ஞாயிறு, 24 அக்டோபர், 2010

அமெரிக்கா இன்றி நமது இருப்பு இல்லை-பெரஸ்

பலஸ்தீனுடனான பேச்சுவார்த்தையை முன்னெடுத்து தற்போது உருவாகியுள்ள பதற்றத்தைத் தணிப்பதன் மூலம் ஈரான் மீதான போர் முன்னெடுப்பில் அமெரிக்கவுக்கு இஸ்ரேல் உதவ முடியும்
என இஸ்ரேல் ஜனாதிபதி பெரஸ் கூறியுள்ளார். "ஏனெனில், அமெரிக்கா இன்றி நமது இருப்பு இல்லை" என அவர் மேலும் கூறினார்.

கைப்பற்றப்பட்ட ஜெரூஸலம் நகரில் கடந்த வியாழக்கிழமை உலகளாவிய யூத தலைவர்களுடனான ஒரு சந்திப்பு இடம்பெற்றது. அங்கு உரையாற்றுகையிலேயே பெரஸ் மேற்கண்டவாறு கூறினார். "அமெரிக்கா எங்களுக்குச் செய்யும் பாரிய உதவிகள் போன்று நாம் செய்ய முடியாது. பதிலுக்கு, ஒரு சிறு உதவியையாவது நாம் செய்ய வேண்டும். பலஸ்தீனியருடன் பேச்சுவார்த்தையை முன்னெடுத்து, எமது 'சிறிய' பிரச்சினையை முடித்து பதற்றத்தைத் தணிப்பதன் மூலம் 'மிகப் பெரும்' பிரச்சினையான ஈரான் மீது, அமெரிக்கா போர் தொடுக்க நாம் உதவலாம்" என்று பலஸ்தீனியருடனான பேச்சுவார்த்தையின் நோக்கத்தை தெளிவு படுத்தினார் பெரஸ்.

"எமது இருப்புக்கு அமெரிக்காவின் நட்பு மிக அவசியமானது. எனவே, எமது பாதுகாப்பு தொடர்பில் அவர்கள் செய்யும் உதவி போன்று நாங்களும் அவர்களது பாதுகாப்பு தொடர்பில் நம்மாலான அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டும்" என்று தொடர்ந்து சென்றது அவரது பேச்சு.

நன்றி அல் ஜஸீரா

3 கருத்துகள்:

  1. So........... strange! Shimon Peres has revealed the fact in a public gathering. Anyhow the secret of new peace talks is clear now for everyone. Will the arab nations unite even now? Shame! They don't understand this.

    பதிலளிநீக்கு
  2. R u practising on developing web site? not here. better follow a better course.

    பதிலளிநீக்கு
  3. A lo....ng halt after this article? why?

    பதிலளிநீக்கு