புதன், 4 மே, 2011

பின் லாடனின் கொலையில் துலங்கும் மர்மம்


கொல்லப்பட்ட பின் லாடனின் படம் அமெரிக்காவால் வெளிவிடப்பட்டதல்ல. அது பாக்கிஸ்தானிய தொலைக்காட்சியால் வெளிவிடப்பட்டது.
அது போலியானது என்று
இப்போது கூறப்படுகிறது.

பின் லாடன் துப்பாக்கிச் சண்டை செய்தார் என்று கூறிய அமெரிக்க அரசின் அறிக்கை, இப்போது அது தவறு என்றும் அவர் ஆயுதம் வைத்திருக்கவில்லை என்றும் கூறுகிறது.

அமெரிக்கா ஏன் பின் லாடனின் இறந்த உடலைக் கொண்ட எந்த புகைப்படங்களையும் வெளிவிடவில்லை?
அமெரிக்க ஏபிசி தொலைக்காட்சி; தாக்குதல் நடந்த கட்டிடத்தின் சிதைவுகள், படுக்கை அறை, பின் லாடனின் கட்டில் போன்றவற்றின் படங்களை வெளிவிட்டது.
ஆனால் பின் லாடனின் இறந்த உடலை ஏன் வெளிவிடவில்லை?

பின் லாடனின் இருப்பிடத்தை அறிந்த அமெரிக்க உளவுத் துறையான CIA அதை அமெரிக்க அதிபருக்கு அறிவித்தது. பின் லாடனைக் கொல்ல வேண்டுமாயின் ஒரு நீர் மூழ்கிக் கப்பலில் இருந்தோ அல்லது ஒரு போர்க் கப்பலில் இருந்தோ சில பட்டன்களைத் தட்டுவதன் மூலம் பின் லாடன் இருந்த கட்டிடத்தைத் நிர் மூலமாக்கி பின் லாடனைக் கொன்றிருக்கலாம். பின் லாடனைக் கொல்ல மேற்கொண்ட படை நடவடிக்கை மிகுந்த ஆபத்து நிறைந்தது என்று படைத் துறை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே அமெரிக்காவின் இது போன்ற படை நடவடிக்கைகள் ஈரானிலும் சோமாலியாவிலும் தோல்வி கண்டன. இருந்தும் இந்த நடவடிக்கையை ஏன் அமெரிக்கா மேற் கொண்டது? அதுவும் பாக்கிஸ்தானியப் படையில் கீழ் நிலையில் உள்ள பலர் அமெரிக்க விரோதமானவர்கள். இருந்தும் பாக்கிஸ்தானிய மண்ணில் இதை செய்தனர்.

புஷ் ஆட்சியில் இருக்கும் போது பின் லாடனை கொல்லும் சந்தர்ப்பம் கிடைத்தது ஆனால் கொல்லாமல் விட்டனர். அப்போது கொல்லாமல் விட்டது ஏன்? இப்போது கொன்றது ஏன்?

கொன்றதாகச் சொல்லப்படும் பின் லாடனின் உடலின் DNA சோதனை
எங்கே?
எப்போது?
எப்படி?
எவ்வளவு நேரத்தில் செய்யப்பட்டது?

பின் லாடனைக் கொன்றால் பல பின் லாடன்கள் உருவாகுவார்கள் என்பது அரசியலின் அரிச்சுவடி அறிந்தவர்களுக்கு நங்கு தெரியும். இருந்தும் ஏன் கொன்றார்கள்?

தொலைவில் இருந்து கொல்லும் வல்லமை பெற்ற அமெரிக்கா
நான்கு உலங்கு வானூர்தியில் 79 சிறப்புப் பயிற்ச்சி பெற்ற அமெரிக்க வீரர்கள்
பின் லாடனின் குகைக்குள் இறக்கி தாக்குதல் நடத்தி அவரை கைது செய்வதனால் கிடைக்கக் கூடிய நன்மைகள் என்ன?

பின் லாடனைக் கொல்வதிலும் பார்க்க அவரைக் கைது செய்தால்
பின்னர் பின் லாடனின் பின்னால் நின்று செயற்படுபவர்களை இலகுவில் பிடித்து அழிக்கலாம்.
ஆப்ககானிஸ்தானில் அமெரிக்கப் படைகள் போர் புரிவதை நிறுத்தலாம்.
பல அமெரிக்கப் படைகள் ஆப்க்கானிஸ்தானில் இருந்து வெளியேறலாம்.
அது பராக் ஒபாமாவிற்கு தேர்தலில் வெற்றி பெறப் பெரும் வாய்ப்பாக அமையும்.

இவற்றையெல்லாம்  வைத்துக் கொண்டு பார்த்தால்
அமெரிக்கா
பின் லாடனைக் கொல்லவில்லை; கைதுதான் செய்துள்ளது என்றே கூறலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக