ஞாயிறு, 1 மே, 2011

கட்டாய தலைமைத்துவப் பயிற்சி

பல்கலைக் கழகங்களுக்குத் தெரிவு செய்யப்படும் அனைத்து மாணவர்களுக்கும் தலைமைத்துவப் பயிற்சி கட்டாயமாக்கப் படவுள்ளது.

இந்தப் பயிற்சி நெறியின் ஒரு பகுதியாக 'உடல் மற்றும் தேகாரோக்கியப் பயிற்சி' என்ற அம்சமும் இடம்பெறுகிறது.

இந்தப் பயிற்சிக்கான முகாம்கள் இராணுவ முகாம்களிலேயே அமைக்கப் படவுள்ளன. இந்த முகாம்களில் மாணவர்கள், பயிற்சி நெறி முடியும் வரை தொடராக தங்கியிருக்க வேண்டும்.

அத்துடன், பயிற்சிகளின் போது அதற்கேற்ற சீருடையை அணிந்திருக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இது, கல்வித் துறையில் முஸ்லிம்களுக்கு விழும் மற்றொரு பாரிய அடியாகும்.

ஏனெனில், எமது முஸ்லிம் மாணவிகள் உடற்பயிற்சிக்கான அந்த சீருடையை அணிய முடியாது! அதை அணியாவிட்டால் தலைமைத்துவப் பயிற்சியைப் பூரணப்படுத்த முடியாது!! இந்தப் பயிற்சியைப் பூரணப் படுத்தாமல் பட்டம் பெற முடியாது!!!

எனவே, எதிர்காலத்தில் முஸ்லிம் பெண் வைத்தியர்கள், முஸ்லிம் பெண் இஞ்சினியர்கள், முஸ்லிம் பெண் முகாமையாளர்கள், ..............., அதை விடுங்கள்! சாதாரண ஒரு முஸ்லிம் பெண் பட்டதாரியைக் கூட காண முடியாத சூழ்நிலை உருவாகும்.

அதள பாதாளத்தில் விழுந்திருந்த எமது சமூகத்தின் கல்வி நிலை, சற்றே தலை தூக்க ஆரம்பித்துள்ள இவ்வேளையில், அரசாங்கத்தின் இந்தத் தீர்மானம் எம்மை மீண்டும் பாதாளத்தில் தள்ளிவிடப் போதுமானதாகும்.

ஏற்கனவே 'யஹபத் பாஸல' என்ற எண்ணக்கருவின் மூலம் எமது சமூகத்துக்கு ஏற்படவுள்ள சீர்கேட்டை தொட்டுக் காட்டியிருந்தோம்.

எமது நாகரிகத்தை குழி தோண்டிப் புதைக்கும் இவ்வாறான தீர்மானங்களை நாம் அப்படியே நடைமுறைப் படுத்துவதா? அல்லது, எமது தனித்துவத்தைப் பேணுவதற்காக ஜனநாயக வழியில் முயற்சிகளை மேற்கொள்வதா?

பளிச்!, எமது தனித்துவம் பேணப்படும் விடயத்தில் எப்போதும் ஒத்துழைக்கத் தயாராக உள்ளது. அதன் ஆரம்பப் படியாக, சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சியே இந்த சிறு ஆக்கம்.

மிகத் துரிதமாக செயற்பட வேண்டிய ஒரு தருணத்தில் நாம் இருக்கிறோம்.

எமது உரிமைகளை வென்று தர மற்றொரு சமூகம் முன்வரப் போவதில்லை. நாமாக முன்வராவிட்டால், எமது நலன்கள் தாமாகவே வந்து நம்மை அடையப் போவதுமில்லை.

நேரம் பிந்திக்கொண்டிருக்கிறது...................................................................!  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக