சனி, 29 செப்டம்பர், 2012

ஹிஜ்ரத்: மனித வரலாற்றையே மாற்றியமைத்த மகத்தான நிகழ்வு


இமாம் ஹஸனுல் பஸரீ (ரஹிமஹுல்லாஹ) அவர்கள் இவ்வாறு குறிப்பிட்டார்கள்: “மனிதா! நீ சில நாட்களின் தொகுதி என்பதை அறிந்து கொள். உனக்கென்று சில நாட்கள் இருக்கின்றன. அவற்றின் தொகுதியாகவே நீ இருக்கின்றாய். ஒவ்வொரு நாளும் முடிவடைய நீயும் முடிந்து உனக்குரிய நாட்களின் தொகுதியும் முடிவடைந்து உனது வாழ்க்கை நிறைவு பெற்று இவ்வுலகை விட்டுப் பிரிகின்றாய்.” 
அல்லாஹ் எமக்கருளிய நாட்தொகுதியில் எத்தனை நாட்கள் முடிவடைந்து விட்டன என்பது எமக்குத் தெரியாது. எனினும், எஞ்சியிருக்கும் மிகப் பெறுமதி வாய்ந்த காலத்தை எந்த வகையில் பயன்படுத்துவது என்பது பற்றி ஒவ்வொரு முஸ்லிமும் சிந்திக்க வேண்டும்.

இந்தவேளையிலே முஹர்ரம் புத்தாண்டிற்கு அடிப்படையாக அமைந்த ஹிஜ்ரத் நினைவுகூரத்தக்கது. நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் வாழ்க்கையில் பல்வேறு முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகள் நடைபெற்றிருக்கின்றன. நபியவர்களின் பிறப்பு, அவரின் மரணம், பத்ர் யுத்தம் மக்கா வெற்றி முதலான முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகள் நபியவர்களின் வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்திருக்கின்றபோது, மனித சமுதாயத்தின் தலைவிதியை தீர்மானித்த நிகழ்வுகள் அவரின் வாழ்க்கையில் இருக்கின்றபோது, ஹிஜ்ரத்தை அடிப்படையாகக் கொண்டு முஸ்லிம்களுடைய ஆண்டு ஆரம்பிக்கப்பட வேண்டும் என்ற உமர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களது தீர்மானத்தின் பின்னணியில் ஏராளமான நியாயங்கள் உள்ளன.

வெள்ளி, 28 செப்டம்பர், 2012

இஸ்லாம் - மாதிரி வினாத்தாள் (சா/த) - 2012


                                                                  2012 December                                                         
                                      கல்விப் பொதுத் தராதரப் பத்திர (சாதரண) தரப் பரீட்சை                               
                                     General Certificate of Education (Ord. Level) Examination

1. ஒரு முஸ்லிம் சுபஹ் தொழுகையில் கட்டாயமாக ஓத வேண்டிய ஸூra
    1. ஸூரா இக்லாஸ்             2. ஸூரா அல்காஷியா            3. ஸூரா அல்ஃபாத்திஹா            4. ஸூரா அஸ்ஸஜ்தா
2. உமது ஆடையில் தோய்ந்த நஜீஸை அகற்றுவதற்கோ, உமது தாகத்தை தீர்ப்பதற்கோ சாதாரணமாகப் பயன்படுத்த
    முடியாத நீர்?
   1. மாஉன் முத்லக்                     2. மாஉன் தாஹிர்                     3. மாஉன் தஹூர்                4. மாஉன் முதனஜ்ஜிஸ்
3. அல்லாஹ்வால் மனிதர்களுக்கு ஆகுமாக்கப்பட்ட எனினும் அவனால் மகவும் வெறுக்கப்படுகின்ற ஒரு செயல்?
    1. ஷிர்க்                                  2. கொலை                              3. கபாஇர்                            4. தலாக்
4. ஒரு நற்செயலை மக்களின் பாராட்டு, புகழ் என்பவற்றை எதிர்பார்த்து நிறைவேற்றுவது
1. நன்மை தரவல்லது                                                                          2. இணைவைப்புக்கு சமனானது
3. அல்லாஹ்வின் புகழுக்குரியது                                                          4. மதம் மாறுவதற்கு சமனானது

புதன், 26 செப்டம்பர், 2012

திஹாரிய ஈமானியா அரபுக்கல்லூரியின் முன்மாதிரி


கடந்த ஞாயிற்றுக் கிழமை ஈமானியா அரபுக் கல்லூரியின் பட்டமளிப்பு விழா அல்அஸ்ஹர் மத்திய கல்லூரியின் விளையாட்டுத் திடலில் மிகச் சிறப்பாக நடபெற்று முடிந்தது.
இக்கல்லூரி அன்றைய தினம் சாதித்துக் காட்டிய பல அம்சங்கள், இந்த நாட்டு முஸ்லிம் சமூகத்துக்கு மத்தியில் ஓங்கி ஒலிக்கப்படவேண்டிய விடயங்களாகும்.

சாதனைகள்:
1. பட்டம் பெற்று வெளியேறிச் செல்லும் மாணவர்களுக்கு சாரதி அனுமதிப்பத்திரம் (Driving Licence) வழங்கியமை
2. கணனித் துறையில் பயிற்சி வழங்கி சான்றிதழ்கள் வழங்கியமை

இலங்கை அரபு மத்ரஸாக்கள் வரலாற்றில் இந்தச் சாதனைகள் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படவேண்டியனவே. ஏனெனில் இன்றுவரைக்குமான நம் நாட்டு அரபு மத்ரஸாக்கள் வரலாற்றில் இவ்வாறானதொரு காத்திரமான சாதனை ஒன்றை அரபு மத்ரஸா ஒன்று புரிந்திருப்பது இதுவே முதல் தடவையாகும். மட்டுமன்றி மகத்தானதொரு புரட்சியுமாகும்.

 இன்றுவரை “லெப்பைக் கோஸ்” என்று ஒரு சிலரால் அழைக்கப்பட்டு வரும்  மத்ரஸாக் கல்வித் திட்டத்தில் ஈமானியாவின் முன்மாதிரி, எதிர்வரும் காலங்களிலாவது பெரும் திருப்பத்தைக் கொண்டுவரவேண்டுமென நாமும் விரும்புகிறோம்.

செவ்வாய், 25 செப்டம்பர், 2012

புதிய அதிபராக ஜனாப் ஸபீர் நியமனம்

 திஹாரிய அல்-அஸ் ஹரின் மூத்த-சிரேஷ்ட ஆசிரியரான ஜனாப் ஸபீர் அவர்கள் கஹடோவிட அல்பத்ரியாவுக்கு அதிபராக நியமனம் பெற்றுச் செல்லவுள்ளதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இன்று 25. 09. 2012 செவ்வாயன்று அதிபர் சேவைக்கான நியமனப் பத்திரத்தை அவர் பெற்றுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய அதிபருக்கு எமது வாழ்த்துக்கள்!

ஞாயிறு, 23 செப்டம்பர், 2012

நபியின் மீதான அன்பை வெளிப்படுத்தல்.

இஸ்லாத்துக்கு எதிராக விமர்சனங்கள் முன்வைக்கப்படும் போதெல்லாம் அவற்றுக்கு எதிராக கண்டனப் பேரணிகளை நடாத்துவது தற்போது வாடிக்கையாகிவிட்டது. இதனை சற்று நிதானமாகப் பார்த்தால், இஸ்லாத்துக்கு எதிரான விமர்சனங்களோ  அல்லது அவற்றுக்கு எதிரான கண்டன நடவடிக்கைகளோ, முடிவின்றி, தொடர்ந்தும் புதிது புதிதாக முன்னெடுக்கப்படும் என்றே தோன்றுகிறது. அப்படியென்றால், இது திட்டமிட்ட தொடர் நடவடிக்கை என்பது நிரூபனமாவதுடன், இந்தக் கேடு கெட்ட கைங்கரியத்தை சமூகமயப்படுத்துகின்ற ஒரு பொது எதிரி இருப்பதும் தெளிவாகிறது. 'இந்த எதிரிக்கு எதிராக நாம் என்ன செய்யலாம்?'

Factors Affecting English Speaking Skills



How does one acquire good English speaking skills? A lot of people aim to have an American or British accent in order to impress other people, and for others to say that they are indeed good in English. However, is this really the true measure of being a good English speaker? Actually, there are several factors that affect our English speaking skills. If we can honestly assess ourselves and say we are good in all of the said factors, then we are good English speakers. (Well, that of course depends on our level of honesty to ourselves.)

