வியாழன், 14 ஜூன், 2012

நோய் - ஒரு தெய்வீக அருள்!!!

நோய் ஒரு நல்ல ஆசான். அது மனிதனுக்கு வேறு எவர் கற்று தந்ததையும் விட அதிகம் கற்றுத் தந்திருக்கிறது. நோய்மையுறுதல் என்பது உண்மையில் உடலை அறிந்து கொள்வதற்கான ஒரு விசாரணை.
  

உடல் ஒரு பிரபஞ்சம். நாம் ஒரு போதும் கண்ணால் காணமுடியாத பேராறு நமது ரத்த ஓட்டம். உடலினுள் எண்ணிக்கையற்ற புதிர்கள், வியப்புகள், நுட்பங்கள் மிகுந்த பேரொழுங்குடன் அடங்கியிருக்கின்றன. உடலை அறிவது தான் மனிதனின் முதல் தேடல். அதை நோய்மை நினைவுபடுத்துகிறது.  

இறைவனின் இருப்பு குறித்த நம்பிக்கைகள் யாவும் மனிதன் நோய்மையடைவதால் மட்டுமே காப்பாற்றப்பட்டுவருகிறது. ஒவ்வொரு நோய்க்கும் நூற்றாண்டுகால நினைவுகளிருக்கிறது. மருத்துவத்தின் வரலாறு மகத்தானது. மதமும் மருத்துவமும் கொண்டுள்ள உறவும் அது சார்ந்த மனித நம்பிக்கைகளும் மிகப் புராதனமானவை.
 
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக