ஞாயிறு, 13 மார்ச், 2011

வீதிப் புனரமைப்புக்கு பாதிபிய்யா பச்சைக் கொடி!

கஹட்டோவிட்டாவின் பிரதான வீதியை அகலமாக்கிப் புனரமைக்கும் பணிக்கு இலவசமாக தமது காணியை வழங்க பாதிபிய்யா சங்கம் முன்வந்துள்ளது. இதற்காக வீதியோரமாக அமைக்கப்பட்டிருந்த பழைய மதிற் சுவர் நேற்று உடைக்கப்பட்டது. இதற்குப் பதிலாக, சுமார் 5 அடிகள் தள்ளி, புதிய மதிற் சுவர் விரைவில் எழுப்பப் படவுள்ளது.

பல இழுபறிகளுக்கு மத்தியில், மிகவும் மந்த கதியில் நடைபெறும் பூர்வாங்க வீதிப் புனரமைப்பு நடவடிக்கைகளுக்கு இது பெரும் உற்சாகமளிப்பதாக புனரமைப்புக்கு ஆதரவானவர்கள் தெரிவித்தனர்.

இதே வேளை, பாதிபிய்யாவின் தன்னிச்சையான இந்த நடவடிக்கை, வீதிப் புனரமைப்புக்கு எதிரான குழுவின் வயிறுகளில் புளியைக் கரைத்திருக்கும் என சில 'நடு நிலை' வாதிகள் கதைத்ததையும் கேட்க முடிந்தது.

பாதிபிய்யாவின் இந்த முன்மாதிரியை ஏனைய காணி உரிமையாளர்களும் பின் தொடர்வார்களா?.....................!

5 கருத்துகள்:

  1. வாவ், கம்மோன் பாதிபிய்யா எல்லோரும் அவ்வாறு தாராளமாக கொடுத்தால் நல்லம்,

    உங்களுக்கு என்ன தல தயாரிப்பலரே உங்களது வீட்டுப்பாதை இத்திட்டத்துக்கு உள்வாங்காது தானே.
    அல்லது இதற்கு சாதகமாக எழுதினால் உங்களுக்கு கட்டாயத்தேவைய்யான வேறு பாதைகளையும் பெரிதாக்கிக்கொள்ள உதவும் தொடருங்கள் ஊரின் முன்னேற்றத்துக்காக எழுதுங்கள் உங்களுக்கு வெற்றி கிடைக்கும்.

    பதிலளிநீக்கு
  2. 'peyarillaa' avarkalae,

    neengal adikkadi eluthum comment ovvondrum palich editorukku kurai kooruvathaakavae irukkirathu. avar thanakkuk kidaiththathai eluthukiraar. athil avarathu veettu veethi patri ondrum sollavillaiyae.....

    summaa kulappureengalae nainaa..........

    பதிலளிநீக்கு
  3. எமது ஊர் பல துறைகளிலும் முன்னேற வேண்டும் என்பது எமது விருப்பம். பல் துறை சார்ந்த முன்னேற்றங்களுக்கும் தடையாக இருப்பது எமது பிரதான வீதிதான் என்பது எமது உறுதியான அபிப்பிராயம். 'வரப்புயர நீர் உயரும், நீர் உயர நெல் உயரும், நெல் உயரக் குடி உயரும்' என்று ஔவைப் பாட்டி சொல்லி வைத்தது போல், எமது பிரதான வீதி அபிவிருத்தி அடைந்தால் இங்குள்ள ஒவ்வொருவரும் அபிவிருத்தி காணலாம். இதனாலேயே வீதிப் புனரமைப்பு விடயத்தில் நாம் சார்பாக இருக்கிறோம்.

    ஊரின் எதிர்கால நலன்களில் அக்கறையில்லாத சுய நலமிகள் இதனை எதிர்க்கலாம். கவலை வேண்டாம் தள ஆசிரியரே. தொடருங்கள்...

    பதிலளிநீக்கு
  4. ooril ullorukku illaatha varuththam vanthaan varathhaanukku.............

    hum...... ithuthaan namathu oorukku vantha vinaiyo............?

    பதிலளிநீக்கு
  5. நல்லவிடயம்தான் வந்தான் வருத்ததான் சொன்னது, என்னமோ யாரோ ஒரு பாட்டி சொன்னதாக என்னமோசொன்னார் நல்லம் தான்,
    எல்லம்முன்னேறி வர ஒழுக்கம் பின்போகும்.

    பாதைகள் பெரிதாக்கப்படவேண்டியது காலத்தின் தேவை, அது பெரிதாக்கத்தான் வேண்டும், ஆனால் பஸ் போட்டால் எல்லாம் நாசம் என்று நான் நினைக்கின்றேன் .
    குறிப்பாக மாணவ , மாணவிகள் ஒன்றாக பஸ்ஸில் பயணித்தல், பஸ்ஸினை நடத்தும் அன்னியர்களினால் எமது பெண்களுக்கு அணியாயம்கள்நிகழ்தல், இதனால் இனப்பிரச்சினைகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு, போன்ற பல பிரச்சினைகள் வரும் என்று நான் நினைக்கிறேன், 

    பதிலளிநீக்கு