செவ்வாய், 3 மே, 2011

உஸாமா பின் லாதின் படுகொலை - ஹமாஸ் கண்டனம்


அல் காயிதா போராளி இயக்கத்தின் தலைவரான உஸாமா பின் லாதினை பாகிஸ்தானில் வைத்து அமெரிக்க  இராணுவம் சுட்டு கொன்றதற்கு பலஸ்தீன் இஸ்லாமிய இயக்கமான ஹமாஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஹமாஸின் தலைவர்களில் ஒருவரான இஸ்மாயீல் ஹனிய்யா வெளியிட்டுள்ள செய்தி பின்வருமறு:


"அமெரிகாவின் அடக்குமுறை, முஸ்லிம் மற்றும் அரபுகளின் இரத்தத்தை சிந்தச்செய்யும் கொள்கையின் தொடர்ச்சிதான் உஸாமாவின் கொலையாகும்.  அல் காயிதா போராளி இயக்கத்திற்க்கும் எங்களுக்குமிடையே சித்தாந்த ரீதியாக வேறுபாடுகள் இருந்தபோதிலும் அரபுலக புனிதப் போராளியான  உஸாமாவைக்  கொலை செய்தமைக்காக நாம்  எமது கண்டனத்தைத்   தெரிவித்துகொள்கிறோம். அல்லாஹ் உஸாமாவின் மீது கருணையை பொழிந்து அவரை உண்மையான இறை நம்பிக்கையாளர்கள் மற்றும் உயர் தியாகிகளின் கூட்டத்தில் சேர்ப்பானாக! என நாங்கள் பிரார்த்திக்கின்றோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக