ஞாயிறு, 17 அக்டோபர், 2010

நீங்கள் ஒரு முஸ்லிமா? உங்கள் தனிப்பட்ட வாழ்வில் FBI மூக்கை நுழைக்கும்!


முஸ்லிம் என்ற ஒரே காரணத்துக்காக அவர்களது தனிப்பட்ட வாழ்க்கையைக் கூட இரகசியமாக துப்பறியும் நாகரிகமற்ற நடவடிக்கையில் அமெரிக்க போலீஸ் FBI இறங்கியுள்ள விடயம் அண்மையில் அம்பலமாகியுள்ளது.
இந்த விடயம் வெளியுலகுக்குத் தெரிய வந்த விதம் சுவாரஷ்யமானது.

20 வயதுடைய யாஸிர் அபீபி ஒரு கபியூட்டர் விற்பனையாளர். அத்துடன் ஒரு
மாணவரும் கூட. சன்பிரான்சிஸ்கோவில் வசித்து வரும் இவர் ஒரு நாள் தனது காருக்கு oil மாற்றுவதற்காக மெக்கானிக்கிடம் சென்றார். காரின் பின்பக்க அடிப்பகுதியில் மேலதிகமான ஒரு வயர் துண்டு தொங்குவதை அவதானித்த மெக்கானிக், அது எங்கிருந்து வருகிறது? என்று தேடினார். அங்கே குறித்த காருடன் தொடர்பில்லாத ஒரு சிறிய கருவி பொருத்தப்பட்டிருந்தது. அதனை யாஸிரிடம் காட்டி விளக்கம் கேட்டார். இந்த இலக்ட்ரொனிக் உபகரணம் என்னவென்று இருவருக்கும் புரியவில்லை.

பிறகு இருவருமாக, அதன் படத்தை இணையத் தளத்தில் வெளியிட்டு, அது தொடர்பான தகவல்களைத் தந்து உதவுமாறு கேட்டிருந்தனர்.

இரண்டு நாட்கள் கழித்து யாஸிரின் Santa Clara அபார்ட்மெண்டுக்கு போலீஸார் வந்து அந்த உபகரணத்தைக் கேட்டனர். அது ஒரு GPS (Global Positioning System). இதை எடுத்துக் கொண்டு ஒருவர் எங்கு சென்றாலும், அவர் எந்த இடத்தில் இருக்கிறார் என்பதை துல்லியமாக அறிய முடியும்.

தனக்குத் தெரியாமல் தனது தனிப்பட்ட பயணங்களை பின் தொடர்ந்த FBI க்கு எதிராக யாஸிர் தொடுத்த வழக்கு இப்போது பல பிரச்சினைகளைக் கிளப்பியுள்ளது. "ஒருவரின் நியாயமான தனிப்பட்ட வாழ்வை, எந்த விதமான காரணங்களுமின்றி, சட்ட அனுமதியின்றி பின் தொடர்வது பாரிய மனித உரிமை மீறலாகும்" என மாநில நீதிபதி ஒருவர் கருத்துத் தெரிவித்துள்ளார். இதே போன்ற கருத்துக்கள் மேலும் பல சட்டத்துறை சார்ந்தோராலும் முன் வைக்கப்பட்டுள்ளன.

மனித உரிமைகளுக்கு உயர்ந்த மதிப்பளிக்கும்(?) அமெரிக்காவா இப்படி? 'நாம் முஸ்லிம்களுக்கு எதிரானவர்களல்ல; பயங்கரவாதத்தையே எதிர்க்கிறோம்' என்று தொட்டிலையும் ஆட்டி, 'FBI யே, நீ முஸ்லிம்களை நிம்மதியாக இருக்க விடாதே' என்று மறை முகமாக முஸ்லிம் சமுதாயத்தைக் கிள்ளியும் விடுகிறது.

2 கருத்துகள்:

  1. There are lot of such incidents even in Sri Lanka. They are not coming into light. It is the duty of people like you to bring them out of dark.

    பதிலளிநீக்கு
  2. இப்போது வேண்டாம்20 அக்டோபர், 2010 அன்று PM 11:11

    மேலை நாடுகள் பெரும்பாலனவற்றில் பரவியிருக்கும் ஒரு கெட்ட தொற்று நோய்தான் இது. கவனமாக இருப்பது நம் கடமை. அதே வேளை, சரிந்து விழாமல், அதற்கு எதிராக எழுந்து நிற்பதும் நமக்கேயுரிய கடமைதான்.

    பதிலளிநீக்கு