வெள்ளி, 15 அக்டோபர், 2010

வீதியிலுள்ள இடர்களை அகற்றி எல்லோருக்கும் நன்மை செய்வோம்.


கஹட்டோவிட்ட - வெயாங்கொட (185/4) வீதியில் சேவையில் ஈடுபட்டுள்ள பஸ் சாரதிகள் மற்றும் நடத்துனர்களால், குறித்த இந்த வீதியில் சேவையில் ஈடுபடுவதிலுள்ள சிக்கல்கள் மற்றும் சிரமங்கள் பற்றி அடிக்கடி சுட்டிக் காட்டப்பட்டு வருகிறது.

பிரதானமாக, வீதி பழுதடைந்து பல இடங்கள் குன்றும் குழியுமாகக் காணப்படுவதாலும், ஒடுக்கமான  வீதியின் இரு மருங்கிலும் உள்ள மரங்களின் கிளைகள் வளைந்து வாகனத்தில் அடிக்கடி இடிபடுவதாலும் பஸ் வண்டியை ஓட்டிச் செல்வது மிகவும் சிரமமாக இருப்பதாகவும், இதனால் தமக்கு பல வழிகளிலும் நஷ்டம் ஏற்படுவதாகவும் சுட்டிக் காட்டியுள்ளனர். அத்துடன், ஒரு பொது மலசல கூட வசதி இல்லாமை பெரும் அசௌகரியமாக இருப்பதகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

"இந்த நிலை தொடர்ந்து நீடிப்பதானது, எமக்குக் கிடைத்துள்ள இந்த பஸ் சேவை இல்லாமற் போவதற்குக்கூட காரணிகளாக அமையலாம்" என தமது பெயரை வெளியிட விரும்பாத ஊர்வாசிகள் சிலர் கூறினர்.

பொது மலசல கூடமொன்றை அமைத்துக் கொள்வது சம்பந்தமாக சிலர் முயற்சி செய்ததில், சிறிய ஒரு நிலத் துண்டை கூட்டுற்வுக் கடைக்குப் பக்கத்தில் வழங்க ஒரு பரோபகாரி முன்வந்துள்ளார் என "பளிச்" இற்கு செய்தி கிடைத்துள்ளது. இதே போல், அதனைக் கட்டி முடிப்பதில் ஏனையோரும் பங்களிப்புச் செய்வது எல்லோருக்கும் நன்மை பயக்கக்கூடியதாகும்.

இதே போன்று, பாதையோரமாக உள்ள மரக்கிளைகளை, காணி உரிமையாளர்களே முன்வந்து வெட்டி அகற்றுவதும், வீதி பழுதடைந்துள்ள இடங்களை, பக்கத்திலுள்ளவர்களே ஒன்று சேர்ந்து செப்பனிட்டுக் கொள்வதும் முன்மாதிரியான செயல்களாகும். இதன் மூலம் ஊருக்குக் கிடைத்த பெரும் வரப்பிரசாதமொன்றை நாம் காப்பாற்றிக் கொள்ளலாம். பிரதேச சபைகளோ, மாகாண சபைகளோ இவற்றை உடனடியாக வந்து செய்து தர மாட்டா.  

ஒரு ஹதீஸில் நபியவர்கள் கூறினார்கள், "........................  ஒருவரின் ஈமானின் ஆகவும் தாழ்ந்த நிலை, பாதையிலுள்ள இடர்களை அகற்றுவதாகும்." 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக