நேற்று(10.09.2012) திஹாரிய அல்- அஸ்ஹரில் கம்பஹா மாவட்ட தமிழ்மொழிப் பாடசாலைகளுக்கான வலய மட்ட விஞ்ஞானப் போட்டிகள் நடைபெற்றன. இதற்கான அறிவுறுத்தல்களை போட்டி நடைபெறுவதற்கு சில நாட்களுக்கு முன்னரே பாடசாலைகள் பெற்று மாணவர்களைத் தயார்படுத்தின. இதே அறிவுறுத்தல் பத்ரியாவுக்கு கிடைக்கப்பெற்றிருந்த நிலையிலும் மாணவர்களுக்கு எந்த அறிவுறுத்தல்களையும் வழங்காது சும்மா இருந்துவிட்டு போட்டி நடைபெற்ற தினமே மாணவர்களுக்கு விடயத்தைக் கூறி எந்தவித் ஆயத்தங்களும் இல்லாத நிலையில் அழைத்துச் சென்று சமாளிப்புச் சாதனை புரிந்துள்ளதாக இன்று கிடைத்த செய்தியொன்று கூறுகிறது. இதில் வேடிக்கை என்னவென்றால் தகுதியின் அடிப்படையில் மாணவர்கள் தெரிவு செய்யப்படாது சீட்டுக் குலுக்களின் மூலம் அவர்கள் தெரிவுசெய்யப்பட்டமையாகும்.
ஊர்ச் செய்தி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஊர்ச் செய்தி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
செவ்வாய், 11 செப்டம்பர், 2012
சனி, 8 செப்டம்பர், 2012
மர்ஸூக் ஆசிரியர் இடமாற்றம்!
கஹடோவிட முஸ்லிம் பாலிகாவில் அரபு, இஸ்லாமியத் துறைகளுக்குப் பொறுப்பாக இருந்த அஷ்ஷெய்க் மர்ஸூக் (நளீமி) கடந்த வாரம் கஹடோவிட அல்பத்ரியா மகா வித்தியாலயத்துக்குத் தனது சொந்த விருப்பத்தின் பேரில் மாற்றலாகிச் சென்றார். பத்ரியாவுக்குச் சென்று சேர்ந்த மர்ஸூக் ஆசிரியரை அன்பு முத்தங்கள் பரிமாறி வரவேற்றதாகவும் தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எது எப்படிப்போனாலும் மர்ஸூக் ஆசிரியரின் இழப்பானது பாலிகாவுக்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். இது குறித்து மாணவிகள் மற்றும் பெற்றோர், ஆசிரியர்கள் சகலரும் ஆழ்ந்த கவலைக்கு உள்ளாகியுள்ளனர்.
சமூக விஞ்ஞான மாகாணப் போட்டிகளில் கஹடோவிட பாலிகாவின் சாதனை!
நடைபெற்று முடிந்த 2012ம் ஆண்டிற்கான
மாகாண மட்ட சமூக விஞ்ஞானப் போட்டிகளின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. அதில் கஹடோவிட
பாலிகா வித்தியாலயத்திலிருந்து அகில இலங்கை ரீதியிலான போட்டிக்கு அறுவர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
மேற்படி போட்டியில் திஹாரிய அல்அஸ்ஹரில் இருந்து இருவரும் (ஷௌகீ, ஸமீனா), எமது பத்ரியாவில்
இருந்து ஒரே ஒருவரும் (ஏ.எம்.எம். நுப்லா),
உடுகொடை அரபாவில் இருந்து மூன்று பேரும், ஓசட்வத்தையில் இருந்து ஒருவரும் அகில இலங்கை
ரீதியாகத் தெரிவாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அவர்களின் விபரங்கள் வருமாறு:
1. Fahjath Asmi -
Gr. 7
2. A.F. Eshqa -
Gr. 7
3. M.A.F. Arshada -
Gr. 9
4. M.S.F. Zameera - Gr.10
5. S.H.F. Husna - Gr.11
6. A.R.F. Midhuha - Gr.11
சனி, 25 ஆகஸ்ட், 2012
அல்-பத்ரியா இருளில் மூழ்கும் அபாயம்!!!
எமது கஹடோவிடாவுக்கு நூற்றாண்டு கடந்து கல்வி ஒளி பரப்பிக்கொண்டிருக்கும் அல் பத்ரியா, மின்சாரத் துண்டிப்பு காரணமாக சமீப காலமாக நிர்வாக ரீதியாக பல அசௌகரியங்களை எதிர் கொண்டு வருகின்றது. அண்மையில் பாடசாலைக்கு கணனிப் பிரிவுக்கென பொறுப்பாளர் ஒருவர் நிய்மிக்கப்பட்ட போதும், மின்சாரத் துண்டிப்பு காரணமாக அவர் தனது கடமைகளை மேற்கொள்ள முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.
இந்த நிலைக்கான காரணம் தொடர்பாக நாம் அலசியதில் எமக்குக் கிடைத்த தகவல் இதுதான்.
பாடசாலை மின் பாவனைக்கான கட்டணம் நீண்ட காலமாகச் செலுத்தப்படாமல் நிலுவையாகவே இருந்து வந்துள்ளது. இன்றும்தான். 35000 ரூபாவையும் தாண்டிய நிலையில் நிலுவை இருந்ததனால் மின்சார சபை உத்தியோகபூர்வமாகவே மின்சாரத்துண்டிப்பை மேற்கொண்டுள்ளது.
பத்ரியா வோக் மூலம் சேகரித்த பணத்தின் மூலமாகவேனும் நிலுவையைச் சரி செய்து பாடசாலையினதும் ஊரினதும் மானத்தைக் காப்பாற்றலமல்லவா என ஊர் மக்கள் விசனப்படுகின்றனர்.
பத்ரியா அதிபரே! இது உங்கள் கவனத்துக்கு!
நன்றி: www.kashtowitty.blogspot.com
சனி, 4 ஆகஸ்ட், 2012
வருந்துகிறோம்
கடந்த ஜூன் மாதத்தின் ஆரம்பத்தில் எமது பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கான தொழில் வழிகாட்டல் கருத்தரங்கொன்றை கத்ர் நாட்டிலுள்ள கெஸ்க் அமையம் அல்-பத்ரியா மகா வித்தியாலயத்தில் வெற்றிகரமாக நடத்தி முடித்தது. இருப்பினும் குறித்த விடயம் தொடர்பான தகவல்கள் எமது தளத்துக்கு உரிய சந்தர்ப்பத்தில் கிடைக்காததால் அது தொடர்பான செய்தியை எம்மால் வெளியிட முடியவில்லை என்பதை ஆழ்ந்த வருத்தங்களுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
இது தொடர்பில் எமது வாசகப் பெருமக்கள் பலரும் எமது இத்தவறைச் சுட்டிக்காட்டி கருத்துத் தெரிவித்திருந்ததையும் நன்றியோடு இவண் நினைவுகூர்கின்றோம்.
வியாழன், 2 ஆகஸ்ட், 2012
தூள் பாவனையும் மாணவர்களும்
ஒரு காலத்தில் எமதூர்களிலெல்லாம் வயதானவர்களிடம்தான் தூள் பாவனை இருந்து வந்தது. அதுவும் மூக்குத் தூள் பாவனைதான் பரவலாகக் காணபட்டு வந்தது.
ஆனால் இன்று நிலைமை மிகவும் பயங்கரமாய் மாறியுள்ளது. அதிகமான மாணவர்கள் போதை அளிக்கவல்ல தூள் வகைகளையே நுகர்கின்றனர். 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பிற்கு இடைப்பட்ட மாணவர்களே இத்தகைய போதை தரும் தூளை விரும்பிப் பாவிக்கின்றனர் எனக் கண்டறியப்பட்டுள்ளது.
இதில் பயங்கரம் என்னவென்றால் இத்தகையோர் ஒரு பெரும் ஹராத்தைச் செய்வதோடு இன்னும் பல ஹராம்கள் செய்யத் தூண்டப்படுவதாகும். மட்டுமன்றி நாளடைவில் உடல் தளர்ச்சி, பலவீனம், சோர்வு, விரக்தி, எதிலும் முழுமையான ஈடுபாடு காட்டாமை முதலிய உடல், உள ரீதியான ஏராளமான பாதிப்புகளுக்கு உட்படுவர்.
எனவே பெற்றோர்களே! உங்கள் அன்புச் செல்வங்களை இத்தகைய அபாயத்தில் இருந்து பாதுகாத்துக்கொள்ள இன்றே முயற்சி எடுங்கள்!
ஆனால் இன்று நிலைமை மிகவும் பயங்கரமாய் மாறியுள்ளது. அதிகமான மாணவர்கள் போதை அளிக்கவல்ல தூள் வகைகளையே நுகர்கின்றனர். 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பிற்கு இடைப்பட்ட மாணவர்களே இத்தகைய போதை தரும் தூளை விரும்பிப் பாவிக்கின்றனர் எனக் கண்டறியப்பட்டுள்ளது.
இதில் பயங்கரம் என்னவென்றால் இத்தகையோர் ஒரு பெரும் ஹராத்தைச் செய்வதோடு இன்னும் பல ஹராம்கள் செய்யத் தூண்டப்படுவதாகும். மட்டுமன்றி நாளடைவில் உடல் தளர்ச்சி, பலவீனம், சோர்வு, விரக்தி, எதிலும் முழுமையான ஈடுபாடு காட்டாமை முதலிய உடல், உள ரீதியான ஏராளமான பாதிப்புகளுக்கு உட்படுவர்.
எனவே பெற்றோர்களே! உங்கள் அன்புச் செல்வங்களை இத்தகைய அபாயத்தில் இருந்து பாதுகாத்துக்கொள்ள இன்றே முயற்சி எடுங்கள்!
செவ்வாய், 10 ஜூலை, 2012
எதிர்கால பத்ரியாவின் வினைத்திறன் மிக்க அதிபர் யார்? ஒரு சூடான செய்தி!
மேற்குறித்த விடயம் தொடர்பாகப் பரவலாகவே ஊர்மட்டத்தில் வாதப்பிரதிவாதங்கள் இடம் பெற்று வருகின்றன. சமீபத்தில் அதிபர்மாருக்கான நேர்முகப் பரீட்சைக்கான அழைப்பாணையைப் பெற்றுக் கொண்ட பத்ரியாவின் ஸலாம் ஆசிரியரும், அல்அஸ்ஹரின் ஸபீர் ஆசிரியரும் அந்த சிம்மாசன இருக்கைக்காக ஒரு பக்கம் போட்டியிட மறுபக்கம் பத்ரியாவின் பிறிதோர் ஆசிரியரான மாஹிர் ஆசிரியரும் போட்டியிடப்போவதாக தகவல்கள் கிடைக்கின்றன. இதற்கு மத்தியில் விடுமுறையில் இருக்கும் அதிபரையே தொடர்ந்தும் வைத்துக்கொள்வதற்கான பகீரதப் பிரயத்தனங்களும் நடைபெற்று வருகின்றன. எமக்குக் கிடைத்த தகவலின்படி "லீவில் இருப்பவரே நல்லம்" என்று வாக்களிக்குமாறு குறித்த பாடசாலையின் சில ஆசிரியர்களை முக்கிய புள்ளிகள் சிலர் ( ? ) கட்டாயப்படுத்தியதாகவும் ஒரு த்கவல்............
நன்றி: www.waaththiyaar.blogspot.com
மிகுதி, நாளை எதிர்பாருங்கள்.
புதன், 4 ஜூலை, 2012
யார் இந்த கஷ்டோவிட்டி ஷீஆக்கள்??
எதிரியின் எதிரி நண்பன் என்று கேள்விப்பட்டிருப்பீர்களல்லவா? அந்த வாய்ப்பாட்டை அடியொட்டித்தான் இதுவும் அரங்கேறுகிறது. தப்லீக் தௌஹீத் மற்றும் இதர இயக்கங்களின் வளர்ச்சி கண்டு, அவற்றினால் தமது வயிற்றுப் பிழைப்புக்கான வாயில்கள் அடைக்கப்பட்டுவிடுமோ என்று பயந்து அவ்வியக்கங்கள் மீது பொறாமை கொண்ட ஒரு சில விஷமிகளின் தூர- திருஷ்டியற்ற செயற்பாட்டின் விளைவே இக்கொள்கை இங்கு வேரூன்றக் காரணமாய் அமைந்துள்ளது.
செவ்வாய், 3 ஜூலை, 2012
கஹட்டோவிட்டாவில் ஷீஆக் கொள்கை?
ஆமாம், எமது சின்ன மக்காவில் ஷீஆவுக்கான முதல் விதை தூவப்பட்டுவிட்டது. தொப்புள் கொடி உறவாக இந்த உறவு இனி இங்கு வளரும் என எதிர்பார்க்கலாம்.
முன்பு ஒரு தடவை நான் இதே தளத்தில் ரஸூலுல்லாஹ்வையும் பாதிமா நாயகியையயும் தமது ஞானக் கண்களால் காண்பதாகக் கதை அளக்கும் ஒரு கொள்கை வழிப் பாடசாலை பற்றி எச்சரித்திருந்தேன்.
