செவ்வாய், 27 மார்ச், 2012

ஜீ. ஸீ. ஈ. (சா./த) பரீட்சைப் பெறுபேறுகள் 2011

CONGRATS!
நேற்று வெளியிடப்பட்ட குறித்த பரீட்சைப் பெறுபேறுகளின்படி எமது கம்பஹா பிராந்தியம் முன்னனியில் திகழ்வதாக செய்திகள் கிடைக்கின்றன. கம்பஹா ரத்னாவலி பாலிகாவில் 110 பேர் 9 A எடுத்துச் சாதனை புரிந்துள்ளனர். எமது அல்-பத்ரியா மகா வித்தியாலயத்தில் மாணவி ஒருவர் 9 A சித்தி பெற்றுச் சாதனை படைத்துள்ளார்.
சகோதர பாடசாலைகளான உடுகொட அரபா மற்றும் திஹாரிய அல் அஸ்ஹரில் தலா ஒவ்வொரு மாணவர்  9  A  சித்திகள் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.  9 A  சித்திகள் பெற்ற மற்றும் திறமையான முறையில் சித்தியடைந்த சகலருக்குக்கும் பளிச் தனது உளம் கனிந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்கிறது.

1 கருத்து:

  1. CONGRATS!

    சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற எமது பிள்ளைகளை நானும் வாழ்த்துகிறேன். அதேனேரம் உயர் தர வகுப்பு மாணவகளின் நிலைதான் கவலையளிக்கின்றது.

    கடந்த சில நாட்களாகவே உயர்தர வகுப்புக்களில் பாடங்கள் ஒழுங்காக நடைபெறாமல் இருந்து வருவது குறித்து சம்பத்தப்பட்ட வகுப்பு மாணவர்களின் பெற்றோர் கவலைப்படுகின்றனர். ஏனைய வகுப்புக்களுக்குப் ப்ரீட்சை நடைபெறுவதக் காரணம் காட்டிப் பாட வேளைகளில் பாடத்துக்கு வராமல் காலத்தைக் கடத்தி வருகின்றார்களாம் பாடமெடுக்கும் ஆசிரியர்கள் சிலர். மறு புறமாக இதுகாலவரை ஏதோ பேரளவிலாவது இயங்கிவந்த வர்த்தகப் பிரிவைக்கூட இழுத்து மூடும் பரிதாப நிலையும் தோன்றியுள்ளதாம்.

    வர்த். பிரிவு மட்டுமன்றி, கலைப் பிரிவும் பாடசாலை மீது நம்பிக்கை இழந்துள்ளதைக் காணமுடிகின்றது. இப்படியே போனால் ஏ.எல். எங்கு போய் முடியும்?

    கதார் நாட்டுச் சங்கமே (கெஸ்க்) நீங்களாவது இது பற்றிச் சிந்திக்கக் கூடாதா????

    குடும்பம் குடும்பமாகச் சென்று உம்ரா செய்வதை விட இது முக்கியத்துவம் வாய்ந்தது என்பதையாவது இவர்கல்சிந்திக்க க் கூடாதா????

    எமதூரின் கல்வி முன்னேற்றம் குறித்து அலட்டிக்கொள்ளும் புத்தி ஜீவிகளே இது உங்கள் கவனத்துக்கு!

    பதிலளிநீக்கு