;A/L இஸ்லாம் குறிப்புகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
;A/L இஸ்லாம் குறிப்புகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 23 அக்டோபர், 2012

ஹஜ் ஒரு தியாகப் பயணம் (உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர், அமீர், இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி)


“ஹிஜ்ஜுல் பைத்” எனப்படும் இறையில்லத் தரிசனம் ஓர் இணையில்லா அனுபவம். படைத்தவனது இல்லம் நோக்கி படைப்பினங்கள் மேற்கொள்ளும் தியாகப் பயணம். ஹஜ்ஜில் எத்தனை தியாகங்கள்?

நிய்யத் ஒரு தியாகம்

“லப்பைக்“ – உனது அழைப்பை ஏற்றுவிட்டேன் என்று கூறும் போதே இந்த உலகத்தை துறந்து விட்டேன் என்ற உணர்வை பற்றிக் கொள்கிறது.

வியாழன், 18 அக்டோபர், 2012

ஏற்றமிகு வாழ்விற்கு இறைமறை (ஏ.ஸீ. அகார் முஹம்மத் -நளீமி)


மனிதன் தனது வாழ்வில் இருவகைப் பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றான். உடனடிப் பிரச்சினைகள் (Immediate Problems)  ஒரு வகை; நித்திய பிரச்சினைகள்  (Ultimate Problems) இரண்டாம் வகை. மனித வாழ்வின் உடனடிப் பிரச்சினைகளுக்கு உதாரணங்களாக உணவு, உடை, உறையுள், சுகாதாரம் முதலான தேவைகளைக் குறிப்பிடலாம். இந்த வகைப் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்வதற்கு இறைவன் மனிதனுக்கு பகுத்தறிவை (Intellect) வழங்கியுள்ளான். மனிதன் பகுத்தறிவை வைத்து இயற்கையின் சட்டங்களை (Laws Of Nature) கண்டறிகின்றான். இயற்கையின் சட்டங்கள் பற்றி மனிதன் பெற்றுக் கொள்ளும் அறிவே அறிவியல் (Science) என அழைக்கப்படுகின்றது. இவ்வறிவை அவன் பிரயோகிக்கின்ற போது உருவாவதே தொழில்நுட்பம் (Technology) ஆகும். இத்தொழில்நுட்பம் மனிதன் தனது உலக வாழ்வில் எதிர் கொள்ளும் உடனடிப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணத் துணை புரிகின்றது.

வெள்ளி, 20 ஜூலை, 2012

முஸ்லிம் சமூகம் / ஜாஹிலிய்யா சமூகம் - ஓர் ஒப்பீட்டு ஆய்வு


- ஜா, சமூகம் கோத்திர உணர்வை முதன்மைப்படுத்த முஸ்லிம் சமூகம் கொள்கை வழிச் சமூகம் ஒன்றை முதன்மைப் படுத்தியமை
- ஜா, சமூகம் பாவங்கள் செய்வதை பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை; முஸ்லிம் சமூகம் பாவத்திலிருந்து விடுதலை பெறுவதை இலக்காகக் கொண்டுள்ளமை
- ஜா. சமூகம் அஸபிய்யா எனும் கோத்திர வெறி உணர்வுக்கு மதிப்பளித்து கோத்திரத் தலைமைக்கு மட்டும் கட்டுப்பட்டு வாழந்தமை; முஸ்லிம் சமூகம் பொதுத் தலைமைத்துவம் ஒன்றுக்குக் கட்டுப்படுகின்றமை
- சீரான குடும்ப அமைப்பு ஜா. சமூகத்தில் இல்லாதிருக்க முஸ்லிம் சமூகத்தில் இவை சீராகக் காணப்படுகின்றமை
- ஜா. சமூகத்தில் சுய நலமும் சுரண்டலும் தாண்டவமாடியபோது முஸ்லிம் சமூகத்தில் சமூக நலனை மையப்படுத்தி ஹலால்-ஹராம் சட்ட விதிகள் பேணப்பட்டமை
- ஜா. சமூகத்தில் பெண் எத்தகைய ஒரு பெறுமாணத்தையும் பெறவில்லை. முஸ்லிம் சமூகத்தில் அவர்களது சமூக அந்தஸ்து, சொத்துரிமை, திருமண-விவாகரத்து உரிமை என அனைத்தும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.
- மனிதனின் விருப்பு வெறுப்பே செல்வாக்குப் பெற்றிருந்த ஜா. சமூகத்தில் கல்வி, ஒழுக்கவிழுமங்கள், வணக்க வழிபாடுகள் உரிய அந்தஸ்தைப் பெற்றிருக்கவில்லை, முக்கியத்துவம் பெற்றும் இருக்கவில்லை; ஆனால் முஸ்லிம் சமூகத்தில் இவையனைத்துக்கும் உத்தரவாதமளிக்கப்பட்டுள்ளதோடு அவற்றுக்கு உரிய அந்தஸ்தும் முக்கியத்துவமும் வழங்கப்பட்டுள்ளன.
- கலை என்ற பெயரிலுள்ள சகலதுமே ஜா. சமூகத்தில் அசிங்கங்களையும் கீழ்த்தரமான ஆபாசங்களையும் வெளிக்கொணர்வனவாய் அமைந்திருந்தன. முஸ்லிம் சமூகத்தில் இவை அனைத்தும் மானுட சமூகத்தின் மேம்பாட்டை மையப்படுத்தியதாகவே அமைதிருக்கும்; அல்லாதபோது அவற்றுக்கு அங்கீகாரமோ பெறுமாணமோ கிடையாது.
- ஜா. சமூகத்தில் தக்வாவையோ ஆன்மீகப் பெறுமாணங்களையோ செயற்பாடுகளில் காண முடியாதிருந்தது. ஆனால் முஸ்லிம் சமூகத்தில் இவைதாம் உரைகற்கள்

ஞாயிறு, 24 ஜூன், 2012

கலீபா வலீத் இப்னு அப்துல் மலிக் (86 - 96 / 705 - 715)

உமையாக் கலீபா அப்துல் மலைக் மரணமடைந்ததைத் தொடர்ந்து அவரது தனயன்  வலீத் இப்னு அப்துல் மலிக் உமைய கிலாபத்தின் கலீபாவானார். இவ்ரது ஆட்சியின்போது உமையாக்களின் ஆட்சி உச்ச நிலையை எய்தியது. கலீபா உமர் (ரழி) அவ்ர்களின் ஆட்சியின் பின் இவரது ஆட்சியில் தவிர வேறு எவரது ஆட்சியிலும் இஸ்லாமியப் பேரரசு இந்த அளவுக்கு வேகமாய் விரிவடையவில்லை. உமைய கலீபாக்கள் வரிசையில் மிகச் சக்தி வாய்ந்தவராகவும் உயர்ந்தவராகவும் விளங்கிய இவர், உமைய அரசியல் வரலாற்றில் ஒளிமயமான அத்தியாயமொன்றை உருவாக்கினார்.

புதன், 13 ஜூன், 2012

முஸ்லிம்களும் அழகியற் கலைகளும்



மனிதன் அறிவும் உணர்வு களும் உடையவனாகப் படைக்கப்பட்டுள்ளான். அவனது அறிவின் வெளிப்பாடாக அறிவியற் கலைகளும் உணர்வு களின் வெளிப்பாடாக அழகியற் கலைகளும் தோற்றம் பெறலாயின.

