எமது ஊரில் இயங்கி வரும் 'தாய்மார் மற்றும் சிறுவர் நல கிளினிக்'இன் ஏற்பாட்டில், கர்ப்பப் பை புற்று நோய் சம்பந்தமாக விளக்கும் நோக்கில் இடம்பெற்ற கூட்டத்தில், கூடுதலான பெண்கள் கலந்து கொண்டதையிட்டு வைத்தியரின் பாராட்டு கிடைத்துள்ளது.
இந்தக் கூட்டம், இன்று காலை அல் பத்ரியா ம. வி. பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.
குறித்த விடயம் தொடர்பில் தெளிவு பெறுவதற்காக பெண்கள் காட்டிய அக்கறையையிட்டு கிளினிக் அதிகாரிகள் நிறை மனதுடன் இருந்ததாக தகவல்கள் கிடைத்துள்ளன.
நிகழ்வின் இறுதியில் எமது சகோதரி ஒருவர் நன்றியுரை வழங்கியுள்ளார். சிங்கள மொழியில் வழங்கப்பட்ட இந்த நன்றியுரையைக் கேட்டு மகிழ்ச்சியடைந்த அதிகாரிகள், "இந்த ஊர் பெண்கள் இப்போது கல்வியிலும் ஆர்வம் காட்டுவது மகிழ்ச்சி தருகிற்து" என்றும் வாழ்த்தினர்.
கிளினிக் அதிகாரிகளின் நல்லெண்ணத்துக்கும் எமது சமூகத்துக்கு அவர்கள் ஆற்றும் அரும் பணிகளுக்கும் நன்றி தெரிவித்து மற்றொரு சகோதரி ஒரு சுவர்க்கடிகாரத்தை அன்பளிப்பாக வழங்கியதும் குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக