சனி, 5 மார்ச், 2011

மன அழுத்த வீதம் ஆண்களிடையே அதிகம்

தமது வாழ்வில், ஆண்களை விட பெண்கள் இரண்டு மடங்கு மன அழுத்தத்துக்கு உள்ளாகின்றனர் என்ற கருத்து பரவலாக இருந்த போதிலும், மேலை நாடுகளில் தற்போது ஏற்பட்டு வரும் சமூக, பொருளாதார மாற்றங்களினால் இந்த நிலை துரிதமாக மாற்றமடைந்து வருவதாக ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.

ஆண்கள் குடும்பத்தின் பொருளாதார அச்சாணியாக இருந்த வழமை, இப்போது, பெண்கள் பட்டப் படிப்புகளை மேற்கொள்வதாலும், உயர் பதவிகள் வகிப்பதாலும், ஏன், உற்பத்தித் துறைகளில் தொழில் புரிவதாலும் பாரிய மாற்றமடைந்துள்ளது. ஆண்களின் தொழில் வாய்ப்புகள் இதனால் வெகுவாகக் குறைந்துள்ளன.

எனவே, பெண்கள் வருமானம் ஈட்டுவதில் முனைப்புடன் செயல்படும் வீதத்துக்கு ஏற்ப, ஆண்களிடையே மன அழுத்தம் அதிகரிக்கும் வீதமும்  கூடும்  என இந்த ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக