சனி, 19 மார்ச், 2011

பொலிவு பெறும் கஹட்டோவிட்ட முஸ்லிம் பாலிகா வித்தியாலயம்.

கஹட்டோவிட்ட முஸ்லிம் பாலிகா வித்தியாலயம், பெண்களுக்காகவே உருவாக்கப்பட்ட ஒரு பாடசாலை. இது ஒரு காலத்தில் சாதாரண தரம் வரை வகுப்புகளைக் கொண்டிருந்தது மட்டுமல்லாமல், தரமான கல்வியை எமது பெண்களுக்கு வழங்கிய ஒரு பாடசாலையுமாகும்.
 
எமது மற்றொரு கண்ணான அல் பத்ரியா பாடசாலை அப்போது ஆண்களுக்கு மட்டும் நடாத்தப்பட்டு வந்தது. அதனை ஒரு மகா வித்தியாலயமாக தரம் உயர்த்த வேண்டிய நிலை ஏற்பட்ட போது, மாணவர் தொகை அதிகரிக்கப்பட வேண்டும் என்ற தேவை இருந்ததனால், பாலிகா பாடசாலையில் கற்றுக்கொண்டிருந்த மாணவிகளுள் 6ஆம் வகுப்புக்கு மேற்பட்ட மாணவிகளை பத்ரியாவில் இணைக்கும் முடிவு எட்டப்பட்டது. இதனால், மாணவிகளுக்கென 5ஆம் வகுப்பு வரை மட்டுப்படுத்தப்பட்ட இந்தப் பாடசாலை, கடந்த 2006ஆம் ஆண்டு வரை அப்படியே இயங்கியது.

2007ஆம் வருடம் முதல், பலரது ஒத்துழைப்பின் பயனாக, 6ஆம் வகுப்பு, ஏழாம் வகுப்பு என ஒவ்வொரு வருடமாக அதிகரிக்கப்பட்டு, இன்று 10ஆம் வகுப்பு வரையிலான ஒரு தனிப் பெண் பாடசாலையாக தர உயர்வு பெற்றுள்ளது. 2011இல், இன்ஷா அல்லாஹ், சாதாரண தரப் பரீட்சைக்கு இந்தப் பாடசாலை மாணவிகளும் தோற்றவுள்ளனர்.
 
கம்பஹா மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரே ஒரு பெண் பாடசாலை இது என்பதும் இங்கு கட்டாயமாக வலியுறுத்தப் படவேண்டிய ஒரு விடயமாகும்.


2 கருத்துகள்:

  1. paadasaalaikalukku valangal kidaippathu nallathuthaan. baalikaavukku aasiriyarkal patraakkurai iullai, kattadangalum thatpothaikku pirachchinaiyillai. ithuvellaam thambattam adippathatkaana vetrikal alla. athiparin niruvaakam satru vaekam illaiyamae? vinjaana parisothanai koodam matrum kanani koodangal innum varavillai. innum evvalavo munnaera vaendi irukkirathu. ivatrilum thanniraivu kaanaatha poathu, ivaiyae ithan thoalvikkum kaaranamaaka amaiyalaam. summaa thullip paaya vaanam..............

    பதிலளிநீக்கு