கடந்த
ஞாயிற்றுக் கிழமை ஈமானியா அரபுக் கல்லூரியின் பட்டமளிப்பு விழா அல்அஸ்ஹர் மத்திய கல்லூரியின்
விளையாட்டுத் திடலில் மிகச் சிறப்பாக நடபெற்று முடிந்தது.
இக்கல்லூரி
அன்றைய தினம் சாதித்துக் காட்டிய பல அம்சங்கள், இந்த நாட்டு முஸ்லிம் சமூகத்துக்கு
மத்தியில் ஓங்கி ஒலிக்கப்படவேண்டிய விடயங்களாகும்.
சாதனைகள்:
1.
பட்டம் பெற்று வெளியேறிச் செல்லும் மாணவர்களுக்கு சாரதி அனுமதிப்பத்திரம் (Driving
Licence) வழங்கியமை
2.
கணனித் துறையில் பயிற்சி வழங்கி சான்றிதழ்கள் வழங்கியமை
இலங்கை
அரபு மத்ரஸாக்கள் வரலாற்றில் இந்தச் சாதனைகள் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படவேண்டியனவே.
ஏனெனில் இன்றுவரைக்குமான நம் நாட்டு அரபு மத்ரஸாக்கள் வரலாற்றில் இவ்வாறானதொரு காத்திரமான
சாதனை ஒன்றை அரபு மத்ரஸா ஒன்று புரிந்திருப்பது இதுவே முதல் தடவையாகும். மட்டுமன்றி
மகத்தானதொரு புரட்சியுமாகும்.
இன்றுவரை “லெப்பைக் கோஸ்” என்று ஒரு சிலரால் அழைக்கப்பட்டு
வரும் மத்ரஸாக் கல்வித் திட்டத்தில் ஈமானியாவின்
முன்மாதிரி, எதிர்வரும் காலங்களிலாவது பெரும் திருப்பத்தைக் கொண்டுவரவேண்டுமென நாமும்
விரும்புகிறோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக