A/L இஸ்லாம் குறிப்புகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
A/L இஸ்லாம் குறிப்புகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 23 டிசம்பர், 2012

கூட்டுத் தொழுகையின் அவசியமும், சிறப்பும்

‘தொழுகையைக் கடைப்பிடியுங்கள், ஜகாத்தையும் (ஒழுங்காகக்) கொடுத்து வாருங்கள், ருகூஃ செய்வோரோடு சேர்ந்து நீங்களும் ருகூஃ செய்யுங்கள்” (2: 43).

‘ருகூஃ செய்வோரோடு சேர்ந்து நீங்களும் ருகூஃ செய்யுங்கள்” என்ற வசனத்தின் மூலம், கூட்டுத் தொழுகை கட்டாயமானது என்ற ஆதாரத்தை அதிகமான அறிஞர்கள் எடுக்கின்றனர். (தப்ஃஸீர் இப்னு கஸீர்).

சனி, 18 ஆகஸ்ட், 2012

வரலாற்றுத் துறை நிபுணர் அல்-இத்ரீஸி


அல்-இத்ரீஸியைப் பற்றியும் அன்னாரது மேதமையைப் பற்றியும் தெரிந்தால் பிரமித்துப் போவீர்கள்!!!. விஞ்ஞானமும் மெய்ஞானமும் ஒருசேர ஒளிவீசிக் கொண்டிருந்த அல்-அந்தலுஸைப் (இன்றைய ஸ்பெயின்) பகுதியாகக் கொண்ட அல்மொராவித் தேசத்தில் கி.பி 1110இல் பிறந்த அல்-இத்ரீஸி,  அன்றைய ‘இருண்ட கண்டமான’ ஐரோப்பாவிற்குக் கல்வி கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்த, கொர்தோவாவில் கல்வி கற்று, அன்றைய நாளின் மிகச் சிறந்த புவியியலாளராகத் திகழ்ந்தார்.

வியாழன், 16 ஆகஸ்ட், 2012

க. பொ.த. (உ/த) இஸ்லாமிய நாகரிகம் முதலாம் பகுதி மாதிரி வினாக்களும் அவற்றுக்கான விடைகளும்


01. உஸூலுல் பிக்ஹ் துறையில் முதலாவது நூல் எது?
* அர்ரிஸாலா, கிதாபுல் உம்மு, கிதாபுல் கானூன், கிதாபுல் உஸூலிய்யா, கிதாபு அஷ்ஷிபா
02. முஜத்தித் காமில் என அழைக்கப்படுபவர் யார்?
* உமர் இப்னு அப்துல் அஸீஸ் , இமாம் கஸ்ஸாலி, இப்னு தைமியா, ஹஸனுல் பஸரீ,  இமாம் பூஸரீ
03.  துணை மூலாதாரமான கியாஸ் பற்றிய சரியான கூற்று
* நபியவர்களின் காலத்தில் சட்ட மூலாதாரமாகக் காணப்பட்டது
* எல்லாக் காலத்துக்கும் கியாஸ் பொறுத்த்மற்றது
* கியாஸ் நெகிழ்ச்சி மிக்க சட்ட மூலாதாரமாய் அமைந்துள்ளது
* இமாம்களின் காலத்தோடு கியாஸ் சட்டங்கள் நிறைவு பெற்றுள்ளன.
* கியாஸை ஏற்பது விரும்பத்தக்கதாகும்
04. கோட்டை இராஜ்ஜியத்தில் இருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்படுவதற்குக் காரணமாக அமைந்த ஐரோப்பியரையும், வெளியேற்றிய மன்னனையும் சரியாகக் காட்டும் தொகுதி
* ஒல்லாந்தர், மாயதுன்னை
* போர்த்துக்கேயர், மத்துமபண்டார
* போர்த்துக்கேயர், புவனேகபாகு
* ஒல்லாந்தர், புவனேகபாகு
* போர்த்துக்கேயர், மாயாதுன்னை
05. இலங்கையில் காதிரிய்யாத் தரீக்காவை அறிமுகம் செய்த அறிஞர்
*டீ.பீ. ஜாயா   *மாப்பிள்ளை லெப்பை ஆலிம்  * சித்தி லெப்பை  *ஏ.எம்.ஏ. அஸீஸ்   * எம்.ஸீ. அப்துர்ரஹ்மான்

புதன், 8 ஆகஸ்ட், 2012

ஏற்றமிகு வாழ்விற்கு இறைமறை


(மலேசியாவில் கடந்த ஜூலை 7- 8 ஆகிய தினங்களில் நடைபெற்ற தேசிய திருக்குர்ஆன் மாநாட்டில் அஷ்- ஷெய்க் ஏ.ஸீ. அகார் முஹம்மத் அவர்கள் ஆற்றிய கருப்பொருளுரையின் சுருக்கம்)

மனிதன் தனது வாழ்வில் இருவகைப் பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றான். உடனடிப் பிரச்சினைகள் (Immediate Problems)  ஒரு வகை; நித்திய பிரச்சினைகள்  (Ultimate Problems) இரண்டாம் வகை. மனித வாழ்வின் உடனடிப் பிரச்சினைகளுக்கு உதாரணங்களாக உணவு, உடை, உறையுள், சுகாதாரம் முதலான தேவைகளைக் குறிப்பிடலாம். இந்த வகைப் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்வதற்கு இறைவன் மனிதனுக்கு பகுத்தறிவை (Intellect) வழங்கியுள்ளான். மனிதன் பகுத்தறிவை வைத்து இயற்கையின் சட்டங்களை (Laws Of Nature) கண்டறிகின்றான். இயற்கையின் சட்டங்கள் பற்றி மனிதன் பெற்றுக் கொள்ளும் அறிவே அறிவியல் (Science) என அழைக்கப்படுகின்றது. இவ்வறிவை அவன் பிரயோகிக்கின்ற போது உருவாவதே தொழில்நுட்பம் (Technology) ஆகும். இத்தொழில்நுட்பம் மனிதன் தனது உலக வாழ்வில் எதிர் கொள்ளும் உடனடிப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணத் துணை புரிகின்றது.

ஞாயிறு, 8 ஜூலை, 2012

ஆரம்ப கால முஸ்லிம்களின் எழுச்சியும் எமது சமகால நிலையும். அலி இஸ்ஸத் பிகோபிச் (ரஹ்)

ஞாயிறு, 10 ஜூன், 2012


f.ngh.j cau;juk; ,];yhkpa ehfupfk; (47) 2012
மாதிரி tpdhg;gj;jpuk; 01   இரண்டு மணித்தியாலங்கள்
- vy;yh tpdhf;fSf;Fk; tpil vOJf.   Prep. By: MSM Boosary Hons (Cey)    0725461154 / 0333332604 / 0718203627

1.\PMf; Nfhl;ghLfspy; xd;W
1) K`k;kJ (]y;) mtu;fspd; gpd;Gk; egpkhu;fs; Njhd;Wjy;.
2) ,khk;fs; ghtq;fspypUe;Jk; ghJfhf;fg;gl;ltu;fs;.                   3) my; Fu;Md; gilf;fg;gl;lJ.
4) nfhLikfSf;F vjpuhf [p`hijg; gpulfldg;gLj;Jtjw;F mDkjpapy;iy.
5) rl;l Mf;fj;jpy; Rd;dh Kf;fpak; ngWtjpy;iy.

புதன், 9 மே, 2012

ஐரோப்பிய விஞ்ஞான மறுமலர்ச்சியில், முஸ்லிம் விஞ்ஞானிகளின் பங்களிப்பு.

நவீன உலகில் மருத்துவம்,விஞ்ஞானம்,கணிதம,வானவியல் போன்ற பல்வேறுபட்ட துறைகளில் உயர்ந்ததரத்தில் ஐரோப்பா காணப்படுகின்றது. எனினும் ஐரோப்பாவுக்கு நாகரீகத்தையும்,மேற்கூறப்பட்ட பல்வேறு கலைகளையும் கற்றுக்கொடுத்த முன்னோடிகள் முஸ்லிம்களே என்பதை எத்தனை பேர் அறிவர்?

செவ்வாய், 10 ஏப்ரல், 2012

இஸ்லாமும் பாடல்களும் (மௌலவி K.L.M.இப்ராஹீம் மதனீ)

மனிதன் உலகத்தில் சுதந்திரமாக வாழ்வதற்கு,  சில நிபந்தனைகளுடன் இஸ்லாம் முழு அனுமதியையும் வழங்கி இருக்கின்றது. அதில் ஒன்றுதான் பாடல்களை கேட்டு ரசிப்பது. இஸ்லாத்தில்   பாடல்கள் கேட்பதற்கு எந்த தடையுமில்லை, ஆனால் பாடல்கள் மூன்று நிபந்தனைகளுக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும்.

ஞாயிறு, 29 ஜனவரி, 2012

முஸ்லிமல்லாதவருடன் எவ்வாறு பழகுவது?

முஸ்லிமல்லாத மக்களுடன் எவ்வாறு நடந்து கொள்வது என்பதில் அதிகமான முஸ்லிம்களுக்கு தெளிவான பார்வை இல்லை. முஸ்லிம் அல்லாத மக்கள் அனைவரையும் அறவே வெறுத்து அவர்களை அடியோடு ஒரு சாரார் புறக்கணித்து ஒதுக்கி

சனி, 28 ஜனவரி, 2012

முஸ்லிம்களும் கிரேக்கப் பண்பாடும்

ரோம அரசன் அலெக்சாண்டர் ஆசிய, ஆபிரிக்க நாடுகளைக் கைப்பற்றியமை கிரேக்க கலாசாரம் கீழைத்தேய நாடுகளில் பரவ வழிவகுத்தது. மூன்று கண்டங்களையும் உள்ளடக்கி வியாபித்துப் பரவிய அலெக்சாண்டரின் சாம்ராஜ்யமானது ஐரோப்பாவில் கிறீஸ், மஸிடோனியா ஆகிய நாடுகளையும், ஆபிரிக்காவில் எகிப்து, லிபியா ஆகிய பிரதேசங்களையும் ஆசியாவில், சிரியா, பலஸ்தீனம், ஈராக், பாரசீகம், துருக்கிஸ் தான், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், இந்தியாவின் சில பிரதேசங்களையும் உள்ளடக்கியிருந்தது.

இமாம் புகாரீ (ரஹ்) அவர்களும் ஹதீஸ் துறைக்கான அவர்களது பங்களிப்புக்களும்

இவரது முழுப்பெயர் அபூ அப்துல்லாஹ் முஹம்மத் பின் இஸ்மாஈல் அல்-புகாரீ என்பதாகும். ரஷ்யாவிலுள்ள புகாரா எனும் நகரத்தில் ஹிஜ்ரி 184ல் பிறந்த இவர், இளம் வயதிலேயே தந்தையை இழந்து அனாதையானார். சிறு பராயத்திலேயே அல்குர் ஆனையும் ஹதீஸையும் கற்கத் தொடங்கினார். இதன் பயனாக பருவ வயதை அடையுமுன்பே அல்குர் ஆனையும் இலட்சக்கணக்கான ஹதீஸ்களையும் மனனம் செய்துகொண்டார்.

வெள்ளி, 16 டிசம்பர், 2011

ஸீராவைக் (முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்வு) கற்பதன் அவசியம் - (அஷ்ஷெய்க் அகார் முஹம்மத்)


முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்வு பன்முகங்களைக் கொண்ட ஒரு மாணிக்க கல்லுக்கு ஒப்பானதாகும். ஆதனை எக்கோணத்திலிருந்து நோக்கினாலும் அது ஒளிவிட்டுப் பிரகாசிப்பதைக் காணலாம்.

 நபி முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சரிதையைப் படிக்கும் ஒருவர்

செவ்வாய், 2 ஆகஸ்ட், 2011

இந்து - இஸ்லாமிய கலாச்சாரத் தொடர்புகள்



வரலாற்றுக் கண்ணோட்டத்தில்பல்வேறு நாகரிகங்கள், பண்பாடுகளின் வளர்ச்சியைநோக்கும் எவரும் ஒவ்வொரு பண்பாடும், நாகரிகமும் ஏனைய பண்பாடுகளால், நாகரிகங்களால் பாதிக்கப்பட்டுவந்துள்ளனது என்ற உண்மையை ஏற்றுக்கொள்வர். பல்வேறு நாகரிகங்களும் பண்பாடுகளும் மோதிமுட்டிக் கலக்கும் நிலையிற்றான்

செவ்வாய், 26 ஜூலை, 2011

இஸ்லாம் வேண்டி நிற்கும் குடும்ப வாழ்வு-கடமைகள், உரிமைகள


நேர்காணல்: ஜெம்ஸித்

அல்ஹுதா: சமூகவியல் கண்ணோட்டத்தில் குடும்பம் என்ற நிறுவனத்தின் முக்கியத்துவம் குறித்து சிறிது விளக்க முடியுமா?

வெள்ளி, 22 ஜூலை, 2011

சிலுவை யுத்தங்கள்


நபி (ஸல்) அவர்கள், இஸ்லாத்தை முழுமையாகப் பின்பற்றுமாறு முஸ்லிம்களை வலியுறுத்திய அதேவேளை, ஏனைய சமயங்களையும் அச்சமயங்களைப் பின்பற்றுகின்றவர்களையும் மதிக்க வேண்டும் என்றும் வற்புறுத்தியுள்ளார்கள். எனவே, இஸ்லாம் ஏனைய சமயங்களை மதிக்கும் உயர்ந்த பண்பைக் கொண்டது. ஆனால், இஸ்லாத்தைப் பல வகையிலும் விமர்சிக்கின்ற கிறிஸ்தவர்களும் யூதர்களும் இஸ்லாத்தின் இவ்வுயர் பண்புக்கு மாற்றமான பண்புகளையே வரலாறு நெடுகிலும் வெளிப்படுத்தி வந்துள்ளனர். இவ்வகையிலான ஓர் அம்சமாக அமைவதே கிறிஸ்தவர்கள் முஸ்லிம்கள் மதத்தின பெயரால் மேற்கொண்ட கொடூரமான சிலுவை யுத்தங்களாகும்.

மங்கோலியர் படையெடுப்பு


குலபாஉர் ராஷிதூன்களுக்குப் பிறகு, இஸ்லாமிய ஆட்சியின் போக்கு முற்றிலும் மாற்றம் கண்டது. இஸ்லாமிய ஆட்சி நடைமுறைகளில் உரோம, பாரசீக ஆடம்பர மரபுகள் பெருமளவு குடிபுகுந்தன. உமையாக்களும் அதன் பின் அப்பாஸியரும் அதன்பின் உஸ்மானியரும் என மாறி மாறி முஸ்லிம்களே இஸ்லாமிய சாம்ராஜ்யத்தை ஆட்சி செய்த போதிலும்,

ஞாயிறு, 3 ஜூலை, 2011

பைத்துல் முகத்தஸ்


நீண்ட பெரும் வரலாற்றுப் பாரம்பரியத்தைக் கொண்ட பலஸ்தீனிலுள்ள ஜெரூஸலம் நகரில் அமைந்துள்ள இறையருள் பெற்ற இறை இல்லமே பைத்துல் முகத்திஸ் மஸ்ஜிதாகும். இதனை பைதுல் மக்திஸ் எனவும் குறிப்பிடுவது வழக்கம். இதன் கருத்து தூய இல்லம், புனித இல்லம் என்பதாகும். இங்கு நபி ஸுலைமான் (அலை), தான் வாழ்ந்த காலத்தில் ஓர் இறையில்லத்தை நிறுவினார்கள். அந்த இறையில்லத்தை அன்றைய  ஹீப்ரு மொழியில் "பெத்ஹம்மிக்தாஷ்" எனப் பெயரிட்டு அழைத்தனர். அப்பெயரே அரபு மொழியில் பைத்துல் முகத்தஸ் என ஆயிற்று. காலப்போக்கில் இந்தப் புனித இல்லம் அமைந்திருந்த முழுப் பிரதேசமும் இப்பெயராலேயே அழைக்கப்படலாயிற்று. பொதுவாக இந்த மஸ்ஜிதை அல் அக்ஸா அல்லது மஸ்ஜிதுல் அக்ஸா எனவும் அழைப்பர்.

புதன், 19 ஜனவரி, 2011

அரபு நாடும் ஜாஹிலிய்யாக்காலமும்

# அரேபியாவின் புவியியல் அமைவு

அரபு நாடு ஆசியாக் கண்டத்தின் தென்மேற்கே அமைந்துள்ள ஒரு தீபகற்பமாகும். இது அரபு மொழியில் "ஜஸீரதுல் அரப்"  - அரேபியத் தீவகற்பம் (Arabian Peninsula) என அழைக்கப்படுகிறது. அப்போதைய அதன் எல்லைகள் பின்வரும் வகையில் அமைந்திருந்தன.

சனி, 1 ஜனவரி, 2011

உமையாக்கள் (ஹிஜ்ரி 41 - 132)

                                                                                                                   ஆரம்பத்தில் கஃபாவைப் பரிபாலித்து வந்த நபி இஸ்மாஈல் (அலை) அவர்களின்  பரம்பரையில் தோன்றிய குசை இப்னு கிலாப் என்பவர் மக்காவில் முதன் முதலில் நகர அரசொன்றை