புதன், 13 அக்டோபர், 2010

யுத்தம் என்பது ஒரு 'முடிந்த கதை' - ஒபாமா


ஈராக்கில் அமெரிக்கப் படை நடவடிக்கைகள் முற்றுப் பெற்றுள்ளதாக, பொது மக்களுக்கான ஒரு நேரடி தொலைக்காட்சி உரையின்
போது, பராக் ஒபாமா உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். இப்போது யுத்தம் என்பது ஒரு 'முடிந்த கதை' என்று கூறிய ஒபாமா,
ஈராக்கை சர்வாதிகாரத்திலிருந்து மீட்டெடுத்து மீண்டும் ஈராக் மக்களிடம் வழங்கியமைக்காக அமெரிக்க இராணுவத்தை புகழ்ந்து(?) பாராட்டினார். யுத்தப் படையினர் ஈராக்கை விட்டு வெளியேறினாலும், 50 000 துருப்பினர் ஈராக் படைக்கு பயிற்சிகளை வழங்குவதற்காக ஈராக்கில் தொடர்ந்து தங்கியிருக்கும். எவ்வாறாயினும், இன்னும் சில வருடங்களுக்குள் அனைத்து படையினரும் திருப்பி அழைக்கப்படுவார்கள் என தமது உரையின் போது மிகவும் வலியுறுத்திப் பேசினார் ஒபாமா.

WMD தேடி அமெரிக்கா ஈராக்கில் நுழைந்தது...... இதன் பின், தாக்குதல்கள்............... அழிவுகள்............... அப்பாவிகள் இலட்சக் கணக்கில் கொலை............ அமெரிக்க/ பிரிட்டிஷ் படையினர் ஆயிரக்கணக்கில் சாவு.......... மொத்தத்தில் முழு ஈராக்கும் எப்போதுமில்லாத அளவு அபாயத்தில்! அழிவுகள் தொடர்கின்றன........... ஆனால், பணி முடிந்ததாக ஒபாமா கூறுகிறார். WMD கிடைக்கவில்லை..........  அப்படியென்றால் என்ன பணி முடிவுற்றது................? ஈராக்கை அழித்தாவது பெற்றோலை உறிஞ்சும் பணியா? இதைத்தான் ஒபாமா சொல்லியிருக்க வேண்டும்.

ஈராகில் இருப்பவர்கள் மனிதர்களல்ல. அதனால்தான் அங்கு மனித உரிமைகளுக்கு மதிப்பிலாமல் இருக்கிறது!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக