சனி, 29 செப்டம்பர், 2012

ஹிஜ்ரத்: மனித வரலாற்றையே மாற்றியமைத்த மகத்தான நிகழ்வு


இமாம் ஹஸனுல் பஸரீ (ரஹிமஹுல்லாஹ) அவர்கள் இவ்வாறு குறிப்பிட்டார்கள்: “மனிதா! நீ சில நாட்களின் தொகுதி என்பதை அறிந்து கொள். உனக்கென்று சில நாட்கள் இருக்கின்றன. அவற்றின் தொகுதியாகவே நீ இருக்கின்றாய். ஒவ்வொரு நாளும் முடிவடைய நீயும் முடிந்து உனக்குரிய நாட்களின் தொகுதியும் முடிவடைந்து உனது வாழ்க்கை நிறைவு பெற்று இவ்வுலகை விட்டுப் பிரிகின்றாய்.” 
அல்லாஹ் எமக்கருளிய நாட்தொகுதியில் எத்தனை நாட்கள் முடிவடைந்து விட்டன என்பது எமக்குத் தெரியாது. எனினும், எஞ்சியிருக்கும் மிகப் பெறுமதி வாய்ந்த காலத்தை எந்த வகையில் பயன்படுத்துவது என்பது பற்றி ஒவ்வொரு முஸ்லிமும் சிந்திக்க வேண்டும்.

இந்தவேளையிலே முஹர்ரம் புத்தாண்டிற்கு அடிப்படையாக அமைந்த ஹிஜ்ரத் நினைவுகூரத்தக்கது. நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் வாழ்க்கையில் பல்வேறு முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகள் நடைபெற்றிருக்கின்றன. நபியவர்களின் பிறப்பு, அவரின் மரணம், பத்ர் யுத்தம் மக்கா வெற்றி முதலான முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகள் நபியவர்களின் வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்திருக்கின்றபோது, மனித சமுதாயத்தின் தலைவிதியை தீர்மானித்த நிகழ்வுகள் அவரின் வாழ்க்கையில் இருக்கின்றபோது, ஹிஜ்ரத்தை அடிப்படையாகக் கொண்டு முஸ்லிம்களுடைய ஆண்டு ஆரம்பிக்கப்பட வேண்டும் என்ற உமர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களது தீர்மானத்தின் பின்னணியில் ஏராளமான நியாயங்கள் உள்ளன.

வெள்ளி, 28 செப்டம்பர், 2012

இஸ்லாம் - மாதிரி வினாத்தாள் (சா/த) - 2012


                                                                  2012 December                                                         
                                      கல்விப் பொதுத் தராதரப் பத்திர (சாதரண) தரப் பரீட்சை                               
                                     General Certificate of Education (Ord. Level) Examination

1. ஒரு முஸ்லிம் சுபஹ் தொழுகையில் கட்டாயமாக ஓத வேண்டிய ஸூra
    1. ஸூரா இக்லாஸ்             2. ஸூரா அல்காஷியா            3. ஸூரா அல்ஃபாத்திஹா            4. ஸூரா அஸ்ஸஜ்தா
2. உமது ஆடையில் தோய்ந்த நஜீஸை அகற்றுவதற்கோ, உமது தாகத்தை தீர்ப்பதற்கோ சாதாரணமாகப் பயன்படுத்த
    முடியாத நீர்?
   1. மாஉன் முத்லக்                     2. மாஉன் தாஹிர்                     3. மாஉன் தஹூர்                4. மாஉன் முதனஜ்ஜிஸ்
3. அல்லாஹ்வால் மனிதர்களுக்கு ஆகுமாக்கப்பட்ட எனினும் அவனால் மகவும் வெறுக்கப்படுகின்ற ஒரு செயல்?
    1. ஷிர்க்                                  2. கொலை                              3. கபாஇர்                            4. தலாக்
4. ஒரு நற்செயலை மக்களின் பாராட்டு, புகழ் என்பவற்றை எதிர்பார்த்து நிறைவேற்றுவது
1. நன்மை தரவல்லது                                                                          2. இணைவைப்புக்கு சமனானது
3. அல்லாஹ்வின் புகழுக்குரியது                                                          4. மதம் மாறுவதற்கு சமனானது

புதன், 26 செப்டம்பர், 2012

திஹாரிய ஈமானியா அரபுக்கல்லூரியின் முன்மாதிரி


கடந்த ஞாயிற்றுக் கிழமை ஈமானியா அரபுக் கல்லூரியின் பட்டமளிப்பு விழா அல்அஸ்ஹர் மத்திய கல்லூரியின் விளையாட்டுத் திடலில் மிகச் சிறப்பாக நடபெற்று முடிந்தது.
இக்கல்லூரி அன்றைய தினம் சாதித்துக் காட்டிய பல அம்சங்கள், இந்த நாட்டு முஸ்லிம் சமூகத்துக்கு மத்தியில் ஓங்கி ஒலிக்கப்படவேண்டிய விடயங்களாகும்.

சாதனைகள்:
1. பட்டம் பெற்று வெளியேறிச் செல்லும் மாணவர்களுக்கு சாரதி அனுமதிப்பத்திரம் (Driving Licence) வழங்கியமை
2. கணனித் துறையில் பயிற்சி வழங்கி சான்றிதழ்கள் வழங்கியமை

இலங்கை அரபு மத்ரஸாக்கள் வரலாற்றில் இந்தச் சாதனைகள் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படவேண்டியனவே. ஏனெனில் இன்றுவரைக்குமான நம் நாட்டு அரபு மத்ரஸாக்கள் வரலாற்றில் இவ்வாறானதொரு காத்திரமான சாதனை ஒன்றை அரபு மத்ரஸா ஒன்று புரிந்திருப்பது இதுவே முதல் தடவையாகும். மட்டுமன்றி மகத்தானதொரு புரட்சியுமாகும்.

 இன்றுவரை “லெப்பைக் கோஸ்” என்று ஒரு சிலரால் அழைக்கப்பட்டு வரும்  மத்ரஸாக் கல்வித் திட்டத்தில் ஈமானியாவின் முன்மாதிரி, எதிர்வரும் காலங்களிலாவது பெரும் திருப்பத்தைக் கொண்டுவரவேண்டுமென நாமும் விரும்புகிறோம்.

செவ்வாய், 25 செப்டம்பர், 2012

புதிய அதிபராக ஜனாப் ஸபீர் நியமனம்

 திஹாரிய அல்-அஸ் ஹரின் மூத்த-சிரேஷ்ட ஆசிரியரான ஜனாப் ஸபீர் அவர்கள் கஹடோவிட அல்பத்ரியாவுக்கு அதிபராக நியமனம் பெற்றுச் செல்லவுள்ளதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இன்று 25. 09. 2012 செவ்வாயன்று அதிபர் சேவைக்கான நியமனப் பத்திரத்தை அவர் பெற்றுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய அதிபருக்கு எமது வாழ்த்துக்கள்!

ஞாயிறு, 23 செப்டம்பர், 2012

நபியின் மீதான அன்பை வெளிப்படுத்தல்.

இஸ்லாத்துக்கு எதிராக விமர்சனங்கள் முன்வைக்கப்படும் போதெல்லாம் அவற்றுக்கு எதிராக கண்டனப் பேரணிகளை நடாத்துவது தற்போது வாடிக்கையாகிவிட்டது. இதனை சற்று நிதானமாகப் பார்த்தால், இஸ்லாத்துக்கு எதிரான விமர்சனங்களோ  அல்லது அவற்றுக்கு எதிரான கண்டன நடவடிக்கைகளோ, முடிவின்றி, தொடர்ந்தும் புதிது புதிதாக முன்னெடுக்கப்படும் என்றே தோன்றுகிறது. அப்படியென்றால், இது திட்டமிட்ட தொடர் நடவடிக்கை என்பது நிரூபனமாவதுடன், இந்தக் கேடு கெட்ட கைங்கரியத்தை சமூகமயப்படுத்துகின்ற ஒரு பொது எதிரி இருப்பதும் தெளிவாகிறது. 'இந்த எதிரிக்கு எதிராக நாம் என்ன செய்யலாம்?'