வியாழன், 28 ஏப்ரல், 2011

'யஹபத் பாஸல'

இது, 'மாணவர்களுக்கு சகல வசதிகளுடனும் கல்வியயை வழங்குவதற்காக' என்ற அறிவிப்புடன் அரசாங்கம் அறிமுகப்படுத்துகின்ற புதிய கல்வி முறை.

இதன்படி, நாட்டில், 'யஹபத் பாஸல' என்று அழைக்கப்படும் 1000 பாடசாலைகள் இருக்கும்.

ஆறாம் வகுப்புக்கு மேற்பட்ட அனைவரும் இந்தப் பாடசாலைகளிலேயே படிக்க வேண்டும்.

இந்தப் பாடசாலைகளில் இஸ்லாம், சைவம், பௌத்தம், கத்தோலிக்கம் என்ற வேறுபாடுகளோ, அல்லது ஆண் , பெண் என்ற வேறுபாடுகளோ இருக்காது. அனைவரும் ஒன்றாகவே கற்க வேண்டும்.

எனவே, பெரும்பாலான சந்தர்ப்பங்களில், ஆறாம் வகுப்புக்கு மேற்பட்ட மாணவர்கள் ஊரை விட்டு வெளியே செல்ல வேண்டி ஏற்படும்.

அத்துடன், எமது ஊர்ப் பாடசாலைகள் வெறும் Primary பாடசாலைகளாக மாறக்கூடிய வாய்ப்புகள் இருக்கின்றன.

பருவ வயது மாணவ, மாணவிகள்தான் வெளியே செல்ல வேண்டி ஏற்படுகிறது.

இது எமக்கு ஒழுக்கம் சார்ந்த பிரச்சினைகளையும், பதுகாப்பு சார்ந்த பிரச்சினைகளையும் மற்றும் பொருளதாரம் சார்ந்த பிரச்சினைகளையும் நிச்சயமாகத் தோற்றுவிக்கும்.

வளர்ந்து வருகின்ற எமது ஊரின் கல்வியில், அரசின் இந்தத் தீர்மானங்கள் எந்தளவு பாதிப்பை ஏற்படுத்தும்?

சற்று யோசியுங்கள்......................!
 

6 கருத்துகள்:

  1. யோசிக்க என்ன இருக்கிறது சகோதரரே! ஒழுகத்தைக் குட்டிச் சுவராக்க முனைப்போடு செயல்படுவோருக்கு அரசின் இந்த நடவடிக்கை நிச்சயம் மகிழ்ச்சியை ஏற்படுத்தும். பங்குட்டு திண்டா பாலுஞ்சோரும்,

    பதிலளிநீக்கு
  2. ஜமால்டீன் ஆசிரியர்29 ஏப்ரல், 2011 அன்று 9:23 AM

    உண்மையிலேயே ஒரு சிறந்த ஆக்கம்

    பதிலளிநீக்கு
  3. உங்கள் வருகைக்கு மிக்க நன்றி, எமது மதிப்புக்கு உரித்தான நல்லாசிரியரே!

    பதிலளிநீக்கு
  4. பெயரில்லா4 மே, 2011 அன்று 8:52 PM

    நம்ம ஸ்கூலுங்க தரம் கொறஞ்சிடுமோ எண்டு இப்ப கவலப் படுறீங்களே............. ரெண்டு ஸ்கூலயும் ஒன்னா எணைப்போம் எண்டு சொன்ன நேரத்தில சப்போர்ட் குடுத்திருந்தா இந்தப் பிரச்சின இருந்திருக்குமா?........

    சொல்லிக் கேக்கிற கூட்டமா நீங்க............................?

    பதிலளிநீக்கு
  5. விரலாட்டி5 மே, 2011 அன்று 7:49 AM

    விஷயம் தெரியாமல் உளறிக்கொட்டி இருக்கும் பெயரில்லா சகோதரருக்கு,
    பாலிகா பாடசாலை பத்ரியாவுடன் இனையாமலிருப்பதற்கு முக்கிய காரணம் ஆண், பெண் கலப்பு ஆகும். மேலுள்ள திட்டத்தின்படி பத்ரியாவுடன் இனைந்திருந்தால் கூட அந்நியருடன் சேர்த்து விடப்போவதாகவே தெரிகிறது. அடுத்து இது வெறும் முன்மொழிவே தவிர இன்று வரை எந்த தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்கிறது இன்னொரு தகவல்.
    ஆனால், உங்களுடைய கருத்து எதைப்போல் இருக்கிறது தெரியுமா? சாராயத்தை Glassஇல் ஊற்றி தந்த அந்நேரமே குடித்திருந்தால் இந்தப்பிரச்சினை வந்திருக்குமா? என்பதை போல் இருக்கிறது.
    எப்படியோ இத்திட்டம் முன்னெடுக்க படாமலிருப்பதற்கு அல்லாஹ்வை பிரார்த்திப்போமாக!

    பதிலளிநீக்கு
  6. பெயரில்லா30 மே, 2011 அன்று 2:12 PM

    அஸ்ஸலாமு அலைக்கும்.
    இது எமது ஒட்டுமொத்த சமூகத்தினதும் பார்வையில் கொண்டுவரவேண்டிய விடயம். அனேகமாக இது ஒரு யூத செயல்திட்டமாகவும் இருக்கலாம். அந்நிய சக்திகள் எமது weekpoint ஐ நன்கு அறிந்து வைத்துள்ளனர். ஆண் பெண் கலப்பு கல்வியை எம்முள் திணித்தால், எதிர்காலத்தில் முஸ்லிம்களின் கல்விக்கு ஒரு முடிவு கட்டிவிடலாம் என்பதே.

    பதிலளிநீக்கு