இஸ்லாமிய நாகரிகம் (1)
புள்ளி வழங்கும் திட்டம் - 2010
எல்லா வினாக்களுக்கும் விடை தருக
1.1 தொடக்கம் 1.5 வரையுள்ள வினாக்களுக்குப் பொருத்தமான விடையைத் தெரிவு செய்து அதன் இலக்கத்தை அடைப்புக் குறிக்குள் எழுதுக.
1. 1.1 அல்-ஹம்ரா மாளிகையை நிருமானித்த ஆட்சியாளர்
1. முஹம்மத் பின் அஹ்மர் 2. இப்னு தாமத்
3. 3ம் அப்துர்ரஹ்மான் 4.அபுல் வலீத் ( )
1.2 அகபா உடன்படிக்கையைத் தொடர்ந்து இஸ்லாத்தாய்ப் போதிப்பதற்காக நபியவர்களால் மதீனாவுக்கு
அனுப்பி வைக்கப்பட்ட ஸஹாபி
1. அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ப் (ரழி) 2. முஸ்அப் இப்னு உமைர் (ரழி)
3. அபூ மூஸா அல் அஷ்அரி (ரழி) 4. ஸஅத் இப்னு அபீ வக்காஸ் (ரழி) ( )
1.3 முஸ்லிம் நேஷன் எனும் பத்திரிகையை ஆரம்பித்தவர்
1. மாப்பிள்ளை லெப்பை ஆலிம் 2. ஏ.எம். வாப்பிச்சி மரிக்கார்
3. சித்தி லெப்பை 4. ஐ.எல்.எம்.அப்துல் அஸீஸ் ( )
1.4 அபூஜஹ்ல் கொலையுண்ட யுத்தம்
1. உஹ்த் 2. நக்லா
3. அஹ்ஸாப் 4. பத்ர்
( )
1.5 மத்திய ஆசியப் பகுதிகளை வெற்றி கொண்ட படைத்தளபதி
1. முஹம்ம்த் பின் காஸிம் 2. தாரிக் பின் ஸியாத்
3. குதைப பின் முஸ்லிம் 4. மஸ்லமா
( )
1.6 முதல் 1.10 வரையுள்ள வினாக்களில் வரும் இடை வெளிகளை மிகப் பொருத்தமான சொற்களை வைத்து நிரப்புக.
1.6 மாப்பிள்ளை லெவ்வை ஆலிம் அவர்களால் இலங்கையில் வழி நடாத்தப்பட்ட சூபித் தரீக்கா -------------------------- என அழைக்கப்படுகிறது.
1.7 -------------------------------------- அவர்களால் அபூதர் கிபாரி அவர்கள் நாடு கடத்தப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டார்கள்.
1.8 கஃபாவில் தொங்கவிடப்பட்டிருந்த பிரதான் 7 கவிதைகள் ------------------------------------------ எனப்படுகின்றன.
1.9 கராஜ் வரி என்பதை ----------------------------------- எனத் தமிழில் கூறலாம்.
1.10 இலங்கை தேசிய காங்கிரஸின் உப தலைவர்களுள் ஒருவராக, முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த -----------------------------------------------அவர்கள் பதவி வகித்துள்ளார்கள்.
1.11 முதல் 1.15 வரையுள்ள வினாக்களில் அமைந்துள்ள வாக்கியங்கள் சரியாயின் (சரி) எனவும் பிழையாயின் (பிழை) எனவும் அடையாளமிடுக.
1.11 தீவானுன் நபகாத் என்பது செலவுத் திணைக்களத்தைச் சுட்டும்.
( )
1.12 அபூ முஸ்லிம் குராஸானீ கலீபா மன்சூரின் ஆட்சியின்போது கொலை செய்யப்பட்டார்.
( )
1.13 கலீபா அப்துல் மலிக்கின் ஆட்சியில் உமர் பின் அப்துல் அஸீஸ் மதீனாவின் கவர்னராக இருந்தார்.
( )
1.14 அல்ப்-அர்ஸலான் செல்ஜூக்கிய சிற்றரசின் ஆட்சியாளர்களுள் ஒருவராவார்.
( )
1.15 நபியவர்களது வர்தக நடவடிக்கை பற்றி அறிந்து கொள்வதற்காக அன்னை கதீஜாவினால் அமர்த்தப்பட்ட நபர் மைஸரா ஆவார்.
( )
1.16 முதல் 1.20 வரையுள்ள வினாக்களுக்கு சுருக்கமான விடை தருக.
1.16 முஃதஸிலாக் கோட்பாட்டை அரச கோட்பாடாக பிரகடனப்படுத்திய அப்பாஸிய கலீபா யார்?
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
1.17 ஹுதைபிய்யா உடன்படிக்கையின்போது நபித் தோழர்களிடையே அமைதியின்மை ஏற்பட்டபோது குர்பானி கொடுத்து தலை முடியை அகற்றும் பணியை முதலில் ஆரம்பிக்குமாறு நபியவர்களுக்கு ஆலோசனை கூறிய நபியவர்களின் மனைவியின் பெயர் யாது?
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
1.18 பாரசீக சாம்ராஜ்யத்தின் தலை விதியை நிர்ணயித்த, முஸ்லிம்களுக்கும் பாரசீகர்களுக்கும் இடையே நடைபெற்ற யுத்தம் யாது?
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
1.19 நூருத்தீன் ஜங்கீ நிறுவிய நீதிமன்றம் எப்பெயர் கொண்டு அழைக்கப்படுகிறது?
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
1.20 கொன்ஸ்தாந்து நோபிளைக் கைப்பற்றிய கலீபாவின் பெயர் யாது?
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
விடைகள்:
1. 1 2. 2 3. 3 4. 4 5. 3 6. காதிரிய்யா 7. உஸ்மான் (ரழி) 8. ஸப்உ முஅல்லகாத் 9. நிலவரி 10. டி. பீ. ஜாயா 11. சரி 12. சரி 13. பிழை 14. சரி 15. சரி 16. மாமூன் 17. உம்மு ஸலமா / ஸல்மா 18. காதிஸிய்யா 19. தாருல் அத்ல்
20. 2ம் முஹம்மத் / முஹம்மத் அல்-பாதிஹ்
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
பகுதி 2
(இரண்டு வினாக்களுக்கு மாத்திரம் விடை எழுதுக)
2. அகபா உடன்படிக்கையுடன் தொடர்புபடுத்தி பின்வருவனவற்றுக்கு விடை தருக.
(அ). அகபா உடன்ப்டிக்கை இடம்பெற்ற பின்னனி.
- முஸ்லிம்கள் மக்காவில் எதிர் கொண்ட துன்பங்க்ள், துன்புறுத்தல்கள், சமூகப் பகிக்ஷ்கரிப்புக்கள்
- இஸ்லாமியப் பிரசாரத்துக்கன தள்மொன்றைத் தேடி நபியவர்கள் தாயிப் சென்றமையும் அங்கு வாய்ப்புக் கிடைக்காமையும்
- மக்காவுக்கு வந்து செல்லும் விதேச மக்களைத் தொடர்பு கொள்வதற்கு நபியவர்களுக்குத் தடை ஏற்படுத்தப்பட்டமை
- மதீனாவில் அவ்ஸ்-கஸ்ரஜ் கோத்திரத்தினர் தமக்கிடையிலான போராட்டத்தில் களைத்துப்போய் சமாதான நிலையொன்றை எதிர்பார்த்தமை
- நபியொருவரின் வருகை பற்றி யூதர்கள் அறிந்திருந்து, அதுபற்றிப் பிரஸ்தாபித்து, நபியின் வருகையின் பின் மதீனாவாசிகளை அச்சுறுத்தியிருந்தனர்.
முஹம்மத் நபியாக வந்துள்ளார் என்பதை மதீனாவாசிகள் அறிந்து கொண்டதும், அம்மக்கள் யூதர்களை முந்திக்கொண்டு நபியவர்களோடு தொடர்பு கொண்டமை
(ஆ). அகபா உடன்படிக்கையின் நிபந்தனைகள்
- அல்லாஹ்வுக்கு இணை வைக்காதிருத்தல்
- விபசாரம், திருட்டு புரியாமை
- கொலை செய்யாமை
- அவதூறு, பழி சுமத்தாமை
- நபியவர்களின் கட்டளைகளுக்கு முழுமையாக அடிபணிதல்
- தன் சொந்தக் குடும்பத்தைப் பாதுகாப்பதுபோன்று நபியவர்களை / அவரது தலைமையைப் பாதுகாத்தல்
- அறிந்துகொண்டே பாவம் செய்யாதிருத்தல்
(இ). உடன்படிக்கையின் இலட்சியம்
- பாவச் செயல்களிலிருந்து தவிர்ந்த, அல்லாஹ்வின் திருப்தியை இலக்காகக் கொண்ட, லா இலாஹ இல்லல்லாஹ் முஹம்மதுன் ரஸூலுல்லாஹ் என்பதை அடிப்படையாகக் கொண்ட கொள்கை வழிச் சமூகமொன்றை உருவாக்குதல்
(ஈ). உடன்படிக்கையின் விளைவு
- இஸ்லாத்தைப் பிரசாரம் செய்வதற்கான புதிய களம் ஒன்று கிடைக்கப் பெறல்
- இஸ்லாமிய சமூகம் ஒன்றும் இஸ்லாமிய அரசொன்றும் உருவாக வழி பிறந்தமை
- மதீனாவை நோக்கிய ஹிஜ்ரத்துக்கான வய்ப்பு உருவாகியமை
- மக்காவில் கிடைத்த இன்னல்களுக்கு நிவாரணமாய் அமைந்தமை
- யூதர்களை எதிர்கொள்வதற்கான ஒரு சக்தி முஸ்லிம்களுக்குக் கிடைத்தமை
3. கலீபா அலி (ரழி) பற்றிப் பின்வரும் தலைப்புக்களில் விளக்குக.
(அ). கலீபாவாகப் பதவியேற்றல்
- அலி (ரழி) அவர்களது கலீபாத் தெரிவு அமைதியற்ற சூழல் ஒன்றில் இடம்பெற்றமை
- கலீபா உஸ்மான் கொலையுண்டபின் சுமார் 3 தினங்கள் வரை கலீபா அற்ற நிலையில் இஸ்லாமிய அரசு இருந்தமை
- (கூபா, பஸரா, எகிப்து) கிளர்ச்சிக்காரர்கள் குழு அலி (ரலி) அவர்களை கிலாபத்தை ஏற்குமாறு வேண்டியமையும், அலி (ரழி) அதனை மறுத்தமையும்
- ஆரம்ப கலீபாக்கள் தெரிவு செய்யப்பட்டவாறு மக்களது விருப்பின் பேரில் கலீபா தெரிவு செய்யப்படுவதை அலி (ரழி) விரும்பியமை
- மதீனா மக்கள், கிளர்ச்சிக்காரர்கள் உள்ளிட்டவர்களால் மஸ்ஜிதுன் நபவியில் வைத்து அலி (ரழி) கலீபாவாகத் தெரிவாதல்
- பைஅத் இடம் பெறுதல்
(ஆ). உள்-நாட்டுக் கிளர்ச்சிக்கான காரணங்கள்
- கலீபா உஸ்மானைக் கொலை செய்தவர்களைக் கண்டு பிடித்து உடனடியாகத் தண்டனை வழ்ங்க வேண்டுமென்ற கருத்து பொதுவாக இருந்தமை
- உடனடியாகக் கொலையாளியைக் கண்டுபிடித்துத் தண்டனை வழங்குவதற்கான அரசியல் சூழல் காணப்படாமை
- இதற்கான காரணங்கள் பல:
1. கிளர்ச்சிக் காரர்கள் அதிகள்வில் இருந்ததுடன், அவர்கள் நாட்டின் பல பாகங்களிலும் பரவியிருந்தமை
2. ஸ்திரமற்ற அரசியல் நிலை
3. கொலையாளியை நேரில் கண்டவர்கள் என்ற வகையில் கலீபாவின் மனைவி பீபி நைலா, அந்தரங்கச் செயலாளர் மர்வான் ஆகியோரிடமிருந்து தகவல்
பெற முடியாதிருந்தமை
- இத்தகைய காரணங்களால் தல்ஹா, ஸுபைர், ஆய்சா ஆகியோர் ஒன்றிணைந்து பஸ்ராவில் அரசுக்கெதிரான கிளர்ச்சியை ஆரம்பித்தமை
- முஆவியா (ரழி) உமையாக் கோத்திரம் என்ற வகையில் கலீபா உஸ்மானின் கொலைக்குக் காரணமாய் இருந்தவர்களைக் கண்டுபிடிக்கும் உரிமை தனக்கிருப்பதாகக் குறிப்பிட்டு, கொலையாளி கண்டுபிடிக்கப்படும் வரை கலீபா அலீக்குக் கட்டுப்பட மறுத்தமை
(இ). உள் நாட்டுக் கிளர்ச்சிகளைக் கட்டுப்படுத்த எடுத்த நடவடிக்கைகள்
- நாட்டில் அமைதியை ஏற்படுத்தி அதனை ஸ்திரப்படுத்தும் நோக்கில் புதிய கவர்னர்களை நியமித்தமை
- ஒட்டகை யுத்த நிகழ்வு
- ஸிப்பீன் யுத்தம்
- காரிஜீன்களை முறியடிக்க நடவடிக்கை எடுத்தமை
- முஆவியா (ரழி) உடனான சமாதான உடன்பாடு
(ஈ). கலீபா பற்றிய உமது மதிப்பீடு
- நேர்வழி நடந்த கலீபாக்களுள் ஒருவர்
- கிலாபத்தைப் பொறுப்பேற்க முன்னரான காலப்பகுதியில் வழங்கப்பட்ட பங்களிப்பு
- இஸ்லாத்துக்கெதிரான சவால்களை இனங்கண்டு அவற்றை முறியடிக்க நடவடிக்கை எடுத்தமை
- தூய்மையான இஸ்லாமிய சிந்தனையை மேலோங்கச் செய்ய உழைத்தமை
4. இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றுடன் தொடர்புபடுத்திப் பின்வருவனவற்றை விளக்குக.
(அ). அரேபியர் - இலங்கைத் தொடர்பு
- இஸ்லாத்தின் வருகைக்கு முன்னரே அரேபியர் இலங்கையுடன் தொடர்பு கொண்டிருந்தமை
- இதற்கான காரணங்கள்
1. கிழக்கு - மேற்கு கடல் மார்க்க வர்த்தகப்பாதையில் இலங்கை அமைந்திருந்தமை
2. வர்த்தகப் பண்டங்கள் கிடைத்தமை
3. வாய்ப்பான துறைமுக வசதிகள்
4. சுதேசிகள் வெளி நாட்டு வர்த்தகத்தில் ஈடுபாடு காட்டாமையால் சுதேச மன்னர்கள் அரபு வர்த்தகர்களை ஆதரித்தமை
5. பாவா ஆதம் மலைத் தொடர்பு
6. சுதேசிகளின் உபசரிப்பும் வர்த்தகத்துக்காகக் கிடைக்கப் பெற்ற சுமுகமான சூழலும்
7. சுதேசப் பெண்களை மணம் முடித்தமை
(ஆ). ஆரம்பக் குடியேற்றங்கள்
- கிழக்கு - மேற்கு கடல் மார்க்க வர்த்தகப் பாதையில் இலங்கை அமைந்திருந்தமை
- இறக்குமதிப் பண்டக வினியோகமும், ஏற்றுமதிப் பண்டகச் சேகரிப்பும் துறைமுகங்களை அண்டியதாக இடம் பெற்றமை
- கிழக்கு - மேற்கு வர்த்தகம்
1. காலி - திருகோணமலை ஊடாகவும்
2. கொழும்பு, புத்தளம் (பாக்கு நீரிணை) ஊடாகவும் இடம் பெற்றதால், இலங்கையின் மேற்கு, கிழக்கு கரையோரத் துறைமுக நகர்களில் ஆரம்பக்
குடியேற்றங்கள் அமைந்துள்ளன.
- கரையோரக் குடியேற்றங்கள்:
காலி, பேருவலை, கொழும்பு, புத்தளம், மன்னார், திருகோணமலை, மாந்தை, குதிரைமலை
(இ). சிங்கள மன்னர்களுடனான தொடர்பு
- இலங்கையின் பொருளாதார சூழலைக் கருத்தில் கொண்டு ஏற்றிறக்குமதி வர்த்தகத்தில் அரேபியர் பங்கு கொண்டதாலும் அதன் வழி இலங்கை மன்னர்களின் ஊக்குவிப்பு இருந்தமையும், இரு சாராரிடையே நியாயமான உறவுகள் ஏற்பட வழியமைத்துள்ளன.
- அரசியல், பொருளாதார விடயங்களில் மன்னர்களோடு நெருங்கிய உறவு கொண்டிருந்தமை சுதேச மக்களிடம் கௌரவத்தைப் பெற வழி வகுத்தமை
- ஆட்சியாளர்களது நம்பிக்கைக்குப் பாத்திரமாக இருந்து அரச நிர்வாக விடயங்களில் பங்கு கொண்டமை
Eg: 1. தூதுவர்களாக (அபூ உஸ்மான்)
2. அரச அதிகாரிகளாக
3. அரச வைத்தியர்களாக
- வைத்தியர்களுக்கு நிலம் அன்பளிப்பாக வழங்கப்பட்டமையும் அங்கு அவர்கள் குடியேற்றப்பட்டமையும்
- காலனித்துவத்துக்கெதிரான போராட்டங்கள் வெளி நாட்டு உதவிகளைப் பெற்றுக் கொடுத்தும், அவற்றில் நேரடியாகப் பங்கு கொண்டும் மன்னர்களுக்கு
உதவியமை
(ஈ). சுதந்திரத்துக்குப் பிற்பட்டகால அரசியல் துறைப் பங்களிப்பு
- முஸ்லிம்கள் பாராளுமன்ற உறுப்பினர்களாக, அமைச்சர்களாக, சபா-நயகர்களாக, ராஜ தந்திரிகளாக, அரச துறை உயர் அதிகாரிகளாகப் பணியாற்றி வருதல்.
- உள்ளூராட்சி மன்றங்கள், ஆணைக்குழுக்கள், திணைக்களங்கள் முதலானவற்றில் பணியாற்றி வருதல்
- பெரும்பான்மை அரசியற் கட்சிகளுடன் இணைந்ததாய் அமைந்த பங்களிப்புக்கள்
- தனிக் கட்சி அமைத்தலும் அதன் வழி பங்களிப்பும்
5. கலீபா வலீத் பின் அப்துல் மலிக் பற்றி பின்வரும் தலைப்புக்களில் எழுதுக.
(அ). கலீபாவாகப் பதவியேற்றல்
- உள் நாட்டுக் குழப்பங்கள் அடக்கப்பட்டு அமைதியான ஒரு சூழலில் கிலாபத் பொறுப்பை ஏற்றுக்கொள்ளல்
- தந்தை அப்துல் மலிக்கினால் அவரது வாரிசாகப் பிரகடனப்படுத்தப்பட்டு அரசியல் விவகாரங்களில் பயிற்சி பெற்றிருந்தமை
- ஆரம்பம் முதலே சுமுகமானதாய் ஆட்சியை முன்னெடுத்துச் செல்வதற்கான வாய்ப்பைப் பெற்றமை
(ஆ). இராஜ்ய வியாபகம்
- கிழக்கு. மேற்கு, மத்தியாசியா முதலாம் பிரதேசங்களில் அமைந்த இராஜ்ய விஸ்தீரணம்
- கிழக்கில் சிந்துப் பிரதேஸ்த்தை முஹம்மத் பின் காஸிம் வெற்றி கொள்ளல்
- மேற்கில் Spainஐ தாரிக் பின் ஸியாத், தளபதி மூஸா பின் நுஸைர்
- மத்தியாசியாவில் மாவராஅன்னஹ்ர் பகுதியில் பல்க் உள்ளிட்டபிரதேசங்களை தளபதி குதைபா பின் முஸ்லிம்
- இவற்றை வெற்றி கொண்டு இஸ்லாமிய இராஜ்யத்தின் மாகாணங்களாக இணைத்தமை
(இ). அவரது மாகாண ஆளு-நர்கள்
- கிழக்கு - ஹஜ்ஜாஜ் இப்னு யூஸுப்
- மேற்கு - மூஸா பின் நுஸைர்
- ஹிஜாஸ் - உமர் பின் அப்துல் அஸீஸ்
- மத்தியாசியா - குதைபா பின் முஸ்லிம்
(ஈ). கலீபா பற்றிய உமது மதிப்பீடு
- வலீத் காலத்தில் இடம் பெற்ற இராஜ்ய விஸ்தீரணம்,
- திறமையானவர்களை இனங்கண்டு அவர்களை அரச விவகாரங்களில் ஈடுபடுத்தியமை
- பொதுவான அபிவிருத்தி நடவடிக்கைகள்
* பகுதி 3
(இரண்டு வினாக்களுக்கு மாத்திரம் விடை எழுதுக)
6. நபியவர்களது ஹஜ்ஜதுல்விதாப் பிரசங்கம் உட்பொதிந்துள்ள அம்சங்களைச் சுருக்கமாகக் குறிப்பிட்டு, அவ்வுரையின் முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டுக.
- ஹஜ்ஜதுல் விதா அறிமுகம் (சுருக்க விளக்கம்)
(ஹிஜ்ரி 10ல் ஹஜ்ஜின் போது நபியவர்களால் அறபா மைதானத்தில் பெருந்தொகையான ஸஹாபாக்கள் முன்னிலையில் நிகழ்த்தப்பட்ட உரை)
- சுருக்கம்:
. நபியவர்களின் மக்கா, மதீனா வாழ்வின் 23 வருட தஃவாவின் சுருக்க விளக்கமாக இவ்வுரை அமைந்துள்ளமை
1. அல்லஹ்வை வணங்கி அவனுக்கு வழிப்பட்டு வாழ்தல்
2. மனித சமத்துவம் ( அறபி - அஜமி வேறுபாடின்மை )
3. மானிட கண்ணியம் ( உயிர், உடைமை, மானம், பாதுகாப்பு )
4. பெண்ணுரிமை
5. குர்ஆன், ஸுன்னா இரண்டுமே வாழ்க்கை வழிகாட்டி
6. அடிமை ஒழிப்பு
7. பொருளாதார மேம்பாடு
8. மார்க்கம் முழுமைப்படுத்தபட்டமை
9. இஸ்லாத்தை எத்திவைத்தல் - தப்லீக்
- உரையின் முக்கியத்துவம்:
* மானிட உரிமைகள் முக்கியம் பெறாத ஒரு காலத்தில் நபியவர்கள் அவைபற்றிக் கூறியிருப்பதன் மூலம், இவ்வுரையை மனித உரிமைகள் தொடர்பான முன்னோடி உரை எனலாம்.
* குர் ஆன், ஹதீஸ் இரண்டையும் அடியொட்டி வாழ்வேண்டுமென்று வலியுறுத்தியதன் மூலம் பிற்காலத்தில் தனது உம்மத்தினர் வழிதவறாதிருப்பதற்கு வழிகாட்டியமை
* ரிஸாலத், நன்மையை ஏவித் தீமையைத் தடுத்தல் முன்னெடுக்கப்படுதல், இஸ்லாமிய தஃவாப் பிரசாரம் எல்லாக் காலத்திலும் தொடரப்பட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளமை
* மனித உரிமைகள் மதிக்கப்பட்டுள்ளமை
* சமூகத்தீமைகள் களையப்படல்
* இஸ்லாமியப் பொருளாதாரத்துக்கான, வட்டி தவிர்ந்ததாய் அமைந்த வழிகாட்டல்
7. பாத்திமீ சிற்றரசின் தோற்றம். பங்களிப்புப் பற்றி ஆராய்க.
- இச்சிற்றரசு கி.பி. 9ம் நூற்றாண்டில் வட ஆபிரிக்காவில் தோற்றம் பெற்றமை
- ஷீஆக்களின் இஸ்மாயிலிய்யா பிரிவைச் சேர்ந்த இவர்கள் ஹுஸைமாக் கோத்திரத்தில் தம் செல்வாக்கை மேலோங்கச் செய்தமை
- அபூ அப்துல்லா யமானி கி.பி. 909ல் கைரவான் நகரைக் கைப்பற்றி, ஸல்த் என்பவரை ஆட்சியாளராகப் பிரகடனப்படுத்தியமை
- ஸல்த் உபைதுல்லாஹ் மஹ்தி எனும் பெயரில் பதவியிலமர்ந்து பாத்திமீ சிற்றரசை ஸ்திரப்படுத்துதல்
- ஸல்த் திறமையான நண்பர்களை கவர்னர்களாக நியமித்து ஆட்சியைப் பலப்படுத்தியதோடு, ஆட்சிக்கு எதிரானவர்களை இனங்கண்டு ஒழித்தமை
- சிசிலி, சாடினியா, கோசுதா முதலாம் மத்தியதரைக் கடற்கரைத் தீவுகளையும் அலெக்ஸாந்திரியாவையும் கைப்பற்றல்.
- Tunisல் மஹ்தி எனும் பெயரில் நகரம் ஒன்றை நிறுவி அதனைத் தலை நகராக்குதல்
- கி.பி. 952ல் பதவியேற்ற முஇஸ், 961 ல் எகிப்தைக் கைப்பற்றி கைருவானைத் தலை நகராக்குதல்
- இவர்களது ஆட்சியின்போதே எகிப்தில் அல்-அஸ்ஹர் பல்கலைக்கழகம் நிறுவப்படல்
8. அப்பாஸிய கிலாபத்தின் வீழ்ச்சிக்கு வழியமைத்த காரணிகளை விளக்குக.
- அப்பாஸிய ஆட்சி பற்றிய சுருக்க அறிமுகம்:
* ஹிஜ்ரி 132 முதல் ஹிஜ்ரி 656 வரை பக்தாதைத் தலைனகராகக் கொண்ட்மைந்த ஆட்சி
- சமய, சமூக, அரசியல், பொருளாதார காரணிகள் சுட்டிக்காட்டப்படல்
- சமயம் சார்ந்தவை
1. நாட்டு நிர்வாக விடயங்களில் சமயக் கருத்துக்கள் முதன்மை பெறாமை
2. சமய உட்பிரிவுகளின் தோற்றம். Eg; முஃதஸிலா, சூபித்துவ சிந்தனைகள்
- சமூகம் சார்ந்தவை:
1. இஸ்லாமிய வழிமுறைக்கு முரணான பிற கலாசார அம்சங்களின் மேலாதிக்கம்.
Eg; ஆடம்பர மோகம்
2. சமூக, கோத்திரப் பிளவுகள்
3. அஜமி, அரபி வேறுபாடு
- அரசியல் சார்ந்தவை:
1. பிற்கால கலீபாக்களின் தகுதியின்மையும் பலவீனமும்
2. துருக்கியர் செல்வாக்கு
3. இராணுவக் கட்டமைப்பின் சீர்குலைவுகள்
4. சிற்றரசுகளின் தோற்றம், அப்பஸிய கலீபாக்கள் மீதான செல்வாக்கு
5. தாத்தாரியர் படையெடுப்பு
- பொருளாதாரம் சார்ந்தவை:
1. காலியான திறைசேரி
2. கிளர்ச்சிகள், குழப்பங்களால் பொருளாதார முயற்சிகளில் ஏற்பட்ட தளர்ச்சி
3. மத்திய அரசு VS சிற்றரசு மோதல்களால் மத்திய அரசின் வருமானம் பாதிப்புற்றமை
9. கலீபா ஹாரூன் அல்-ரஷீதின் ஆட்சிச் சிறப்புக்கு பர்மகீகளாற்றிய பணிகள் பற்றி விளக்கி, அவர்களின் வீழ்ச்சிக்குத் துணையாகிய காரணிகளையும் விளக்குக.
- ஹாரூன் ரஷீத் பற்றிய சுருக்க அறிமுகம்
- பர்மகீகள் பற்றிய சுருக்க அறிமுகம் ( பல்க், - முஸ்லிம் பின் குதைபா - காலித் )
- ஹாரூன் - பர்மகீ உறவு / நட்பு
- ஹாதி - ஹாரூன் வாரிசுரிமை விடயத்தில் யஹ்யா பர்மகீயின் ஹாரூனுக்குச் சார்பான நிலைப்பாடு
- ஆட்சி நிர்வாகத்தில் பர்மகீகள் பிரதம அமைச்சர்களாக, அமைச்சர்களாக, நிர்வாகிகளாகப் பணியாற்றுதல்
- யஹ்யா, ஜஃபர், மூஸா, முஹம்மத், பழ்ல் முதலனோரின் பங்களிப்பு
-இராணுவத்தினராகவும், தளபதிகளாகவும், பைதுல் மால் மேற்பார்வையாளர்களாகவும் கடமையாற்றியமை
- சுமார் 17 வருட காலம் அப்பாஸிய கிலாபத்தில் மேலாதிக்கம் செலுத்தியமை
- வீழ்ச்சிக்கான காரணிகள்:
1. ஜஃபர் - அப்பாஸா ( ஹாரூனின் சகோதரி ) திருமண விடயத்தில் ஹரூனின் அதிருப்தி
2. சமூகத்தின் முதன்மைப் பிரஜைகளாக மக்களிடையே வளர்ச்சி கண்டமை
3. நிதி (பைதுல் மால்) விடயத்தில் கலீபாவைக் கட்டுப்படுத்த முற்பட்டமை
4. ஷீஆ - ஸுன்னி / அஜமி - அரபி போராட்டத்தில் பர்மகீகள் பற்றி பழ்ல் பின் ரபீஆ, ஹாரூனின் உள்ளத்தில் தப்பபிப்பிராயங்களைத் தோற்றுவித்தமை
5. பர்மகீகளுக்கு எதிராக ஒற்றர்கள் தகவல்கள் வழங்கியமை
Eg: 1. ஷீஆ ஆதரவு
2. அரசைக் கவிழ்க்க முயற்சி
6. ஹரூனிடம் இயல்பாகவே காணப்பட்ட சந்தேக மனப்பாங்கு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக