செவ்வாய், 26 ஜூன், 2012

உயர்தர கலை, வர்த்தகப்பிரிவுகளுக்கான இறுதிக் கருத்தரங்குகள் - 2012

குறித்த உயர் வகுப்புப் பிரிவு மாணவகளுக்கான சகல பாடங்களுக்குமான கருத்தரங்குகளின் முதல் நாள் நிகழ்வு  நேற்று, திஹாரிய அல் அஸ்ஹர் மத்திய கல்லூரியில் நேற்ற ஆரம்பமாகியது. முதல் நாள் நிகழ்வில் தமிழ்ப் பாடத்துக்கான கருத்தரங்கு இடம்பெற்றது. மூதூரைப் பிறப்பிடமாகக் கொண்ட ஜனாப் பௌஸி - திலீப் அவர்கள் தமிழ்ப் பாடத்துக்கான விரிவுரையை ஆற்றிச் சென்றார். குறித்த கருத்தரங்கில் எமது பிராந்தியத்திலுள்ள பல பாடசாலை மாணவர்கள் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.


இதன் தொடராக இன்று இஸ்லாமிய நாகரிகப் பாடத்துக்கான கருத்தரங்கு இடம்பெற்றது. ஏராளமான வெளி மாணவகள் கலந்து கொண்ட குறித்த பாடத்துக்கான விரிவுரைகளை ஹிஷாம் ஆசிரியர் அவர்களும், பூஸரி ஆசிரியர் அவர்களும் சிறப்பாக நடாத்தி முடித்தார்கள்.

திட்டமிட்டபடி இன்ஷா அல்லாஹ் நாளை அரசியல் பாடத்துக்கான கருத்தரங்கும் நாளை மறு நாள் இஸ்லாம் பாடத்துக்கான விரிவுரைகளும் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக