புதன், 23 மார்ச், 2011

A/L விஞ்ஞானப் பிரிவு: நம்மால் முடியாதா?..! - 2


 கஹட்டோவிட்டாவிலும் A/L விஞ்ஞானப் பிரிவை ஆரம்பிப்பதற்கு மிகவும் சாதகமான ஒரு சூழல் உருவாகியுள்ள நிலையில், இதே தலைப்பில் இரண்டாவது முறையாகவும் எழுதுகிறோம்.

முதலில், இம்முறையும் கஹட்டோவிட்டாவுக்கு பெருமை தேடித்தரும் பெறுபேறுகளை

  • பெற்றுக் கொடுத்த மாணவ மணிகளுக்கும்
  • கற்றுக் கொடுத்த ஆசான்களுக்கும் 
  • ஊக்கமளித்த பெற்றோருக்கும்

பளிச்! இன்  வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

A/L விஞ்ஞானப் பிரிவு, நம்மால் முடியாதா?' என்ற தலைப்பில், இதே தளத்தில் எமது கவலையை நாம் பகிர்ந்து கொண்ட  விதத்தை சற்று வாசித்துப் பார்ப்பது தற்போதைய நிலையில் மிகவும் பொருத்தமாக இருக்கும். 

 இதுதான் அந்தப் பதிவு.
வியாழன், 30 செப்டெம்ப்ர், 2010 

அல் பத்ரியாவில், இவ்வருட புதிய A/L வகுப்பில், மிகவும் குறைவான மாணவர்களே சேர்ந்துள்ளதாக சில மாணவியர் கதைத்துக்கொண்டு சென்றனர். கடந்த வருட  O/L பரீட்சையில், பத்ரியாவிலிருந்து அதிகமான மாணவ, மாணவிகள் பங்கேற்றிருந்தாலும் சித்தியடைந்த மாணவர்களுள் பெரும்பாலானோர் விஞ்ஞானத்துறையில் பயில்வதற்காக வெளிப் பாடசாலைகளுக்கு சென்றிருப்பதே இதற்குக் காரணம் என அந்த மாணவியர் மேலும் சில தகவல்களையும் கதைத்துச் சென்றனர்.

விஞ்ஞானப் பிரிவில் கற்க எமது மாணவர்கள் செல்வது வரவேற்கத்தக்க ஒரு விடயமாக இருந்தாலும், காலப் போக்கில், குறைந்த மாணவர் தொகை காரணமாக, 'தற்போது எமது பாடசாலையில் நடைபெற்று வரும்  A/L கலைப் பிரிவு வகுப்புக்களும் கூட இல்லாமல் போய் விடுமோ?' என்ற ஒரு நிலையை இது தோற்றுவிக்கும். எனவே, எமது பாடசாலையில் கற்ற கணிசமான திறமையுள்ள மாணவர்கள், அதிலும் மாணவிகள், வெளியே செல்லாமல், எமது பாடசாலையிலேயே விஞ்ஞானப் பிரிவில் கற்கும் வாய்ப்பை அவர்களுக்கு வழங்க முடியாதா? எத்தனையோ பாடசாலைகள் புதிய திட்டங்களை வகுத்து, இவ்வாறான விஞ்ஞானப் பிரிவுகளை நடாத்திச் செல்லும் போது, எமது மாணவர்களைக் கொண்டு எமது பாடசாலையில் ஏன் நாமும் தொடங்க முடியாது?

இது பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தால் மாத்திரம் செய்து முடிக்கக் கூடிய ஒரு காரியமல்ல. மாறாக, ஊர் மக்கள் அனைவரினதும் ஒத்துழைப்புடன் நடக்க வேண்டிய ஒரு விடயமாகும். எமது பாடசாலையைத் தரமுயர்த்த வெளியூரார் வரப்போவதில்லை. ஊர் மக்களாகிய எமது முயற்சியில்தான் எமது வெற்றியும் முன்னேற்றமும் தங்கியிருக்கின்றன.


"நீங்கள் முயற்சி செய்யாதவரை உங்களில் எந்த மாற்றமும் ஏற்படப் போவதில்லை!" இது குர்ஆனின் கூற்று.


தற்போதைய நிலையில்,
  • எமக்கு நல்ல பெறுபேறுகள் கிடைத்துள்ளன
  • எமது வரலாற்றிலேயே, கூடுதலான மாணவர்கள், இம்முறை, A/L விஞ்ஞானத் துறைக்கு தகுதி பெற்றுள்ளனர்.
  • பெற்றோரும் விஞ்ஞானத் துறையில் கற்றோரும் சேர்ந்து இத்துறையை ஆரம்பிக்க எடுத்து வரும் சாதகமான நடவடிக்கைகள்
போன்ற பிரதான காரணிகள், இந்த நோக்கத்தை அடைந்து கொள்வதற்கு சாதகமானவையாக இருக்கின்றன.

காற்றுள்ள போதுதான் தூற்ற வேண்டும்.

பாடசாலை நிருவாகத்தாலும் பெற்றோராலும் மாத்திரம் சாதிக்கக் கூடிய காரியமல்ல இது. ஊரின் ஒவ்வொரு குடிமகனும் இதற்காக பங்களிப்பு செய்ய வேண்டும்.

பளிச்! இன் பங்களிப்பாக இந்த பதிவு என்றும் இருக்கட்டும்!

9 கருத்துகள்:

  1. science pirivukku ivvalavu aatharavaaka eluthureengalae....... anthak koottaththukku mattum aen pokavillai?

    பதிலளிநீக்கு
  2. ஒரு பெற்றார்26 மார்ச், 2011 அன்று AM 9:56

    அன்புள்ள இணையத்தள உரிமையாளர்களே,

    கடந்த டிசம்பரில் சாதாரண தர பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களின் பெற்றோர்களுள் ஒருவனாகிய எனது இந்த உளக்குமுறலை உங்களது தளங்களில் பிரசுரிப்பீர்கள் என்ற நம்பிக்கையோடு இதனை எழுதுகின்றேன்.

    எமது அல்பத்ரியா கல்வித் துறையில் முன்னனியில் திகழ வேண்டும் என்பதை அதிகம் விரும்புபவன் நான். அதன் பழைய மாணவர்களில் ஒருவனும் கூட. இதனால்தான் எனது மகனையும் இங்கு சேர்த்து O/L வரைக்கும் படிக்க வைத்து அதனூடாக சிறந்ததொரு பெறுபேற்றை எதிர்பார்த்தேன். ஆனால், அந்த எதிர்பார்ப்பே மண்ணாகிப் போனது.

    பொதுவாக இம்முறை மாணவர்களும் சுமாராக உயர்வகுப்புக்குத் தகுதி பெற்றிருந்தாலும் ஒப்பீட்டு ரீதியில் பெண் பிள்ளைகளே நல்ல பெறுபேறுகளைப் பெற்றிருந்தனர். இப்பொது நியதி ஏன் மாறக்கூடாது ; ஏன் சமநிலையிலாவது இருக்கக்கூடாது ; இதற்கான மாற்று நடவடிக்கைகளை S.D.S. அல்லது பாடசாலை நிர்வாகம் ஏன் முன்வைக்கக் கூடாது?

    இந்த எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்காமல் மாணவர்களை திட்டித் தீர்த்ததுதான் பாடசாலை ஆசிரிய சமூகம் செய்த வருந்தத்தக்க செயலாகும். மாணவிகளை புகழின் உச்சாணிக் கொம்புக்கே ஏற்றிய ஆசிரியர்கள் அதே வகுப்பு மாணவர்களை நா கூசாமல் பாதாள உலகத்தினர் என்று அப்பட்டமாக பெயர் சூட்டி அழைத்தனர். குறித்த வகுப்புக்காக நடைபெற்ற அனைத்து பெற்றார் ஒன்றுகூடலிலும் ஆசிரியரால் குறிப்பாக அதிபரால் கூறப்பட்ட வாழ்த்துரை என்ன தெரியுமா? "இவனுக பாஸாகுவத நீங்க நனச்சும் பாக்க வானம். இந்த வகுப்பு ஒரு பாதாளக் கும்பல். இவங்க சரிவரவே மாட்டாங்க" என்பதுதான்.

    இவ்வாறான வாழ்த்துரைகளோடு (பதுஆக்களோடு) எந்த மாணவன் தான் பரீட்சையில் சித்தியடைய முடியும்? இதனால் உண்மையில் மானசீகமாகக் கூட மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதை இந்தப் படித்த வர்க்கத்தினர் (???) உணர்ந்து கொள்வார்களா?

    எனக்கு இப்படி விசித்திரமான எண்ணம் ஒன்றும் தோன்றுகிறது. கலந்து படிப்பதில் ஆர்வம் காட்டும் பாடசாலை நிர்வாகத்தினர் மாணவிகளை மட்டும் அரவணைத்து ஆதரிக்கும் நிலையானது, மறைமுகமாக அல்பத்ரியாவிலேயே மற்றுமொரு பால்லிகாவை நடத்தி வருகிறார்களோ என்பதுதான் அந்த எண்ண அலை.

    ஏன் மாணவர்கள் மட்டும் இப்படி ஓரவஞ்சனை செய்யப்படுகிறர்கள்? இப்படி ஓரங்கட்டப்படுவதாலும் திட்டித் தீர்த்து பெற்றோர் கூட்டங்களிலேயே பதுஆ செய்யப்படுவதாலும்தான் மாணவர்களின் பெறுபேறுகள் இப்படித் ஹரங்கெட்டுச் செல்கின்"றன என்பதை ஆசிரிய சமூகம் உணர்ந்து கொள்ளுமா?

    இப்போது வெளியாகியுள்ள பரீட்சைப் பெறுபேற்றில் ஒரு புதிய திருப்பமும் ஏற்பட்டுள்ளதை தொட்டுக்காட்டாமல் செல்ல முடியாது. பாதாள வகுப்பு என்றும் தேரமாட்டார்கள் என்றும் முத்திரை குத்தப்பட்ட O/L ஆண் வகுப்பில் பெரும்பாலானவர்கள், ஆசிரியர்களே மூக்கில் விரலை வைத்து வியக்கும் வகையில் பெறுபேறுகளைப் பெற்றிருப்பதுதான்.

    பதிலளிநீக்கு
  3. மாணவர்களின் கல்வி வீழ்ச்சியில் பங்களிப்புச் செய்யும் ஒரு பிரதான காரணி பற்றிய, பெற்றார் ஒருவரின், குமுறலை உணர முடிந்தது. அத்துடன் மாணவர்கள் மீதான அதிபரின் அத்துமீறிய வார்த்தைகள் பற்றியும் பிரஸ்தாபிக்கப் பட்டிருந்தது. இதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. ஏனெனில், அவரது தந்தை ஆசிரியராக இருந்த காலத்திலும், விஞ்ஞானப் பாடத்துக்கு அவர் வகுப்புக்கு வந்தால், "தாரண்டா விஞ்ஞானம் படிச்சி விஞ்ஞானியான.....?" என்று கேட்டு இப்படித்தான் மாணவர்களை விஞ்ஞானத் துறையில் ஆர்வத்தை இழக்கச் செய்திருந்தார். இப்படிப் பட்டவர்கள் இருக்கும் வரை விஞ்ஞானப் பிரிவு வெற்றியளிக்குமா என்பது சந்தேகம்தான்.

    பதிலளிநீக்கு
  4. ennadaa ithu...........? palaiya sangathikal ippadiyellaam irukkuthaa? iththudan enakkuth therintha ondraiyum ingu saerkka ninaikkiraen. 'sampath paasala' endra karupporuludan thodangappattulla puthiya kalvith thittaththin padi, vinjaanap pirivai thodanguvathu eppadip poanaalum, bathriyaaviloa, baalikaaviloa ainthaam vakuppukku mael iruppathae santhaekamthaan. ithaith therinthuthaan vinjaanap pirivu aarambikkum vidayaththil athipar eedupadaamal naluviyullaar.

    பதிலளிநீக்கு
  5. அதிபரின் முன்னாள் கா...29 மார்ச், 2011 அன்று PM 10:11

    உங்கள் அதிபர் எதில்தான் நழுவமாட்டார் சொல்லுங்கள் மிஸ்டர் ஓட்டை வாய்?

    பதிலளிநீக்கு
  6. என்னப்பா இது தனது மகன் ஏதாவது தவறுகள் இழைத்தால் அவனை சுத்தப்படுத்தி அவனது நண்பர்களை திட்டுவது வழமை தான், மகன் புகை பிடித்தால் அவனது நண்பர்கள் தான் எனது மகனை கெடுத்தி இருக்கிறானுகள் எனது மகன் நல்லவன் என்று சொல்லுறது வழக்கம்.

    ஆனால் இந்த தந்தையின் கண்ணீரும் கவலையும் எமக்கும் புரிகிறது இதற்கு பாடசாலை ஆசிரியர்களை, அதிபரினை, அபிவிருத்தி சங்கத்தினை , அதிபரின் தந்தையினை திட்டுவது முட்டாள் தனம், இதற்கு சமூக ஒருங்கமைப்பும் நாகீரம் என்று சொல்கின்ற புதிய சமூக ஒழுக்க சீர்கேடுகளும் ஒரு முக்கிய காரணமே

    இதனை உரிய முறையில் அதிபருக்கு, SDS கு ஆசிரியர்களுக்கு அறிவிச்சி ஏதாவது நடவடிக்கை எடுப்பது தான் முறை, அப்படி இல்லாமல் சும்மா இனய்யத்தலங்களில் போட்டு சும்மா கழுவுவதில் எந்த அர்த்தமும் இல்லை.

    அதோடு அந்த ஒழுங்கான பெறுபேறுகள் பெறாத பிள்ளையின் திறமையினை இனங்கண்டு அதற்கு அமைவான ஒரு எதிர்காலத்துக்கு வலியினை காட்டுவது பெற்றோர்களினதும் ஆசிரியர்களினதும் ஏன் ஊர் பள்ளிவாயில்களினதும் கடமை, ஏனென்றால் புத்தகப்படிப்பு வராத, எழுத்துக்கள் அழகாக இல்லாத, நீ நாஷமாகப்போவாய் என்று சொன்ன எத்தனையோ பேர் நிறைய்ய சாதனைகளை நிலைநாட்டி வாழ்க்கையில் நல்ல நிலைமைகளுக்கு வந்துள்ளதையும் இங்கு நான் குறிப்பிட விரும்புகிறேன்.

    பதிலளிநீக்கு
  7. உள்ளம் குமுறிய பெற்றார்1 ஏப்ரல், 2011 அன்று AM 7:00

    மிஸ்டர் பெயரில்லாதவருக்கு,
    யதார்த்தமும் நடப்பு விவகாரங்களுமறியாமல், புரியாமல் அல்லது அறிந்துகொள்ள முனையாமல் உங்கள் பாட்டுக்கு அதிபருக்கும் ஆசிரியர்களுக்கும் வக்காளத்து வாங்குகிறீர்களே! அவர்கள் மாணவர்களை எப்படியெல்லாம் ஏமாற்றிக்கொண்டிருக்கிறார்கள் என்பதை நீங்கள் அறிவீர்களா? உண்மையில் நீங்கள் அறியாதவர் அல்லர். நீங்கள் தெரிந்தும் மறைப்பவர்; பட்டும் அதுபற்றிக் காட்டிக் கொள்ளாதவர். முதலாம் ஆண்டுக்கு டீசர் தெரிவு செய்த விதம் பற்றி ஊருக்கே தெரியும். இதனால் புதிதாய் நியமனம் பெற்று வந்த, ஒன்றுமே தெரியாதவர் என்று மக்களால் புகழாரம் செய்யப்பட்டார். இதற்கு யார் பொறுப்பு? சமீப காலங்களில் ஏராளமான வகுப்புக்களில் பாடங்கள் நடைபெறுவதில்லை என்ற விடயம் தெரியாதா உங்களுக்கு? உயர் வகுப்புக்குக் கற்பிக்கத் தகுதிபடைத்த பட்டதாரிகள் பலர் இருந்தும் வேறு யார் யாரோ ஏன் பாடத்தோடு தொடர்பே இல்லாதவர்கள் கூட பாடம் எடுக்கின்ற சங்கதி தெரியுமா உங்களுக்கு? தகுதி உள்ளவர்களுக்கு உப-அதிபர் பதவியும் பகுதித் தலைவர் பதவியும் வழங்கப்பட்டு உயர் அந்தஸ்தில் வைக்கப்பட்டுள்ளார்கள். இது கதையல்ல; நிஜம். இப்போது நடந்து கொண்டிருக்கும் அநியாயம்; அட்டூழியம். இதற்கு யார் பொறுப்பு? சும்மா டை கட்டினால் மட்டும் போதுமா? எஸ். டீ. எஸ். சும்மா கூடிக் கலைந்தால் போதுமா?

    SDS க்கும் அதிபருக்கும் அறிவிக்கச் சொல்கிறீர்களே! இவ்வளவையும் அவர்கள் தெரிந்து கொள்ளாமலா செய்கிறார்கள்! இவ்வாறான செய்திகளை வெளியிடும் தளங்களைச் சாடுகிறீர்களே. உங்களுக்கு நடப்பு விவகாரம் ஒன்று தெரியுமா? சமீபத்தில் ஆர்த்தெழுந்த அரபுலகத்தின் எழுச்சிக்கும், அரபுத் தலைவவர்களின் எதேச்சாதிகாரப் போக்குகள் வெளிப்படுவதற்கும் பின்புலமாக அமைந்தது இவ்வாறான தனியார் தளங்கள்தாம். இதே போன்று பாடசாலை நிர்வாகத்தின் தவறுகள், அத்துமீறல்கள், இருட்டடிப்ப்புக்கள் ( ஏராளம்) வெளிவரும்போதுதான் இவற்றிலிருந்து தவிர்ந்து நடக்கின்ற ஆரோக்கியமான நிலையொன்று தோன்றும். அல்லாஹ் நம்மனைவரையும் பாதுகாப்பானாக.

    பதிலளிநீக்கு
  8. ullathaichchollumm olukkaaana pillai neengal . ungal veettup pillakalum ithanaal paatikkappattirippayngaloa ? eni how naanum antha vappavida science enra peril kathai paditthen .valha atipar, alarha vappavin kunam.

    பதிலளிநீக்கு
  9. உள்ளம் குமுறிய பெற்றாரே நீங்கள் சொல்கின்ற மாதிரி பாடசாலையில் நடைபெருகிரதாக இருந்தால் உண்மையிலே அவ்வாறான தவறான போக்கினை இல்லாமல் ஒழிக்கவேண்டும் தான். அதற்கு உங்களிடம் உள்ள ஆதாரங்களோடு நீங்கள் சில முறையான நடவடிக்கைகளை எடுத்ததால் நல்லம் எண்டு நான் நினைக்கிறேன் அதாவது sds , ஆசிரியர் குலாத்திடம் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளல்,அதிலும் திருப்தி இல்லாவிட்டால் ஊர் பள்ளிவாயில் ஷம்மேலத்திடம் முறையிடலாம், அதுவும் இல்லாவிட்டால் பொலீஸ், கல்வி அமைச்சு போன்ற அமைப்புகளில் முறைப்பாடுகளை செய்து விஷாரனைகளை மேற்கொண்டு முடிவெடுக்க முடியும் என்று நான் நினைக்கிறேன்

    அவ்வாறு இல்லாமல் நீங்கள் இந்த பெயரில்லாத தளங்களில் உங்கள் கவலையினை சொல்வதனால் ஏற்படுவது உங்கள் கவலையினை பயன்படுத்தி சிலர் அவர்களது சொந்த கோபம்களை தீர்த்துக்கொல்வதுதான்.

    மறைவாக இருந்து இவ்வாறான தளங்களில் உங்களின் கவலையினை வெளிப்படுத்தி நீங்கள் சொன்ன மாதிரி அரபுலகத்தில் மாற்றம் ஏற்பட்டதுபோன்று இங்கும் மாற்றம் ஏற்படும் என்று நீங்கள் கருதுவதாக இருந்தால் அது உங்கள் விருப்பம்

    எது எவ்வாறோ இந்தப்பாடஷாளைகளில்தான் எமது குழந்தைகளும் படிக்கவேண்டும் . இந்த பாடஷாளைய்யின் எதிர்காலத்தை கட்டி எழுப்புவது உங்களது, எனது இந்த ஊர்மக்கள் அனைவரினதும் கடமை.

    அல்லாஹ் நம்மனைவரையும் பாதுகாப்பானாக.

    அஸ்ஸலாமு அழைக்கும்

    பதிலளிநீக்கு