வெள்ளி, 15 அக்டோபர், 2010

குர்ஆன் எரிப்பைக் கைவிட்ட மதகுருவுக்கு ஒரு நவீன கார் பரிசு!

9/11 இல் 'குர்ஆன் எரிப்பை' கைவிட்டமைக்காக, நியூ ஜர்ஸியைச் சேர்ந்த கார் விற்பனையாளர் ஒருவர், சர்ச்சைக்குரிய ப்ளோரிடா தேவாலய மதகுருவான டெர்ரி ஜோன்ஸுக்கு பெறுமதியான நவீன காரொன்றை பரிசாக வழங்க முன்வந்துள்ளார். 'குர் ஆன் எரிப்புப் போராட்டத்தை'க் கைவிட்டால், தான் ஒரு காரை ஜோன்ஸுக்கு வழங்கத் தயாராக இருப்பதாக ஏற்கனவே அளித்திருந்த வாக்குறுதிக்கு ஏற்பவே பிரட் பென்சன் எனும் கார் விற்பனையாளர் இந்த ஏற்பாட்டை செய்து வருகிறார்.

"போராட்டம் கைவிடப்பட்டமைக்கான காரணம் இந்தக் கார் கிடைக்கவுள்ள விடயமல்ல" என்று இது பற்றிக் கருத்துத் தெரிவித்த ஜோன்ஸ், "இதன் மூலம் நாங்கள் இலாபம் பெறும் நோக்கம் ஒன்றுமில்லை. அதனை அநியாயமிழைக்கப்பட்ட முஸ்லிம் பெண்களுக்காக குரல் கொடுக்கும் அமைப்பொன்றுக்கு வழங்க இருக்கிறோம்" என்று கூறியுள்ளார்.

9/11 தாக்குதல் நினைவு தினத்தில், ஜோன்ஸ் குர்ஆன் எரிப்புப் போராட்டத்தை நடாத்தவிருந்தார். இது உலகளாவிய அமெரிக்க எதிர்ப்பலையை உருவாக்கியது. பாப்பரசர், ஒபாமா உட்பட உலக தலைவர்கள் பலர் இந்த போராட்டத்தைக் கைவிடுமாறு கோரிக்கை விடுத்திருந்தனர். 'டெர்ரி ஜோன்ஸின் திட்டம் வெற்றி பெற்றால், அது மத்திய கிழக்கிலுள்ள அமெரிக்கப் படைகளுக்கு பயங்கரமான பின் விளைவுகளை ஏற்படுத்தக் கூடும்' என ஆப்கானிஸ்தானிலுள்ள அமெரிக்கத் தளபதி ஜெனரல் David Petraeus கூட தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

2003 இல் இதே விதமான ஒரு வாக்குறுதியை சத்தாம் ஹுஸைனுக்கு வழங்கி இருந்ததாகவும், ஈராக்கை விட்டு சத்தாம் செல்லாததால் அந்தத் திட்டம் கைவிடப்பட்டதாகவும் பிரட் பென்சன் கருத்துத் தெரிவித்தார். 

2 கருத்துகள்:

  1. போகிற போக்கைப் பார்த்தால், ஈராக், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் அமெரிக்காவின் ஆக்கிரமிப்பைக் கூட, இவ்வாறான 'கொடை'களினால் தடுத்திருக்கலாம் என்று தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு
  2. This is happening on our society also. Christians are spending more money for muslims. after that, muslims convert in to Christiane. it happened last few years ago in our sri lanka. pray for relief from poverty. money also a kind of weapon.
    Muhammadh.

    பதிலளிநீக்கு