வியாழன், 31 மார்ச், 2011

UNIVERSITY OF MANAGEMENT AND TECHNOLOGY , PAKISTAN

( A not -for-profit organisation)

offers merit  scholarships based on GCE A/L results  to follow their degree programmes FOR THE ACADEMIC YEAR COMMENCING  SEPTEMBER 2011

அநாதை இல்லங்களை ஒன்றிணைக்கும் நடவடிக்கை

இலங்கையிலுள்ள அநாதை இல்லங்களை ஒன்றிணைப்பது சம்பந்தமாக மேற்கொள்ளப்பட்ட ஆரம்பகட்ட நடவடிக்கை பற்றிய ஒரு தகவலை இத்துடன் இணைக்கிறோம். 

Jamiah Naleemiah New Admission – 2011

Jamiah Naleemiah – Beruwala
*Interview and Examination for New Admission – 2011*

Above Interview and the written examination will be held on 4th,5th,6th of April 2011 in Jamiah Naleemiah from 08.30 AM.
Students will be examined in these areas:

1.    Language Ability

2.    General Knowledge

3.    IQ

Naleemiah has the membership of Federation of Universities in Islamic World. Its Certificate approved and recognized by all international Islamic Universities.

Students will be trained in these specific areas:

·      Islamic Studies (Usuluddeen)
·      Degree
·      Information Technology

*Required Qualification:*

·      G.C.E. O/L pass with islam, maths and tamil, Qualified for the G.C.E. A/L

·      Age below 17 year to 31/01/2011
*Required Documents:*
1.    Birth Certificate Original

2.    O/L Result Sheet  Original

3.    Identity Card

4.    Medical Certificate

5.    Other Documents and Certificates.



*Interview Date:*

            *Provinces*                                                   *Date*

North, North Central, North Western                  04/04/2011 (Monday)

Southern and Eastern                                           05/04/2011 (Tuesday)

Central, Western, Sabragamuwa and Uwa           06/04/201 (Wednesday)

*For Further Details:*

  Refer Thinakaran Dated 25, 27/03/2011

  Or Contact

      +94342276338,  +94342277112

புதன், 30 மார்ச், 2011

New Admissions – 2011

Ayesha Siddeeqa Educational Institute – Mawanella
New Admissions – 2011
 New admissions of students (Girls) for the academic year 2011 will be held at the Institute on the 03rd April 2011, Sunday at 9.00 AM
 
Candidates are required to sit for a Written Test  & an Oral Test
 
Please bring the following documents for the Interview
 
·        G.C.E. O/L Result Sheet (Original)
·        Birth Certificate (Original)
·        Identity Card
·        Any Other relevant certificates
·         
Any information Please conduct :-  
 
ASEI
P.O.Box : 14, Mawanella.
(035:4923509 / 035:3350396 /  077:3950087

ஞாயிறு, 27 மார்ச், 2011

காற்று

ஆழமாக ஒரு முறை சுவாசியுங்கள். உங்களது நெஞ்சு எப்படி விரிவடைகிறது? நீங்கள் சுவாசித்த காற்றினால் நுரையீரல்கள் நிரம்புவதால்தான் நெஞ்சு விரிவடைகிறது. காற்றை உங்களால் காண முடியாது. என்றாலும், உங்களைச் சுற்றி காற்று உண்டு. காற்றடிக்கும் வேளைகளில் காற்று இருப்பதை நாம் உணரலாம்.

வியாழன், 24 மார்ச், 2011

பாலிகா பாடசாலைக்கு பாதிப் மௌலானாவின் பெயர்.

கஹட்டோவிட்ட முஸ்லிம் பாலிகா வித்தியாலயத்தின் பெயரை 'பாதிபிய்யா பெண்கள் பாடசாலை' என மாற்றுவதற்கு பாதிபிய்யா சங்கமும் பாலிகா நிருவாகமும் தயாராகி வருவதாக செய்திகள் பரவியுள்ளன. 

புதன், 23 மார்ச், 2011

A/L விஞ்ஞானப் பிரிவு: நம்மால் முடியாதா?..! - 2


 கஹட்டோவிட்டாவிலும் A/L விஞ்ஞானப் பிரிவை ஆரம்பிப்பதற்கு மிகவும் சாதகமான ஒரு சூழல் உருவாகியுள்ள நிலையில், இதே தலைப்பில் இரண்டாவது முறையாகவும் எழுதுகிறோம்.

முதலில், இம்முறையும் கஹட்டோவிட்டாவுக்கு பெருமை தேடித்தரும் பெறுபேறுகளை

சனி, 19 மார்ச், 2011

பொலிவு பெறும் கஹட்டோவிட்ட முஸ்லிம் பாலிகா வித்தியாலயம்.

கஹட்டோவிட்ட முஸ்லிம் பாலிகா வித்தியாலயம், பெண்களுக்காகவே உருவாக்கப்பட்ட ஒரு பாடசாலை. இது ஒரு காலத்தில் சாதாரண தரம் வரை வகுப்புகளைக் கொண்டிருந்தது மட்டுமல்லாமல், தரமான கல்வியை எமது பெண்களுக்கு வழங்கிய ஒரு பாடசாலையுமாகும்.
 
எமது மற்றொரு கண்ணான அல் பத்ரியா பாடசாலை அப்போது ஆண்களுக்கு மட்டும் நடாத்தப்பட்டு வந்தது. அதனை ஒரு மகா வித்தியாலயமாக தரம் உயர்த்த வேண்டிய நிலை ஏற்பட்ட போது, மாணவர் தொகை அதிகரிக்கப்பட வேண்டும் என்ற தேவை இருந்ததனால், பாலிகா பாடசாலையில் கற்றுக்கொண்டிருந்த மாணவிகளுள் 6ஆம் வகுப்புக்கு மேற்பட்ட மாணவிகளை பத்ரியாவில் இணைக்கும் முடிவு எட்டப்பட்டது. இதனால், மாணவிகளுக்கென 5ஆம் வகுப்பு வரை மட்டுப்படுத்தப்பட்ட இந்தப் பாடசாலை, கடந்த 2006ஆம் ஆண்டு வரை அப்படியே இயங்கியது.

2007ஆம் வருடம் முதல், பலரது ஒத்துழைப்பின் பயனாக, 6ஆம் வகுப்பு, ஏழாம் வகுப்பு என ஒவ்வொரு வருடமாக அதிகரிக்கப்பட்டு, இன்று 10ஆம் வகுப்பு வரையிலான ஒரு தனிப் பெண் பாடசாலையாக தர உயர்வு பெற்றுள்ளது. 2011இல், இன்ஷா அல்லாஹ், சாதாரண தரப் பரீட்சைக்கு இந்தப் பாடசாலை மாணவிகளும் தோற்றவுள்ளனர்.
 
கம்பஹா மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரே ஒரு பெண் பாடசாலை இது என்பதும் இங்கு கட்டாயமாக வலியுறுத்தப் படவேண்டிய ஒரு விடயமாகும்.


வெள்ளி, 18 மார்ச், 2011

இலங்கை முஸ்லிம்களின் எதிர்காலம் பற்றி அரசியல் தலைகள் சிந்திக்குமா?


லங்கை முஸ்லிம்களின் பூர்வீகம் பற்றி மிகத் தவறாக எழுதப்பட்டு சித்தரிக்கப்பட்டு வந்துள்ளதை வரலாறுகளை புறட்டும் போது அறிந்து கொள்ளலாம், அது ஒரு சில முஸ்லிம் புத்திஜீவிகளால் இனங்காணப்பட்டு உண்மையான வரலாற்றை வெளிக்கொண்டுவரும்  பொருட்டு, பல நூல்கள் வெளிவந்தவண்னமுள்ளன.
ஆனால் இந்த கட்டுரை அது பற்றி இப்போது எதையும் பேசவில்லை, அதற்கு வேறு ஒரு தலைப் பை தேர்ந்தெடுப்போம்.
இலங்கை முஸ்லிம்களின் எதிர்காலம் பற்றி அரசியல் தலைகள் சிந்திக்குமா? என்ற வினாவுடன் தொடரும் இந்த கட்டுரையின் நோக்கம், அரசியல் தலைவர்களை மட்டும் சமூக பொறுப்புக்களை கவனத்தில் எடுக்க வேண்டும் என்பதற்கல்ல, சிலரை குறைகூற வேண்டும் என்கின்ற தவறான எண்ணமும் அல்ல.

வியாழன், 17 மார்ச், 2011

பலன் எதிர்பாரா நற்செயல் பலன் தரும்

ஒரு முறை ஒரு மன்னரும் அவர் அமைச்சரும் மாறுவேடத்தில் நகரை வலம் வந்தனர்.

அப்போது வயதான முதியவர் ஒருவர் பழச்செடி ஒன்றை நடுவதைக் கண்டனர்

மன்னர் முதியவரை நெருங்கிதாங்கள் மரணத்தை நெருங்கும் முதியவராக இருக்கிறீர்இந்த செடி மரமாய் வளர்ந்து பழத்தை நீங்கள் உண்ணவா போகிறீர்கள் ...... இச்செடியின் பழத்தை உண்ணும் அளவுக்கு வாழ பேராசை ஏன்? என்றார்

அம்முதியவரோஇப்படி ஒவ்வொருவரும் பல ஆண்டு கழித்து விளையும் கனியை நாம் உண்ணவாப் போகிறோம் என்று எண்ணி செடிகளை நடாமல் இருந்தால் பூமியில் பழ மரங்கள் உண்டாகுமா என்றார்

அதைக் கேட்டு மகிழ்ந்த மன்னர் அவருக்கு ஒரு பொன்முடிப்பு தந்தார்

அப்போது அந்த முதியவர் என் செடி எனக்கு பலனளிக்குமா என்றீர்களே இதோ பாருங்கள் உடனே பலன் தந்துவிட்டதே என்றார்

அதைக் கேட்டு மகிழ்ந்த மன்னர் அவருக்கு மீண்டும் ஒரு பொன்முடிப்பு தந்தார்

அப்போது அந்த முதியவர் ஒரு மரம் வருடத்தில் ஒரு முறை தான் கனி தரும் ஆனால் நான்  நட்ட இந்த செடியோ ஒரே நேரத்தில் இரண்டு முறை பலன் அளித்து விட்டதே என்றார்

அதைக் கேட்டு மகிழ்ந்த மன்னர் மூன்றாம் முறையாக அவருக்கு ஒரு பொன்முடிப்பு தந்தார்

பிறகு தன் அமைச்சரிடம் “இந்த இடத்தில் நாம் இருந்தால் இந்த முதியவர் இப்படி புத்திசாலித்தனமாகப் பேசிப் பேசியே நம் மொத்த கஜானாவையும் காலி செய்திடுவார் “ என்று சொல்ல இருவரும் அந்த இடத்தை விட்டு அகன்றனர்

இக்கதையிலிருந்து  ”பலன் எதிர்பாராமல்  செயல் நற்செயல் உடனே பலன் தரும்என்பதாகும்

கதை வடிவில் எழுதியவர்– கமால் Kamal

ஞாயிறு, 13 மார்ச், 2011

வீதிப் புனரமைப்புக்கு பாதிபிய்யா பச்சைக் கொடி!

கஹட்டோவிட்டாவின் பிரதான வீதியை அகலமாக்கிப் புனரமைக்கும் பணிக்கு இலவசமாக தமது காணியை வழங்க பாதிபிய்யா சங்கம் முன்வந்துள்ளது. இதற்காக வீதியோரமாக அமைக்கப்பட்டிருந்த பழைய மதிற் சுவர் நேற்று உடைக்கப்பட்டது. இதற்குப் பதிலாக, சுமார் 5 அடிகள் தள்ளி, புதிய மதிற் சுவர் விரைவில் எழுப்பப் படவுள்ளது.

பல இழுபறிகளுக்கு மத்தியில், மிகவும் மந்த கதியில் நடைபெறும் பூர்வாங்க வீதிப் புனரமைப்பு நடவடிக்கைகளுக்கு இது பெரும் உற்சாகமளிப்பதாக புனரமைப்புக்கு ஆதரவானவர்கள் தெரிவித்தனர்.

இதே வேளை, பாதிபிய்யாவின் தன்னிச்சையான இந்த நடவடிக்கை, வீதிப் புனரமைப்புக்கு எதிரான குழுவின் வயிறுகளில் புளியைக் கரைத்திருக்கும் என சில 'நடு நிலை' வாதிகள் கதைத்ததையும் கேட்க முடிந்தது.

பாதிபிய்யாவின் இந்த முன்மாதிரியை ஏனைய காணி உரிமையாளர்களும் பின் தொடர்வார்களா?.....................!

சனி, 5 மார்ச், 2011

மன அழுத்த வீதம் ஆண்களிடையே அதிகம்

தமது வாழ்வில், ஆண்களை விட பெண்கள் இரண்டு மடங்கு மன அழுத்தத்துக்கு உள்ளாகின்றனர் என்ற கருத்து பரவலாக இருந்த போதிலும், மேலை நாடுகளில் தற்போது ஏற்பட்டு வரும் சமூக, பொருளாதார மாற்றங்களினால் இந்த நிலை துரிதமாக மாற்றமடைந்து வருவதாக ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.

ஆண்கள் குடும்பத்தின் பொருளாதார அச்சாணியாக இருந்த வழமை, இப்போது, பெண்கள் பட்டப் படிப்புகளை மேற்கொள்வதாலும், உயர் பதவிகள் வகிப்பதாலும், ஏன், உற்பத்தித் துறைகளில் தொழில் புரிவதாலும் பாரிய மாற்றமடைந்துள்ளது. ஆண்களின் தொழில் வாய்ப்புகள் இதனால் வெகுவாகக் குறைந்துள்ளன.

எனவே, பெண்கள் வருமானம் ஈட்டுவதில் முனைப்புடன் செயல்படும் வீதத்துக்கு ஏற்ப, ஆண்களிடையே மன அழுத்தம் அதிகரிக்கும் வீதமும்  கூடும்  என இந்த ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.