுகளில் முஸ்லிம்கள் வாழ்ந்துள்ளார்கள் என்பதற்கான ஆதாரங்கள்:
   Eg: 1. இலங்கையில், கண்டெடுக்கப்பட்ட அரபு நாணயங்கள்
       - கொழும்பு முதுராஜவலயில் கண்டெடுக்கப்பட்ட புதையலில் வலீத், உறாரூன் கால நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டமை.

7. கல்லறை நடுகற்கள் - Tombs
  Eg: 1. 1787இல் கண்டெடுக்கப்பட்ட பக்தாத் பிரசாரகர் காலித் பின் பகாயாவின் நடுகல் (உறிஜ்ரி 337ல் நடப்பட்டுள்ளமை)
     2. மன்னார் - புளியந்தீவில் கண்டெடுக்கப்பட்ட நடுகல்லில் அஸ்லாமிய மரபைத் தழுவிய வாசகங்கள் பொறிக்கப்பட்டுள்ளமை
     3. 2ம் உலக மகா யுத்தத்தின்போது திருகோணமலையில் கண்டெடுக்கப்பட்ட  உறி. 2ம் நூற். சேர்ந்த காழி உறபீப் என்பவரின் கல்லறை நடு கல்.
     4. nஉறம்மாதகமை மடுள்போவ பள்ளி மையவாடியில் 1976ல் கண்டெடுக்கப்பட்ட மூன்று நடுகற்கள்

8. அரபுப் பிரயாணிகள் விட்டுச் சென்ற தகவல்கள்:
  Eg: 1. அரேபியரின் கிழக்குலக வணிக மத்திய நிலையமான கொல்லம் நகரில் இருந்து சிறு கப்பல்கள் மூலம் பாக்கு  நீரிணை ஊடாக வங்காள விரிகுடாவின் கரையோரப் பிரதேசங்களை அடைந்தனர். அல்லது கொல்லம் துறை முகத்திலிருந்து இலங்கையின் தென் கரையோரமாகச் சென்று மலாயாவைக் கடந்து சீனாவை அடைந்தனர்.
        இவ்விரு பாதைகளும் சென்ற  இலங்கையின் கரையோர நகர்களில் முஸ்லிம் குடியிருப்புக்கள் தோன்றின.
        (கொழும்பு, பேருவல, களுத்துறை, காலி, வெலிகாமம்,மாத்தறை, மன்னார், திருகோணமலை)
     2. அப்பாஸியரது வீழ்ச்சியின் பின்னர் கி.பி. 9ம் நூற்றாண்டு முதல் தென்னிந்தியக் கரையோர முஸ்லிம்கள் வர்த்தக, கலாசார நலன்களைப் பேணும் வகையில் இங்கு குடியேறலாயினர்.

9. பார்த்துக்கீஷரின் வருகைக்கு முன்னரே இந்நாட்டின் கரையோரங்களிலும் உள்நாட்டுப பகுதிகளிலும் முஸ்லிம்கள் குடியேறி வாழ்ந்தமை
   Eg: அ) கரையோர நகர்கள்:
      1. வெலிகம
       * 1ம் பராக்கிரமபாகுவின் காலத்தில் (1153-1186) வளம் படைத்த வணிகர்கள் பெரும் எண்ணிக்கையில்  வெலிகாமத்தில் வாழ்ந்தார்கள். (சூலவம்சம்)
       * 6ம் புவனேகபாகுவிற்கு எதிராகக் கிளர்ச்சி செய்த தலைவர்களுள் ஒருவன் வெலிகாமத்து முஸ்லிமாக  இருந்தமை
  * செல்வம் மிக்க வெலிகம முஸ்லிம்களை போர்த்துக்கீஷர் கொள்ளையடித்தமை
      2. காலி:
       * இப்னு பதூதா காலியைத் தரிசித்தபோது அப்பிரதேச கப்பற் தலைவன் நாகூதா இப்ராகீம் அவருக்கு விருந்தளித்து கௌரவித்தமை
       * சீனக் கப்பற் தலைவன் செங்Nஉறா 1410ல் காலியில் விட்டுச் சென்றுள்ள சீனம், தமிழ், பாரசீக மொழியிலான கல்வெட்டு
      3. பேருவலை:
        * 10ம் நூற். முதல் முஸ்லிம்கள் அங்கு வாழ்ந்துள்ளமை
        * கி.பி. 930 (331) எனத் திகதியிடப்பட்ட கல்லறை நடுகல் ஒன்று அங்கு கண்டெடுக்கப்பட்டமை
       * கி.பி. 1010ல் இங்கு வாழ்ந்த பெரிய தம்பி முதலி மரைக்காயருக்கு இலங்கை மன்னன் ஒருவன் செம்பட்டயம் ஒன்றை வழங்கினான். ( Alexander  Johnston)
        * இப்பரதேசத்தில் ஆதிக்கம் செலுத்தி வந்த கோயாஜான் எனும் பெயர் கொண்ட முஸ்லிம் சட்டபூர்வமான ஆட்சியைப் புறக்கணிக்கின்ற அளவுக்கு செல்வமும் அதிகாரமும் உடையவனாகத் திகழ்ந்தான். (சீனாவில் இருந்து வரும் வழியில் 1350ல் புயலால் சிக்குண்டு பேருவலையை அடைந்த இத்தாலியக் கடற்பிரயாணி ஜோன் டீ மரிக் நொயிலி)
        * பேருவலையில் வாழ்ந்த முஸ்லிம் பெண்கள் பற்றி காப்பிய நூல்களான கோகில சந்தேசய, கிரா சந்தேசய  வருணிக்கின்றமை
     * இப்பிரதேசத்துக்கு அருகேயுள்ள அழுத்கம, களுத்துறை, மக்கூன் பகுதிகளிலும் கொழும்பு, புத்தளம்,  மன்னார், யாழ்ப்பாணம், திருகோணமலை போன்ற இடஙகளிலும் போர்த்துக்கீஷரின் வருகைக்கு முன்னர் முஸ்லிம் குடியேற்றங்கள் பல இருந்தமை

    ஆ). உள்நாட்டுப் பிரதேசங்கள்:
       1. குருநாகலை:
         * இப்பகுதியை தலை நகராகக் கொண்டு 1325 வரை ஆட்சி செய்த 2ம் புவனேகபாகு அஸ்வத்தும எனும் கிராமத்தைச் சேர்ந்த மதகெடிய குமாரி எனும் பெண்ணை மணந்தான்.
         * மகன்: வஸ்துஉறிமி,               அடக்கஸ்தலம்:  கலே பண்டார ஒளலியா
        * ஷெய்க் உஸ்மான் ஷீராஸியின் மஸ்ஜித் பற்றியும், பாவாதம் மலையைத் தரிசிக்கச் செல்வோருக்கு அவரது மாணவர்கள் வழிகாட்டியதாகவும் கூறும் இப்னு பதூதாவின் குறிப்புக்கள்.
       2. கம்பளை:
         * 14ம் நூற்றாண்டின் மத்திய பகுதியில் சிங்கள ஆட்சியின் மத்திய தளமாக இருந்த இப்பிரதேசத்தை பதூதா  குணாக்கர் எனச் சுட்டுகிறார்.
        * இங்கு முஸ்லிம்கள் வாழ்ந்துள்ளார்கள் என்பதற்கான சான்றுகள்:
           1. 1265-1682 காலப்பிரிவைச் சேர்ந்த நாணயம் ஒன்று இங்கு கண்டெடுக்கப்பட்டமை
           2. உறிஜ்ரி 135 எனத் திகதியிடப்பட்ட கல்லறை நடுகல்லொன்று இப்பிரதேசத்துக்கு அணித்தாக உள்ள ஹெம்மாதகமையில் கண்டெடுக்கப்பட்டமை


வழங்குபவர்: M.S.M. BOOSARY    B.A.(Hons),  033 3332604,   071 8203627

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக