2012 December
கல்விப் பொதுத் தராதரப் பத்திர (சாதரண) தரப் பரீட்சை
General
Certificate of Education (Ord. Level) Examination
1.
ஒரு முஸ்லிம் சுபஹ் தொழுகையில் கட்டாயமாக ஓத வேண்டிய ஸூra
1. ஸூரா இக்லாஸ் 2. ஸூரா அல்காஷியா 3. ஸூரா அல்ஃபாத்திஹா 4. ஸூரா அஸ்ஸஜ்தா
2.
உமது ஆடையில் தோய்ந்த நஜீஸை அகற்றுவதற்கோ, உமது தாகத்தை தீர்ப்பதற்கோ சாதாரணமாகப் பயன்படுத்த
முடியாத நீர்?
1. மாஉன் முத்லக் 2. மாஉன் தாஹிர் 3. மாஉன் தஹூர்
4. மாஉன் முதனஜ்ஜிஸ்
3.
அல்லாஹ்வால் மனிதர்களுக்கு ஆகுமாக்கப்பட்ட எனினும் அவனால் மகவும் வெறுக்கப்படுகின்ற
ஒரு செயல்?
1. ஷிர்க் 2. கொலை
3. கபாஇர் 4.
தலாக்
4.
ஒரு நற்செயலை மக்களின் பாராட்டு, புகழ் என்பவற்றை எதிர்பார்த்து நிறைவேற்றுவது
1. நன்மை தரவல்லது 2.
இணைவைப்புக்கு சமனானது
3. அல்லாஹ்வின் புகழுக்குரியது 4.
மதம் மாறுவதற்கு சமனானது
5.
நீர் ஏதாவது ஒரு மாதத்தில் இரண்டு சுன்னத்தான நோன்புகளை நோற்கவுள்ளீர். அதற்கு மிக
பொருத்தமான தினங்கள்
1. திங்கள், வியாழன் 2. வியாழன், வெள்ளி 3. சனி, ஞஆயிறு 4. திங்கள், செவ்வாய்
6.
சுற்றாடலைத் தூய்மையாகவும், அழகாகவும் வைத்திருப்பதும் பூமியில் மரங்களை நட்டி பசுமையை
பேணுவதும்
1. கிலாபத் பணி 2.
இபாதத் பணி 3.
இமாரத் பணி 4. இராதத் பணி
7.
வெள்ளிக் கிழமை நாட்களில் ஒரு முஸ்லிம் ஜும்ஆவிற்கு செல்ல முன் குளிப்பது
1. வாஜிப் 2. ஸுன்னத் 3. ஃபர்ழ் 4. மக்ரூஹ்
8.
ஏழைகளின் தாய் எனும் கௌரவப் பெயரால் அழைக்கப்பட்டவர்
1. ஸைனப் பின்த் ஹுஸைமா (ரழி) 2. ஆயிஷா பின்த் அபூபக்ர் (ரழி)
3. ஹஃப்ஸா பின்த் உமர் (ரழி) 4. கதீஜா பின்த் குவைலித்
(ரழி)
9.
விதவையான ஒரு பெண் இத்தா அனுஷ்டிக்க வேண்டிய கால அளவு
1. நாற்பது நாட்கள் 2.
நான்கு மாதங்கள்
3. நான்கு மாதமும் பத்து நாட்களும் 4. மூன்று மாதங்கள்
10.
இஸ்லாமிய நாகரிகங்கள் உச்ச நிலையிலிருந்த இரு நகரங்கள்
1. மக்கா, மதீனா 2. கூபா, பஸரா 3. கெய்ரோ, டில்லி 4. கோர்டோவா, பக்தாத்
11.
நீர் இரவில் நித்திரைக்குச் செல்ல முன் உமது அன்றைய தினத்தின் செயற்பாடுகள் குறித்து
மீள் விசாரணை செய்து
கொள்கிறீர். இது
1. முஹாஸபா 2.
முனாகிஹா 3. இஹ்ஸான்
4. கவ்ப்
12.
முஆவியா (ரழி) ஆரம்பித்து வைத்த ஆட்சி
1. அரபு நாட்டில் உமையா ஆட்சி 2. ஸ்பெய்னில் உமையா ஆட்சி
3. எகிப்தில் பாதிமிய்ய ஆட்சி 4. துருக்கியில்
உஸ்மானிய ஆட்சி
13.
அஹ்லுஸ்ஸுன்னா வல் ஜமாஆ எனப்படுவோர்
1. ஈமானுக்கோ செயலுக்கோ முக்கியத்துவம்
வழங்காதோர்
2. ஈமானையும் செயலையும் சமனிலையில் நோக்குவோர்
3. ஈமானை விட செயலுக்கு முக்கியத்துவம்
கொடுப்போர்
4. செயலை விட ஈமானுக்கு முக்கியத்துவம்
கொடுப்போர்
14.
நிரல் “அ” இன் கீழுள்ள சொற்களுக்குப் பொருந்தும் விதத்தில் நிரல் “ஆ” இல் உள்ளவற்றை
ஒழுங்கமைத்தால்
பெறப்படும் சரியான ஒழுங்கு வரிசை
நிரல்
“அ” நிரல் “ஆ”
1 புவியியல் A அல்கானூன் பித்திப்
2
கணிதம் B கிதாபுல் ஹயவான்
3
உயிரியல் C கிதாபு ஸூரதில் அர்ழ்
4
மருத்துவம் D அல்ஜபர் வல்முகாபலா
1. A, C, B,
D 2. C, D, A, B 3. C, D, B, A 4. D, C, B, A
15.
ஹஜ்ஜில் இறுதியாக நிறைவேற்றும் தவாப்
1. தவாபுல் குதூம் 2. தவாபுல் விதா 3. தவாபுல் கஃபா 4. தவாபுல் ஸப்ஆ
16.
“நீங்கள் மனிதர்களுக்கு உதவுகிறீர்கள், ஏழைகளுக்கு வாரி வழங்குகிறீர்கள், உறவினரைச்
சேர்ந்து நடக்கிறீர்கள்,
எனவே அல்லாஹ் உங்களைக் கைவிட மாட்டான்” என நபி
(ஸல்) அவர்களுக்கு ஆறுதல் கூறியவர்,
1. வரகத் பின் நவ்பல் 2. ஹலீமா நாயகி
2. ஃபாத்திமா நாயகி 4. கதீஜா நாயகி
17.
கீழுள்ள தொகுதியில் சட்டத்துறையில் இஜ்திஹாத்
ஆய்வுப் பணியில் மிகவும் சிறப்புற்று விளங்கியவர்கள்
1.அபூ ஹுரைரா (ரழி), முஆஸ் இப்னு ஜபல்
(ரழி), ஸல்மானுல் பாரிஸி (ரழி), பிலால் (ரழி)
2. ஆயிஷா (ரழி), ஸைத் இப்னு ஸாபித் (ரழி),
முஆவியா (ரழி), உஸ்மான் (ரழி)
3. மாலிக் (ரஹ்), அபூ ஹனீஃபா (ரஹ்), ஷாஃபி
(ரஹ்), அஹ்மத் இப்னு ஹன்பல் (ரஹ்)
4. உமர் (ரழி), அலி (ரழி), இப்னு அப்பாஸ்
(ரழி), இப்னு மஸ்ஊத் (ரழி)
18.
குற்றங்களின் தன்மை, அது நிகழ்ந்த சூழல், அதன் தாக்கம் என்பவற்றைக் கருத்திற் கொண்டு
நீதிபதி இஜ்திஹாத் மூலம்
வழங்கும் தண்டனை
1. தஃஸீர் 2. ஹுதூத் 3. கிஸாஸ் 4. தியத்
19.
தன்னால் நியமிக்கப்பட்ட ஆறு ஸஹாபாக்கள் கூடி தமது மரணத்தின் பின் தமக்கிடையே ஒருவரை
கலீஃபாவாகத்
தெரிவு செய்து கொள்ளும்படி கூறியவர்
1. அபூ பக்ர் (ரழி) 2. உமர் (ரழி) 3. உஸ்மான் (ரழி) 4. அலி (ரழி)
20.
நபி (ஸல்) அவர்களது கடிதத்தை எகிப்திய மன்னனுக்கு எடுத்துச் சென்ற ஸஹாபி
1. ஹாதிப் இப்னு அபீ பல்தஆ (ரழி) 2. அப்துல்லாஹ் இப்னு ஹுஸைமா (ரழி)
3. திஹிய்யதுல் கல்பி (ரழி) 4. அம்ர் இப்னு உமையா (ரழி)
21.
இலங்கையில் பெரும்பாலான முஸ்லிம்களால் பின்பற்றப்படும் மத்ஹப்
1. ஹனஃபி மத்ஹப் 2. ஷாஃபி மத்ஹப்
3. மாலிகி மத்ஹப் 4. ஹன்பலி மத்ஹப்
22.
இஸ்லாமிய சட்டத்துறையில் கியாஸை சட்ட மூலாதாரங்களுள் ஒன்றாக அறிமுகப்படுத்தியவர்
1. இமாம் அஹ்மத் (ரஹ்) 2. இமாம் மாலிக் (ரஹ்)
3. இமாம் ஷாஃபி (ரஹ்) 4. இமாம் அபூ ஹனீஃபா (ரஹ்)
23.
இத்தா அனுஷ்டிக்கும் ஒரு பெண் செய்ய அனுமதிக்கப்பட்ட செயல்
1. விவாகம் செய்தல் 2.
திருமணம் பேசுதல்
3. இரவில் வீட்டிலிருந்து வெளியே செல்லல் 4. நோயுற்றால் மருத்துவரை சந்தித்தல்
24.
ரமழான் மாதத்தின் இறுதிப் பத்து நாட்களில் நிறைவேற்றப்படுகின்ற விஷேடெ அமல்
1. ஸதகா 2.
தவ்பா 3. கியாமுல் லைல் 4. இஃதிகாஃப்
25.
ஒருவர் ஹஜ்ஜுக்காக நிய்யத்து வைத்து இஹ்ராம் கட்டிய பின்னர் செய்யக் கூடாத செயல்களில்
ஒன்று
1. மனைவியுடன் உடலுறவு கொள்ளல் 2. குளித்தல் 3. தல்பியா சொல்லுதல் 4. தவாஃப் செய்தல்
26.
ஈமானும் அமலும்
1. ஒன்றுக்கொன்று நேர்மாறான விடயங்களாகும் 2. செயலினால் ஒன்று சேர முடியாத
விடயங்களாகும்
3. பிரித்து வேறாக்க முடியாத விடயங்களாகும் 4. வேறாகக் கணிக்கப்பட வேண்டிய விடயங்களாகும்
27.
அல்லாஹ்வால் வழங்கப்பட்ட அறிவு ரீதியான அற்புதம்
1. சந்திரன் இரண்டாக பிளத்தல் 2. நைல் நதி இரண்டாகப் பிரிதல்
3. அல்குர்ஆன் அருளப்பட்டமை 4. கற்பாறையிலிருந்து ஒட்டகம் வெளியாதல்
28.
கீழே தரப்பட்டுள்ள பிக்ஹ் கலை இமாம்கள் பற்றிய தகவல்களில் சரியான தொகுதிகளைக் கொண்ட
தொகுதி எது?
1.
ஹிஜ்ரி 80, இமாமுல் அஃழம், ஹனபி மத்ஹப்
2. ஹிஜ்ரி 150, கிதாபுல் உம்மு,
ஆலிமுல் குறைஷ்
3.
ஹிஜ்ரி 204, மாலிகீ, முஸ்னத் 4. இமாமுல் மதீனா, முஅத்தா, ஹனபி மத்ஹப்
29.
ஸிஹாஹுஸ்ஸித்தா ஹதீஸ் கிரந்தங்கள் தொடர்பில் கீழே தரப்படும் தகவல் அடங்கிய எத்தொகுதி
சரியானது?
1.
ஸஹீஹுல் புகாரீ, 7275, எகிப்து 2.
இமாம் முஸ்லிம், 8000, பஸரா
3.
ஸுனன் நஸாஈ, மக்கா, இமாம் நஸாஈ 4.
ஜாமிஉத் திர்மிதீ, திர்மிதீ, 3956.
30.
தொழுகையில் துஆஉல் இப்திதாஃ ஓதும் சந்தர்ப்பம்,
1.
ஆரம்பத் தக்பீரின் பின்னராகும் 2.
ருகூவிலாகும்
3.
இஃதிதாலிலாகும் 4.
ஸலாம் கொடுத்தவுடனாகும்
31.
உழைபிலும் முதலீட்டிலும்கூட்டாகச் செய்யப்படுகின்ற வியாபார முறை,
1.
முழாரபா 2. முஷாரகா
3. முஸாரஆ 4. முஆமலா
32.
தன் மனைவியைத் தன் தாய்க்கு ஒப்பிட்டுக் கூறுவதால் ஏற்படும் தலாக்,
1.
குல்உ 2. பஸ்கு 3. லிஆன் 4. ழிஹார்
33.
தப்ஹு செய்யவேண்டிய பிராணியின் அறுபடவேண்டிய
பகுதிகளாவன,
1.
உணவுக் குழாயும் கழுத்தும் 2.
சுவாசக் குழாயும் கழுத்தும்
3.
உணவுக் குழாயும் சுவாசக் குழாயும் 4.
தலையும் கழுத்தும்
34.
இஸ்லாமியத் தண்டனை முறைகளுள் எண்பது(80) கசையடி குடுக்கப்பட வேண்டிய குற்றச் செயல்,
1.
மது அருந்துதல் 2. விபசாரம் 3. அவதூறு 4. திருட்டு
35.
ஹிஜ்ரத்தோடு தொடர்பான பிரதேசங்கள் அடங்கும் சரியான தொகுதி,
1.
தாஇஃப், யெமன், ஸிரியா 2.
மதீனா, தாஇஃப், யெமன்
3.
அபிஸீனியா, யெமன், தாஇஃப், யெமன் 4.
அபிஸீன்யா, தாஇஃப், மதீனா
36.
உமர் (ரழி) எந்த இடத்தில் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்?
1.
தாருல் இஸ்லாம் 2. தாருல் அர்க்கம்
3. தாருல் ஹிக்மா 4. தாருல்
ஃபனா
37.
அப்பாஸிய கலீபாவினால் நம் நாட்டுக்கு இஸ்லாத்தைப் போதிக்கவென அனுப்பி வைக்கப்பட்ட இஸ்லாமிய
அழைப்பாளர்.
1.
காலித் இப்னு அம்ர் 2. காலித் இப்னு மூஸா 3. காலித் இப்னு பகாயா 4. காலித் இப்னு வலீத்
38.
எந்த கலீபாவின் காலத்தில் பைத்துல் முகத்தஸ் முஸ்லிம்களால் கைப்பற்றப்பட்டது?
1.
கலீபா உமர் (ரழி) 2. கலீபா அபூபக்ர்
(ரழி) 3. கலீபா வலீத் 4. கலீபா முஆவியா (ரழி)
39.
கலீபா மாமூன் பின்வரும் எந்த ஆட்சிப் பிரிவைச் சேர்ந்த ஆட்சியாளராவார்?
1.
உமையா 2. உஸ்மானியர் 3.
பாத்திமீக்கள் 4. அப்பாஸியர்
40.
ஸலாதுல் குஸூஃபைன் என்பது,
1.கியாமுல்
லைல் 2.தஸ்பீஹ்
3.கிரகணத் தொழுகை 4.மழை வேண்டித் தொழும் தொழுகை
இஸ்லாம் Model
Paper -
மாதிரி வினாத்தாள் இரண்டு மணித்தியாலங்கள்
Islam 2012 December Two Hours
கல்விப் பொதுத் தராதரப் பத்திர (சாதரண) தரப் பரீட்சை 16 T 11
General
Certificate of Education (Ord. Level) Examination
# முதலாம்
வினாவுக்கும் ஏனைய நான்கு வினாக்களுக்குமாக மொத்தம் ஐந்து வினாக்களுக்கு மாத்திரம்
விடை தருக.
(01) சுருக்கமான
விடை தருக.
1. துல்ஹஜ்
மாதத்தின் 8ம் நாளில் நிறைவேற்றப்படும் கிரியை
யாது?
!மினாவில்
கல்லெறிதல் (யவ்முத் தர்வியா)
2. நோன்பின் இரு ஃபர்ழுகளும் யாவை?
!
நிய்யத்
!
ஸஹர் முதல் நோன்பு துறக்கும் வரை நோன்பை முறிக்கும் கருமங்களில் ஈடுபடாதிருத்தல்.
3. முழாரபா என்றால் என்ன?
! கூட்டுப் பங்காண்மை
4. ஒரு
முஸ்லிமுக்கு குளிப்பு வாஜிபாகும் இரு சந்தர்ப்பங்களை குறிப்பிடுக.
! இறத்தல்
! உடலுறவு கொள்ளல்
5. ஷிர்க்கின்
இரு வகைகளையும் குறிப்பிட்டு ஒவ்வொன்றுக்கும் ஒவ்வோர் உதாரணம் தருக.
(1)
ஷிர்க் அக்பர் - ! சிலை வணக்கம்
! நெருப்பு வணக்கம்
(2)
ஷிர்க் அஸ்கர் - ! அல்லாஹ் அல்லாதவற்றின் மீது சத்தியம் செய்தல்
! மந்திரித்தல், சூனியம் செய்தல், சாஸ்திரம் பார்த்தல்
! சகுனம் / நேரம் பார்த்தல்
6. இத்தாவின்
போது தவிர்க்க வேண்டிய இரு முக்கிய அம்சங்களைக் குறிப்பிடுக.
! தேவையின்றி அலங்கரித்தல் ! மணம் பூசுதல்
! நகை அணிதல் ! திருமணம் முடித்தல்
7. இல்முல்
அகீதா என்றால் என்ன?
அர்கானுல்
ஈமான் எனும் அடிப்படை இஸ்லாமிய நம்பிக்கையையும், அதனோடு தொடர்பான
கோட்பாடுகளையும்
கற்கும் கலை
8. உமையா
ஆட்சியின் தலைநகர் யாது?
டமஸ்கஸ்
9. இஸ்லாத்தில்
மனித உரிமைகள் இரண்டைக் குறிப்பிடுக.
! உயிர் வாழும் உரிமை
! விரும்பிய சமயத்தை பின்பற்றும் உரிமை
! சுயமரியாதையை பேணும் உரிமை
10. மத்திய காலத்தில் அறிவியல் வவிஞ்ஞனத் துறையின்
வளர்ச்சிக்குப் பங்காற்றிய முஸ்லிம் அறிஞர்கள்
நால்வரின் பெயர்களைத் தருக.
! இப்னு ஸீனா ! இப்னு ருஷ்த்
! அல் குவாரிஸ்மி !
இப்னுல் நஃபீஸ்
(02)
அ) பிற சமயத்தவர்களுடனான நல்லிணக்கத்தை வளர்ப்பதில் நபி ஸல்) காட்டிய முன்மாதிரிகள்
இரண்டு தருக.
1. முஸ்லிமல்லாத ஒருவரிடம் கடன் வாங்கியமை
2. பிற சமயத்தவர்கள் வழங்கிய அன்பளிப்புப்
பொருட்களை ஏற்றுக்கொண்டமையும் அவர்களுக்குத் தாமும்
அன்பளிப்புக்களை வழங்கியமையும்
3
ஹிஜ்ரத்தின்போது அப்துல்லாஹ் இப்னு உறைகித் என்பவரை வழிகாட்டியாக அமர்த்திக்கொண்டமை.
4. யூதனொருவனின் ஜனாஸாவுக்காக நபியவர்கள்
எழுந்து நின்றமை
ஆ) மன ஆரோக்கியத்தைப் பேணுவதற்கான இஸ்லாமிய
வழி முறைகள் மூன்றைக் குறிப்பிடுக.