அது போன்ற பிறிதொரு சனியன்தான் இதுவும். ஊரில் ஒரு பிரபலம் எனத் தன்னைக் காட்டிக்கொள்ள முனையும் ஒரு முக்கிய புள்ளியின் முயற்சியால்தான் இந்தப் பாதகமே அரங்கேறுகிறது.
அகீதாவோடு தொடர்பான இவ்வாறான சர்ச்சைகளை முறியடிக்க எமது சமூகத்தில அஷ்அரீக்களும் மாத்ரூதிகளும் அஹ்மத் இப்னு ஹன்பல்களும் தேவைப்படுகிறார்கள். விழித்தெழுங்கள் இஸ்லாமிய உள்ளங்களே!
மார்க்கப் பணி புரியும் இஸ்லாமிய இயக்கங்களே! அமைப்புக்களே!
இது உங்கள் கவனத்துக்கு!!
முன்பு ஒரு தடவை நான் இதே தளத்தில் ரஸூலுல்லாஹ்வையும் பாதிமா நாயகியையயும் தமது ஞானக் கண்களால் காண்பதாகக் கதை அளக்கும் ஒரு கொள்கை வழிப் பாடசாலை பற்றி எச்சரித்திருந்தேன்.
அது போன்ற பிறிதொரு சனியன்தான் இதுவும். ஊரில் ஒரு பிரபலம் எனத் தன்னைக் காட்டிக்கொள்ள முனையும் ஒரு முக்கிய புள்ளியின் முயற்சியால்தான் இந்தப் பாதகமே அரங்கேறுகிறது.
அகீதாவோடு தொடர்பான இவ்வாறான சர்ச்சைகளை முறியடிக்க எமது சமூகத்தில அஷ்அரீக்களும் மாத்ரூதிகளும் அஹ்மத் இப்னு ஹன்பல்களும் தேவைப்படுகிறார்கள். விழித்தெழுங்கள் இஸ்லாமிய உள்ளங்களே!
மார்க்கப் பணி புரியும் இஸ்லாமிய இயக்கங்களே! அமைப்புக்களே!
இது உங்கள் கவனத்துக்கு!!
பத்ரியாவுக்குப் புதிய அதிபர், பிரதி அதிபர்கள் நியமனம்!!!
மேற்படி பாடசாலைக்கு நீண்ட காலமக தகுதி வாய்ந்த அதிபர் ஒருவர் இல்லாதிருப்பதை அறிந்துகொண்ட கம்பஹா கல்வி வலயம், குறித்த பாடசாலைக்கு ஓர் அதிபரையும் ஓருதவி அதிபரையும் நியமித்துள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது. பத்ரியாவில் உள்ள ஸலாம் ஆசிரியர் அதிபராகவும் திஹாரிய அல் அஸ்ஹர் ஆசிரியர் ஜனாப் ஸபீர் உப அதிபராகவும் நியமிக்கப்படவுள்ளனர். புதிய அதிபர்களுக்கு எமது வாழ்த்துக்கள்!!!
சனி, 16 ஜூன், 2012
பத்ரியாவின் பொறுப்பான பதவிகளில் இருந்து முக்கிய ஆசிரியர் ஒருவர் ராஜினாமா!!!
இன்று கிடைத்த ஒரு தகவலின்படி, குறித்த பாடசாலையின் டிஸிப்லின் முதலாம் பொறுப்பான பதவிகளில் நீண்ட காலம் கடமையாற்றிய மூத்த ஆசிரியர் ஒருவர், தான் இதுவரை வகித்து வந்த பதவிகளில் இருந்து விலகிக் கொள்வதாக கடிதம் மூலம் மாட்சிமை தங்கிய அதிபருக்கு அறிவித்துள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பிந்திக் கிடைத்த செய்தியொன்று:
பிந்திக் கிடைத்த செய்தியொன்று:
ஞாயிறு, 10 ஜூன், 2012
புதிய அதிபர் தேடுதல் வேட்டையில் அல்பத்ரியா!!!
பாடசாலையின் நிலைமை படு மோசமாகி வருவதாகவும், கற்பிக்க வேண்டிய ஆசிரியர்கள் படிப்பிக்காமல் வேறு வேலைகளைச் செய்து வருவதாகவும்; இவையனைத்துக்கும் சரியான அதிபர் ஒருவர் இல்லாமையே காரணம் என்றும் நேற்று இரவு (10. 06. 12) நடைபெற்ற அல்பத்ரியா தொடர்பான முக்கிய கலந்துரையாடல் ஒன்றில் அதன் முக்கிய உறுப்பினர் ஒருவர் கருத்துரை வழங்கினாராம். இந்த அனியாயங்களை ஒழித்துக் கட்ட வேண்டுமானால் உடனடியாக அதிபர் ஒருவரைக் கொண்டுவரவேண்டும் என்றும் கலந்துரையாடப்பட்டதாம். புதிய அதிபர் யாராக இருக்குமோ?? விபரம் நாளை எதிர்பாருங்கள்!
சனி, 9 ஜூன், 2012
கஹட்டோவிட்ட பெண்களுக்குப் பாராட்டு!
எமது ஊரில் இயங்கி வரும் 'தாய்மார் மற்றும் சிறுவர் நல கிளினிக்'இன் ஏற்பாட்டில், கர்ப்பப் பை புற்று நோய் சம்பந்தமாக விளக்கும் நோக்கில் இடம்பெற்ற கூட்டத்தில், கூடுதலான பெண்கள் கலந்து கொண்டதையிட்டு வைத்தியரின் பாராட்டு கிடைத்துள்ளது.
இந்தக் கூட்டம், இன்று காலை அல் பத்ரியா ம. வி. பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்தக் கூட்டம், இன்று காலை அல் பத்ரியா ம. வி. பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.
செவ்வாய், 15 மே, 2012
ஆசிரியர்களை விரட்டியடிப்பதில் அல் பத்ரியா ஹட்ரிக் சாதனை
நம் நாட்டுச் சூழலில் ஓர் அரசாங்கப் பாடசாலையில் ஆண் ஆசிரியர்கள் இருப்பதென்பது அருமையிலும் அருமையான ஒரு விடயமாகும். கம்பஹா மாவட்டத்திலுள்ள முஸ்லிம் பாடசாலைகளில் அதிக எண்ணிக்கையிலான ஆண் ஆசிரியர்களைக் கொண்ட ஒரேயொரு முஸ்லிம் பாடசாலை திஹாரிய அல்-அஸ்ஹர் மத்திய கல்லூரி மாத்திரமே. இந்த நிலையில் கடந்த ஆறு வருட காலப்பகுதிக்குள் முக்கிய பாடங்கள் பலவற்றைப் போதித்து வந்த பல ஆண் ஆசிரியர்களை எமது மதிப்பிற்குரிய பத்ரியா நிர்வாகம் அதன் சொந்தக் காரணங்களுக்காக விரட்டியடித்ததை எல்லோரும் அறிவர். இவ்வாறு செய்வதொன்றும் பத்ரியா நிர்வாகத்துக்குப் புதிதான விடயமல்ல. இதில் குறிப்பிடத்தக்க விடயம் என்னவென்றால், ஒரு காலத்தில் மும்மூர்த்திக்களாக இருந்து, பாடசாலையின் முன்னேற்றத்துக்காக உழைத்த மூன்று முக்கிய ஆசிரியர்களுள் இருவர் ஏலவே நிர்வாகத்தின் வீம்புத்தனம் காரணமாக விரட்டியடிக்கப்பட்டனர். இன்று எஞ்சியிருந்த மூன்றாவது விக்கட்டும் கழற்றப்பட்டுள்ளது. விரட்டப்பட்ட மூவரும் மீண்டும் ஒரே பாடசாலையிலேயே ஒன்று சேர்ந்துள்ளனர் என்பது அந்த மும்மூர்த்திகளைப் பொருத்தவரை மகிழ்ச்சிப்படத்தக்க விடயமாகும். ஆறு வருடங்களின் பின்னர் அவர்கள் மூவரும் ஒன்றிணைந்த அந்த மகிழ்வான நிகழ்வை இன்று அல் அஸ்ஹர் கண்டீன் சாலையில் வெகு சிறப்பாகக் கொண்டாடி மகிந்ததாக செய்திகள் கூறுகின்றன.
வாழ்க அல்-பத்ரியா!!
சனி, 5 மே, 2012
வேதாளம் மீண்டும்.................! பத்ரியாவும் பாலிகாவும் இணைக்கப்படலாம்?!
அல் பத்ரியாவையும் பாலிகாவையும் இணைத்து, தனி நிருவாகத்தின் கீழ், தனிப் பாடசாலையாக்கும் முயற்சி மீண்டும் முடுக்கி விடப்பட்டுள்ளதாக புதிய தகவல்கள் கூறுகின்றன.
புதன், 2 மே, 2012
தம்புள்ள பள்ளி விவகாரம் - நாம் என்ன செய்தோம்?
தம்புள்ள ஹைரியா பள்ளிவாசலில் அண்மையில் இடம்பெற்ற இனவாதத் தாக்குதல் தொடர்பாக உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் முஸ்லிம்கள், கண்டனப் பேரணிகளும் ஹர்த்தால் நடவடிக்கைகளும் மேற்கொண்டு தமது எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர்; இன்னும் வெளியிட்ட வண்ணமுள்ளனர்.
லேபிள்கள்:
ஆசிரியர் கருத்து,
இஸ்லாம்/சர்வதேசம்,
ஊர்ச் செய்தி,
சமூகம்
ஞாயிறு, 29 ஏப்ரல், 2012
குருட்டுக் கண்ணால் எப்படிப் பார்க்க முடியும்.................. ?!
உயர் தர மாணவர்கள் உட்பட, அல் பத்ரியா பாடசாலையின் பெரிய வகுப்பு மாணவர்கள் ஏழு பேர், கடந்த இரண்டு வாரங்களுள் திஹாரிய அல் அஸ்ஹர் மத்திய கல்லூரியில் தமது கல்வியைத் தொடர்வதற்காக இணைந்துள்ளதாக அறியக் கிடைத்துள்ளது.
வியாழன், 19 ஏப்ரல், 2012
கஹட்டோவிட்டாவில் "ஐஸ்" மழை!
கஹட்டோவிட்டாவின் மஸ்ஜிதுன் நூர் பள்ளிவாசலை அண்டிய பிரதேசங்களில் நேற்றிரவு (18.04.2012) 'ஐஸ்' மழை பெய்திருக்கிறது. பலத்த இடி, மின்னலுடன் பெய்து கொண்டிருந்த மழையுடனேயே, இரவு சுமார் 8:00 மணியளவில், இந்த அரிய நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
வெள்ளி, 6 ஏப்ரல், 2012
பத்ரியாவின் சாதனைக்கு எமது பாராட்டுக்கள்!
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் முஸ்லிம் சேவை வாராவாரம் நடாத்துகின்ற அறிவுக் களஞ்சியம் போட்டிகளில், மேல் மாகாண முஸ்லிம் பாடசாலைகளுக்கு இடையிலான போட்டிகளில், கஹட்டோவிட்ட அல் பத்ரியா மகா வித்தியாலயம் முதலாம் இடத்தை பெற்றுக் கொண்டுள்ளது.
9 பாடசாலைகளுடன் போட்டியிட்டு, முதலாம் இடத்தைப் பெற்ற எமது பாடசாலையை பாராட்டுவதுடன், இந்த வெற்றிக்காகப் பாடுபட்ட ஆசிரியர்களையும் மாணவர்களையும் பளிச்! முழு மனதுடன் பாராட்டுகிறது.
செவ்வாய், 27 மார்ச், 2012
ஜீ. ஸீ. ஈ. (சா./த) பரீட்சைப் பெறுபேறுகள் 2011
CONGRATS!
நேற்று வெளியிடப்பட்ட குறித்த பரீட்சைப் பெறுபேறுகளின்படி எமது கம்பஹா பிராந்தியம் முன்னனியில் திகழ்வதாக செய்திகள் கிடைக்கின்றன. கம்பஹா ரத்னாவலி பாலிகாவில் 110 பேர் 9 A எடுத்துச் சாதனை புரிந்துள்ளனர். எமது அல்-பத்ரியா மகா வித்தியாலயத்தில் மாணவி ஒருவர் 9 A சித்தி பெற்றுச் சாதனை படைத்துள்ளார்.
நேற்று வெளியிடப்பட்ட குறித்த பரீட்சைப் பெறுபேறுகளின்படி எமது கம்பஹா பிராந்தியம் முன்னனியில் திகழ்வதாக செய்திகள் கிடைக்கின்றன. கம்பஹா ரத்னாவலி பாலிகாவில் 110 பேர் 9 A எடுத்துச் சாதனை புரிந்துள்ளனர். எமது அல்-பத்ரியா மகா வித்தியாலயத்தில் மாணவி ஒருவர் 9 A சித்தி பெற்றுச் சாதனை படைத்துள்ளார்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
