சனி, 9 ஜூன், 2012

கஹட்டோவிட்ட பெண்களுக்குப் பாராட்டு!

எமது ஊரில் இயங்கி வரும் 'தாய்மார் மற்றும் சிறுவர் நல கிளினிக்'இன் ஏற்பாட்டில், கர்ப்பப் பை புற்று நோய் சம்பந்தமாக விளக்கும் நோக்கில் இடம்பெற்ற கூட்டத்தில், கூடுதலான பெண்கள் கலந்து கொண்டதையிட்டு வைத்தியரின் பாராட்டு கிடைத்துள்ளது.

இந்தக் கூட்டம், இன்று காலை அல் பத்ரியா ம. வி. பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.

வெள்ளி, 8 ஜூன், 2012

Jaffna Muslim: ஸ்பெயினைப் போல் முஸ்லிம்களைப் பூண்டோடு ஒழிக்கத் தி...

Jaffna Muslim: ஸ்பெயினைப் போல் முஸ்லிம்களைப் பூண்டோடு ஒழிக்கத் தி...: (உயர் ஜாதிக்காரர்களில் நாட்டுக்கு எதுவுமே செய்யாதவர்களின் எத்தனையோ வீதிகள்! சாலைக்கள்!! நகரங்கள்!!!) வரலாற்றைத் திருத்தி - திரித்து ...

வியாழன், 7 ஜூன், 2012

‘மகாவம்சம்’ உருவான வரலாறு !

எமது பாடசாலை வரலாற்றுப் புத்தகங்களில் இலங்கை வரலாற்றுக்கு மூல நூலாக இருப்பது தீபவம்சம் , மகாவம்சம் மற்றும் சூழவம்சம் போன்ற பாலி பௌத்த வரலாற்று நூல்களாகும்.
எமது உண்மை வரலாறுகளை மறந்து, வேத நூற்கள் போன்று இந்த நூற்களிலுள்ள வராலாற்றுக் கருத்துக்களை மக்களுக்குப் போதிக்கிறோம்.
 அவைகளிலுள்ள வரலாற்றுத் திரிபுகள் என்ன என்பதை நாம் ஆராய்ந்து மாணவர்களுக்கு தெளிவுடன் கற்பிப்போமென்றால், ஒரு அறிவுத் தெளிவுள்ள ஒரு சமூகத்தையே நாம் உருவாக்கலாம்.
 ஆனாலும் அதற்கு மகாவம்ச நூல் பற்றிய ஒரு வரலாற்று அறிவு மிக முக்கியம். 
ஆய்வாளர் குணராசாவின் மகாவம்சம் பற்றிய ஆய்வை மையமாக வைத்து எழுதப்பட்டுள்ள இந்தக் கட்டுரை ஒரு தெளிவைத்தரும் என்பது எமது எதிர்பார்ப்பு.

வெள்ளி, 1 ஜூன், 2012

சவுதி அரேபியாவின் மற்றொரு சாதனை

உலகின் மிகப் பெரிய பெண...்கள் பல்கலைக்கழகமான பிரினஸ் நூரா பல்கலைக் கழகம் சவுதி அரேபியா.....


பொதுவாக இப்பொழுது உலகில் ஒவ்வொரு நாடுகளும் தங்கள் நாட்டின் கல்வி வளர்ச்சியில் மிகவும் முனைப்புடன் திகழ்ந்து வருகிறது. காரணம் சிறந்தக் கல்விதான் ஒரு சிறந்த சமுதாயத்தை உருவாக்க முடியும் என்பதை நாம் அனைவரும் நன்றாக அறிவோம். அந்த வகையில் உலகமே திரும்பிப் பார்க்கும் ஒரு பிரமிப்பை கல்வி சார்ந்தத் துறையில் ஏற்படுத்தி இருக்கிறது சவூதி அரேபியா ரியாத் தலை நகரில் என்றால் நம்புவீர்களா !?