செவ்வாய், 11 செப்டம்பர், 2012

விஞ்ஞானப் போட்டியில் பத்ரியாவின் அஞ்ஞான நிலை பாரீர்!

நேற்று(10.09.2012)  திஹாரிய அல்- அஸ்ஹரில் கம்பஹா மாவட்ட தமிழ்மொழிப் பாடசாலைகளுக்கான வலய மட்ட விஞ்ஞானப் போட்டிகள் நடைபெற்றன. இதற்கான அறிவுறுத்தல்களை போட்டி நடைபெறுவதற்கு சில நாட்களுக்கு முன்னரே பாடசாலைகள் பெற்று மாணவர்களைத் தயார்படுத்தின. இதே அறிவுறுத்தல் பத்ரியாவுக்கு கிடைக்கப்பெற்றிருந்த நிலையிலும் மாணவர்களுக்கு எந்த அறிவுறுத்தல்களையும் வழங்காது சும்மா இருந்துவிட்டு போட்டி நடைபெற்ற தினமே மாணவர்களுக்கு விடயத்தைக் கூறி எந்தவித் ஆயத்தங்களும் இல்லாத நிலையில் அழைத்துச் சென்று சமாளிப்புச் சாதனை புரிந்துள்ளதாக இன்று கிடைத்த செய்தியொன்று கூறுகிறது. இதில் வேடிக்கை என்னவென்றால் தகுதியின் அடிப்படையில் மாணவர்கள் தெரிவு செய்யப்படாது சீட்டுக் குலுக்களின் மூலம் அவர்கள் தெரிவுசெய்யப்பட்டமையாகும்.


மூன்று அதிபர்கள் பாடசாலையில் கடமை புரிகின்ற நிலையில் இவ்வாறான போட்டிகள் பற்றி கவனத்தில் எடுத்து மாணவர்களைப் பயிற்றுவித்து அனுப்பும் விடயத்தில் எவருமே கரிசனை காட்டாதிருப்பது வேதனைக்குரிய விஷயமாகும்.விஞ்ஞானப் போட்டி விடயத்தில், போட்டி நடைபெற்ற அதே தினத்தில்தான் அதற்கான அழைப்புக் கடிதத்தை அங்கு கடமை புரியும் சிற்றூழியரொருவர் கண்டெடுத்து தயார் செய்து அனுப்பினாராம். அன்றைய தினம் 3 அதிபர்களுமே விடுமுறையில் இருந்தார்களாம்.இப்படியே போனால், பாடசாலையின் நிலை எந்தப் பாதாளத்தில்தான் சென்று விழுந்துவிடுமோ என்று அபிமானிகள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

இனிவரும் போட்டிகளுக்காவது சீட்டுக்குலுக்கல் முறையை விடுத்து தகுதியின் அடிப்படையில் மாணவர்களை தயார் செய்து அனுப்ப நிர்வாகம் ஏற்பாடுகளை செய்யும் என எதிர்பார்க்கிறோம்.

பக்கத்துப் பாடசாலைகளான எல்லலமுல்ல வித்தியாலத்துக்கும் கஹடோவிட பாலிகாவுக்கும் தகுதிவாய்ந்த அதிபர்களை அரசு நியமித்திருக்கும் போது பத்ரியாவுக்கு மட்டும் ஏன் அவ்வாறான அதிபர்களை நியமிப்பதில்லை என ஊர் மக்கள் ஆளுக்காள் அலசிக்கொள்வதும் பளிச்சின் காதுகளில் விழுந்துகொண்டுதானிருக்கிறது. இதற்கெல்லாம் ஒரே தீர்வு பத்ரியா வசந்தமே! நீ வெகுண்டெழுவது ஒன்றுதான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக