வியாழன், 14 அக்டோபர், 2010

அமெரிக்க நா(ய்)கரிகம் எங்கே போகிறது?

 போதைப் பொருளுக்கு அடிமையான தமது பிள்ளைகளை, சிறைகளிலிருந்து விடுவிக்கவும், மரிஜுவானா பாவனைக்கு சட்ட அங்கீகாரம் வழங்க வேண்டுமென்றும் கோரி,
நூற்றுக்கு மேற்பட்ட தாய்மார்கள் கலிபோர்னியா நகரில் ஒரு அமைதிப் பேரணி நடத்தினர்.

"போதைக்கு அடிமையாதல் என்பது ஒரு நோய். இந்த நோய்க்கான சிகிச்சை முறைகள் வெற்றியளிக்கவில்லை. இது எமது பிரச்சினையல்ல. வெற்றிகரமாக சிகிச்சை அளிப்பது அரசின் பொறுப்பு. அதை விட்டுவிட்டு எமது பிள்ளைகளை அடைத்து வைப்பது எந்த வகையில் நியாயம்?" என்று ஊடகவியலாளர் ஒருவரிடம் கேள்வி எழுப்பினார் ஒரு தாய்.

நாகரிகம், மனித உரிமை பற்றி உரக்கக் கத்தும் அமெரிக்க மக்களின் 'மனித நாகரிகம் மற்றும் மனித உரிமை' பற்றிய எண்ணக்கரு இதுதான்.

இவர்களா உலக சமாதானத்துக்கு வழி காட்டப் போகிறார்கள்?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக