சமீப
காலமாகவே எமது பத்ரியாவின் கல்வி நிலை படு பாதாளத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது
என்பதை நாம் ஏலவே பல சந்தர்ப்பங்களில் எமது தளத்தினூடாகச் சுட்டிக்காட்டி இருந்ததை
வாசகர்கள் அறிவார்கள்.
இந்த
நிலை நாளுக்கு நாள் குறைந்தபாடின்றிச் சென்றுகொண்டிருக்கிறது. தட்டிக்கேட்க சப்பானிபோல் ஒருவர் இருக்கிறார்தான்.
ஆனால் அவர் ஒரு செல்லாக் காசாக – அரசியல் பாசையில் சொன்னால் ஒரு நாம நிர்வாகி போன்று
இருந்து வருகிறாரே தவிர, அவரால் எந்த ஒன்றையும் சாதிக்க முடியாத நிலையே தோன்றியுள்ளது.
ஆனால்,
ஸீட்டையும், டையையும் பாதுகாத்துக்கொள்வதில் மாத்திரம் குறியாக இருக்கிறார். அந்த வகையில்
அவர் அவர்தான். அவருக்கு நிகர் அவரேதான்.
பாடசாலையைப்
பொறுத்தமட்டில், அவர் பல முறை சொன்னாலும் ஒரு முறையேனும் சொல்லாதது போலத்தான் ஆசிரியர்களும்
மாணவர்களும் நடந்துகொள்கிறார்களாம். இந்த அவலத்தை அவரே வாய் திறந்து முக்கியஸ்தர்களிடம்
அவ்வப்போது கூறிக் கவலைப்படுகிறாராம்.
மாணவர்களின்
டிஸிப்பிளின் சகிக்க முடியாத நிலையைத் தோற்றுவித்துள்ளதாம். ரௌடிகளைப் போன்று அவர்கள்
பாடசாலைக்கு வருகிறார்களாம். அவர்களை அதிபரோ, ஏனையோரோ இதுவரை சரி செய்ததாகத் தெரியவில்லை.
மறுபக்கம் ஆசிரியர்கள் அதிபருக்குக் கட்டுப்படாமல் நடந்து கொள்ளும் நிலை. அவர்கள் நினைத்த
போதெல்லாம் பாடசாலைக்கு வருவதும் போவதுமாக இருக்கிறார்களாம். இந்த நிலை குறித்து அதிபரே
பல சமயங்களில் முக்கியஸ்தர்கள்? சிலரிடம் கூறிக் கவலைப்பட்டுக்கொண்டதாகவும் செய்திகள்
கிடைக்கின்றன.
இதில்
ஒரு வேடிக்கை என்னவென்றால், ஒரு காலத்தில் அதிபருக்காக வால் பிடித்த – முதுகு சொறிந்த
குறிப்பிட்ட சிலரே இப்போது அதிபரின் முதிர்ச்சியில்லா – சிறு பிள்ளைத் தனமான நிலை குறித்து
அதிருப்திப்பட்டுக்கொள்கிறார்களாம்.
இப்படியே
போனால், பிராந்தியத்திலேயே கல்வித் துறையில் பலராலும் சிலாகித்துப் பேசப்பட்டு வருகின்ற
எமது பத்ரியாவின் எதிகாலம் சூன்யமாகிப்போய்விடுமோ என ஊர் மக்கள் ஆதங்கப்படுகின்றார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக