வியாழன், 21 அக்டோபர், 2010

சவூதி இளவரசருக்கு ஆயுட்கால சிறைத் தண்டனை!

லண்டனிலுள்ள ஹோட்டலொன்றில் வைத்து தனது பணியாளரைக் கொலை செய்த குற்றத்துக்காக சவூதி அரேபிய இளவரசர் ஒருவர் ஆயுட்கால சிறைத் தண்டனை விதிக்கப்படுள்ளார்.

15.02.2010 இல் நடைபெற்ற
இந்த நிகழ்வில், பந்தர் அப்துல் அஸீஸ் என்ற 32 வயது நபர் அடித்து, கழுத்து நெரிக்கப்பட்டு விழுந்து கிடந்தார்.

ஓரினச் சேர்க்கையாளரான இளவரசர் ஸஊத் அப்துல் அஸீஸ் பின் நாஸர் அல் ஸஊத், அப்துல் அஸீஸ் என்ற தனது பணியாளரை பல முறை தாக்கியிருந்தார்.

தன்னால் இடம்பெற்றது ஒரு "கொலை" என்பதை மறுத்த 34 வயதான அல் ஸஊதுக்கு, ஆகக் குறைந்த தண்டனையாக 20 வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

இந்த கொலை நிகழ்வு, இளவரசரால் குறித்த பணியாளர் தாக்கப்பட்ட பல தொடர் நிகழ்வுகளில் இறுதியானதாகும். அடிக்கடி நடைபெறும் இவ்வாறான தாக்குதல்கள் மூலம் இளவரசர் திருப்தியுறுவதாக தெரிய வந்துள்ளது.

"அப்துல் அஸீஸ் மீது உமக்கிருந்த அதிகாரத்தையும் நம்பிக்கையையும் நீர் துஷ்பிரயோகம் செய்து விட்டீர்" என நீதிபதி தெரிவித்தார்.

"உங்களைப் போன்ற ஒரு இளவரசர் ஒரு கொலைக் குற்றச்சாட்டில் கூண்டில் நிற்பது மிகவும் அபூர்வமானது." நீதிபதி மேலும் தொடர்ந்தார்.

"சவூதி அரச குடும்பத்தின் உறுப்பினரான உம்மை, 'கடூழியச்' சிறைத் தண்டனை விதித்துத் தீர்ப்பு வழங்குவது எனது தவறாகவும் இருக்கலாம்".

மது போதையில் திளைத்திருந்த 34 வயதான இளவரசர், 15.02.2010 சம்பவத்தின் போது தமது பணியாளரின் இரு கன்னங்களையும் கடித்துக் குதறியிருந்ததாக நீதிமன்றத்தில் சுட்டிக் காட்டப்பட்டது.

தமது அரச குடும்ப அந்தஸ்தும், ஸவூதி மற்றும் இங்கிலாந்து அரசுகளுக்கிடையா'ன இரு நாட்டு புரிந்துணர்வுகளும்' தம்மைக் காப்பாற்றிக் கொள்ளப் போதுமானவை என இளவரசரான ஸஊத் தவறுதலாக எண்ணியிருந்ததாக நீதிமன்றம் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

தீர்ப்பு வழங்கப்படும் வேளை, தனது இரண்டு கைகளயும் மடித்துக் கட்டிய வண்ணம் எவ்விதமான உணர்ச்சி வெளிப்பாடுகளுமின்றி அமர்ந்திருந்தார் இளவரசர்.

"இந்நாட்டில் யாருமே நீதிக்கு கட்டுப்படாமல் வாழ முடியாது"  நீதிபதி தொடந்து கூறினார்.

சிறைவாசம் முடிந்து இளவரசர் நாடு திரும்பினால், அவருக்கு அந்த நாட்டு சட்டப்படி அவரது கழுத்து வெட்டப்பட்டுக் கொல்லப்பட வேண்டும். ஏனெனில், ஓரினச் சேர்க்கை அந்த நாட்டில் மரண தண்டனை விதிக்கப்படும் ஒரு குற்றமாகும்.

1 கருத்து:

  1. இஸ்லாத்தின் தூதை உலகுக்கு எத்திவைக்க வேண்டியவர்களின் நிலை கவலை தருகிறது. இப்படிப் பட்டவர்கள் புனித மண்ணின் காவலர்களாக எப்படி இருக்க முடியும்? சவூதி அரசு உரிய தண்டனைகளை பகிரங்கமாக வழங்க வேண்டும்.

    பதிலளிநீக்கு