செவ்வாய், 18 செப்டம்பர், 2012

அதிபரின் கட்டுக்குள் அடங்காத அல்-பத்ரியாவின் நிர்வாகம்!


சமீப காலமாகவே எமது பத்ரியாவின் கல்வி நிலை படு பாதாளத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது என்பதை நாம் ஏலவே பல சந்தர்ப்பங்களில் எமது தளத்தினூடாகச் சுட்டிக்காட்டி இருந்ததை வாசகர்கள் அறிவார்கள்.

இந்த நிலை நாளுக்கு நாள் குறைந்தபாடின்றிச் சென்றுகொண்டிருக்கிறது.  தட்டிக்கேட்க சப்பானிபோல் ஒருவர் இருக்கிறார்தான். ஆனால் அவர் ஒரு செல்லாக் காசாக – அரசியல் பாசையில் சொன்னால் ஒரு நாம நிர்வாகி போன்று இருந்து வருகிறாரே தவிர, அவரால் எந்த ஒன்றையும் சாதிக்க முடியாத நிலையே தோன்றியுள்ளது.

ஆனால், ஸீட்டையும், டையையும் பாதுகாத்துக்கொள்வதில் மாத்திரம் குறியாக இருக்கிறார். அந்த வகையில் அவர் அவர்தான். அவருக்கு நிகர் அவரேதான். 

பாடசாலையைப் பொறுத்தமட்டில், அவர் பல முறை சொன்னாலும் ஒரு முறையேனும் சொல்லாதது போலத்தான் ஆசிரியர்களும் மாணவர்களும் நடந்துகொள்கிறார்களாம். இந்த அவலத்தை அவரே வாய் திறந்து முக்கியஸ்தர்களிடம் அவ்வப்போது கூறிக் கவலைப்படுகிறாராம்.  

மாணவர்களின் டிஸிப்பிளின் சகிக்க முடியாத நிலையைத் தோற்றுவித்துள்ளதாம். ரௌடிகளைப் போன்று அவர்கள் பாடசாலைக்கு வருகிறார்களாம். அவர்களை அதிபரோ, ஏனையோரோ இதுவரை சரி செய்ததாகத் தெரியவில்லை. மறுபக்கம் ஆசிரியர்கள் அதிபருக்குக் கட்டுப்படாமல் நடந்து கொள்ளும் நிலை. அவர்கள் நினைத்த போதெல்லாம் பாடசாலைக்கு வருவதும் போவதுமாக இருக்கிறார்களாம். இந்த நிலை குறித்து அதிபரே பல சமயங்களில் முக்கியஸ்தர்கள்? சிலரிடம் கூறிக் கவலைப்பட்டுக்கொண்டதாகவும் செய்திகள் கிடைக்கின்றன.

இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால், ஒரு காலத்தில் அதிபருக்காக வால் பிடித்த – முதுகு சொறிந்த குறிப்பிட்ட சிலரே இப்போது அதிபரின் முதிர்ச்சியில்லா – சிறு பிள்ளைத் தனமான நிலை குறித்து அதிருப்திப்பட்டுக்கொள்கிறார்களாம்.

இப்படியே போனால், பிராந்தியத்திலேயே கல்வித் துறையில் பலராலும் சிலாகித்துப் பேசப்பட்டு வருகின்ற எமது பத்ரியாவின் எதிகாலம் சூன்யமாகிப்போய்விடுமோ என ஊர் மக்கள் ஆதங்கப்படுகின்றார்கள். 


திங்கள், 17 செப்டம்பர், 2012

புன்னிய தலத்துக்கு அருகே இயங்கிவரும் ஆபாசக் காட்சிச் சாலைகள்!

From: Bathibiyya Thakkiya FB

புன்னிய மிக்க சிறு மக்கா என்று ஒரு சிலரால் சிலாகித்துக் கூறப்படும் கஹட்டோவிட்டாவில்தான் இந்த அசிங்கங்கள் அரங்கேற்றப்பட்டு வருகின்றன. அதுவும் பாதிப் மௌலானா நாயகமவர்கள் சமாதிகொண்டுள்ள எல்லைக்குள்தான் இந்த ஆபாசக் காட்சிகள் காண்பிக்கப்படுகின்றன. இதில் திடிக்கிட வைக்கும் செய்தி என்னவென்றால், இந்த ஆபாசக் காட்
சிகளைப் பார்க்க வரும் வாடிக்கையாளர்கள் நடுத்தர வயதுப் பெண்கள் என்பதுதான். இவர்கள் தொழிலுக்காகத் தமது கண்வன்மார்களை வெளி நாடுகளுக்கு அனுப்பி வைத்துவிட்டுத் தனி மரமாய்த் தவிப்பவர்கள் என்பது சமீபத்திய ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது. தமது பிள்ளைகளைப் பாடசாலைகளுக்கு அனுப்பி வைத்துவிட்டு காலை 8மணிக்கும் 11 மணிக்கும் இடையில்தான் அந்தப் படங்களை அவர்கள் பார்க்கிறார்களாம். கிட்டிய எதிர்காலத்தி. அவ்வாறான பெண்களின் பெயர்களையும் வெளியிட நாம் உத்தேசித்துள்ளோம்.

இவர்களுக்கு ஆபாச வீடியோக்களை வினியோகிக்கு வினியோகஸ்தர் ஓர் ஆண் மகன் என்பதும் கவனத்தில் கொள்ளப்படவேண்டிய விடயமாகும்.

இந்த மாதிரி அவலங்கள் இனியும் தொடருமானால் ஆபாசப் பட நாயகிகளின் பெயர்களையும் நாம் வெளியிடத் தயங்க மாட்டோம்.

புதன், 12 செப்டம்பர், 2012

Jaffna Muslim: இலங்கை முஸ்லிம் உம்மாவின் அவசர கவனத்திற்கு..! (தயவ...

Jaffna Muslim: இலங்கை முஸ்லிம் உம்மாவின் அவசர கவனத்திற்கு..! (தயவ...:       அன்புடையீர் அஸ்ஸலாமு அலைக்கும் ஒன்றுபட்டு எதிர் கொள்வோமா…?   பிரிந்திருந்து தொலைந்து போவோமா…..??   கன்னியமிக்க உலமாக்களே ! பேரண்பும...

Jaffna Muslim: லிபிய பேராளிகளின் தாக்குதலில் அமெரிக்கத் தூதுவர் ப...

Jaffna Muslim: லிபிய பேராளிகளின் தாக்குதலில் அமெரிக்கத் தூதுவர் ப...:   லிபியாவில் நடந்த ராக்கெட் குண்டு தாக்குதலில் அமெரிக்க தூதர் உள்பட மூன்று பேர் பலியாயினர். லிபியாவின் அதிபர் கடாபி ஆட்சி அகற்றப்பட்ட பின்...

செவ்வாய், 11 செப்டம்பர், 2012

விஞ்ஞானப் போட்டியில் பத்ரியாவின் அஞ்ஞான நிலை பாரீர்!

நேற்று(10.09.2012)  திஹாரிய அல்- அஸ்ஹரில் கம்பஹா மாவட்ட தமிழ்மொழிப் பாடசாலைகளுக்கான வலய மட்ட விஞ்ஞானப் போட்டிகள் நடைபெற்றன. இதற்கான அறிவுறுத்தல்களை போட்டி நடைபெறுவதற்கு சில நாட்களுக்கு முன்னரே பாடசாலைகள் பெற்று மாணவர்களைத் தயார்படுத்தின. இதே அறிவுறுத்தல் பத்ரியாவுக்கு கிடைக்கப்பெற்றிருந்த நிலையிலும் மாணவர்களுக்கு எந்த அறிவுறுத்தல்களையும் வழங்காது சும்மா இருந்துவிட்டு போட்டி நடைபெற்ற தினமே மாணவர்களுக்கு விடயத்தைக் கூறி எந்தவித் ஆயத்தங்களும் இல்லாத நிலையில் அழைத்துச் சென்று சமாளிப்புச் சாதனை புரிந்துள்ளதாக இன்று கிடைத்த செய்தியொன்று கூறுகிறது. இதில் வேடிக்கை என்னவென்றால் தகுதியின் அடிப்படையில் மாணவர்கள் தெரிவு செய்யப்படாது சீட்டுக் குலுக்களின் மூலம் அவர்கள் தெரிவுசெய்யப்பட்டமையாகும்.

அல் அஷ்அரிய்யா

முஃதஸிலாக்கள் பகுத்தறிவுக்கு முக்கியத்துவம் கொடுத்து தத்துவ விசாரணையில் ஈடுபட்டதனால் மார்க்க விடயங்களில் பல தவறான விடயங்கள் இடம் பெறலாயின. அவர்களது கருத்துக்கள் மக்களது சிந்தனையைக் குழப்பக் கூடியதாக அமைந்திருந்தன. இதனால் மார்க்கத்தின் மீதான நம்பிக்கையை இழந்து விடுவார்கள் என சில அறிஞர்கள் கருதினர். முஃதஸிலாக்கள் அரச ஆதரவுடன் பலாத்கார முறையில் தமது கருத்துக்களை பரப்பி வந்ததனால் பொது மக்களும் அவர்களை வெறுத்தனர். இச்சந்தர்ப்பத்தில் முஃதஸிலாக்களின் சிந்தனைப் போக்கை புகஹாக்கள் தீவிரமாக எதிர்க்க முற்பட்டனர். இவ்விருசாராரும் தமது போக்கில் தீவிரமாக நடந்து கொண்டதனால் மற்றொரு கொள்கை உருவாகலாயிற்று. இதை உணர்ந்த மற்றொரு பிரிவினர் இவ்விரு சாராருக்குமிடையில் சமரசம் காணும் முயற்சியில் ஈடுபட்டனர். இவர்களே இஹ்வானுஸ் ஸபா என அழைக்கப்பட்டனர். இவர்களது முயற்சி சில அறிஞர்களை சிந்திக்கத் தூண்டியது. இவ்வாறான சமூகப் பணியில் தான் அஷ்அரிய்யா இயக்கம் தோன்றியது.

சனி, 8 செப்டம்பர், 2012

மர்ஸூக் ஆசிரியர் இடமாற்றம்!


கஹடோவிட முஸ்லிம் பாலிகாவில் அரபு, இஸ்லாமியத் துறைகளுக்குப் பொறுப்பாக இருந்த அஷ்ஷெய்க் மர்ஸூக் (நளீமி) கடந்த வாரம் கஹடோவிட அல்பத்ரியா மகா வித்தியாலயத்துக்குத் தனது சொந்த விருப்பத்தின் பேரில் மாற்றலாகிச் சென்றார். பத்ரியாவுக்குச் சென்று சேர்ந்த மர்ஸூக் ஆசிரியரை அன்பு முத்தங்கள் பரிமாறி வரவேற்றதாகவும் தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எது எப்படிப்போனாலும் மர்ஸூக் ஆசிரியரின் இழப்பானது பாலிகாவுக்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். இது குறித்து மாணவிகள் மற்றும் பெற்றோர், ஆசிரியர்கள் சகலரும் ஆழ்ந்த கவலைக்கு உள்ளாகியுள்ளனர்.

சமூக விஞ்ஞான மாகாணப் போட்டிகளில் கஹடோவிட பாலிகாவின் சாதனை!


நடைபெற்று முடிந்த 2012ம் ஆண்டிற்கான மாகாண மட்ட சமூக விஞ்ஞானப் போட்டிகளின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. அதில் கஹடோவிட பாலிகா வித்தியாலயத்திலிருந்து அகில இலங்கை ரீதியிலான போட்டிக்கு அறுவர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். மேற்படி போட்டியில் திஹாரிய அல்அஸ்ஹரில் இருந்து இருவரும் (ஷௌகீ, ஸமீனா), எமது பத்ரியாவில் இருந்து  ஒரே ஒருவரும் (ஏ.எம்.எம். நுப்லா), உடுகொடை அரபாவில் இருந்து மூன்று பேரும், ஓசட்வத்தையில் இருந்து ஒருவரும் அகில இலங்கை ரீதியாகத் தெரிவாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அவர்களின் விபரங்கள் வருமாறு:
1. Fahjath Asmi             - Gr. 7
2. A.F. Eshqa                - Gr. 7
3. M.A.F. Arshada         - Gr. 9
4. M.S.F. Zameera         - Gr.10
5. S.H.F. Husna             - Gr.11
6. A.R.F. Midhuha          - Gr.11