1. இஸ்லாத்தின் உலக நோக்கு
2.
பொறுமையும் நன்றியும்
3.
பாவங்களைத் தவிர்த்தல்
4.
திலாவதுல் குர் ஆன்
5. திக்ர், ஔராதுகள்
6.
தவக்குல்
7.
துர்க்குணங்களில் இருந்து விடுபடுதல்
8.
நல்லெண்ணமும் எதிர்பார்ப்பும்
9. அல்லாஹ்வின் அருட்கொடைகளை நினைத்தல்
இ) இஸ்லாம் மனிதனுக்கு வழங்கியுள்ள உரிமைகளுள்
ஐந்து தருக.
1. வாழும்
உரிமை 2.
கருத்து வெளிப்பாட்டு உரிமை
3.
கல்வி 4.
சொத்துரிமை
5.
விவாக உரிமை 6. வழிபாட்டு உரிமை
7.
நீதி கோரும் உரிமை
(03) அ) வழிகெட்ட அகீதா பிரிவுகள் இரண்டைக் குறிப்பிடுக.
! காரிஜிய்யா !
ஷீஆ ! முஃதஸிலா
! கதரிய்யா !
ஜபரிய்யா !
முர்ஜிஆ
!
வஹ்ததுல் வுஜூத் ! காதியானி
ஆ) அஹ்லுஸ்ஸுன்னா வல் ஜமாஆவின் கொள்கையைப் பாதுகாத்த
இஸ்லாமிய அறிஞர்களுள் மூவரின்
பெயர்களைக் குறிப்பிடுக.
1. இமாம் அஷ்அரீ (ரஹ்)
2. இமாம் மாத்ரூதீ (ரஹ்)
3. இமாம் தஹாவீ (ரஹ்)
4. இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் (ரஹ்)
5. இப்னு தைமியா (ரஹ்)
இ) முஸ்லிமான ஒருவருக்கு ஈமான் ஏற்படுத்தும்
தாக்கங்கள் ஐந்தைக் குறிப்பிடுக.
!
ஈமான் கொண்ட ஒரு முஸ்லிமின் எல்லாச் செயல்களும் அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும்
அடிபணிவதாக அமையும்.
! ஏனையோருக்கு நன்மை பயக்கும் செயல்களில்
ஈடுபட ஈமான் ஒரு முஸ்லிமைத் தூண்டும்.
!
உண்மை, நேர்மை, கருணை ஆகியன ஒரு முஸ்லிமின் பண்புகளாகும்.
!
நன்மையான கருமங்கள் செய்து தியாக உணர்வுள்ளவராக்க ஈமான் உதவும்.
!
ஒரு முஸ்லிமினது எல்லாச் செயல்களையும் அல்லாஹ்வுக்காக அர்ப்பணிக்க ஈமான் உதவும்.
!
ஈமான் மனித உள்ளத்தைப் பண்படுத்தி செயல்களைத் தூய்மையாக்கும்.
!
தக்வா எனப்படும் இறை பக்தியை ஏற்படுத்தும்.
!
ஈமான் எல்லா மனித செயற்பாடுகளையும் அமலாக மாற்றும்.
! ஈமான் எல்லாப் பாவங்களில்
இருந்தும் மனிதனைப் பாதுகாக்கும்.
! வாழ்க்கையைக் கருத்துள்ளதாகவும்,
முன்மாதிரியானதாகவும் மாற்றும்.
(04) அ) இஸ்லாம் குறிப்பிடும் சுத்தம் பேணும் முறைகள்
இரண்டு தருக.
! நஜீஸிலிருந்து சுத்தமாதல்
! பெருந்தொடக்கிலிருந்து நீங்குதல்
! சிறு தொடக்கிலிருந்து நீங்குதல்
! சுத்தம் செய்யும் விடயத்தில்
எல்லை மீறி வீண்விரயம் செய்யாதிருத்தல்
! அசுத்தம் தொடர்பாக வீண்
சந்தேகம் கொள்ளாதிருத்தல்
ஆ) இஸ்லாத்தில்
தூய்மையின் முக்கியத்துவம் பற்றி சுருக்கமாக விளக்குக.
! தூய்மையைப்
பேணுமாறு இஸ்லாம் வலியுறுத்துகின்றது.
!
தூய்மை ஈமானின் பாதி என ஹதீஸ்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
!
உள், வெளி தூய்மை என தூய்மையை இரு வகைப்படுத்தலாம்.
!
தூய்மையாக இருப்பவர்களை இறைவன் விரும்பிகிறான்.
!
தூய்மையைப் பேணுவது ஓர் இபாதத்தாகும்.
இ) இயற்கையாகவே உண்பதற்குத் தடை செய்யப்பட்ட
ஹராமான ஐந்து பொருட்களைப் பட்டியற்படுத்துக.
!
தப்ஹு செய்யது இறந்த மிருகங்கள் (மீன், வெட்டுக்கிளி தவிர).
!
இரத்தம்.
!
மனித இறைச்சி.
!
நஜீஸானவை – நாய் , பன்றி போன்றன.
!
அருவருப்பானவை – புழுக்கள், சளி போன்றன.
!
நகங்களால் பற்றி உணவுண்ணும் பறவகள் – ஆந்தை, பருந்து, கிளி போன்றன.
!
வேட்டைப் பற்களால் வேட்டையாடும் பிராணிகள் – நாய், சிங்கம், பூனை போன்றன.
!
கொல்லுமாறு ஏவப்பட்டவை – பாம்பு, பல்லி, தேள் போன்றன.
!
கொல்லாது தடுக்கப்பட்டவை – தேனீ, தவளை போன்றன.
! ஏறி பயணம் செய்யப் பயன்படும்
பிராணிகள் – கழுதை, குதிரை போன்றன.
(05) இபாதத் தொடர்பாக பின்வரும் வினாக்களுக்கு விடை
தருக.
அ)
இபாதத்தின் பிரதான பகுதிகள் இரண்டையும் விளக்குக.
வணங்குதல், கீழ்ப்படிதல் என்ற கருத்தைத் தரும்
இபாதத் என்ற சொல்லின் மூலமும் இஸ்லாமிய பாவனைக்கு ஏற்ப
அல்லாஹ்வுடன் பூரணமாக இணைந்து செயற்படல் எனும்
கருத்து இதில் பொதிந்துள்ளது.இது அல்லாஹ்வின் மீதுள்ள
பற்றினால் ஏற்பட வேண்டும். இபாதத்தை இரண்டு
பகுதிகளாகப் பிரிக்கலாம்
1. வணக்க வழிபாடுகள் : தொழுகை, நோன்பு, ஸகாத், ஹஜ் ஆகியன இதில் அடங்கும்.
2. நாளாந்த செயற்பாடுகள் : வியாபார, விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடல், தூங்குதல்
ஆகியன இதில் அடங்கும்.
ஆ) பின்வருவனவற்றுள்
ஒன்றைத் தெரிவு செய்து பிரதான வேறுபாடுகள் மூன்று தருக.
1.
ஃபர்ழ் – ஸுன்னத் 2. ஸகாத் – ஸதகா 3. ஹஜ் – உம்ரா
ஃபர்ழ் ஸுன்னத்
1. கட்டாயமானது 1. கட்டாயமானதல்ல
2. செய்யாவிட்டால்
தண்டனை உண்டு 2. செய்யாவிட்டால் தண்டனை இல்லை
3. அல்லாஹ்வின்
கட்டளை 3.
நபிகளாரின் முன்மாதிரியான செயற்பாடுகள்
4. உதாரணம் : தொழுகை,
நோன்பு 4. உதாரணம் :
ஸுன்னத்தான தொழுகை, நோன்பு
5. நிறைவேற்றுவதால்
இறைவனின் 5. நிறைவேற்றுவதால்
இறைவனின் அன்பையும், நல்ல
தண்டனையிலிருந்து
மீள முடியும் பலாபலன்களையும் பெறலாம்
ஸகாத் ஸதகா
1.
கட்டாயமானது 1.
ஸுன்னத்தானது
2.
குறிப்பிட்ட
பொருட்களை மட்டும் கொடுக்கலாம் 2. எப்பொருளையும்
கொடுக்கலாம்
3.
குறித்த
ஓர் அளவு உண்டு 3.
எந்தளவும் கொடுக்கலாம்
4.
கொடுக்கக்
குறிப்பிட்ட ஒரு கூட்டத்தினர் உண்டு 4. எவருக்கும்
கொடுக்கலாம்
5.
ஸகாத்
கொடுக்காவிட்டால் தண்டனை உண்டு 5.
கொடுப்பதால் நன்மை உண்டு
ஹஜ் உம்ரா
1.
நிறைவேற்றத்
திட்டவட்டமான ஒரு காலம் உண்டு 1.
திட்டவட்டமான காலம் இல்லை
2.
செல்வந்தர்கள்
இதனை நிறைவேற்றுதல் கடமை 2. போதியளவு பணம் இருப்பின்
எவரும் இதனை
நிறைவேற்றலாம்.
3.
நிறைவேற்றுவதற்குக்
காலம் எடுக்கும் 3.
குறுகிய காலம் போதுமானது
4.
அரபாவில்
தங்குதல் கட்டாயமானது 4.
அவ்வாறு கட்டாயமல்ல
5. ஒரு முறை நிறைவேற்றுதல்
கட்டாயமானது 5. பல முறை
நிறைவேற்றலாம்
இ) நாளாந்த செயற்பாடுகள் இபாதத்தாக மாறத் தேவையான
நிபந்தனைகளை விளக்குக.
1. செய்யும் செயலில் தூய்மை
* அடிப்படையான கடமைகளைச் செய்வதற்கு
“நிய்யத்” அவசியமாவதைப்போன்று உலகியல் செயற்பாடொன்று
இபாதத்தாக மாறுவதற்கு தூய எண்ணம் அவசியம்.
2.
ஷரீஅத்தின் அங்கீகாரம்
* குறித்த செயல்ஷரீஆவின் அங்கீகாரத்துக்கு உட்பட்டதாக
- ஹராமாக்கப்பட்டதாகவன்றி இருத்தல் வேண்டும்.
3.நேர்த்தி
அல்லது ஒழுங்கு
* ஏமாற்று, மோசடி, விரயம் முதலானவை தவிர்க்கப்பட்டு
குறித்த செயல் நேர்த்தியும் ஒழுங்கும் மிக்கதாக இருத்தல்.
4.
ஷரீஅத்தின் எல்லைகளை மீறாதிருத்தல்
* குறித்த செயலைச் செய்யும்போது இஸ்லாத்தின் சட்ட
வரையறைகளைப் பின்பற்றுதல்
5.
அடிப்படைக் கடமைகளுக்குத் தடைப்பாடு ஏற்படாதிருத்தல்
* இஸ்லாம் விதித்துள்ள தொழுகை முதலான அடிப்படை
வணக்க வழிபாடுகளை மேற்கொள்வதில் குறித்த
காரியம் தடையை ஏற்படுத்தக் கூடாது.
(06)
அ) இஸ்லாமிய வீடொன்று எவ்வாறு அமைய வேண்டும்
என்பதை விளக்குக.
! வாழ்க்கையின் ஆரம்பப் பாடசாலை வீடு என இஸ்லாம் கருதுகின்றது.
கணவன் தனது மனைவிக்கும்,
பிள்ளைகளுக்கும் வீடு வசதிகளை
ஏற்படுத்திக் கொடுத்தல் அவசியம்.
! வீட்டின் உள்ளும், புறமும் அழகாக, அலங்காரமாக, ஒழுங்காக
இருத்தல் வேண்டும். மகிழ்ச்சியாகவும்,
சமாதானமாகவும் இருத்தல் இஸ்லாமிய
வீட்டின் இயல்புகளாகும்.
“உங்கள் வீடுகளை உங்களுக்கு சமாதானத்தை ஏற்படுத்தும்
இடமொன்றாக ஆக்கினேன்.” (16:80)
! வீட்டின் புறத்தோற்றமும், அதன் நடவடிக்கைகளும் இஸ்லாமியப்
பின்னணியில் அமைய வேண்டும்.
“உங்கள் வீடுகளை கல்லறைகளாக ஆக்கிக் கொள்ள வேண்டாம்:
என நபி (ஸல்) அவர்கள் கூறிய போது,
ஸஹாபாக்கள் அதன் கருத்தை வினவினர். அப்போது நபியவர்கள் “வீடுகளில் தொழுகை,
திக்ர், அல்குரான்
ஓதுதல் ஆகியன நடைபெற வேண்டும்” என விளக்கினார்கள்.
! முடியுமானவரை எல்லா ஜாஹிலிய்யத்தான விடயங்களிலிருந்தும்
இஸ்லாமிய வீட்டைக் காப்பாற்றிக்
கொள்ள வேண்டும்.
ஒரு இஸ்லாமிய வீடானது அல்லாஹ்வின் ரஹ்மத் இறங்கும் இடமாகவும்,
சமூகத்திற்கான
நற்பிரஜைகளை உருவாக்கும் இடமாகவும் மாற வேண்டும்.
ஆ) கணவன் மனைவிக்கும், மனைவி கணவனுக்கும் ஆற்ற
வேண்டிய கடமைகள் மூன்று வீதம் எழுதுக.
கணவன் மனைவிக்கு செய்ய வேண்டியவை
!
உணவு, உடை, பாதுகாப்பு என்பவற்றைப் பெற்றுக் கொடுத்தல்
!
குடும்பத்தின் தலைவனாகச் செயற்படல்.
!
சமய சட்டதிட்டங்கள், வணக்க வழிபாடுகள் என்பவற்றுக்கு வழிகாட்டல்.
!
அன்பையும், கருணையையும் காட்டுதல்.
மனைவி கணவனுக்குச் செய்ய வேண்டியவை
!
கணவனுக்கு அன்பு, கருணை, கௌரவம் அளித்தல்.
!
கணவனின் தேவைகளை நிறைவேற்றல்.
!
கணவனின் தலைமைத்துவத்திற்குக் கட்டுப்பட்டு பணிவாக நடத்தல்.
!
கணவனுக்கு விருப்பமில்லாதோரை வீட்டிற்குள் அனுமதிக்காதிருத்தல்.
!
பிள்ளைகளைப் போசித்தல்.
இ) இஸ்லாம் பெண்களுக்கு அளித்துள்ள கௌரவம், உரிமைகள்
ஆகியன பற்றி விளக்குக.
!
இஸ்லாத்திற்கு முன்னர் வாழ்ந்தோர் பெண்களை கீழ்த்தரமான, கெட்ட சகுனங்களாகவும், பெண்
பிள்ளைகளை உயிருடன் புதைப்பவர்களாகவும், பெண்களை
ஆண்களின் போகப் பொருட்களாகப்
பயன்படுத்துபவர்களாகவும் இருந்தனர். பெண்களுக்கு
எவ்வித சுதந்திரமும் கொடுக்கப்படவில்லை.
!
இஸ்லாத்தின் தோற்றத்திற்குப் பின்னர் பெண்களுக்கு சமத்துவம் அளிக்கப்பட்டது.
!
முஸ்லிம் பெண்கள் எவ்விதப் போராட்டமுமின்றி
1.
தமது கருத்தை வெளியிடும் உரிமை
2.
தமக்கு விருப்பமான ஒருவரைத் திருமணம் முடிக்கும் உரிமை,
தமக்கு விருப்பமில்லாத கணவனிடமிருந்து திரிமண
விலக்குப் பெறும் உரிமை
3.
பெற்றோர் அல்லது ஏனையோர் விட்டுச் சென்ற சொத்திலிருந்து தமது உரிமையைப்
பெறுவதற்கு அனுமதி
4.
ஆண்களைப் போன்று பெண்களும் கல்வி கற்கும் உரிமை போன்றவற்றைப் பெற்றனர்.
!
ஆண்களினதும், பெண்களினதும் தனித்துவம், உடல் உள நிலை ஆகியவற்றின் அடிப்படையில்
ஆண்களுக்குச் சில உரிமைகள் கூடுதலாகவும், பெண்களுக்கு
வேறு சில உரிமைகள் கூடுதலாகவும்
பெற்றுக் கொடுத்ததன் மூலம் இஸ்லாத்தில் ஆண்களுக்கும்,
பெண்களுக்கும் இடையிலான உரிமைகள்
சமநிலைப்படுத்தப்பட்டுள்ளன.
(07)
அ) பின்வரும் விடயங்களுள் ஒன்றைப் பற்றி சுருக்கமாக விளக்குக.
1. கடன்
!
சமுதாயத்தில் ஒருவருக்கு ஏனையோரின் உதவி தேவைப்படும் சந்தர்ப்பங்கள் உண்டு. திடீர்
தேவைகளுக்காக பணம் கைமாறாகப் பெறுவதும் அவ்வாறானதாகும்.
!
கடன் வழங்கும் போது ஈஜாப் – கபூல் எழுத்து மூல சாட்சியும் பொருத்தமானதே.
!
கடன் எடுப்பதை முடியுமானவரை கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும்.
!
கடன் பெறுவோருக்கும், கடன் கொடுப்பவருக்குமான நிபந்தனைகள்.
*
இரு தரப்பினரும் வயது வந்தவர்களாக நல்ல ஞாபகசக்தி உடையவராக இருத்தல் வேண்டும்.
*
கடன் பற்றிய ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொள்ளும் சமயத்தில் அது தொடர்பாக இஸ்லாம்
விதித்துள்ள பொது நிபந்தனைகள் கவனத்தில் கொள்ளப்பட
வேண்டும்.
*
கடன் கொடுக்கல் வாங்கலின் போது அதற்கான சாட்சி வைத்திருத்தல் வேண்டும்.
முடியுமானவரை அவை எழுத்தில் பேணப்பட வேண்டும்.
*
கடன் பெற்றுக் கொடுக்கும் போது அதற்காக நிபந்தனைகளை விதிக்க முடியாது.
2. வக்ஃப்
! ஒரு கையில் இருந்து மறு கைக்கு மாறும் நிலையில்
உள்ள பொருள் ஒன்றை, மாறாத நிலைக்குக் கொண்டு
வந்து
அல்லாஹ்வுக்காக அதன் பயன்களை மக்கள் அனுபவிக்கச் செய்வது வக்ஃப் எனப்படும்.
! ஒருவர் தான் தனிப்பட்ட ரீதியில் அனுபவித்த பொருள்
ஒன்றை பொது நிலைக்குக் கொண்டு வருதல்
வக்ஃப்
ஆகும்.
! ஒரு பொருளை அல்லது அசையாத சொத்தை வாய்மூலமான அல்லது
எழுத்து மூலமான சாட்சியுடன்
பிரசித்தி
பெறச் செய்வதன் மூலமும் அது வக்ஃப் சொத்தாக மாறும்.
! மனிதன் இறக்கும் போது எல்லாச் செயல்களுடனும் உள்ள
அவனது தொடர்புகள் இல்லாமல் போகும்.
எனினும்
மூன்று விடயங்களுக்கான நன்மைகள் மாத்திரம் அவனைப் பின்தொடரும். அவை பயனுள்ள
கல்வி,
தமக்காகப் பிரார்த்திக்கும் பிள்ளைகள், நிரந்தர தர்மம் என்பனவாகும்.
ஆ) வியாபாரம், வட்டி ஆகியவற்றுக்கிடையிலான பிரதான
வேறுபாடுகள் மூன்றை சுருக்கமாக எழுதுக.
வியாபாரம் வட்டி
1.
இலாபமோ, நட்டமோ பெறலாம் 1.
நட்டம் ஏற்படுவதில்லை
2.
ஒரு முறை மாத்திரமே இலாபம் கிடைக்கும் 2.
மீண்டும் மீண்டும் இலாபம் கிடைக்கும்
3.
உடல் உழைப்பு அவசியம் 3.
உடல் உழைப்பின்றி வருமானம் கிடைக்கும்
4.
இஸ்லாத்தில் ஹலாலானது 4.
ஹராமானது
5.
வர்த்தகம் இபாதத்தாகும் 5.
வட்டியில் பங்குபற்றல் ஹராமாகும்.
இ) விவசாயத்தினதும், கைத்தொழிலினதும் முக்கியத்துவம்
பற்றி சுருக்கமாக விளக்குக.
விவசாயம்
!
ஆதம் (அலை) அவர்களை சுவர்க்கத்தில் இருந்து அல்லாஹ் பூமிக்கு அனுப்பியபோது உணவைப்
பெறுவதற்காக விவசாயத்தில் ஈடுபட்டார்கள்.
!
நபி மூஸாவின் சமூகம் விவசாயத்தில் ஈடுபட்டதாக அல்குர் ஆன் குறிப்பிடுகின்றது. மன்னு,
ஸல்வாவை
அல்லாஹ் வழங்கியும் விவசாயப் பயிர்களையே அந்த சமூகம்
வேண்டி நின்றது.
!
குர்ஆனும், ஸுன்னாவும் விவசாயத்தை ஊக்குவித்ததனால், முஸ்லிம்கள் விவ்சாயத்தில் ஈடுபட்டனர்.
“ஒரு
முஸ்லிமிடம் காணியிருந்தால் அவர் அதனை செய்கை ப்ண்ணட்டும்,
அல்லது தனது சகோதரனுக்கு
தானமாகக் கொடுக்கட்டும். அதுவும் முடியாவிட்டால்
அவரே வைத்துக் கொள்ளட்டும்.” (புகாரி, முஸ்லிம்)
!
“ஒரு முஸ்லிம் பயிர்ச் செய்கையில் ஈடுபட்டாராயின், அறுவடையின் பின் அது அழிவுற்றதாயினும்
அவருக்கு அது ஒரு தர்மமாக மாறும்.” (முஸ்லிம்) இது
விவசாயிகள் பெறும் நன்மைகள் பற்றிக் கூறுகிறது.
!
“உரிமை கோரப்படாத நிலத்தை ஒருவர் வளப்படுத்தினால் அவர் அதன் உரிமையாளராவார்.” (புகாரி)
கைத்தொழில்
!
நபியவர்களால் உயர்வாகப் பாராட்டப்பட்டது.
!
நபிமார்கள் தமது வருமானத்தைப் பெறுவதற்காக கைத்தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக
குர்ஆனும், ஸுன்னாவும் சான்று பகர்கின்றது.
!
தாவூத் நபியவர்கள் இரும்புருக்குத் தொழிலிலும், ஸகரிய்யா நபியவர்கள் தச்சுத் தொழிலிலும்
ஈடுபட்டதாக
குர்ஆன் கூறுகிறது.
!
ஸஹாபாப் பெண்கள் கூட கைத்தொழிலில் ஈடுபட்டனர். ஸைனப் பிந்த் ஜஹ்ஷ் (ரழி) அவர்கள் வலை
பின்னி வாழ்க்கை நடத்தியதாகக் கூறப்படுகின்றது.
!
இஸ்லாம் தடுக்காத வழிகளில் தமது உடற் சக்தி, பொருளாதார சக்தி, அறிவு, அனுபவம் ஆகியவற்றைப்
பயன்படுத்தி வெவ்வேறு தொழில்களில் ஈடுபட இஸ்லாமிய
மார்க்க அறிஞர்களால் அனுமதியும்,
வழிகாட்டலும் வழங்கப்பட்டுள்ளன.
(08)
அ) பின்வரும் ஒன்றைப் பற்றி விளக்குக.
1. அல்-ஹத்
அல்குர்ஆனில்
விதிக்கப்பட்டுள்ள தண்டனைகள் இவ்வகையானவை. இவ்வகைத் தண்டனைகளை மாற்றவோ, திருத்தவோ எவருக்கும்
உரிமையில்லை. கொலை. களவு, பாலியல் குற்றங்கள், படுதூறு, மதுபானம் அருந்துதல், ரித்தத்
போன்ற பெரும் பாவங்கள் இவ்வகையில் அடங்கும்.
2. அத்தஃஸீர்
செய்த
குற்றத்தின் பாரதூர தன்மைக்கு ஏற்ப நீதிபதியினால் வழங்கப்படும் தண்டனைகளாகும். பெரும்பாலும்
இவை சிறு குற்றங்களுக்கு வழங்கப்படும். குற்றத்தின் தன்மை, அதனால் ஏற்பட்ட விளைவுகள்,
குற்றத்தின் பின்னணி என்பன கருத்திற் கொள்ளப்பட்டு “இஜ்திஹாத்” மூலம் தண்டனை வழங்கப்படும்.
எனவே இம்முறையில் ஒரே குற்றத்திற்கு அந்தந்த சூழலின் கீழ் வழங்கப்படும் தண்டனைகள் வெவ்வேறாக
அமையலாம்.
ஆ) நபி (ஸல்) அவர்களின் மதீனா வாழ்க்கையில் பின்வரும்
நிகழ்வுகளில் ஒன்றைப் பற்றி விளக்குக.
1. இஸ்லாமிய போராட்டங்கள்
!
குறைஷிகள் தமது பெருமையை நிலைநாட்டவே போர்களில் ஈடுபட்டனர். ஆனால் முஸ்லிம்கள்
இஸ்லாத்தைக் காப்பாற்றுவதற்கும், அல்லாஹ்வின் திருப்தியை
நாடியுமே போர்களில் பங்குபற்றினர்.
!
முஸ்லிம்களின் ஆத்மீக சக்தியின் காரணமாகவும், இஸ்லாத்தக் காப்பாற்றவும், அல்லாஹ்வைத்
திருப்திப்படுத்தவுமே போரிட்டதால் அவர்களுக்கு வெற்றி
கிடைத்தது.
!
பத்ர் போரின் போது முஸ்லிம்கள் பெற்ற வெற்றி இஸ்லாத்திற்குப் புத்துயிர் அளித்தது.
குறைஷிகளுக்கு
அது பெரும் அவமானமாக அமைந்தது.
2. மக்கா வெற்றி
!
ஹிஜ்ரி 8 இல் நிகழ்ந்தது. குறைஷிகள் ஒரு வருட காலத்தினுள் ஹிதைபியா உடன்படிக்கையை
மீறியமையால் நபியவர்கள் பெரும் படையுடன் மக்கா நகர
எல்லையில் தங்கினார்கள்.
!
இதனால் குறைஷிகள் அச்சமடைந்தனர். குறைஷித் தலைவர் அபூ ஸுஃப்யான் இஸ்லாத்தைத் தழுவினார்.
இதனால் யுத்தமின்றி முஸ்லிம்களால் மக்காவினுள் பிரவேசிக்க
முடிந்தது.
!
நபியவர்கள் புனித கஃபாவை சுத்தப்படுத்தி, தமக்குத் தீங்கிழைத்தவர்களுக்குப் பொது மன்னிப்பும்
வழங்கினார்கள்.
3. அரஃபா பிரசங்கம்
!
ஹிஜ்ரி 10 ஆம் ஆண்டில் நபியவர்கள் ஹஜ் கடமையை நிறைவேற்றினார்கள். அப்போது துல்ஹஜ்
9 ஆம்
நாள் மேற்படி பேருரையை நிகழ்த்தினார்கள். இதனை
124000 ஸஹாபாக்கள் செவிமடுத்தனர்.
!
அப்போது ஜாஹிலிய்யாக் காலப் பழக்க வழக்கங்கள் முடிவுற்றதாகவும், யாவரும் ஆதமின் பிள்ளைகள்
என்றும், பழிவாங்குதல், வட்டி என்பன தடுக்கப்பட்டவை
எனவும், பெண்கள் தொடர்பாக இறைவனுக்கு
அஞ்சுமாறும் நபியவர்கள் கூறினார்கள்.
!
மேலும் அல்லாஹ்வின் வேதமாகிய அல்குர்ஆனையும், அவனது ரஸூலின் வாழ்க்கை முன்மாதிரியையும்
விட்டுவிட்டுப் போவதாகவும், அவற்றைப் பற்றிப் பிடித்துக்
கொள்ளுமாறும் கூறினார்கள்.
இ) இஸ்லாமும் தொடர்பாடலும் பற்றி சுருக்கமான
கட்டுரையொன்று எழுதுக.
!
ஒருவர் மற்றவருக்கு அல்லது மற்றைய குழுவொன்றுக்கு நேரடியாக அல்லது மறைமுகமாக தமது கருத்தை
அறிவித்தல் தொடர்பாடல் எனப்படும். கூட்டு வாழ்க்கையாக
இஸ்லாம் தொடர்பாடல் முறைகளுக்கு
அங்கீகாரம் வழங்குகின்றது.
!
இஸ்லாத்தின் மிகப் பழைய தொடர்பாடல் ஊடகங்கள் குர்ஆனும், ஸுன்னாவும் ஆகும்.
!
நபியவர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஊடகங்களை உபயோகித்தார்கள். பேசுவதன் மூலம்
நேரடித் தொடர்பாடலைப் பேணினார்கள். நேரில் தொடர்பாடலை
எழுத்து. கடிதம், தூதர்கள் ஆகியன
மூலம் பேணினார்கள்.
! தொடர்பாடலுக்கு
நபியவர்கள் சந்தை, மஸ்ஜித், மிம்பர், ஸஃபா மலை, ஒட்டகத்தின் முதுகு என்பவற்றைப்
பயன்படுத்தினார்கள்.
!
நபியவர்கள் பிரபுக்களையும், பெண்களையும் சந்தித்து உரையாட தனியாக நேரம் ஒதுக்கினர்.
!
நபியவர்களின் முத்திரையுடன் கூடிய கடிதங்களைப் பின்பற்றி உமர் (ரழி) அவர்கள் தீவானுல்
பரீத் எனும்
தபால் துறையை நிறுவினார்கள். இது உமையாக்களின் காலத்தில்
“தீவானுல் பரீத் வல் அக்பர்” எனும்
தபால் செய்தித் திணைக்களமாக முன்னேற்றமடைந்தது.
!
நபியவர்கள் தமது கடிதங்கள், சுற்று நிருபங்கள் என்பவற்றை எழுத இலிகிதர்களை நியமித்திருந்தனர்.
!
மொழிபெயர்ப்புக்காக ஸைத் இப்னு ஸாபித் (ரழி) அவர்களுக்கு அபராணி, ஸுர்யானி மொழிகளைக்
கற்றுக் கொள்ளுமாறு கூறினார்கள்.
!
தொடர்பாடலின் போது கருத்துக் கூறலுக்கு மேலதிகமாக காட்சிப் பொருட்களை உபயோகித்தலும்
நபியவர்களின் பழக்கமாக இருந்தது. நேர்வழி இஸ்லாம்
மாத்திரமே என எடுத்துக் காட்ட நேர்கோட்டு
மற்றும் ஒலி மாதிரிகளைப் பயன்படுத்தினர்.
!
நபியவர்கள் தகவல் பெறும் போது எவ்வளவு நுண்ணிய வழிகளைப் பின்பற்றினார்கள் என்பதற்கு
பல
உதாரணங்கள் உண்டு. மதீனாவுக்கு ஹிஜ்ரத் சென்ற சந்தர்ப்பத்தில்
அவர்கள் மலைக் குகையில் மூன்று
நாட்களாகத் தங்கியிருந்து குறைஷிகளின் நடமாட்டம்
பற்றி தகவல்களை அறிந்து கொண்டார்கள்.
!
இஸ்லாமியத் தொடர்பாடலில் உள்ள அறநெறிகள்:
1.
சாட்சிகள் காணப்படல் 2.
நம்பகத் தன்மை
3.
பொது நலன் பேணல் 4.
நற்குணங்களைப் பேணல்.
(09)
அ) இஜ்திஹாத் என்றால் என்ன?
ஒரு பிரச்சினைக்கான தீர்வு குர்ஆனிலோ ஸுன்னாவிலோ
காணப்படாதபோது குர்ஆன், ஸுண்ணாவின்
எல்லைக்குள் நின்று அப்பிரச்சினைக்கான
தீர்வைக் காண்பதற்கு ஒரு முஜ்தஹித் மேற்கொள்ளும் முயற்சி
இஜ்திஹாத் எனப்படும்.
ஆ) ஒரு முஜ்தஹித் பெற்றிருக்க வேண்டிய தகைமைகள்
யாவை?
!
முஸ்லிமாக இருத்தல்
! சுய சிந்தனை உடையவராய் இருத்தல்
! அரபு மொழிப் பாண்டித்தியம்
! குர் ஆன், ஸுன்னா பற்றிய ஆழமான அறிவும், அவை தொடர்பான
கலைகள் பற்றிய தெளிந்த ஞானமும்
! தனக்கு முன்னைய முஜ்தஹித்களின் தீர்ப்புக்கள்
பற்றிய அறிவு
இ) இஜ்மா, கியாஸ் எனும் பதங்களை விளக்குக
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக