செவ்வாய், 12 அக்டோபர், 2010

நவீன கால சீர்திருத்த முன்னோடிகளும் அவர்களது அமைப்புக்களும்

1. முஉறம்மத் இப்னு அப்துல் வஹ்ஹாப் (ரஹ்)

20ம் நூற்றாண்டில் தோற்றம் பெற்ற இஸ்லாமிய மறுமலர்ச்சிக்கும் இயக்கங்களுக்கும் முன்னோடியாக அமைந்தது இமாம் முஹம்மத் பின் அப்துல் வஹ்ஹாபின் தஃவாப் பணியே என்ற உண்மையை எவரும் மறுப்பதற்கில்லை. இவரைத் தொடர்ந்தே ஏனைய சீர்திருத்தவாதிகள் தோற்றம் பெற்றனர்.

இமாம் முஹம்மத்  ஸஊதிஅரேபியாவில் அன்றிருந்த நஜ்த் மாகாணத்தில் அமைந்துள்ள ரியாத் நகருக்கு வடக்கே சுமார் 70 கி.மீ. தொலைவிலுள்ள அல்-உயைனா எனும் சிற்றூரில் கி.பி. 1703ல் பிறந்தார். சிறு வயது முதலே சிறந்த விவேகியாகவும், நாவன்மை படைத்தவராகவும் விளங்கியமையால் 10 வயதாகும்போதே அவரால் அல்குர்ஆனை மனனம் செய்ய முடிந்தது. இவரது தந்தைதான் இவரின் முதல் ஆசானாக விளங்கினார். தந்தை ஓர் ஆலிமாகவும் காழியாகவும் திகழ்ந்த அதே வேளை தந்தையின் தந்தை ஓர் ஆலிம், ஒரு பகீஹ், ஒரு முகப்தி என்று பல சிறப்பு அந்தஸ்துக்களைப் பெற்றிருந்தார். இவ்வாறு குடும்ப ரீதியாக இவருக்குக் கிடைத்த அறிவுச் சூழலும் பின்புலமுமே பிற்காலத்தில் சிறந்ததொரு மார்க்க அறிஞராகப் பிரகாசிக்கக் களமமைத்துக் கொடுத்தன. இருப்பினும் பிற்பட்ட காலத்தில் இவரது தந்தையே இவரது கொள்கைக்கு எதிரியாக விளங்கினார்.

சமய சூழல்

இவரது காலத்தில் உலமாக்களுக்கு எந்த மதிப்பும் இருக்கவில்லை. இஸ்லாம் தோன்றி வளர்ந்த அரேபியாவிலேயே இஸ்லாம் அந்நியமாகிப் (கரீப்) போயிருந்தது. பல சந்தர்ப்பங்களில் உலமாக்கள் கொலை செய்யப்பட்டனர். கல்வியறிவு அற்றிருந்த இச்சமூகத்தில் அரசியல் சீர்கேடுகள் எங்கும் தலைவிரித்தாடின. ஜாஹிலிய்யாக் காலம் மறு பரிணாமம் பெற்று விட்டதோ என்று எண்ணுமளவுக்கு நிலைமை மோசமாகிவிட்டிருந்தது. ஜாஹிலிய்யதுஷ்-ஷிர்க் எனப்படுகின்ற ஜாஹிலிய்யத் இக்காலத்தில் மிக மோசமான நிலைமையை அடைந்திருந்தது. அல்லாஹ் அல்லாதோரை வணங்குதல், கபுறு வணக்கம், ஒளலியாக்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தல் முதலாம் அம்சங்கள் மிகப் பரவலாகக் காணப்பட்டன. கற்களையும் மரங்களையும்கூடக் கண்ணியப்படுத்தும் நிலை மீண்டும் அரேபியாவில் உருவாகியது. இத்தகைய ஒரு சமூகப்பின்னணியில்தான் முஹம்மத் இப்னு அப்துல் வஹ்ஹாபின் தோற்றம் இடம்பெறுகின்றது.

பணிகள்

தௌஹீதை நிலை நிறுத்துவதே அவரது மிக முக்கியமான பணியாக இருந்ததால், ஷிர்க்கிற்கு எதிரானதாகவே அவரது போராட்டம் அமைந்திருந்தது. இதனால்தான் இவரையும் இவரது கொள்கை சார்ந்தவர்களையும் பொதுவாக தௌஹீத் வாதிகள் என மக்கள் அழைக்கின்றனர். அன்று நிலவிய பித்அத்துக்கள் எனப்படும் நூதன அனுஷ்டானங்கள், குராபாத் எனப்படும் மூடநம்பிக்கைகள், கொள்கைகளுக்கெதிராகப் பரவலாகப் போராடிய ஒருவராகவும், அசலான அல்குர்ஆன், ஸ{ன்னாவின் வழியில் மக்கள் உருவாக்கப்படல் வேண்டு;ம் என்பதில் ஆர்வமும் தீவிர ஈடுபாடும் கொண்டவராகவும் இவர் காணப்பட்டார்.

இவரது அமைப்பு பற்றி சமூக மட்டத்திலும் ஆய்வாரள்கள் மத்தியிலும் வித்தியாசமான கருத்துக்கள் நிலவுவதைக் காணமுடிகிறது. சிலர் தன்னை முழுக்க முழுக்க சன்மார்க்க இயக்கம் என்று பார்க்கின்றனர். வேறு சிலர் அரசியல் நோக்கத்துக்காக மார்க்கத்தைப் பயன்படுத்தும் இயக்கம் என இதனைக் கருதுகின்றனர். மற்றும் சிலர் ஏக காலத்தில் இதனை அரசியல் ரீதியானதும்  மார்க்க ரீதியானதுமான இயக்கமாகக் கருதுகின்றனர். இவ்வாறு கருதுவதற்குக் காரணம் சஊதி அரேபிய அரசு என்ற பெயரில் ஒரு தனியான அரசு உருவாவதற்கு இவரது பங்களிப்பே மிகப் பெரும் காரணமாக அமைந்தது. எனவே, உஸ்மானிய சாம்ராஜ்யத்தில் இருந்து சஊதி உருவாவதற்கு காரணமாக அமைந்தவர் என்ற வகையிலும் உஸ்மானியரின் வீழ்ச்சிக்கு இவர் துணை நின்றவர் என்ற வகையிலும் முஹம்மத் இப்னு அப்துல் வஹ்ஹாப் அரசியல் நோக்கங்களுக்காக மார்க்கத்தைப் பயன்படுத்தியவர் என்று பலராலும் குற்றம் சுமத்தப்படுகிறார். ஆனால், உண்மையில் இவரது இயக்கம் இவ்வாறான குற்றச்சாட்டுக்களிலிருந்து மிகவும் தூய்மையானதாகும்.

என்றாலும் இவருடைய நடவடிக்கைளின் விளைவாக தவிர்க்க முடியாத சில வரலாற்றுக் காரணங்களினால் உண்மையில் உஸ்மானிய சாம்ராஜ்யத்தின் வீழ்ச்சிக்கு இவரது பணிகள் காரணங்களாக அமைந்தன என்பதை எந்த வகையிலும் மறுப்பதற்கில்லை.

மறுபக்கத்தில் ஆலுஸ்-ஸ{ஊத் என்ற குடும்பத்தவர்கள் ஸஊதி எனும் பெயில் ஓர் அரசை நிறுவுவதற்கு இவருடைய பங்களிப்பு மிக மகத்தானதாக அமைந்தது. ஏனென்றால் ஆட்சியாளரின் துணையோடுதான் இவர் தனது இஸ்லாமிய அழைப்புப் பணியை மேற்கொண்டார். ஆட்சிப் பொறுப்பை ஸ{ஊத் குடும்பமும், சன்மார்க்கப் பணியை முஹம்மத் பின் அப்துல் வஹ்ஹாபும் கவனித்துக் கொள்வதென ஓர் உடன்பாடும் கைச்சாத்தானது. இந்த வகையில் பார்க்கின்றபோது இவருக்கெதிராக முன்வைக்கப்படும் இந்தக் குற்றச்சாட்டு அவ்வளவு பொருத்தமுடையது அல்ல என்பது தெளிவாகின்றது. ஆனால் அதே நேரம் ஒருபக்க விளைவாக இந்த விடயத்தில் சில பாதகமான விளைவுகள் ஏற்பட்டன என்பதையும் மறுப்பதற்கில்லை.

சாதனைகள்

. நவீன இஸ்லாமிய எழுச்சி மற்றும் நவீன இஸ்லாமிய இயக்கங்கள் உருவாகக் காரணமாக இருந்தார். இவரது சிந்தனைகளால் கவரப்பட்ட முஹம்மத் இப்னு அலி அல்ஜீரியாவில் ஸனூஸிய்யா இயக்கத்தை உருவாக்கினார்.
. ஏகத்துவக் கொள்கையின் கீழ் அரேபியத் தீபகற்பம் முழுவதையும் கொண்டு வந்தார்.
. இஸ்லாமிய சமூகத்தில் கல்வி ரீதியான விழிப்புணர்வு தோன்றக் காரணமாக இருந்தார்.
. முஸ்லிம் உம்மத்தை இஸ்லாத்தின் மூல ஊற்றுக்களான அல்-குர்ஆன், ஸ{ன்னாவின் பக்கம் திருப்பினார்.
. இவர் அன்று நஜ்த் மாகாணத்தில் நிலவிய எல்லா மூடநம்பிக்கைகளுக்கும் எதிராக செயல்பட்டு அவற்றை
  ஒழிப்பதில் வெற்றி கண்டார்.
. நஜ்த் வாசிகள் தூய தௌஹீதின் பக்கம், குர்ஆன், ஸ{ன்னா பக்கம் திருப்ப இவரது பங்களிப்பு மிக  மகத்தானதாக அமைந்திருந்தது.
. மார்க்க அறிவு வளர்வதற்கு இவர் காரணமாக இருந்தார்.
. இவரது முயற்சியினால் நிறைய உலமாக்கள் தோற்றம் பெற்றனர்.
. நிறைய இஸ்லாமிய நூல்களை எழுதினார்.
. நாட்டில் சட்டமும், ஒழுங்கும் பேணப்படும் நிலை உருவானது.
. உலகில் நஜ்த் மாகாணம் இவரது முயற்சியினால் உலகளாவிய ரீதியில் பிரபல்யமடைந்தது.
. உஸ்மானிய சாம்ராஜ்யத்திலிருந்து விடுபட்டு சவூதி அரேபியா என்ற பெயரில் ஒரு தனி ஆட்சி உருவாவதற்கும் இவரது அழைப்புப் பணியே காரணமாக அமைந்தது.

உண்மையில் இவருடைய பிரசாரத்தை வஹாபியப் பிரசாரம் என்று மக்கள் குறிப்பிடுவர். அதனை நல்ல நோக்கோடு பயன்படுத்துபவர்கள் இருப்பது போலவே, தீய நோக்கில் பயன்படுத்துவோரும் உண்டு. எது எப்படி இருந்தபோதிலும் இவ்வியக்கத்தை வஹ்ஹாபிய இயக்கம் என்று சொல்வதைவிட தூய இஸ்லாமிய அடிப்படையில் அமைந்த ஒரு தஃவா முயற்சி எனக் கூறுவதுதான் சரியான நிலைப்பாடாக இருக்கமுடியும்.

இவருடைய இந்த முயற்சியின் விளைவை சவூதி அரேபியா மாத்திரமன்றிக் காலப்போக்கில் முழு உலகமுமே காணமுடிந்தது. இன்றும் காணக்கூடியதாக இருக்கின்றது. குறிப்பாக நம் நாட்டைப் பொறுத்தவரையில் 1940களின் ஆரம்பப் பகுதிகளில் குருநாகலைப் பிரதேசத்தைச் சேர்ந்த அப்துல் ஹமீத் பக்ரி என்ற ஓர் ஆலிம் முஹம்மத் பின் அப்துல் வஹ்ஹாபினதும் அவரது மாணவர்களதும் கருத்துக்களால் கவரப்பட்டு, இலங்கையில் அக்காலத்தில் நிலவிய ஷிர்க், பித்அத், குராபாத் எனபவற்றுக்கு எதிராக மிகப் பெரிய அளவில் போராடினார். அவர் தோற்றுவித்த இயக்கமே இன்று ஜம்இய்யது அன்ஸார் ஸ{ன்னத் முஹம்மதிய்யா என்ற பெயரில் அழைக்கப்படுகின்றது.

பின்னர் உலகளாவிய ரீதியில் ஏற்பட்ட இஸலாமிய மறுமலர்ச்சிக்கு அப்துல் வஹ்ஹாபின் பஙகளிப்பு குறிப்பிடத்தக்க அளவில் அமைந்தது என்பதை எவரும் மறுப்பதற்கில்லை.

பொதுவாக 20ம் நூற்றாண்டில் தோன்றிய அனைத்து இஸ்லாமிய மறுமலர்ச்சி இயக்கங்களிலும் இவரது சிந்தனையின் தாக்கம் படிந்திருக்கின்றது என்பதை எல்லோருமே ஏற்றுக் கொள்வார்கள்.

இவர் தனது தஃவாவைத் தனது 20வது ஆரம்பித்து சுமார் 70 வருடப் போராட்டத்தின் பின்னர் மிகப் பெரும் வெற்றியையும் கண்டார். கி.பி. 1792 ஜுன் மாதம் 22ம் திகதி வபாத்தானார்.

ஆளுமைப் பண்புகள்

வீரம், துணிச்சல், பொறுமை, பற்றற்ற வாழ்க்கை, ஈகை, வணக்க வழிபாடுகளில் ஈடுபாடு என்பன இவரிடம் காணப்பட்ட முக்கிய பண்புகளாகும். ஆட்சியாளர் இப்னு ஸ{ஊதோடு சேர்ந்து ஆட்சியை அமைப்பதற்குக் காரணமாக இருந்தாலும் மிக எளிமையாகவே தனது வாழ்க்கையை அமைத்துக் கொண்டிருந்தார். இவர் மரணிக்கின்ற வேளையில் இவருக்கு நிறையக் கடன்கள் இருந்தன. இவருடைய வபாத்துக்குப் பிறகு இப்னு ஸ{ஊத் இவரது கடன்களை அடைத்தார். வாரிசுச் சொத்தாக இவர் எதனையும் விட்டுச் செல்லவில்லை. ஏராமான நூல்களை, அவை சிறிய ந}ல்களாக இருந்தாலும் எழுதிவிட்டுச் சென்ற பெருமை அவரையே சாரும்.

நவீன இஸ்லாமிய எழுச்சியின் தந்தை என வருணிக்கப்படும் முஹம்மத் பின் அப்துல் வஹ்ஹாப் பற்றி சமகால இஸ்லாமிய அறிஞர்களுள் ஒருவரான அலி அத்தன்ந்தாவி, “பன்னிரண்டாம் நூற்றாண்டின் முஜத்தித்” எனக்  குறிப்பிடுவது நோக்கத்தக்கது.


இலங்கை தௌஹீத் ஜமாஅத்

நம் நாட்டில் 1948களில் இவ்வியக்கம் அறிமுகமானது. குருணாகலை மாவட்டத்தில் அமைந்துள்ள பரகஹதெனிய எனும் பிரதேசத்தைச் சேர்ந்த அஷ்ஷெய்க் அப்துல்ஹமீத் பக்ரி (தர்வேஷ்) என்பவர் இவ்வியக்கத்தின் தோற்றத்திற்கு முன்னோடியாக இருந்தார். ஜம்இய்யது அன்ஸாரி ஸ{ன்னதில் முஹம்மதிய்யா எனும் பெயரில் அவர் இவ்வியக்க சிந்தனைகள் வடிவம் பெறுவதற்கு வழி செய்தார். இதுவே இலங்கையில் தௌஹீத் சிந்தனைகள் தோற்றம் பெற முன்னோடியாக அமைந்தது. இன்று இலங்கையில் இவ்வமைப்பு பல்வேறு பெயர்களில் இயங்கி வரும் நிலையிலும் ஜம்இய்யது அன்ஸாரி ஸ{ன்னதில் முஹம்மதிய்யா எனும் அமைப்பே அனைத்தினதும் தாய் இயக்கமாகக் கருதப்படுகிறது. இப்பெயரிலேயே பரகஹதெனியவில் ஓர் அரபுக் கல்லூரியும் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது. ஊண்மை உதயம் என்ற இஸ்லாமிய  சஞ்சிகையை இந்த அரபுக் கல்லூரி மாதாந்தம் வெளியிட் வருகிறது. இக்கல்லூரியிலிருந்து படித்து வெளியே வரும் ஆலிம்கள் ஸலபிகள் என அழைக்கப்படுகின்றனர்.

தௌஹீத் அமைப்பின் பிரசாரப் பணிகளை பின்வருமாறு வகைப்படுத்துவர்.
1. குர்ஆனையும் ஸ{ன்னாவையும் தவிர வேறு எந்தக் கருத்தையும் அபிப்பிராயங்களையும் பின்பற்றக் கூடாது.
2. நபியவர்களது மரணத்துக்குப் பின் இஸ்லாத்தில் எவையெல்லாம் நன்மை தரும் செயல்கள் எனக் கருதி புதிதாகச் சேர்க்கப்பட்டனவோ அவையனைத்தும் தெளிவான பித்அத்துக்களே.
3. இபாதத்தில் அல்லாஹ்வுக்கு இணையாக யாரையாவது பங்காளியாக்குவது பெரும் பாவமாகும். ஆதனை அவன் ஒருபோது; மன்னிக்க மாட்டான். மகான்கள், ஒளலியாக்கள் மீது நம்பிக்கை கொண்டு அவர்களிடம் உதவி தேடுவதும் அவர்களது ஸியாரங்கள் மீது பரிந்துரைத்து கந்தூரி கொடுத்து விழாக் கொண்டாடுவதும் மன்னிக்க முடியாத குற்றங்களாகும்.
4. அல்லாஹ் அல்லாதோருக்கு நேர்ச்சை செய்தல், கப்று கட்டுதல், அலங்கரித்தல், அங்கு சென்று இறைஞ்சுதல், குடியேற்றுதல் முதலாம் அனைத்து அம்சங்களும் பித்அத்தான வழிபாடுகளாகும்.
5. கத்தம் என்ற பெயரில் அல்குர்ஆனை ஓதி அதன் நன்மைகளை மரணித்தவர்களுக்குச் சேர்க்கலாம் என்பது மடமை.

இந்நத வகையில் இலங்கை மக்களிடம் காணப்பட்ட ஷிர்க், பித்அத், மூட நம்பிக்கைகள், நூதன அனுஷ்டானங்கள் என்பவற்றைக் களைந்து இஸ்லாத்தை தூய வடிவில் பின்பற்றத்தக்க வகையில் தமது பிரசாரப் பணிகளை இவ்வியக்கத்தினர் வெற்றிகரமாகச் செயல்படுத்தி வருகின்றனர்.

   
2. மௌலானா இல்யாஸ் (ரஹ்)

 ஜமாஅதுத் தப்லீக் இயக்கத்தின் முன்னோடியான மௌலானா இல்யாஸ் அக்தார், கி.பி. 1885ல் டில்லியில் அமைந்துள்ள மேவாத் எனும் ஊரில் பிறந்தார்.  இவரது தந்தை முஹம்மத் இஸ்மாஈல் அக்காலத்தில் வாழ்ந்த மிகப் பேணுதலான ஓர் ஆலிமாகக் காணப்பட்டார். இவரது குடும்பம் கலீபா அபூபக்ர் (ரழி) அவர்களிகளின் பரம்பரையில் தோன்றியதாகக் கருதப்படுகின்றது. ஸபிய்யா பீபி எனும் பெயர் கொண்ட இவரது தாயார் ஒரு ஹாபிழாவாக இருந்தது மாத்திரமன்றி எப்போதுமே அல்குர்ஆனைப் பாராயணம் செய்பவராகவும் காணப்பட்டார். இவ்வாறு பெற்றோர் மூலமாக மௌலானா இல்யாஸ் சன்மார்க்க அறிவுச் சூழலில் வளர்க்கப்பட்டதனால் சொந்த வீட்டிலேயே இவருக்கு மார்க்கப் பின்புலத்திலான சிறந்த தர்பியத்-பயிற்சிகள் கிடைத்தன.

பின்னர் பெரும் பெரும் இந்திய உலமாக்களிடம் அல்லது அறிஞர்களிடம் இவர் கல்வி கற்றார். சுயளாநநன யுhஅயன முழபெழாi , முhயடநநட யுhஅயன , ஆழரடயயெ யுhஅயன ர்யளயn , யுளாசயக யுடi னூயயெஎi போன்ற மிகப் பெரிய அறிஞர்களிடம் கல்வி கற்கும் வாய்ப்பு இவருக்குக் கிடைத்தது. இவரும் சிறுவயதிலேயே அல்குர்ஆனை ஹிப்ழு செய்து முடித்தார். இஸ்லாமிய அறிவுத் துறையிலும் நல்ல புலமை பெற்றார். புத்து வயதிலேயே இவருக்கு தஃவாவில் ஈடுபாடு இருந்தது. எமது தஃவா முன்னோடிகளின் வரலாற்றைப் பார்த்தால், மிகப் பெரும்பாலும் அவர்கள் எதிர்காலத்தில் மிகப் பெரிய தாஇகளாக, தஃவாவின் முன்னோடிகளாக இருப்பார்கள் என்பதற்கான அடையாளங்கள், அறிகுறிகள் அவர்களது சிறுபராயத்திலேயே வெளிப்பட்டிருப்பதைக் காண முடியும். பத்து வயதிலேயே மௌலானா இல்யாஸ் தனது நண்பர்களைப் பார்த்து “ வாருங்கள், தொழாதவர்களோடு ஜிஹாத் செய்வோம்” என்று சொல்வாராம். இவர் பிற்காலத்தில் தஃவாத்துறையில் மிகப் பெரும் மாற்றத்தினை ஏற்படுத்துவார் என்பதற்கான அடையாளமாக இது அமைந்தது. மௌலானா மஹ்மூத் ஹஸன் தேவ்பந்தி  மௌலானா இல்யாஸைப் பார்த்துக் கூறுவாராம், “உம்மைப் பார்க்கின்ற போது எனக்கு ஸஹாபாக்கள் நினைவே வருகின்றது”. இப்படிக் கூறுமளவு இல்யாஸின் நடத்தைகள், பண்பாடுகள், இல்ம் மற்றும் அமல்கள் இருந்து வந்தன. இவர் ஓர் ஆலிமாக மாறியதற்குப் பின்னால் பல மத்ரஸாக்களில் உஸ்தாதாக இருந்தார். குறிப்பாக அப்போது ஸஹ்ரான்பூரில் அமைந்நிருந்த மழாஹிருல் உலூம் எனும் கலாசாலையில் ஆசிரியராகப் பணியாற்றினார். பின்னர் 1918ல் தன் தந்தயாலும் சகோதரனாலும் நடாத்தப்பட்டு வந்த நிஜாமுதீனில் அமைந்திருந்த கல்லூரியைப் பொறுப்பேற்றார். அவ்வேளையில் தன்னைச் சுற்றி வாழ்ந்த மேவாத் மக்களின் இழிநிலைகளைக் கண்டு வருந்தினார். அம்மக்கள் தமது பூர்வாங்கச் செயற்பாடுகளை புரோகிதர்களைக் கொண்டு செய்து வந்ததையும், இந்துக்களின் தேவதைகளில்; நம்பிக்கையை வளர்த்துச் செயற்பட்டதையும் கண்டு கவலைப்பட்டார். இந்நிலையில் இருந்து மக்களை விடுவிக்க நாடிய அவர், முதலில் மேவாத் பகுதி முழுவதிலும் சென்று அவர்கள் செய்து வந்த தவறான கொள்கைகளையும் அனுஷ்டானங்களையும் மக்களிடம் எடுத்துக் கூறி அவற்றிலிருந்து அவர்களை விடுவித்துத் தூய இஸ்லாமிய நடைமுறைகளை எடுத்துக்கூறி அவர்களை நல்வழிப்படுத்தக் கடுமையாக உழைத்தார். என்றாலும்’ சமுதாயத்தில் தான் எதிர்பார்த்த மாற்றங்கள், சீர்திருத்தங்கள் இல்லாதிருப்பதை இவர் கண்டார். குறிப்பாக இஸ்லாமிய கிலாபத் இந்தியாவில் வீழ்ச்சி கண்டதைத் தொடர்ந்து அன்றிருந்த உலமாக்கள் எல்லாம் அரசியல் விவகாரத்தில் கூடுதலான ஈடுபாடு காட்டினார்கள். மீண்டும் இஸ்லாமிய கிலாபத்தைக் கொண்டுவர வேண்டும் என்பதில் ஈடுபாடு காட்டினார்கள். இதனால் பொதுமக்களை அவர்கள் பெரும்பாலும் மறந்து விட்டார்கள். ஏலவே லட்சோப லட்சம் இந்துக்கள் இஸ்லாத்தைத் தழுவி இருந்தார்கள். இவர்களிடம் எந்த விதமான தர்பியாவோ, பயிற்சியோ இருக்கவில்லை. எனவே இந்தப் புதிய சூழ்நிலையில் இவர்களில் பலர் இஸ்லாத்தை விட்டும் வெளியேறுகின்ற ஒரு நிலை உருவாகி இருந்தது. இது கண்ட மௌலானா இல்யாஸ் இதற்கொரு வழி காண வேண்டும் எனச் சிந்தித்தார். ஆரம்பமாக தான் கற்பித்த கலாசாலையின் ஆசிரியர்களின் துணையோடு தஹ்ரீகே ஈமான் (இறை நம்பிக்கை இயக்கம்) எனும் பெயரில் ஓர் அமைப்பை உருவாக்கிச் செயற்பட்டார். அவரது சிந்தனைக்கும் திட்டங்களுக்கும், அவற்றைச் செயல்படுத்துவதற்கும் அவருக்குக் களம் அமைத்துக் கொடுத்தது அவர் மேற்கொண்ட ஹஜ்ஜுகள்தாம். ஒவ்வொரு ஹஜ்ஜும் இவருடைய வாழ்க்கையில் பெரும் திருப்புமுனையாக அமைந்தது. முதல் ஹஜ்ஜை முடித்து விட்டு வந்து தஃவாவில் தீவிரமாக ஈடுபட்டார். குறிப்பாக மிக மோசமாக இருந்த மேவாத் எனும் பகுதியைக் கவனத்தில் கொண்டு இவர் தன்னுடைய தஃவாவை ஆரம்பித்தார். இதற்காக சில சிறிய சிறிய மத்ரஸாக்களை ஆரம்பித்தார். ஆனால் அவர் எதிர்பார்த்த மாற்றம் இதனால் ஏற்படவில்லை. எனவே மீண்டும் ஒருமுறை ஹஜ்ஜை நிறைவேற்றுவதற்காகச் சென்றார். புத்துணர்வோடு, புதிய திட்டங்களோடு வருகிறார். இரண்டாவது ஹஜ்ஜுக்குப் பிறகுதான் ஜமாஅத்துத் தப்லீக் என்ற பெயரில் வித்தியாசமான ஓர் அமைப்பை உருவாக்கினார். ஆறு அம்ச திட்டங்களைக் கொண்ட ஓர் அவசரகால அமைப்பாக, ஒர் நுஅநசபநnஉல ஆழஎநஅநவெ ஆகவே இவ்வியக்கம் உருவாக்கப்பட்டது. மக்களை அவசரமாக மார்க்கத்துக்குள் வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக மௌலானா இல்யாஸ் மேற்கொண்ட மிகவும் சமயோசிதமான ஒரு முயற்சியாகவே இது கருதப்படுகின்றது.

மௌலானா இல்யாஸ{டைய இந்த முயற்சிக்குப்  பல தரப்பு அறிஞர்களும் பாராட்டுத் தெரிவித்தனர். பின்வரும் சம்பவம் இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டாகும்.

மௌலானா மௌதூதி தர்ஜுமான் எனும் சஞ்சிகையின் ஆசிரியராக இருந்தபோதுதான் மௌலானா இல்யாஸ் தப்லீக் அமைப்பை உருவாக்கி அறிமுகம் செய்தார். விடயமறிந்த மௌதூதி தப்லீக் பற்றித் தனது தர்ஜுமான் சஞ்சிகையில் மிகவும் பாராட்டி எழுதினார். இதனைத் தற்செயலாக லக்னோவில் வைத்து வாசித்த மௌலானா அபுல் ஹஸன் அலி நத்வீ, தப்லீக் பற்றிய மௌதூதியின் ஆக்கத்தினால் கவரப்பட்டுச் சிறிது காலம் அவ்வியக்கத்தில் சேர்ந்து உழைக்கலானார். ( பீ மஸீரதுல் ஹயா – நத்வீ ).  தான் தப்லீக்கில் இணைந்து பணியாற்ற மௌலானா மௌதூதியே காரணமாக இருந்தார்  என இந்-நூலில் நத்வி சுட்டுவதும் நோக்கத்தக்கது.

இரண்டாவது ஹஜ்ஜுக்குப் பிறகு தப்லீக் அமைப்பை உருவாக்கிவிட்டு மூன்றாவது ஹஜ்ஜுக்காக மக்கா சென்றார். அங்கிருந்து மிக உற்சாகத்தோடு தாயகம் திரும்பிய அவர் தொடர்ந்து மூன்று வருடங்கள் மிக வேகமாக தப்லீக் பணியில் ஈடுபடலானார். ஆனால் இவர் எதிர்பார்த்தது போன்று  உலமாக்கள் இவரோடு இணைந்து செயலாற்றவில்லை. இதுவே அவரது மிகப் பெரும் கவலையாகவும் இருந்தது.

1938ல் நான்காவது முறையாக ஹஜ்ஜை முடித்துக்கொண்டு வந்த அவர் முக்கிய உலமாக்களை அணுகி அவர்களது ஆதரவைப் பெற்றுக் கொள்ள முயற்சித்தார். இதைத் தொடர்ந்து பரவலாகப் பல இஜ்திமாக்களும் நடாத்தப்பட்டன. 1941 நவம்பரில் குர்கான் எனும் மாவட்டத்தில் நூஹ் எனுமிடத்தில் நடாத்தப்பட்ட இஜ்திமாவே இவ்வியக்கத்தின் முதல் இஜ்திமாவாகக் கருதப்படுகின்றது. இறுதியில் இவ்வாறான இவரது அயராத முயற்சியிகள் காரணமாக இவ்வியக்கம் ஒரு பாரிய இயக்கமாக மாறியது.

உண்மையில் இவருடைய இந்த இயக்கம் தொழுகைக்கு மாத்திரம் அழைக்கும் ஓர் இயக்கமாக இருக்கவில்லை. மாற்றமாக மௌட்டீகம், பிற்போக்குவாதம் முதலானவற்றில் இருந்து சமூகத்தைத் தட்டியெழுப்பி இஸ்லாம், ஈமான் என்பவற்றிற்கு ஊடாக ஒளியூட்டி ஈமானிய ஜோதியையும், ஆத்மீக சக்தியையும் கொண்ட சமூகம் ஒன்றைக் கட்டியெழுப்புவதும் அதன் நோக்கங்களுள் ஒன்றாக இருந்தது. அவரது கருத்துக்கள் மல்பூழாத் என்ற பெயரில் தொகுகப்பட்டு தமிழில் கூட அவை மொழியாக்கம் செய்யப்பட்டிருப்பதைக் காண முடிகின்றது.

தனது அந்தப் பாரிய இலக்கை அடைவதற்கான ஆரம்ப முயற்சியாவே ஜமாஅதுத் தப்லீக் என்ற அமைப்பு அமைந்தது. இந்த அமைப்புப் பற்றி அவர், “தனது மாபெரும் இலட்சியத்தை அடைந்து கொள்வதற்கான அகரவரிசைத் திட்டமே இந்த ஜமாஅத் அமைப்பாகும்” எனக் குறிப்பிடுவது நோக்கத்தக்கது.

இளம் பராயம் தொட்டே உடற் பலம் குன்றிக் காணப்பட்ட இவர் தனது அந்திம காலத்தில் ஒரு நோயாளியாகவே இருந்தார். அவருக்கு வயிற்றில் கோளாறு இருந்தது. இந்நிலையில் அவரைப் பரீட்சிக்க வந்த வைத்தியர்களுக்கும் இஸ்லாமிய அழைப்புப்பணி புரிந்தார். “இந்த அழிந்து போகக்கூடிய உடம்பைக் கவனிக்கினற நீங்கள், நலிவடைந்து போய்க்கொண்டிருக்கின்ற தீனைப்பற்றிக் கவனிக்காமல்-பொருட்படுத்தாமல் இருக்கின்றீர்களே!’ என்று தன்னிடம் வந்த வைத்தியர்களை இஸ்லாத்தின்பால் அழைத்தார்.

தனக்கு இறுதிக் காலம் நெருங்கி விட்டதை உணர்ந்த மௌலானா இல்யாஸ், நம்பிக்கைக்குரிய பலரை அழைத்துத் தனக்குப்பின் இப்பாரிய பணியைத் தொடர்ந்து மேற்கொள்வதற்கான ஒருவரைத் தெரிவு செய்வதன் அவசியம் குறித்து ஆலோசனை நடாத்தினார். ஈற்றில் ஓர் ஆலிமாக இருந்த இவரது புத்திரர் மௌலானா யூஸ_ப் இயக்கத்தின் அமீராகத் தெரிவாகினார். 1944ம் வருடம் ஜூலை 12ம் நாள் மௌலானா இல்யாஸ் தனது 60வது வயதில் இறையடி சேர்ந்தார்.

இவரது பணிகள் பற்றிப் பலரும் பல ஆய்வுகளைச் செய்துள்ளனர். குறிப்பாக தப்லீக் ஜமாஅத் பற்றி எழுதப்பட்டுள்ள நூல்களில் மௌலானா அபுல் ஹஸன் அலி நத்வி அவர்களது நூல்கள்; குறிப்பிடத்தக்கனவாகும். இவர் தப்லீக் பற்றித் தனியாகவும் ஒரு நூல் எழுதியுள்ளார். இந்நூல் ஆங்கிலத்திலும் தமிழிலும் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. இவர் தனது “மஸீரதுல் ஹயா” என்ற வாழ்க்கை வரலாற்று நூலிலும் தப்லீக் பற்றி விரிவாகக் குறிப்பிட்டிருப்பது நோக்கத்தக்கது. இவற்றுக்கப்பால் “குதுபுன் வஷக்ஸிய்யாத்” (எனது வாழ்வில் பெரும் தாக்கம் செலுத்திய ஆளுமைகளும் நூல்களும்) என்ற நூலிலும் நத்வி, மௌலானா இல்யாஸ் பற்றிச் சிறப்பாகக் குறிப்பிட்டுத், தனது ஆளுமையில் மிகப் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய ஒரு மனிதர் மௌலானா இல்யாஸ் எனவும் சிலாகிக்கிறார். தான் தப்லீக்கில் தொடர்பு கொள்ளவும், அதனோடு இணைந்து பணியாற்றுவதற்கும் மௌலானா மௌதூதியே காரணமாக அமைந்தார் என்று நத்வி தனது மற்றுமொரு நூலில் குறிப்படுகின்றார்.

இவ்வியக்கத்தின் சில அடிப்படைகள்:
1. தனிமனிதர்கள் தமது சொந்தச் செலவில் அல்லாஹ்வின் பாதையில் வெளியேறிச் செல்லல்
2. அரசியல் விடயங்களில் தலையிடாமை
3. கருத்து வேறுபாடுள்ள இஜ்திஹாதுக்கு உட்படும் விடயங்களில் தலையிடாமை. விரும்பிய மத்ஹபில் ஒருவர் இருக்கலாம்.
4. இயக்க ஊழியர்கள் ஈமான், இக்லாஸ், தொழுகை, கல்வி, திக்ர், இக்ராம், தஃவா, வெளியேறிச் செல்லல் போன்ற விடயங்களில் - அமல்களில் கவனம் செலுத்துதல்

நடைமுறைகள்
1. மஹல்லா வேலை
2. மாதத்தில் மூன்று நாட்கள், பிரதி வருடமும் 40 நாட்கள், ஆயளில் நான்கு மாதங்கள் அல்லாவின் பாதையில் வெளியேறிச் செல்லல்.
3. இஃலான் - அறிவித்தல் கொடுத்தல்
4. தஃலீம் வாசித்தல்
5. மஃசூரா – கலந்தாலோசனை செய்தல்
6. ஜும்மா ராத்திரி – வாராந்த ஒன்று கூடல்

  பின்வரும் நான்கு அம்சங்களில் இருந்து இவ்வியக்கத்தார் தவிர்ந்து கொள்ள வேண்டுமென்று எதிர்பார்க்கப்படுகின்றனர்.
1. பிறரிடம் தமது தேவைகளை முறையிட்டுக் கையேந்தி நிற்பது (ஸ_ஆல்)
2. பிறரிடம் வினாத் தொடுத்தல் (இஷ்ராப்)
3. வீண்விரயம் (இஸ்ராப்)
4. பிறரது பொருளை அனுமதியின்றிப் பயன்படுத்தல்

இவ்வியக்கம் தொடர்பாக உலகில் எந்தவொரு நாடும் அஞ்சவேண்டியதில்லை. ஏனெனில் அது அரசியலில் ஈடுபடுவதுமில்லை, மக்கள் மத்தியில் பிளவை ஏற்படுத்துவதுமில்லை. எனவேதான் தப்லீக் ஜமாஅத்தின் யதார்த்தத்தையும் பிரசாரத்தையும் அறிந்த ஏராளமான இஸ்லாமிய நாடுகளும் முஸ்லிமல்லாத நாடுகளும் இவ்வியக்கத்துக்காகத் தமது அனுமதியை வழங்கியுள்ளதோடு அதற்குத் தேவையான சகல வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுத்துள்ளதையும் காணமுடிகின்றது.


இலங்கை தப்லீக் ஜமாஅத்

இவ்வியக்கம் 1950களில் மௌலானா அப்முல் மலிக் என்பவரினால் அறிமுகம் பெற்றதாகப் பொதுவாகக் குறிப்பிடுவர். ஆயினும் 1953களில் இந்தியாவிலிருந்து வருகை தந்த மௌலானா தாவூத் மேவாதி என்பலரே இவ்வியக்கத்தை சிறந்த முறையில் அறிமுகம் செய்தவராகக் கருதப்படுகின்றார் இவரது முயற்சியினால் இஆம ஆண்டில் கொழும்பில் உள்ள வேக்கந்தைப் பள்ளிவாயிலில் மாநாடு ஒன்று நடாத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து இலங்கையின் முதலாவது தப்லீக் அமீராக கே. முஹம்மதலி ஹாஜியார் தெரிவு செய்யப்பட்டார். புpன்னர் நாட்டின் பல பாகங்களிலும் இஜ்திமாக்கள் நடைபெற்றன.

துப்லீக் இயக்கம் இலங்கை வாழ் பாமர முஸ்லிம்களை தொழுகையின் பால் ஈர்ப்பதில் பெரும் கவனம் செலுத்தி வருகின்றது. வுழிதவறிப் போன எத்தனையோ பாமர முஸ்லிம்களை நெறிப்படுத்தி இஸ்லாமியப் பண்புள்ளவர்களாக மற்றிய பெருமை இவ்வியக்கத்தையே சாரும். இது இலங்கை முஸ்லிம்கள் மத்தியில் பேராதரவைப் பெற்ற இயக்கம் எனத் துணிந்து கூறலாம். 1996 புத்தளத்தில் நடைபெற்ற வரலாறு காணாத இஜ்திமா இதற்குச் சிறந்த சான்றாகும்.

இவ்வியக்கத்தில் ஈடுபடுபவர்கள் அனுஷ்டிக்க வேண்டிய முறைகளை மௌலானா இல்யாஸ் 6 அம்சங்களாக உள்ளடக்கியுள்ளார். அவற்றைப் பின்பற்றித் தமது இயக்க நடவடிக்கைகளை இலங்கையிலுள்ள இந்த ஜமாஅத்தினர் மேற்கொள்கின்றனர். அவை ஆறு நம்பர் என அழைக்கப்படுகின்றன.
    1. கலிமா
    2. தொழுகை
    3. கல்வியும், தியானமும் (இல்மு திக்ர்)
    4. மரியாதை செய்தல் (இக்ராம்)
    5. தூய எண்ணம் (இக்லாஸ்)
    6. மார்க்கப் பணியில் காலத்தை ஒதுக்குதல். (தப்லீக்)


3. இமாம் ஹஸனுல் பன்னா (ரஹ்)

19ம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியாகும்போதே முஸ்லிம் உலகு மீண்டும் சீர்குலையலாயிற்று. இஸ்லாத்தின் எதிரிகளின் ஆயுதரீதியிலான படையெடுப்பின் காரணமாகவும், சிந்தனாரீதியாக அமைந்த படையெடுப்பின் விளைவாகவும் இஸ்லாமிய உலகம் அனைத்துத் துறைகளிலும் மிகப் பயங்கரமானதொரு வீழ்ச்சியை நோக்கிச் செல்லலாயிற்று. குறிப்பாக இஸ்லாமிய உலகின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் ஒன்றாகக் கொள்ளப்படும் எகிப்து நாடு வரலாறு காணாததோர் அவல நிலையை அடைந்திருந்தது. மம்லூக்கியரும் துருக்கியரும் எகிப்தை ஆட்சி செய்து அதனைச் சீரழித்திருந்தனர். தொடர்ந்து வந்த ஆங்கிலேயர் நிலைமையை மேலும் மோசப்படுத்தினர். அங்கு ஆங்கிலேயரின் கல்வித் திட்டமும் நாகரிகப் பண்பாட்டுப் பழக்க வழக்கங்களுமே நடைமுறையில் இருந்தன. சுயநலவாதக் கட்சி அரசியலானது நாட்டை மேலும் பலவீனப்படுத்தியது. வெகுசனத் தொடர்பு சாதனங்களும் ஒழுக்கப் பண்பாட்டு வீழ்ச்சிக்கே வழிவகுத்துக் கொண்டிருந்தன. இஸ்லாமிய அறிஞர்கள் உணர்வற்றவர்களாய் முடங்கிக் கிடந்தனர். நாத்திகமும் உலோகாயத வாதமும் நாட்டை அரசோச்சும் நிலை உருவாகியது.

இத்தகைய ஒரு வேளையில்தான் ஒரு சீர்திருத்தவாதி தோன்ற வேண்டிய தேவையும் அவசியமும் உருவாகியது. அல்லாஹ்வின் வாக்கின்படி இவ்வேளையில் தோற்றம் பெற்ற ஒரு சீர்திருத்தவாதியாக இமாம் பன்னா கருதப்படுகிறார். உண்மையில் இவர், காலம், சூழல், வரலாறு என்பவற்றால் உருவாக்கப்பட்ட மனிதரல்லர். அல்லாஹ்வின் ஏற்பாட்டின்படி ஒரு மகத்தான புரட்சிக்கு வித்திட்ட, அதற்கென விஷேடமாகத் தோன்றிய ஒரு மாமனிதராகவே இமாம் ஹஸனுல் பன்னாவைக் கொள்ள முடிகிறது என இஸ்லாமிய அறிஞர் மௌலானா அபுல் ஹஸன் அலி நத்வி (மரணம் : 1999 – 12 – 31)குறிப்பிடுவது ஏற்புடையது. ஒரு தனி மனிதரிடம் ஒருங்கே அமையப் பெற முடியாத பல தகைமைகளையும் பண்புகளையும் ஹஸன் பன்னா ஒரு சேரப் பெற்றிருந்தார். ஆழமான அறிவும் விசாலமான நுண்ணிய விளக்கமும் உணர்வும் அருள் பொருந்திய உள்ளமும் பெற்றவராகத் திகழ்ந்த இவர், பற்றற்ற வாழ்வும் தியாக சிந்தையும் கொண்டவராகவும் திகழ்ந்தார். இவரில் அமைந்து காணப்பட்ட இரு பெரும் பண்புகள் மிக முக்கியமானவை.
1. தான் ஏற்ற கொள்கையில் கொண்டிருந்த நம்பிக்கையும் ஈடுபாடும் தான் ஏற்ற கொள்கைக்காக எத்தகைய தியாகத்தையும் செய்யும்
  மனோநிலையும்.
2. தனது சகாக்களிலும் தோழர்களிலும் தனது ஆளுமையால் ஏற்படுத்திய தாக்கமும் அவர்களை உருவாக்குவதில் அவர் கண்ட
  வெற்றியும்.

ஹஸன் பன்னா சிறுபராயம் முதலே சீர்திருத்தப் பணியில் ஈடுபாடு கொண்டவராய் காணப்பட்டார். தனது பால்யப் பருவத்திலேயே பல இஸ்லாமிய இயக்கங்களை அமைத்தார். பத்து வயதை அடைகின்ற போது இரண்டு இயக்கங்களை உருவாக்கி இஸ்லாமிய சீர்திருத்தப் பணியில் ஈடுபடலானார்.
1. இஸ்லாமிய ஒழுக்கப் பண்பாட்டு இயக்கம் (ஜம்இயதுல் அதபில் அக்லாகிய்யா)
2. விலக்கப்பட்டவற்றைத் தடை செய்யும் இயக்கம் (ஜம்இய்யது மனில் முஹர்ரமாத்)

சிறுவராக இருக்கும்போதே ஆன்மீகத் துறையில் இவருக்கு அதிகமாக ஈடுபாடு இருந்தது. அத்தரீகதுல் ஹஸாபிய்யா எனும் ஆன்மீக இயக்கத்தோடு இணைந்து தன்னை எல்லா வகையிலும் பண்படுத்திக்கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டார். அக்காலப்பிரிவில் இருந்த ஜம்இய்யதுஷ் ஷ{ப்பானுல் முஸ்லிமீன் போன்ற வாலிப இயக்கங்களோடும் தொடர்புகளைக் கொண்டிருந்தார். இஸ்லாமியப் பிரசாரகர்கள் சிலரையாவது உருவாக்க வேண்டும் எனக் கருதிய இவர் இக்கருத்தை ஏற்றுக்கொண்ட பல சகோதரர்களோடு இணைந்து அம்முயற்சியில் ஈடுபட்டார். தொடர்ந்து தானும் தன்னுடன் இணைந்த சகோதரர்களுமாகச் சேர்ந்து அங்கிருந்த மக்கள் கூடும் தேநீர் கடைகளுக்குச் சென்று மக்களுக்கு உபதேசம் புரியும் ஓர் அமைப்பில் ஈடுபட்டு வெற்றியும் கண்டார்.

தாருல் உலூம் எனும் கல்வி நிறுவனத்தில் தனது உயர் கல்வியை முடித்த பன்னா, எகிப்தின் இஸ்மாஈலிய்யா எனும் ஊரில் முதல்தர ஆசிரியராக நியமனம் பெற்றார். தொழில் நோக்கில் அங்கு சென்ற அவர் தனது அடிப்படைப் பணியை மறந்துவிடவில்லை. சிறிது காலம் சூழலைப் படித்து, ஆராய்ந்து மனிதர்களின் மனோ நிலையையும் பின்புலங்களையும் அறிந்துகொண்டு, தேநீர் கடைகளில் இருந்து மீண்டும் தனது பணியை ஆரம்பித்தார். சர்ச்சைக்குரிய விடயங்களைத் தவிர்த்து இஸ்லாத்தின் பொதுவான அடிப்படைகளை நோக்கி மாத்திரம் மக்களை அழைப்பதில் ஆரம்ப காலப் பிரிவில் கவனம் செலுத்தினார்.

அவரது முயற்சிகள் சிறப்பாக வெற்றியளிக்க ஆரம்பித்தன. இவரின் கருத்துக்களால் கவரப்பட்ட அப்பிரதேசத்தைச் சேர்ந்த சுமார் ஆறு சகோதரர்கள் 1928ம் ஆண்டு மார்ச் மாதம் இமாம் பன்னாவை அணுகி, இனியும் நாம் சும்மா இருக்க முடியாது. உங்களோடு இணைந்து உழைக்க எங்களை நாம் அர்ப்பணித்துக்கொள்ளத் தயாராக வந்துள்ளோம் எனக்கூறினர். தன்மீது சுமத்தப்பட்ட பொறுப்பை உணர்ந்த பன்னா அவ்விருவரிடமும் பைஅத் எனும் விசுவாசப் பிரமானத்தைப் பெற்றுக் கொண்டார். அவ்வேளை அங்கிருந்தவர்களில் ஒருவர் தமது அமைப்புக்கு ஒரு பெயர் வேண்டாமா எனக் கேட்டபோது, இமாம் பன்னா “நாம் இஸலாத்துக்குப் பணி புரிவதற்காக ஒன்றிணைந்த இஸ்லாமிய சகோதரர்கள் அல்லவா? எனவே எமது அமைப்பின் பெயர் இஸ்லாமிய சகோதரர்களின் இயக்கம் என அமைவதே பொறுத்தம் என்றார். அன்று முதல் இவ்வியக்கம் அல்-இக்வானுல் முஸ்லிமூன் (இஸ்லாமிய சகோதரத்துவ இயக்கம்); என அழைக்கப்பட்டது.

இமாம் பன்னா தனது இயக்க அங்கத்தவர்களைப் பயிற்றுவிப்பதிலும் உருவாக்குவதிலும் மகத்தான வெற்றிகண்டார். அவர் தனது இயக்கத்தைச் சேர்ந்தோரை ஆன்மீக ரீதியாகவும் அறிவு ரீதியாகவும், பண்பாட்டு ரீதியாகவும் உருவாக்கியதுடன் ஜிஹாதீய அமைப்புக்களையும் அரசியல் சமூகப் பணிகளில் ஈடுபாடு கொள்வதற்கு அவசியமான பயிற்சிகளையும் வழங்கினார். இவரது தர்பியா எனும் பயிற்சித் திட்டம் வெற்றி காண்பதற்கு பின்வரும் அம்சங்கள் முக்கிய காரணிகளாக விளங்கின.
1. சமூக மாற்றத்துக்கு தர்பியத்தே ஒரே வழி என்பதில் அவர் கொண்டிருந்த ஆழமான நம்பிக்கை
2. தர்பியாவுக்கென அமைந்த ஒரு தெளிவான திட்டம்.
3. இயக்கச் சூழல் ஒன்று காணப்பட்டமை.
4. அபார ஆற்றல்களைப் பெற்ற ஒரு தலைவர் கிடைத்திருந்தமை
5. பயிற்சிகளை வழங்குவதற்குத் தகுதிவாய்ந்த பயிற்சியாளர்கள் இருந்தமை
6. பயிற்சிகளை வழங்குவதில் பலதரப்பட்ட அணுகுமுறைகள் கையாளப்பட்டமை

இப்பயிற்சிகளின் விளைவாக இஸ்லாம் காணவிரும்பும் உன்னதமான உயர்ந்த மனிதர்கள் தோற்றம் பெற்றனர். அதாவது இவ்வியக்கப் பாசறையில் இருந்து இன்றளவும் போற்றத்தக்க பெரும், பெரும் அறிஞர்கள் உருவாகினர்.
Eg: 1. முஹம்மத் அல் கஸ்ஸாலீ
   2. கலாநிதி யூஸ_ப் அல் கர்ழாவீ
   3. முஹம்மத் குதுப்
   4. ஸெய்யித் குதுப்
   5. அப்துல் காதர் ஒளதா
   6. ஸஈத் ஹவ்வா
   7. உமர் தில்மஸானீ
   8. முஸ்தபா அஸ்ஸிபாஈ

இவ்வியக்கத்தின் தர்பியாவினூடாக மேற்குறிப்பிடப்பட்ட அறிஞர்களைப் போலவே பல முஜாஹித்களும் - போராளிகளும் உருவாகினர். 1947ம் ஆண்டு இடம் பெற்ற அரபு-இஸ்ரேல் யுத்தத்தில் (பலஸ்தீனை மீட்டும் போராட்டம்) இக்வான்கள் எனப்பட்ட இவ்வியக்க ஊழியர்கள் தமது மகத்தான பங்களிப்பைச் செய்தனர். இப்போரின்போது யூதர்கள் அரபு நாடுகளின் படைகளைக்கண்டு அஞ்சியதைவிட இக்வான் தொண்டர்களைக் கண்டு அஞ்சும் நிலையே அதிகம் இருந்தது.

இவ்வியக்க ஊழியர்கள் நல்லொழுக்கப் பண்பாட்டு விழுமியங்களிலும் தலை சிறந்து விளங்கினர். குறிப்பாக பொறுமை (அஸ்ஸப்ர்), ஸ்திரத் தன்மை (  ), எதிரபார்ப்பு (  ), நம்பிக்கை (   ) ஆகியன இவர்களில் வளர்க்கப்பட்ட அடிப்படைப் பண்புகளாகும். இவர்களுக்கு வழங்கப்பட்ட  உடல் சார்ந்த பயிற்சிகள் இவர்களுக்குச் சிறைகளில் பெரிதும் துணை புரிந்தன.

சுமூகப்பணியிலும் இவர்கள் மும்முரமாக ஈடுபட்டனர். பாடசாலைகள், மத்ரஸாக்கள், வைத்தியசாலைகள் போன்றவற்றை அமைத்தல், ஸகாத்தை தாபனரீதியாக வசூலித்து விநியோகித்தல், முதியோர் கல்வி அமைப்பை ஏற்படுத்தல், சமாதானக் குழுக்களை அமைத்து சர்ச்சைகளைத் தீர்த்தல் போன்றன இவர்கள் ஆற்றிய சமூகப்பணிகளுள் சிலவாகும். அரசியல் விவகாரங்களிலும் இவ்வியக்கம் அதிக ஈடுபாடு காட்டியது. அரசியல் என்பது இஸ்லாத்தின் ஓர் அங்கம் என்பதனை பன்னா வலியுறுத்தி வந்தார்.
முழு இஸ்லாமிய உலகமும் ஏகாதிபத்திய வாதிகளின் ஆக்கிரமிப்பில் இருந்து விடுவிக்கப்படவேண்டும் என்பதற்காகவும், குறிப்பாக ஆங்கிலேயரின் ஆதிக்கத்தில் இருந்த எகிப்தை மீட்கவும் இவர்கள் அயராதுழைத்தனர். முஸ்லிம் நாடுகளில் இறையாட்சியே செயற்படுத்தப்படவேண்டும் என்பதில் கண்டிப்பாக இருந்ததோடு, அத்தகைய ஆட்சியை உருவாக்கும் முயற்சியிலும் அயராதுழைத்தனர். இக்வான்களுக்கு வழங்கப்பட்ட ஆன்மீகப் பயிற்சிகளின் வெளிப்பாடுகளை அவர்களது சிறை வாழ்க்கையில்கூடக் காணமுடிந்தது. சிறைகளில் கைது செய்யப் பட்டிருந்தவர்கள்கூட தஹஜ்ஜுத் போன்ற ஸ{ன்னத்தான தொழுகைகளைக்கூட விடுபவர்களாக இருக்கவில்லை. ஸ{ன்னத்துக்களைப் பேணுதல், பர்ழ்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தல், ஜமாஅத் தொழுகைக்கு ஆசையூட்டல், திக்ர்-ஒளராதுகளில் ஈடுபடல், சுயவிசாரணை செய்தல் முதலாம் அம்சங்களுக்கு மிகக் கூடுதலான அழுத்தம் கொடுக்கப்பட்டது.

எகிப்து நாட்டில் உருவான இவ்வியக்கமானது, மிகக் குறுகிய காலத்தில் அந்நாட்டின் மிகப் பலம் வாய்ந்த ஒரு சக்தியாக மாறியது. தனிமனிதர்களை உருவாக்குதல், இஸ்லாமியக் குடும்பங்களை அமைத்தல், இஸ்லாமிய சமூகமொன்றை உருவாக்குதல், இஸ்லாமிய ஆட்சியொன்றைத் தாபித்தல், சர்வதேச இஸ்லாமிய சாம்ராஜ்யமொன்றை நிறுவதல் என்பன இவ்வியக்கத்தின் இலக்குகளாக அமைந்திருந்தமையால், இவ்வியக்கம் எகிப்துக்கு மாத்தி;ரம் உரித்தான ஓர் இயக்கமாக அமைய முடியாதிருந்தது. எனவே பல்வேறுபட்ட முயற்சிகளினூடாக இவ்வியக்கத்தின் தூது படிப்படியாக ஏனைய இஸ்லாமிய நாடுகளையும் அடையத் துவங்கியது. இக்வான் இயக்கத்தின் பரம்பலையும் அது ஏற்படுத்திய தாக்கங்களையும் கண்ட ஏகாதியபத்திய வாதிகளின் அடிவருடிகள் ஒரு கணம் கலங்கி நின்றனர். இவ்வியக்கத்தை அழித்தொழிக்கும் திட்டத்தின் முதற்கட்டமாக 1948ம் ஆண்டு இமாம் ஹஸனுல் பன்னாவை கோழைத்தனமான முறையில் சுட்டுக் கொலை செய்தனர்(1949 – 2 – 12). இதைத் தொடர்ந்து இவ்வியக்கத்தைச் சேர்ந்த சகோதரர்கள் பலர் சிறையிலடைத்து வதைக்கப்பட்டனர். ஸய்யித் குதுப், அப்துல் காதர் ஒளதா போன்ற தலைசிறந்த இஸ்லாமிய அறிஞர்களையும், பயங்கரவாதிகள் எனக் குற்றம் சாட்டித் தூக்கிலிட்டனர். ஆனால் இவர்களின் நடவடிக்கையால் இவ்வியக்கம் நலிவுற்றது எனக்கூறுவதைவிட மேலும் வளர்ச்சியுற்றது எனக்கூறுவதே மிகப் பொறுத்தமானதாகும்.

பன்னாவைத் தொடர்ந்து இயக்கத்தின் தலைமைப் பொறுப்பை சட்டவல்லுநர் ஹஸன் ஹ{ழைபி ஏற்றுக் கொண்டார். அவரது மரணத்தைத் தொடர்ந்து இயக்கத்தின் தலைமை, எகிப்தின் சிரேஷ்ட சட்டத்தரணி உமர் தில்மஸானியிடம் சென்றது. இவரது மறைவோடு ஹாமித் அபுன்-நஸ்ர் தலைவராகக் கடமையாற்றினார். அவரைத் தொடர்ந்து உஸ்தாத் முஸ்தபா மஷ்ஹ}_ரும், அவரையடுத்து மஹ்தி ஆகிபும் இக்வான்களின் தலைவர்களாக நியமிக்கப்பட்டனர். இவ்வமைப்பின் இன்றைய புதிய தலைவராக கலாநிதி முஹம்மத் பதீஉ தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இன்று இக்வானுல் முஸ்லிமீன் இயக்கம் அரபு நாடுகளில் மட்டுமன்றி மேற்கத்திய நாடுகளிலும், முஸ்லிம்கள் சிறுபான்மையினராக வாழும் நாடுகளிலும் கூட ஆதிக்கம் செலுத்தத் துவங்கியுள்ளது. இதன் சிந்தனைத் தாக்கத்திலிருந்து எந்த நாடும் விடுபட்டதாகத் தெரியவில்லை. அல்ஜீரியா போன்ற நாடுகளில் ஆட்சியின் கடிவாளத்தை தமது கைக்கு ஏற்கும் அளவுக்கு இயக்கத்தினரின் கை ஓங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது. “நவீன இஸ்லாமிய உலகை வழி நடாத்திச் செல்வதில் இக்வான் இயக்கத்திற்குப் பாரிய பங்குண்டு. இக்வான் இயக்கம் அறபு-இஸ்லாமிய நாடுகள் முதல் உலகின் பல நாடுகளில் நுணுக்கமான திட்ட நகர்வுகளைக் கொண்டு செயற்படுகின்றது. அது இஸ்லாத்தை ஆட்சிபீடமேற்றி வெறும் அரசியலை மாத்திரம் செய்துவிட்டுப் போகும் இயக்கமல்ல. உலகம் எதிர் நோக்கும் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் இஸ்லாமியத் தீர்வை முன்வைப்பதுதான் இவ்வியக்கத்தின் சிறப்பம்சமாகும்.” (மீள்பார்வை, 07மே2010)

20ம் நூற்றாண்டின் இஸ்லாமிய மறுமலர்ச்சிக்கு வித்திட்ட பன்னா ஒரு பாரிய இஸ்லாமிய இயக்கத்தை உருவாக்கிவிட்டுச் சென்ற அதேவேளையில் சில அரிய அறிவுக் கருவூலங்களையும் இஸ்லாமிய உலகுக்கு வழங்கிவிட்டுச் சென்றுள்ளார்.
      Eg   - அல் அகாஇத்
    - அல்லாஹ் பில் அகீதா
    - முகத்திமா பீ உஸ_லுத் தப்ஸீர்
போன்ற நூல்கள் குறிப்பிடத்தக்கவையாகும். ஒரு முஸ்லிம் தனது நாளாந்த வாழ்க்கையில் ஓதி வரவேண்டிய திக்ர் ஒளராதுகளை குர்ஆனினதும், சுன்னாவினதம் வெளிச்சத்தில் அல் மஃஸ_ராத் எனும் பேரில் ஒரு தொகுப்பாக வழங்கியுள்ளார். அன்னாரின் உரைகள், கட்டுரைகள் போன்றவற்றைத் தொகுத்து மஜ்மூஉ ரஸாஇலி ஹஸன் பன்னா எனும் பேரில் தந்துள்ளார்கள்.

20ம் நூற்றாண்டிலும் அற்புதமான ஈமானிய மனிதர்களை உலகம் காண்பதற்கு வித்திட்ட இமாம் ஹஸனுல் பன்னா பற்றி சமகால இஸ்லாமிய அறிஞர் அல்லாமா யூஸ{ப் அல் கர்ளாவி பின்வருமாறு குறிப்பிடுவது நோக்கத்தக்கது. “என்னுடைய சிந்தனையிலும் உணர்விலும் நடத்தையிலும் மிகப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய மிகப்பெரும் ஆளுமையாக இமாம் ஹஸனுல் பன்னாவை நான் காண்கிறேன். எனது வாழ்வில் அதிகூடிய தாக்கத்தை ஏற்படுத்திய இரு சம்பவங்களுள்; இமாம் பன்னாவை சந்தித்ததும் ஒன்றாகும். அவர் எதிர்பார்க்கப்பட்ட ஒரு தலைவர். காலத்தின் தேவையை நிறைவு செய்வதற்காக அல்லாஹ்வினால் தயார்படுத்தப்பட்ட ஒரு மாமனிதரே அவர்.” (அல்ஹஸனாத் 40 ஆண்டு நிறைவு மலர் : 18 - ஏப்ரல் - 2010)  
 

4. மௌலானா ஸெய்யித் அபுல் அஃலா மௌதூதி (ரஹ்)
இஸ்லாமிய சீர்திருத்த வாதிகளின் வரிசையில் 20; நூற்றாண்டு காணும் இஸ்லாமிய மறுமலர்ச்சிக்கு வித்திட்ட முன்னோடிகளில் ஒருவரான இவர் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவராவார். இவரது அபார ஆற்றல்களையும் இஸ்லாத்துக்கான அவரின் பாரிய பங்களிப்புக்களையும் கருத்தில் கொண்டு அவரை ஓர் இமாம் என்றும், முஜத்தித் என்றும் சர்வதேச அங்கீகாரம் பெற்ற இஸ்லாமிய அறிஞர்கள் பலர் வர்ணித்துள்ளனர். இஸ்லாமியப் பணிகளுக்கான சர்வதேச மன்னர் பைஸல் விருதும் இவருக்கு வழங்கப்பட்டது. மேற்கத்திய இலட்சிய வாதங்களும் பிற உலோகாயதக் கொள்கைகளும் இஸ்லாத்திற்குப் பெரும் சவாலாக அமைந்ததொரு காலப்பிரிவில் அவற்றை எதிர்கொண்டு வெற்றிகரமாக முறியடித்த பெருமைக்குரியவர்களுள் மௌலானா மௌதூதி சிறப்பிடம் பெறுகின்றார். மறுபுறமாக இஸ்லாமிய உலகில் எந்தளவுக்குப்போற்றப்படுகிறாரோ அந்த அளவுக்குத் தூற்றப்படும் ஒருவராகவும் இவர் காணப்படுகின்றார் என்பதும் இங்கு குறிப்பிட்டுக் காட்டவேண்டிய ஒரு விடயமாகும். இஸ்லாமிய அறிஞர்களில், மிகக் கடுமையாக விமர்சிக்கப்பட்ட மௌதூதியைப் போன்று மிகவும் கொடூரமாகக் காட்டப்படுகின்ற மற்றுமோர் இஸ்லாமிய அறிஞர் உலகில் இல்லை எனலாம்.

1903ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 25ம் திகதி இந்திய உபகண்டத்தில் ஹைதராபத் நகரில் அமைந்துள்ள ஒளராங்கபாத் எனும் ஊரில் இவர் பிறந்தார். இவர் ஹாஜா முஈனுத்தீன் ஜிஸ்தி அவர்களது ஞான குருவும் ஆசானுமான ஹாஜா குதுபுத்தீன் மௌதூதி அவர்களின் வழித்தோன்றலில் வந்தவராவார். இவரின் தந்தை அலிகார் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற ஒரு வழக்கறிஞர். தனது மகனை ஆங்கிலக் கல்லூரிக்கு அனுப்ப விரும்பாத தந்தை, தனது வீட்டுச் சூழலில் வைத்தே அவருக்குத் தேவையான அறிவு ஞானங்களைப் புகட்டினார்.

மௌலானா மௌதூதி சிறு பராயத்திலேயே அபார ஆற்றல்கள் பலவற்றைக் கொண்டிருந்தார். 1914ல் அல்-மர்அதுல் ஜதீது என்ற அரபு நூலை மொழி பெயர்த்ததன் மூலம் எழுத்துத்துறையில் ஈடுபட்ட அவர், தனது 16ம் வயதில் மௌலானா முஹம்மத் அலி ஜௌஹரின் கிலாபத் இயக்கத்தில் சேர்ந்து செயல்பட்டார். இவ்வயதில் தாஜ் என்ற சஞ்சிகையின் ஆசிரியரானார். 19ம் வயதில் குறித்த பத்திரிகையின் பிரதம ஆசிரியர் பதவியை பொறுப்பேற்றார். இதைத் தொடர்ந்து இச்சஞ்சிகை தினசரிப் பத்திரிகையாக வெளிவந்தது. இதனூடாக கிலாபத் ஆட்சியை மீண்டும் இந்தியாவில் நிறுவுவதன் அவசியத்தை இவர் வலியுறுத்தி வந்தார். இதனால் இப்பத்திரிகைக்கு தடை விதிக்கப்பட்டது. தொடர்ந்து ஜம்இயதுல் உலமா ஹிந்த் - இந்திய உலமா சபையின் அல்முஸ்லிம் பத்திரிகையின் ஆசிரியரானார். ஜம்இயத் என்ற பத்திரிகையிலும் ஆசிரியரானார். இவரது எழுத்துக்களில் இஸ்லாமிய உணர்வும், வேகமும் வெளிப்பட்டன. இவர் தனது 26ம் வயதில் உலகப் புகழ் பெற்ற “அல் ஜிஹாத் பில் இஸ்லாம்” எனும் இஸ்லாத்தில் ஜிஹாத் பற்றி விளக்கும் நூலை எழுதினார். 1932இல் மேலும் ஓர் உலகப் புகழ் பெற்ற நூலான “இது தான் இஸ்லாம்” எனும் நூலைப்  படைத்தார். இது இன்று வரை 70 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இதே ஆண்டில் பிரபல சஞ்சிகையான தர்ஜுமானில் குர்ஆனை வெளியிட ஆரம்பித்தார்.

இவர் பல ஆற்றல்களையும் திறமைகளையும் ஒருங்கே பெற்ற ஒரு மனிதனாகத் திகழ்ந்தார்.
நுப:     1. பிரபல உர்து மொழி இலக்கியவாதி
        2. தலை சிறந்த இஸ்லாமிய சிந்தனையாளர்
        3. இஸ்லாமிய இயக்கமொன்றின் தாபகர்
        4. இவரது எழுத்துக்கள், ஆக்கங்கள் என்பன இலக்கியத்தரம் வாய்ந்தனவாக அனைவராலும் மதிக்கப்படுகின்றன.
        5. இவரது வசன நடைகள் பழமொழிகளாகவும் மரபுச் சொற்றொடர்களாகவும் அம்மொழியில் கையாளப்படுகின்றன.
        6. இவரது எழுத்து நடை விருவிருப்பானதும் தாக்கம் மிக்கதும் உணர்ச்சி பூர்வமானதுமாகும் என உர்து மொழி வல்லுநர்களே
             சான்று பகர்கின்றனர்.

இத்தனை சிறப்புக்களையும் ஒருங்கே வாய்க்கப் பெற்ற ஒருவராக அவர் திகழ்ந்ததால்தான், 1960ல் மன்னர் பைஸலின் வேண்டுகோளுக்கிணங்க மதீனாவில் அமைந்துள்ள ஜாமிஆ இஸ்லாமிய்யாவுக்கான பாடத்திட்டத்தை வரையும் பாரிய பொறுப்பும் அன்னாரிடம் வழங்கப்பட்டது.

இவர் வாழ்ந்த காலப்பிரவைப் பொறுத்த வரையில் இந்தியாவில் இஸ்லாமிய கிலாபத் வீழ்ச்சியுற்றிருந்த காலப்பிரிவாகும். 1922ம் ஆண்டுடன் அதுவரை பெயரளவில் இருந்து வந்த கிலாபத்துக்கு முஸ்தபா கமால் பாஷா அத்தாதுர்க் முற்றுப்புள்ளி வைத்தான். இந்தியாவில் ஆங்கிலேயரின் ஆட்சியும், அனைத்துத் துறைகளிலும் அவர்களின் செல்வாக்குமே எங்கும் காணப்பட்டன. முஸ்லிம் சமூகத்திலிருந்த படித்த வர்க்கத்தினரும் மேற்கத்திய சிந்தனைகளாலும் இலட்சியவாதங்களாலும் பெரிதும் கவரப்பட்டிருந்தனர். மேற்கத்திய கலாசாரத்தையும் நாகரிகத்தையும் வாழ்க்கை முறையையும் பின்பற்றுவதனூடாக மட்டுமே வாழ்க்கையில் விமோஷனம் பெற முடியும் எனும் சிந்தனை பலர் மத்தியிலும் ஒரு மனப் பதிவாக மாறியிருந்தது. இத்தகைய சூழ்நிலையிலேயே மௌலானா மௌதூதி தோற்றம் பெறுகிறார். இஸ்லாலத்தின் அடிப்படை மூலாதாரங்களைக் கற்று, அவற்றின் மகத்துவத்தை உணர்ந்து, அன்றிருந்த இஸ்லாத்துக்கெதிரான வாதங்களுக்கு சரியான மறுப்புக்களை கொடுக்க முனைந்தார். குறிப்பாக இஸ்லாத்துக்கு முரணான தேசியவாதம், இனவாதம், மேற்கத்திய இலட்சியவாதங்கள் முதலானவற்றுக்கு எதிராகவும், இஸ்லாமிய அறிஞர்களின் ஸ்திரமற்ற ஸ்தம்பித நிலையைக் கண்டித்தும் அவர் தனது கருத்துக்களை வெளியிடலானார். இந்த வகையில் தான் நடாத்திய பத்திரிகைகள், சஞ்சிகைகள் ஊடாகவும், நூல்களை வெளியிட்டும், உரைகளை நிகழ்த்தியும் அவர் தனது போராட்டத்தை மேற்கொண்டார். இவரது இவ்வாறான உழைப்பின் விளைவாக குறிப்பாக படித்த வர்க்கத்தினரை மேற்கத்திய சிந்தனைத் தாக்கத்திலிருந்து விடுவிக்க முடிந்தது.

இத்தோடு தனது பணியை நிறுத்த விரும்பாத மௌதூதி தான் முன்வைக்கும் இஸ்லாமியக் கருத்துக்களையும் வாதங்களையும் செயலுருவில் காட்ட வேண்டும் எனும் பரந்த நோக்கில் ஓர் அமைப்பை ஸ்தாபித்தார். இந்த வகையில் 1941 செப்டம்பர் 26ம் திகதி ஜமாஅதே இஸ்லாமி எனும் பெயரில் ஓர் இயக்கம் ஸ்தாபகமாகியது. 1947ம் ஆண்டு ஓகஸ்ட் 28ம் திகதி பாகிஸ்தான் தோற்றம் பெற்றதைத் தொடர்ந்து இவ்வமைப்பு இந்தியாவுக்கெனவும் பாகிஸ்தானுக்கெனவும் வௌ;வேறாகச் செயற்பட ஆரம்பித்தது. இறை ஆட்சியைத் தாபிப்பதே பாகிஸ்தான் உருவாக்கப்பட்டதன் நோக்கமாகும் எனும் காரணத்தினால் மௌதூதி தனது இயக்கத்தின் ஊடாக பாகிஸ்தானில் இறை ஆட்சியை தாபிப்பதற்காக உழைக்கலானார். எதிர்பார்த்த விதத்தில் ஆட்சியாளர்கள் ஆட்சிமட்டத்தில் ஷரீஆவை அமுல் நடாத்தாமையால் தொடர்ந்து போராட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. பாகிஸ்தானில் நடைமுறைப்படுத்தப்பட்ட மனிதச் சட்டங்களை, தொடர்ந்து எதிர்த்து வந்த மௌதூதி 1948 ஓகஸ்ட் 4ம் திகதி கைது செய்யப்பட்டு சிறையில் தள்ளப்பட்டார். தொடர்ந்து 30 மாதங்கள் சிறையிலிருந்து பின்னர் விடுதலையான இவர் பலவீனமுறாது போராட்டத்தை மீண்டும் தொடர்ந்தார். இக்காலப் பிரிவில் தோன்றிய பிரிவினரான காதியானிகளுக்கு எதிராக இவர் வெளியிட்ட கருத்துக்களையும், எழுத்துக்களையும் காரணமாகக் காட்டி 1953ம் ஆண்டு மீண்டும் அவர் கைது செய்யப்பட்டு ஒரு விஷேட நீதிமன்றத்தால் விசாரிக்கப்பட்டு ஈற்றில் அவருக்கு மரண தண்டனையும் விதிக்கப்பட்டது. ஆயினும் உள்நாட்டிலும் வெளி உலகிலும் இவருக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு எதிராக முஸ்லிம்கள் பரவலாகக் குரலெழுப்பியபோது, அவரது தண்டனை ஆயுட்கால சிறைத் தண்டனையாக மாற்றப்பட்டது. பின்னர் அது மீண்டும் குறைக்கப்பட்டு இறுதியாக சுமார் 25 மாதங்களைத் தொடர்ந்து மௌதூதி விடுதலை செய்யப்பட்டார். பின்னர் 1962ல் அவரைப் படுகொலை செய்ய ஒரு முயற்சி எடுக்கப்பட்ட போதும் அது தோல்வியிலேயே முடிந்தது. மீண்டும் 1963ம் ஆண்டு அவர் கைது செய்யப்பட்டு 1964ல் விடுதலையானார். மீண்டும் 1967ல் இவர் சிறை சென்றார்.

மௌலானா மௌதூதி இவ்வாறு பலதரப்பட்ட சவால்களை பல்வேறு மட்டங்களில் எதிர்கொள்ள வேண்டியிருந்தார். உஸ்மானிய்யா பல்கலைக்கழகத்தில் அவருக்கு ஓர் உயர் பதவி கிட்டிய போது, அதனை ஏற்குமாறு அவரது மூத்த சகோதரர் வேண்டிக்கொண்ட போதும் தனக்கு வேறு பணிகள் காத்திருக்கின்றன எனக் கூறி அப்பதவியை ஏற்க மறுத்து விட்டார். தனது சொந்த சஞ்சிகையான தர்ஜுமானுல் குர்ஆனை தொடர்ந்தும் வெளியிடுவதில் சிரமம் இருந்தது. ஏனெனில் தேவையான பொருளாதார வசதி அவருக்கு இருக்கவில்லை. ஆயினும் இந்நிலையை ஒரு சவாலாக ஏற்று அவர் அதனை தொடர்ந்தும் வெளியிட்டு வந்தார்.

ஆரம்பத்தில் அவரது போராட்டத்தில் எதிர்பார்த்த தொகையினர் இணைந்து கொள்ளவில்லை. 1938ம் ஆண்டு இஸ்லாமிய அடிப்படையில் வாழ்வை அமைத்துக் கொள்ளும் நோக்கில் தாருல் இஸ்லாம் எனும் பெயரில் லாகூர் நகரில் ஓர் அமைப்பை ஏற்படுத்தி அதில் இணைந்துகொள்ளும்படி அப்பிரதேச மக்களுக்கு அழைப்பு விடுத்த போது ஒரு சிலரே அதற்கு பதிலளித்தனர். எனினும், இவர் தளர்வுறவில்லை. மீண்டும் 1941ம் ஆண்டு ஜமாஅதே இஸ்லாமி இயக்கத்தை அமைத்த போதும் அதன் ஆரம்ப அங்கத்தினராக சுமார் 75 பேரே இருந்தனர். தொடர்ந்து 6 வருடங்கள் சென்ற பின்னரும் இவ்வியக்கத்தின் மொத்த அங்கத்தினர் எண்ணிக்கை 625ஐத் தாண்டவில்லை.

இத்தகைய சவால்களுக்கு மத்தியிலும் மாறி மாறி வந்த பாகிஸ்தானின் அரசுகளை எதிர்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் இவருக்கு இருந்தது. இத்தகைய பல்வேறுபட்ட சவால்களை எதிர்நோக்கிய போதிலும் இவர் தான் கொண்ட கொள்கையில் உறுதியாக நின்று இறுதி வரை போராடி நூற்றுக்கும் அதிகமான நூல்களை எழுதியதோடு நில்லாது பாரியதோர் இஸ்லாமிய இயக்கத்தையும் ஸ்தாபித்து ஸ்திரப்படுத்திய நிலையில் 1979ம் ஆண்டு செப்டெம்பர் 22ம் திகதி காலை 7 மணியளவில் அமெரிக்காவின் நேற லுழசம நகரில் வபாத்தானார். லூஹ_ரில் நடைபெற்ற அவரின் ஜனாஸாத் தொழுகையில் பல்லாயிரக்கணக்காண மக்கள் கலந்து கொண்டனர். ஜனாஸாத் தொழுகையை பிரபல சட்டத்துறை அறிஞர் கலாநிதி யூஸ_ப் அல்-கர்ழாவி நடாத்தி வைத்தார்.

பல துறை சார்ந்த நூல்களை எழுதிய இவர் தப்ஃஹீமுல் குர்ஆன், அல் ஜிஹாது பில் இஸ்லாம் போன்ற நூல்கள் மூலமாகவும், மேற்கத்திய சிந்தனைகளை விமர்சித்து எழுதிய நூல்கள் மூலமாகவும் இஸ்லாத்துக்கும் இஸ்லாமிய உலகிற்கும் ஆற்றிய பணிகள் மகத்தானவையாகும். துரதிஷ்டவசமாக அவரையும் அவரது அமைப்பையும் பிழையாக விளங்கிக் கொண்டவர்களும் தேசிய மட்டத்திலும் சர்வதேச ரீதியிலும் இல்லாமல் இல்லை.

தப்ஹீமுல் குர்ஆன்

இவரது மகத்தான சாதனைகளுள் தலைசிறந்ததாகக் கருதப்படுவது, 1942 பெப்ரவரியில் ஆரம்பித்து 1972 ஜூனில் நிறைவு செய்த தப்ஹீமுல் குர்ஆன் (Master Piece) எனப்படும் அல்குர்ஆன் விளக்கவுரை நூலாகும். இஸ்லாத்தின் மூல ஊற்றாகிய அல்குர்ஆனை ஒரு புத்தம் புதிய ஒழுங்கில் இவர் முன்வைத்தார். தப்ஹீமைப் பற்றி  மௌதூதியின் பாசறையில் வளர்ந்தவர்களுள் ஒருவரான ஹாபிழ் முஹம்மத் இத்ரீஸ் என்பார் பின்வருமாறு குறிப்பிடுவது நோக்கத்தக்கது.
       “இமாம் இப்னு கஸீர், இப்னு ஜரீர் அத்தபரீ, குர்துபீ போன்றோர் ஹதீஸ்களையும் வரலாற்று நிகழ்வுகளையும் தமது தப்ஸீர்களில் தேவைக்கேற்பக் கையாளுகின்றார்கள். இமாம் ஸமக்ஷரீயும் பைழாவீயும் இடப் பொருத்தப்பாட்டிற்கும் தேவைக்கும் ஏற்ப சொல் விளக்கங்களுக்கு அழுத்தம் கொடுக்கின்றனர். அறிஞர்களுக்கிடையிலான கருத்து வேறுபாடுகளை இமாம் ஆலூஸீயும் இமாம் ராஸியும் கலந்துரையாடுகின்றனர். ஆதார ஒளியில் பேசுவதைவிட தமது அபிப்பிராயங்களைக் கையாளுகின்றனர் முஹம்மத் அப்துஹ_, ஜமாலுத்தீன் ஆப்கானீ, ரஷீத் அர்ரிழா போன்ற அறிஞர்கள். ஆனால் மௌதூதியின் தப்ஹீமிலோ இஸ்லாமிய வாழ்வியல், பொருளியல், இராணுவம், சட்டம், ஆன்மீகம், சடத்துவ அடிப்படைகள், தேவைகள் என்ற முழுமையான கோட்பாட்டை ஒருசேரக் காணமுடியும்” (அல்ஹ)னாத் 40ம் ஆண்டு நிறைவு மலர் 2010)

ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் உள்ள மாணவ, இளைஞர் அமைப்புக்களும் உலகிலுள்ள பல இ;ஸ்லாமிய இயக்கங்களும் அமைப்புச் சட்டம், சூரா போன்ற விடயங்களில் இவ்வியக்கத்தின் வழி முறையையே பின்பற்றி வருகின்றன.

கடந்த கால் நூற்றாண்டு காலமாக அரபுலகின் புதிய தலைமுறையினரில் ஒரு பிரிவினர் நான்கு எழுத்தாளர்களைச் பற்றியே எழுதியும் பேசியும் வருகின்றனர். ஒருவர் இஸ்லாமியப் புத்தமைப்புக்கு அரபியிலும் ப்ரெஞ்சிலும் எழுச்சி மிக்க நூல்கள் பலவற்றைத் தந்த, மறைந்த அல்ஜீரிய இஸ்லாமிய சிந்தனையாளர் மாலிக் பின் நபி. இரண்டாமவர் தனது முறுக்கேறிய பேனா மூலம் அரபு மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவரும், பீ ழிலாலைத் தந்தவருமான அறிஞர் ஷஹீத் ஸய்யித் குதுப். மூன்றாமவர் தனது அரபு மொழிப் புலமையின் ஆக்ரோஷமான பாணி மூலம் அரபுகளிடையே தனக்கெனச் சிறப்பான இடத்தைப் பிடித்துக் கொண்ட மறைந்த இந்திய அறிஞர் மௌலானா அபுல் ஹஸன் அலி நத்வி. நான்காமவர் மௌலானா அபுல் அஃலா மௌதூதி.

அரபு நாடுகளில் கல்வியாளர்களிடையே பின்வரும் வகையிலான பொதுவான ஒரு கருத்துண்டு.
மாலிக் பின் நபி – தத்துவ சிந்தனையாளர்
அபுல் ஹஸன் அலி நத்வி - ஸ_பி
ஸய்யித் குதுப் - முஜாஹித்
மௌதூதி – மிக உயர்ந்த புரட்சி எழுத்தாளர்

அறிஞர் ஸய்யித் குதுப் தனது நூல்களில் தன்னை மௌதூதியின் மாணவர் என்றே அறிமுகப்படுத்திக் கொள்கிறார்.  (சமரசம் செப் 2004)

மௌலானா மௌதூதியைத் தொடர்ந்து பாகிஸ்தான் ஜமாஅதே இஸ்லாமியின் அமீராக மியான் துபைல் என்பவர் நியமிக்கப்பட்டார். அவர் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து சமீப காலம் வரை காழி ஹ{ஸைன் சாஹிப் என்பவர் இயக்கத்தின் அமீராக இருந்து வந்தார். இந்நாள் அமீராக முனவ்வர் ஹஸன் என்பவர் செயற்பட்டு வருகின்றார்.


இலங்கை ஜமாஅதே இஸ்லாமி
ஜமாஅதே இஸ்லாமி இயக்கம் பாகிஸ்தானுக்கு மட்டுமன்றி இந்தியா, பங்களாதேஷ் போன்ற நாடுகளிலும் வேறு பல பெயர்களில் உலகின் பல நாடுகளிலும் வெற்றிகரமாக இயங்கி வருகின்றது. சில நாடுகளில் இஃவான் போன்ற அமைப்புடன் இணைந்தும் இவ்வியக்கம் செயல்பட்டு வருகின்றது. நம் நாட்டில் 1947களில் உத்தியோகப் பற்றற்ற முறையில் இயங்கிய இவ்வியக்கம் 1954இல் உத்தியோகபூர்வமாக செயல்பட ஆரம்பித்தது. பயிற்சி வகுப்புக்கள் ஊடாகவும் தனி நபர் தொடர்பு மூலமாகவும், தமிழ், சிங்களம் போன்ற மொழிகளில் நூல்களையும், சஞ்சிகைகளையும், ஒளி, ஒலி நாடாக்களையும், இருவட்டுக்களையும், வெளியிடுவது கொண்டு;ம் மத்ரஸாக்கள், பாலர் பாடசாலைகள், தொழிற்பயிற்சி வகுப்புக்கள் போன்றவற்றை நடத்துவதனூடாகவும் வெப் தளங்கள் ஊடாகவும் சமூகத்தின் பொருளாதார நலன்களில் ஈடுபாடு கொள்வதனூடாகவும் இவ்வியக்கம் தன்னாலான இஸலாமியப் பணிகளை செய்து வருகிறது. கொழும்பு தெமடகொடவில் தனது தலைமையகத்தைக் கொண்டியங்கும் இவ்வியக்கம், மிகப்பெரிய இஸ்லாமிய புத்தகசாலை ஒன்றையும் தலைமையகத்திற்கு அருகே நடாத்தி வருகின்றது.

இந்நாட்டில் வெகுசனத் தொடர்பு சாதனங்களை இஸ்லாமிய அழைப்புப் பணிக்காகப் பயன்படுத்த வேண்டும் என்பதில் இவ்வியக்கம் முனைப்புக்காட்டியது மாத்திரமன்றி கடந்த ஆறு தசாப்தங்களுக்கும் மேலாக ஊடகங்களை இஸ்லாமிய அழைப்புப் பணியில் பயன்படுத்தியும் வருகின்றது. முஸ்லிம் சமூகத்தில் எழுத்துத் துறைக்கு எவ்வித முக்கியத்துவமும் வழங்கப்படாத, ஊடகங்களை இஸ்லாமிய அழைப்புப் பணிக்குப் பயன்படுத்துவதைப் பலர் எதிர்த்துக் கொண்டிருந்த ஒரு காலகட்டத்தில், துணிச்சலோடு 1954ல் அருள் ஜோதி எனும் பத்திரிகையை இவ்வியக்கம் வெளியிட்டது. அதன் பின்னர் வழிகாட்டி எனும் பெயரில் அது மாசிகையாக வெளி வந்து இன்று அல்ஹஸனாத் எனும் பெயரில், இந்நாட்டின் தமிழ் மொழிமூல முன்னோடி இஸ்லாமிய சஞ்சிகையாக மாதாந்தம் வெளிவந்து கொண்டிருக்கிறது. சிங்கள மொழி மூலம் ப்ரபோதய எனும் சஞ்சிகை தவிர அகரம் போன்ற சிறுவர்களுக்கான துணைச் சஞ்சிகைகளையும்; இவ்வியக்கம் வெளியிட்டு வருகின்றது.

1 கருத்து: