திங்கள், 11 அக்டோபர், 2010

கஹட்டோவிட்ட வீதி அகலமாக்கல்: அடுத்த கட்டம் விரைவில்!

கஹட்டோவிட்டாவின் பிரதான வீதியை அகலமாக்கும் பணி துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது. வீதியின் அகலத்தை 22 அடிக்கு மட்டுப்படுத்துவதாக இப்போது தீர்மானிக்கப் பட்டுள்ளதுடன் வளைவுகளில் 24 அடி வரை அகலமாக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதிகமான சொத்துகள் இழக்கப்படுவதை குறைப்பதற்காக, ஏற்கனவே 30 அடி எனத் தீர்மானிக்கப் பட்டிருந்த பாதையின் அகலம், பலரது வேண்டுகோளுக்கு இணங்க ,22 அடி வரை மட்டுப்படுத்தப் பட்டுள்ளதாக அறிவிக்கப் பட்டுள்ளது.

இந்தத் தீர்மானத்தின் படி, மிக விரைவில் பாதையின் அகலத்தை அடையாளமிடும் பணி ஆரம்பிக்கப்படும் என அத்தனகல்ல பிரதேச சபை பொறியியலாளர் அறிவித்துள்ளார். அகலத்தை அடையாளமிடுவதற்கான கொங்கிறீட் கல் கையிருப்பில் இல்லாமையே குறித்த பணி தாமதமாக காரணம் எனவும், தேவையான தொகை கற்கள் கிடைத்தவுடன் துரித கதியில் அடையாளமிடப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

அடையாளமிடும் பணி முடிந்ததும் கனரக இயந்திரங்களைக் கொண்டு உடைக்கப்படவுள்ள கட்டடப் பகுதிகள் உடைக்கப்படுமென்றும், அதற்கு முன் உரிமையாளர்கள் தாமாகவே உடைத்துக் கொள்வது அவர்களது கட்டடங்களுக்கு மிகவும் பாதுகாப்பானது எனவும் பொறியியலாளர் குறிப்பிட்டார்.

அதிகமான கஹட்டோவிட்ட மக்கள், வீதி அகலமாக்கப் படுவதை ஆதரிப்பவர்களாக இருக்கிறார்கள். இது இந்தப் பணிக்குக் கிடைத்த பெரிய வெற்றியாகும் என ஓரிருவர் கதைத்துக் கொள்வதைக் கேட்கக் கூடியதாக இருந்தது.

5 கருத்துகள்:

  1. வீடுகளை உடைக்கப் போகிறார்கள், வீதியை அகலமாக்கப் போகிறார்கள் என்று செய்திகள் வருகின்றன. இதற்கு முன்னர் எத்தனை முறை இப்படி ஆசை காட்டினார்கள்? ரோட்டில் வீட்டைக் கட்டியவர்கள் விட்டார்களா? சந்தேகமே இல்லை, இம்முறையும் அப்படித்தான் நடக்கும்.

    பதிலளிநீக்கு
  2. கஹடோவிட கிராமத்தை ஊடறுத்துச் செல்கின்ற பாதை மிக ஒடுக்கமாக இருப்பதால் மக்கள் பல அசௌகரியங்களை அனுபவித்து வருவதும் பாதையை அகலமாக்குவோம் என்ற வாக்குறுதிகள் காலத்தக்குக் காலம் வழங்கப்படுவதும் தெரிந்த கதைகளே. ஆனால் அண்மைக்காலமாக இப்பாதையை அகலமாக்கி மக்களுக்கு இருக்கின்ற சிரமங்களை நீக்குவதாகக் கூறி கையொப்ப வேட்டையொன்று நடந்ததும் அனைவருக்கும் தெரியும். இதற்கு பலர் ஆதரவு தெரிவித்து கையொப்பமிட்டமையும் சிலர் எதிர்த்து விலகி நின்றமையும் அனேகர் அறியாதிருக்கலாம்.

    இந்நிலையில் பாதை விஸ்தரிப்பு சம்பந்தமாக உத்தியோகப+ர்வமாக எந்த நடவடிக்கையுளும் எடுக்கப்படவில்லையென்பது இப்போது தெரிய வந்துள்ளது. ஊர் மக்கள் எமது பாதையை அகலமாக்குவதற்காக நாமே விரும்பி எமது வீடுகளையும் காணிகளையும் அர்ப்பணிக்கத் தயாராக உள்ளதாக கையொப்பமிட்ட கடிதம் சில அதிகாரிகளிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிய வந்தள்ளது. அதனடிப்படையில் இந்தப் பாதையை அகலமாக்குவதற்கு எந்த விதமான நிதியும் ஒதுக்கப்பட்டோ அல்லது அதற்கான வாக்குறுதி அளிக்கப்பட்டோ இல்லை.

    தாமாக முன்வந்து உடைக்கச் சொன்ன வீடுகளையும் கடைகளையும் உடைப்பதற்காக உரிய இயந்திரங்களை வழங்குவதாக வாயளவில் கூறப்பட்டிருக்கின்றது.

    ஆனால் கையொப்பம் வாங்கியவர்கள் வீடுகளையும் கடைகளையும் உடைத்தால் அதற்கு நஸ்டஈடு வழங்குவதைப் போன்றும் வீதி உடனடியாகத் திருத்தி அமைக்கப்படவது போன்றும் மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தியிருந்தனர். கட்டடங்கள் உடைக்கப்பட்டால் தானாக வீதி அகலமாகும். உடைத்த கட்டடங்களை உரியவர்கள் எப்படியோ கட்டிக் கொள்வார்கள் என்பது அவர்களது வாதம்.
    நாளாந்த வாழ்வையே ஓட்டச் சிரமப்படும் மக்களுக்கு இந்தச் சுமையையும் சுமத்துவது அநியாயமில்லையா
    பாதைகள் பெரிதாக்கப்பட வேண்டும். ஊர் அபிவிருத்தியடைய வேண்டும் அதே போன்று ஊர் மக்களது பிரச்சினைகளும் நேர்மையாக அனுகப்பட வேண்டும். நம்ப வைத்த ஏமாற்றுவது பெரிய அநியாயம்.

    இந்த விடயங்களை மக்கள் மத்தியில் விளக்கிச் சொல்வது பாதை அகலமாக்கும் முயற்சியில் ஈடுபட்டடுள்ளவர்களின் பொறுப்பல்லவா?

    பதிலளிநீக்கு
  3. வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில்.......................

    பதிலளிநீக்கு
  4. All Respected Viewers,

    please refrain from copying any 'posts' from other web sites as your comments. Palich! site is well open for your own comments. We entertain and appreciate all your constructive comments.

    Thank you.

    பதிலளிநீக்கு
  5. பிற தளத்தில் வரும் ஆக்கங்களை நீங்களும் கொமென்டாக பப்ளிஷ் பண்ணத் தொடங்கிட்டீங்களே....

    பதிலளிநீக்கு