(கெலும்
பண்டார - from MIRROR)
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் அமெரிக்காவினால் முன்வைக்கப்பட்டுள்ள
இலங்கை தொடர்பான பிரேரணையில் இலங்கைக்கு சார்பாக முஸ்லிம் நாடுகளின்
ஆதரவினை திரட்டுவதற்காக பிரபல்யம் வாய்ந்த இரண்டு முஸ்லிம் உலமாக்களை
அரசாங்கம் ஜெனீவா அனுப்பவுள்ளது என அமைச்சர் றிசாட் பதியுதீன்
தெரிவித்தார்.
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய் றிஸ்வி முப்தி
மற்றும் பிரதி தலைவர் அஷ்ஷெய் ஏ.சீ.அகார் முஹம்மத் ஆகியோரே ஜெனீவா
செல்லவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இவர்கள் இருவரும் தன்னுடன் ஜெனீவா பயணமாக உள்ளதாக அமைச்சர் றிசாட் தெரிவித்தார்.
இந்த உலமாக்கள் இருவருடனும் இணைந்து முஸ்லிம் நாடுகளின் பிரதிநிதிகளை சந்திக்கவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
'விடுதலைப் புலிகளினால் முஸ்லிம்கள் எதிர்நோக்கிய பிரச்சினைகள் தொடர்பிலும் தற்போது, ஏனைய இனங்களுடன் ஒற்றுமையாக வாழ்வது குறித்தும் நாடுகளுக்கு விளக்கவுள்ளதாக' அவர் கூறினார்.
குறித்த பிரேரணையை தோற்கடிப்பதற்கு ஆதரவு வழங்குமாறு இஸ்லாமிய நாடுகளின் தலைவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அமைச்சர் றிசாட் பதியுதீனுடன் அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா மற்றும் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் ஜெனீவா செல்லவுள்ளனர்.
இதேவேளை, அமைச்சர் ஹக்கீம் ஏற்கனவே ஜெனீவாவில் தங்கியுள்ள நிலையில் இலங்கை தூதுக்குழுவினருக்கு அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தலைமை தாங்குகின்றமை குறிப்பிடத்தக்கது

comments (12)
...
written by ஜெமீல் ஓட்டமாவடி, March 17, 2012
written by ஜெமீல் ஓட்டமாவடி, March 17, 2012
அவா்களது விஜயம் குறிப்பிடத்தக்களவு முஸ்லிம் நாடுகளிடம் தாக்கத்தை
உண்டுபன்னும் என்பது நிச்சயம்.
...
written by raheem, March 17, 2012
written by raheem, March 17, 2012
It s too late. The Muslim scholars had earlier to be sent to Arab
world so that they could easily convene the authorities rather than
diplomats who are mouth piece of their government.
...
written by ummpa, March 17, 2012
written by ummpa, March 17, 2012
பிக்குகளை அனுப்பி இருக்கலாமே! இவர்கள் போகாமல் இருப்பதே ஒரு சிறப்பு.
அரசியல் செய்துகொள்ள முடியும் பிரச்சினைக்கு இவர்கள் தேவை. "கறிவேப்பிலை"
புரியுமா. தெரிந்தால் சரிதான்.
...
written by moors, March 17, 2012
written by moors, March 17, 2012
correct decision. these people should be sent to GENEVA for the sake
of our nation.
...
written by goodheart, March 17, 2012
written by goodheart, March 17, 2012
சிறுபான்மை மக்களைத் துரும்பாகப் பயன்படுத்துகிறது என்பதற்கு இதை விட
உதாரணம் தேவயில்லை, ஆபத்திற்கு சிறுபான்மை, அரசியலுக்கு ??????????????,
முப்திகலே நீதமாக நடந்துகொள்ள உங்களுக்கு சொல்லவேண்டுமென்ற அவசியமில்லை.
...
written by kanavaan, March 17, 2012
written by kanavaan, March 17, 2012
உலமாக்களுக்கும் ஜெனிவா அதிஷ்டம் அடித்துவிட்டது. வாழ்க! ரிசாத்
பதியுதீன்.
...
written by Mohammed Hiraz, March 17, 2012
written by Mohammed Hiraz, March 17, 2012
இலங்கை முஸ்லிம்கள் தேசத்திற்காக எதையும் செய்வார்கள் என்பதை நிரூபிக்க
வேண்டும் உலமாக்கள் எது நாட்டிற்கு நல்லதோ எது நீதியான விடயமோ எது
தேசத்தின் சகல மக்களையும் ஒன்று சேர்க்குமோ அதன்பால் கரிசனை செலுத்த
வேண்டும் கற்றறிந்த உலமாகள் ஒரு நாளும் அநீதிக்கு துணைபோக மாட்டார்கள்!!!
...
written by seyadu mohammad, March 17, 2012
written by seyadu mohammad, March 17, 2012
இபொழுது நீயா நானா என்ற வதம் வேண்டாம் நம் நாட்டிற்கு வெளிநாட்டு
சக்திகளின் அழுத்தம் நீங்க வேண்டும். அதுவே நாம் அனைவரும் விரும்பனும்.
சனல் 4 இலங்கையில் நடந்தது வேறு எந்த நாட்டிலும் நடக்காதது போல் இந்த
விடயம் காட்டி பிரபல்யம் அடைகிகிறது குறிப்பாக ஈராக் ஆப்கான் போன்ற
நாடுகளில் மேற்கொண்ட கொலைவெறி இவர்களுக்கு தெரியவில்லையா?