ஞாயிறு, 13 மே, 2012

இலங்கையில் இஸ்லாமிய தஃவா -பொது நோக்கு-MAM Mansoor (Naleemi)

சிரிய நாட்டு நவீன சிந்தனையாளர் ஜவ்தத் ஸஈத் தன்னுடைய சமூக, உள மாற்றத்துக்கான விதிகள் எனும் நூலில் குறிப்பிடும் ஒரு கருத்தை நினைவு கூறி இலங்கையில் இஸ்லாமிய தஃவாவின் யதார்த்த நிலை குறித்த சில பொது நோக்குகளை  முன்வைக்க முயல்கிறேன்.

சனி, 24 மார்ச், 2012

பெண்களின் உரிமைகள் ஓர் இஸ்லாமிய நோக்கு (அஷ்ஷெய்க் ஏ.ஸீ. அகார் முஹம்மத் (நளீமி)

உலகில் நீண்ட நெடும் காலமாக ஆணாதிக்கமே நிலவி வருகின்றது பெண்கள் மிக மோசமாக நசுக்கப்பட்டு வருகின்றனர் அவர்களில் அடிப்படை மனித உரிமைகள் கூட பல போது மறுக்கப்படுகின்றனளூ பெண்களை அடிமைப்படுத்தும் மனோபாவமே பெரும்பாலான ஆண்களிடம் மிகைத்து காணப்படுகின்றது. இவை எல்லாம் பெண்களின்

வெள்ளி, 23 மார்ச், 2012

முகலாயர் ஆட்சிக்காலம் (கி.பி.1526-1858, ஹி.932-1274)

புகழ் மிக்கதோர் ஆட்சி மரபினை இந்தியாயாவில் நிலை நாட்டிய பெருமை முகலாயரையே சாரும். இந்திய வரலாற்றில் முஸ்லிம்களது ஆட்சியின் பொற்காலமாக முகலாயரது ஆட்சிக்காலம் கருதப்படுகிறது. சுமார் 3 நூற்றாண்டுகளுக்கு மேலாக இந்தியாவை ஆட்சி செய்த இவர்கள் ஆப்கானிஸ்தானிலிருந்து இந்திய உபகண்டத்தில் பெரும் பகுதி முழுவதையும் தமதாட்சியின் கீழ் கொண்டு வந்தார்கள். இவர்கள் இந்தியாவின் அரசியல், பொருளாதார, சமய, சமூக மாற்றங்களுக்கு தமது பெரும் பங்களிப்பைச் செய்துள்ளனர்.

வெள்ளி, 2 மார்ச், 2012

முஸ்லிம் ஸ்பெய்ன் வரலாறு


முஸ்லிம்களது படையெடுப்பின்போது ஸ்பானியாவின் சமூக, அரசியல் நிலை

ஐபீரியத் தீவகற்பத்தை (ஸ்பெய்ன்) முஸ்லிம்கள் "அந்தலூஸ்' என அழைத்தனர். அத்தீவகற்பத்துக்கு அந்தலூஸ் எனப் பெயர் சூட்டப்படுவதற்கு இரண்டு காரணிகளை வரலாற்றாசிரியர்கள் முன்வைக்கின்றனர்.

1. நபி நூஹ் அவர்களின் வழித்தோன்றல்களில் ஒருவரான அந்தலூஸ் என்பவரின் வாரிசுகள் அங்கு வாழ்ந்தமை.
2. அங்கு வாழ்ந்த மிலேச்சக் குணங்களைக் கொண்ட மக்களைக் குறிக்க "வண்டல்ஸ்" (VANDALS) எனும் பதம் பயன்படுத்தப்பட்டது. இப்பதத்தில் இருந்தே அந்தலூஸ் என்ற பதம் பெற்றுக்கொள்ளப்பட்டது என்று இப்னு கல்தூன் போன்ற வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்.

சனி, 25 பிப்ரவரி, 2012

பிரபஞ்சம், வாழ்வு , மனிதன் பற்றிய இஸ்லாமிய உலக நோக்கு

இந்தப் பிரபஞ்சம், இதில் மனிதனின் நிலை, மனித வாழ்க்கையின் குறிக்கோள் எனும் இந்த மூன்று அம்சங்களையும் இணைத்துத்தான் உலக நோக்கு என்பர்.

நான் யார்?
நான் எங்கிருந்து வந்தேன்?
இந்தப் பிரபஞ்சத்தின் நோக்கம் என்ன? இதன் இறுதி முடிவு யாது?

வியாழன், 23 பிப்ரவரி, 2012

கிலாபத்தின் வீழ்ச்சி - ஒரு சுருக்க வரலாறு

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களினால் இஸ்லாமிய கிலாபத் எப்போது மதீனாவில் நிறுவப்பட்டதோ அன்றைய தினத்திலிருந்து உதுமானிய பேரரசு 1924ம் ஆண்டு முஸ்தபா கமால் அத்தாதுர்க்கினால் வீழ்த்தப்படும் வரை கிலாபத் இந்த உலகில் நிலை கொண்டிருந்தது. கிலாபத் வீழ்த்தப்பட்ட,

பிற சமூகங்களுடான உறவு பற்றிய ஷரீஆ கண்ணோட்டம்: (அஷ்ஷெய்க் ஏ.ஸீ. அகார் முஹம்மத் - நளீமி)


ஒரு சிறூபன்மை முஸ்லிம் சமூகம் எப்போதும் ஒரு பல்லின, பல்சமய சமூகத்திலேயே வாழ்ந்து வரும் என்ற வகையில் தம்மோடு வாழும் பிற சமூகத்தவரோடும், சமயத்தவரோடும் பேண வேண்டிய உறவுகள் பற்றிய ஷரீஆ கண்ணோட்டம் யாது என்பதை

திங்கள், 20 பிப்ரவரி, 2012

கீழைத்தேயவாதம் ஓர் அறிமுகம் (ORIENTALISM)

இஸ்லாம் எதிர்கொண்ட சவால்களில் "கீழைத்தேயவாதம்" (Orientalism) என்பது முக்கியமானது. இஸ்லாத்தின் சகல துறைகளையும் விமர்ச்சனத்துக்குள்ளாக்கி இஸ்லாத்தை நடைமுறைச் சாத்தியமற்றதாக மாற்றி முஸ்லிம்களை இஸ்லாத்தை விட்டும் தூரமாக்குவதே இதன் நோக்கமாக இருந்தது.என்றாலும் இவ்விமர்ச்சனங்களுக்கான தக்க பதில்கள் வழங்கப்பட்டு இஸ்லாம் பாதுகாக்கப்பட்டது.

புதன், 15 பிப்ரவரி, 2012

சீனாவில் இஸ்லாம்

“துர்கிஸ்தான்” என்ற பாரசீக சொல்லில் இரண்டு சொற்கள் சேர்ந்துள்ளன. ஒன்று “துர்க்” மற்றையது “இஸ்தான்” என்பதாகும். ஆக துர்க் இஸ்தான் என்பதன் பொருள் துர்க்கியரின் நிலம் என்பதுவே. நூஹ் நபியின் மகன் ஜாபேத் (Japheth) என்பவரது

ஞாயிறு, 29 ஜனவரி, 2012

ஷீஆக்கள்

அறிமுகம்:

இஸ்லாம் என்ற வாழ்க்கைத் திட்டத்தின் மூலம், ஜாஹிலிய்யா சமூகத்தை நபி (ஸல்) அவர்கள் ஒரே சமுதாயமாக மாற்றியமைத்தார்கள். அதற்கு முன்னர் அவர்கள் குலத்தின் பெயராலும் இனத்தின் பெயராலும் சிதரிக்கிடந்தனர். இவர்கள் போன்று சண்டையிட்டுப் பிரிந்த சமுதாயம் உலகில்

சனி, 28 ஜனவரி, 2012

இஸ்லாத்தில் பெண்களின் உரிமைகள்

ஐரோப்பாவானது 17 ம் நூற்றாண்டில் பெண்ணுக்கும் உயிர் உண்டா என விவாதம் நடத்திக் கொண்டிருந்தபோது,

