செவ்வாய், 31 ஜூலை, 2012

கவிக்கோவின் கவிதை


kavikko-abdul-rahman
தொடக்கம் உன் பெயரால்
தொடர்வதெல்லாம் உன் அருளால்
அடக்கம் நீ என் நெஞ்சில்
அடங்காத பேரொளியே
முதல்வா உன்னை என்
முதலாகக் கொண்டதால்
என் வாழ்க்கை வணிகத்தில்
இழப்பே இல்லை

திங்கள், 30 ஜூலை, 2012

கெஸ்கின் இலவசசக் கருத்தரங்கு

கத்ர் நாட்டில் தொழில் புரியும் எமதூர் மக்களின் கல்வி நிறுவனமான கெஸ்க், தனது கல்வி மேம்பாட்டு நடவடிக்கைகளின் ஒரு கட்டமாக, கஹடோவிட முஸ்லிம் பாலிகா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் சாதாரண தர மாணவிகளுக்கு இலவசக் கருத்தரங்குகளை ஆரம்பித்துள்ளது.

இதன் முதற்கட்டக் கருத்தரங்கு கடந்த 29. 07. 2012 ஞாயிறு காலை 8.45 மணியளவில் பாலிகாவில் ஆரம்பமாகியது. குறித்த கருத்தரங்கில் இடம் பெற்ற விஞ்ஞஆன பாடத்துக்கான விரிவுரையை, திஹாரிய அல்-அஸ்ஹர் ம. கல்லூரியின் பிரபல விஞ். ஆசிரியர் ஜனாப் ஹாஜா மொஹிடீன்  நிகழ்த்திச் சென்றார்.

இன்ஷா அல்லாஹ் அடுத்தடுத்த வாரங்களில் ஏனைய பாடங்களுக்கான கருத்தரங்குகளும் நடைபெற ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன. இக்கருத்தரங்குகளில் ஏனைய சகோதர பாடசாலைகளைச் சேர்ந்த மாணவிகள் மாத்திரம் கலந்துகொள்ள முடியும்.

அடுத்த ஞாயிற்றுக் கிழமை கணிதக் கருத்தரங்கு நடைபெறும். ஜனாப் ரிஸ்வான் ஆசிரியர் விரிவுரை நிகழ்த்துவார்.

ஏற்பாட்டுக் குழு

பத்ரியா வசந்தம் சூடுபிடிக்கிறது!


முன்பு நாம் அறியத்தந்ததுபோன்று பத்ரியா வசந்தம் சூடுபிடித்துள்ளது. பத்ரியாவின் தலை விதியை மாற்றிப் பொற்காலம் ஒன்றை நோக்கி நகர்த்துவோம் என்பதே மேற்படி வசந்தத்தின் தொனிப் பொருளாகும்.

ஒரு காலத்தில் கம்பஹா பிராந்தியத்திலேயே மிகச் சிறந்த பெறுபேறுகளைப்  பெற்றுக் கொடுத்தது மாத்திரமன்றி ஏராளமான பட்டதாரிகளையும் உருவாக்கிய பெருமை எமது அல் பத்ரியா மகா வித்தியாலயத்தயே சாரும். இப்பாடசாலையின் பாசறையில் வளர்ந்தவர்கள்தான் இன்று பத்ரியாவில் கற்பிக்கின்ற ஆசிரியர்களில் பெரும்பாலானவர்கள்.

இப்படிப் பெருமைப்பட்டுக்கொள்ளக் காரணம் கடந்த இரு தசாப்தங்களில் மேற்கொள்ளப்பட்ட காத்திரமான கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகளும் அவற்றை முறையாகவும் வெற்றிகரமாகவும் நெறிப்படுத்திய ஆளுமை மிக்க நிர்வாகிகளுமே என்பதில் எவருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

இவ்வாறானதொரு பொற்காலம் மீண்டுமொருமுறை தோன்றுமா என்பது முயல் கொம்பாகவே உள்ளது.

இன்று பாடசாலை நிலவரம் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது. வேலிகளே பயிர்களை மேய்கின்றன.  ஆசிரியம் என்ற அந்த மகத்தான பொறுப்பு தட்டிக்கழிக்கப்படுகிறது. உயர் வகுப்புக்கள் பெயரளவிலேயே இயங்குகின்றன. உயர் வகுப்பில்  கற்பிக்க ஆசிரியர்கள் இருந்தும் முறையாகப் பாடங்கள் நடைபெறுவதில்லையென மாணவர்களே புகார் செய்கின்றனர். இடை நிலை மற்றும் கீழ் வகுப்புக்களின் நிலையோ சொல்லும் தரத்தில் இல்லயாம்.

மறு பக்கம் சிம்மாசன இருக்கையைத் தொடர்ந்தும் தக்க வைத்துக்கொள்வதில் ஆளுமை மிக்க அதிபர் பகீரதப் பிரயத்தனம் செய்து வருகிறார். இன்னும் அந்த இரு தலைக் கொல்லி எறும்பின் நிலை தொடர்கிறது.

இந்த அவலத்தில் இருந்து பத்ரியாவைப் பாதுகாப்பதற்கான காலம் கனிந்துவிட்டதாகவே பத்ரியா வசந்தக்காரர்கள் கருதுகின்றனர். மட்டுமன்றி நோன்பு முடிவதற்குள் பாடசாலையில் பாரியதொரு மாற்றம் வரும் என்றும் அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.

சற்றுமுன் எமக்குக் கிடைத்த தகவலின்படி புதிய அதிபர் ஒருவரையும் அழைத்து வருவதற்கான ஏற்படுகள் யாவும் நிறைவுற்றுள்ளன. மாண்டுபோன வர்த்தகப் பிரிவை உயிர்ப்பிப்பதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன.

பத்ரியாவுக்கும் தேவை ஒரு முர்ஸி

புதிய அதிபரை நாமும் வாழ்த்துகிறோம்.

நன்றி: www. kashtowitti. lk

சனி, 28 ஜூலை, 2012

உலகமெங்கும் அதிகரித்து வரும் உடற்பருமன், உயர் இரத்த அழுத்தப் பிரச்சனை! – WHO


உலகெங்கும் பக்கவாதம், இதய நோய் மற்றும் புற்று நோய் அபாயங்களை கூடுதலான மக்கள் எதிர்கொள்கிறார்கள் என்று சர்வதேச சுகாதார ஸ்தாபனம்(WHO) தெரிவித்துள்ளது.

தனது 194 உறுப்பு நாடுகளிலிருந்து சுகாதாரம் தொடர்பாக கிடைக்கப்பெற்ற புள்ளி விபரங்களை வெளியிட்டுள்ள அந்த அமைப்பு, உயர் ரத்த அழுத்தம் மற்றும் உடல் பருமன் போன்ற பிரச்சனைகள் உலகெங்கும் அதிகரித்து வருவதாக கூறியுள்ளது.

கூடா நட்பு கேடாய் முடியும்



imagesCA1IB1FJஇஸ்ரேல் – ஒரு வரையறுக்கப்பட்ட எல்லைக்கோடு இல்லாத நாடு, ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானங்களை பல முறை மீறிய நாடு, அப்பாவி குழந்தைகளை குறிவைத்து கொலை செய்வதில் வல்லவர்கள், பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவி செய்ய வரும் நிவாரண குழுக்களை சர்வதேச எல்லையில் வைத்து தாக்குபவர்கள் என பல விரும்பத்தகாத சிறப்புகளை கொண்ட நாடு. இந்த நாடு உருவாகிய விதமும் அதனை பாதுகாக்க இவர்கள் எடுக்கும் நடவடிக்கைகளும் சர்வதேச நாடுகளின் கடும் கண்டனத்தை சந்தித்து வருகின்றன.