புதன், 8 ஆகஸ்ட், 2012
Jaffna Muslim: ரவூப் ஹக்கீம் மீது ஜாதிக்க ஹெல உறுமய வெறியுடன் பாய...
Jaffna Muslim: ரவூப் ஹக்கீம் மீது ஜாதிக்க ஹெல உறுமய வெறியுடன் பாய...: TM காவியுடை பயங்கரவாதத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தோற்கடிக்க வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் கூறியதை...
ஏற்றமிகு வாழ்விற்கு இறைமறை
(மலேசியாவில் கடந்த ஜூலை 7- 8 ஆகிய தினங்களில் நடைபெற்ற தேசிய திருக்குர்ஆன் மாநாட்டில் அஷ்- ஷெய்க் ஏ.ஸீ. அகார் முஹம்மத் அவர்கள் ஆற்றிய கருப்பொருளுரையின் சுருக்கம்)
மனிதன் தனது வாழ்வில் இருவகைப் பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றான். உடனடிப் பிரச்சினைகள் (Immediate Problems) ஒரு வகை; நித்திய பிரச்சினைகள் (Ultimate Problems) இரண்டாம் வகை. மனித வாழ்வின் உடனடிப் பிரச்சினைகளுக்கு உதாரணங்களாக உணவு, உடை, உறையுள், சுகாதாரம் முதலான தேவைகளைக் குறிப்பிடலாம். இந்த வகைப் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்வதற்கு இறைவன் மனிதனுக்கு பகுத்தறிவை (Intellect) வழங்கியுள்ளான். மனிதன் பகுத்தறிவை வைத்து இயற்கையின் சட்டங்களை (Laws Of Nature) கண்டறிகின்றான். இயற்கையின் சட்டங்கள் பற்றி மனிதன் பெற்றுக் கொள்ளும் அறிவே அறிவியல் (Science) என அழைக்கப்படுகின்றது. இவ்வறிவை அவன் பிரயோகிக்கின்ற போது உருவாவதே தொழில்நுட்பம் (Technology) ஆகும். இத்தொழில்நுட்பம் மனிதன் தனது உலக வாழ்வில் எதிர் கொள்ளும் உடனடிப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணத் துணை புரிகின்றது.
ஞாயிறு, 5 ஆகஸ்ட், 2012
வாழ்த்துக்கள்! CONGRATS!
நாளை (06. 08. 2012) GCE A/L பரீட்சை ஆரம்பமாகின்றது. முதற்கட்டமாக விஞ். - BIO SCIENCE பிரிவுக்கான பரீட்சைகள் நாளை முதல் எதிர்வரும் 18ம் திகதி வரை நடைபெறவுள்ளது. கலைப் பிரிவுக்கான பரீட்சைகள் பெருநாளின் பின்னரே நடைபெறும்.
இம்முறை Bio பிரிவில் எமதூரைச் சேர்ந்த மாணவியர் பதின்மர் அளவில் ப்ரீட்சைக்குத் தோற்றுகின்றனர். ஏனையோர் கலை வர்த்தகப் பிரிவுகளில் தோற்றுகின்றனர்.
இவர்கள் அத்தனை பேரும் தமது பெறுபேறுகளில் அனைத்துப் பாடங்களிலும் விசேட திறமைச் சித்திகளைப் பெற வேண்டுமென எமது பளிச் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறது.
பாலிகா ???
கெஸ்கின் இரண்டாவது கருத்தரங்கு, முன்னர் அறிவிக்கப்பட்டது போன்று இன்று பாலிகா வித்தியாலயத்தில் நடைபெற்றது. இன்று நடைபெற இருந்த கணித பாடத்துக்குப் பதிலாக தமிழ் பாடம் இடம் பெற்றது.
தமிழ் துறையில் முது கலைமானிப் பட்டம் பெற்ற மூதூரைச் சேர்ந்த ஜனாப் பௌஸி ஆசிரியர் இன்றைய கருத்தரங்கைச் சிறப்பாக நடாத்தி முடித்தார். இதில் கவலைக்குரிய விடயம் என்ன வென்றால், தகுதி வாய்ந்த ஓர் ஆசிரியரின் விரிவுரையை பாலிகா மாணவிகள் புறக்கணித்து வருகை தராமல் விட்டதுதான். இருப்பினும் பத்தாம் தரத்தைச் சேர்ந்த மாணவிகள் உச்சப் பயனைப் பெற்றுக் கொண்டனர் என்ற விடயம் ஆறுதல் அளிக்கிறது.
வெளி நாட்டு உதவிகளைப் பெற்று இலவசமாக நடாத்தப்படும் இவ்வாறான கருத்தரங்குகளைப் புறக்கணிக்கும் பாலிகாவைத் தவிர்த்து, வேறு பாடசாலைகளுக்கு அத்தகைய உதவிகளைச் செய்தால் என்ன என்பதே கெஸ்கிடம் நாம் கேட்கும் கேள்வியாகும்.
கெஸ்க் நிறுவனத்தினரே இது உங்கள் கவனத்திற்கு!

சனி, 4 ஆகஸ்ட், 2012
வருந்துகிறோம்
கடந்த ஜூன் மாதத்தின் ஆரம்பத்தில் எமது பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கான தொழில் வழிகாட்டல் கருத்தரங்கொன்றை கத்ர் நாட்டிலுள்ள கெஸ்க் அமையம் அல்-பத்ரியா மகா வித்தியாலயத்தில் வெற்றிகரமாக நடத்தி முடித்தது. இருப்பினும் குறித்த விடயம் தொடர்பான தகவல்கள் எமது தளத்துக்கு உரிய சந்தர்ப்பத்தில் கிடைக்காததால் அது தொடர்பான செய்தியை எம்மால் வெளியிட முடியவில்லை என்பதை ஆழ்ந்த வருத்தங்களுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
இது தொடர்பில் எமது வாசகப் பெருமக்கள் பலரும் எமது இத்தவறைச் சுட்டிக்காட்டி கருத்துத் தெரிவித்திருந்ததையும் நன்றியோடு இவண் நினைவுகூர்கின்றோம்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)