ஞாயிறு, 22 ஜனவரி, 2012

தஃவாவும் சகோதர இனத்தவர்களும் (அஷ்ஷெய்க் அகார் முஹம்மத்)

இலங்கையில் இஸ்லாமிய தஃவாவுக்கு ஒரு நீண்ட வரலாறு உண்டு. இந்நாட்டுக்கு முஸ்லிம்கள் காலடிவைத்த நாள் முதல் இஸ்லாமிய தஃவாவும் காலத்துக்குக் காலம் பல்வேறு அமைப்புக்களில் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளதைக் காணமுடிகின்றது. ஒரு காலத்தில் இங்கு உலமாக்கள், ஷைகுகள் என்றிருந்த தனி மனிதர்கள் இஸ்லாமியப் பணியில் ஈடுபட்டனர். பின்னர் தரீக்காக்கள் எனப்படும் ஆன்மீக அமைப்புக்கள் மூலமாகவும் நல்ல பல பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

வியாழன், 15 டிசம்பர், 2011

அரபுத் தமிழின் பண்பாட்டுப் பாரம்பரியம் – கலாநிதி சுக்ரி


(இஸ்லாம் / இஸ்லாமிய நாகரிகம் - உயர் தரம்)


 அரபுத் தமிழின் பண்பாட்டுப் பாரம்பரியம் இஸ்லாத்தின் தோற்றத்திற்குமுன்னர் அரபுத் தீபகற்பத்தில் வழக்கிலிருந்த சிறந்த வளர்ச்சியைக் கண்டு இலக்கிய வளம்மிக்கஒரு மொழியாகக் காணப்பட்ட அரபு மொழியானது இஸ்லாத்தின் தோற்றத்தின் பின்னர்
குர்ஆனின் மொழியாகப் பரிணமித்துஇஸ்லாமிய பண்பாட்டின் வளர்ச்சியோடு இஸ்லாமியக் கலாஞானங்களின் மொழியாக மாறியது.
இந்தவகையில் இஸ்லாத்தின் பரவலோடுஅதன் ஆட்சிக்குட்பட்ட பிரதேசங்களிலெல்லாம் பரவிய அரபு மொழியானது அப்பகுதிகளில் ஏற்கனவேவழக்கிலிருந்த மொழிகளில் அதன் செல்வாக்கைப் பதித்தது.

முஸ்லிம்களால் பாரசீகம் கைப்பற்றப்பட்டபோது

திங்கள், 8 ஆகஸ்ட், 2011

நபி முஹம்மத் (ஸல்) அவர்கள்


பிறப்பு முதல் நபித்துவம் வரை

நபி முஹம்மத் (ஸல்) அவர்கள், நபி இப்றாஹீம் (அலை) அவர்களின் பரம்பரையில் பிறந்தவர்களாவர். இது பற்றி நபியவர்களே இவ்வாறு கூறியுள்ளார்கள்.

ஞாயிறு, 7 ஆகஸ்ட், 2011

நோன்பு


நோன்பு (Sawm, அரபு மொழி: صوم‎) என்பது இஸ்லாமிய நாட்காட்டியின் ஒன்பதாவது மாதமான ரமலான் மாதம் முழுவதும் இஸ்லாமியர்களால் நோற்கப்படும் நோன்பு ஆகும். இந்நாட்களில் நோன்பு அநுசரிப்பவர்கள் அதிகாலை முதல் மாலை வரையில், உண்ணாமல், நீரருந்தாமல், புகைக்காமைல், மற்றும் வேறு தீய பழக்கங்களில் ஈடுபடாமல் இருப்பர்[1].இது இஸ்லாத்தின் ஐந்து அடிப்படை கடமைகளில் மூன்றாவது கடமை ஆகும்.