திங்கள், 7 ஜூன், 2010

'கழா கத்ர்' என்பது என்ன?

 
ஈமானின் ஆறாவது அம்சம், ' வல் கத்ரி கைரிஹீ வஷர்ரிஹீ மினல்லாஹி தஆலா'. 'நன்மை தீமைகளின் கத்ர் (நியதி) இறைவனிடமிருந்து உள்ளதாகும்' என இதனை நாம் மொழி பெயர்ப்போம். அதாவது, இந்த அகிலத்தில் நடைபெறுகின்ற அனைத்து நடவடிக்கைகளும் - தனி மனிதனுடையதாக இருக்கலாம் அல்லது அதற்கு அப்பாற்பட்ட ஏனைய நடவடிக்கைகளாக இருக்கலாம் - இறைவனின் நாட்டப்படியே நடக்கின்றன என்பதுவே இதன் விளக்கம். இதனை பல வேளைகளில் நாம் விதி என்றும் சொல்வோம்.

இந்த விளக்கத்தை நாம் எளிதாக சொல்லி விட்டாலும், இதனை சரியாக விளங்கிக் கொள்வதில் பலருக்கு குழப்பமான ஒரு நிலை இருப்பதை அவதானிக்க முடிகிறது. உதாரணத்துக்கு இந்த சம்பாசனையை நோக்குவோம். இது நிஜமொன்றின் நிழல்!

A, B என இரண்டு படித்த நண்பர்கள். A என்பவர் சிறந்த ஒரு முஸ்லிம் சூழலில் வாழ்வதுடன் இஸ்லாம் பற்றி ஒரு சாதாரண முஸ்லிம் கொண்டிருக்க வேண்டிய விடயங்களை தெரிந்து வைத்திருப்பவர். ஆனால், அமல் விடயங்களில் நிறையவே பொடுபோக்குடன் நடந்து கொள்பவர். சினிமாப் படம், பாடல்கள் மற்றும் கேளிக்கை விடயங்களில் மோகம் கொண்டவர். அதே நேரம் B என்பவர், ஒரு படி மேலே சென்று, ஒரு தஃவா இயக்கத்துடன் ஓரளவு தொடர்புகளை வைத்திருப்பவர். அடிப்படையான அமல்களை முடிந்தளவு அமுல்படுத்த முயற்சிப்பவர்.

B:
நண்பனே, நீ படம், பாட்டு, கேளிக்கை என்று அலைந்து திரிகிறாயே; உனது மறுமை பற்றி சிந்தித்து அதற்கான அமல்களில் ஏன் ஈடுபடக்கூடாது?

A:
அதுதான் விதி. இதனை மாற்ற முடியாது.

B:
ஏன் முடியாது? நீயாக நினைத்து, முயற்சியும் செய்தால் மாற்றலாமே?

A:
அது எப்படி முடியும்? எனது செயற்பாடுகள் அனைத்தும் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டவை, அதன் படியே அனைத்தும் நடக்கிறது என்பதுதானே எமது ஈமான்? பிறகு எப்படி நானே புதிதாக ஒன்றை நினைக்கலாம்? நான் இப்படி நடக்க வேண்டும் என எழுதப்பட்டிருந்தால் அதுதானே நடக்கும். அதற்கு நான் என்ன செய்ய முடியும்?

'கழா கத்ர்' பற்றிய உங்களது எண்ணங்களும் இவ்வாறு இருக்கலாம். இது முற்றிலும் பிழையானது; அவ்வாறாயின் சரியானது என்ன? நாம் இதனை கணனி எண்ணக்கருவுடன் இணைத்து எளிதாக விளங்கப்படுத்த இருக்கிறோம்.
 
 
தொடரும்..........

செவ்வாய், 1 ஜூன், 2010

படைப்புகளில் இறை அத்தாட்சி


மாவனல்லை Tharbiya Centre இல் மாதாந்தம் நடைபெறும் Akeeda வகுப்பில் DR. MSM Faique அவர்கள் "படைப்புகளில் இறை அத்தாட்சி"  எனும் தலைப்பில்  நிகழ்த்திய விளக்க வகுப்பிலிருந்து ஒரு பகுதியை இங்கு தருகிறோம்.

இதன் தொடர்சியை முழுமையாக பெற்றுக்கொள்ள தொடர்பு கொள்ளுங்கள்.....


நன்றி: அன்வர் ஸதாத்