நாம் அனைவருமே நம்மை அன்பு செய்கின்றோம். நமக்கு ஏதாவது தீங்கு நேர்வதற்கு நாம் இடமளிக்கமாட்டோம். எமது உடலைக் காயப்படுத்தவோ அல்லது எமது உள்ளத்தைக் காயப்படுத்தவோ நாம் துணிய மாட்டோம்.
நாய் நன்றிக்கு உதாரண மிருகம். இறைவன் அது தூய்மை அற்றது என்று கூறக் காரணம் வேறு ஓரு நாயைக் கண்டதும் அன்பு செலுத்தாது. ஒன்றை ஒன்று வெறுத்து சண்டையிட்டு துரத்திவிடும். மற்ற நாய்களுடன் சேர்ந்து உணவு உண்ணும்போதும் சண்டை பிடிக்கும். இதற்கு காரணம் பேத உணர்வுதான். இதனால் ஐந்து அறிவுள்ள மிருகம் என்று கூறுகின்றோம் .
நம்மில் பலர் பிறரைப் பல விதத்திலும் காயப்படுத்துவதில் துணிச்சலுடன் செயற்படுவோம். பிறருக்கு ஏற்படும் துன்பம் பற்றி நாம் கவனத்திற் கொள்வதில்லை. நமக்கு ஏற்படும் வலிகள், துயரங்கள் போன்றே அவர்களுக்கும் நேரும் என்பதை அறிந்தும் நாம் அதையே செய்கிறோம். தூய்மையற்ற உள்ளமும் ,அறிவுமற்ற நாம் ஆறாம் அறிவு உள்ளவர்கள் என்று நாம் சொல்வது பொய்யாகும்.
உண்மையில் ஆறாவது அறிவு செயல் பட்டால் நாம் நம்மை அன்பு செய்வது போல பிறரையும் அன்பு செய்ய வேண்டும். நம்மைப்போன்றே நம் அயலாரையும் பேணி நடக்க வேண்டும். நம்மைப் படைத்த இறைவனை நாம் முழு உள்ளத்தோடும் முழு ஆன்மாவோடும் அன்பு செய்வதுபோல். அவன் படைப்புக்களின்மீதும் அன்பு செலுத்த வேண்டும்.உதவிபுரிய வேண்டும்.
அப்போதுதான்நாம் ஆறாம் அறிவுள்ள மனிதர்கள்.
இறைவனைவிட வேறு ஒன்று உள்ளதென்ற பேத உணர்வே இணை (ஷிர்க்) என்று இறைவன் வெறுக்கின்றான்.அவர்களுக்கே நிரந்தர நரகம்.
“அன்பு என்பது உங்கள் உறவினர்மீது மட்டும் செலுத்தபடுவதல்ல, அன்பு அனைவர்மீதும் செலுத்தப்படுவதாகும்”
மேலும் “நீங்கள் அன்பு செலுத்தாதவரை இறைநம்பிக்கையாளராக முடியாது.”
(நபிகள்நாய்கம் நூல் பத்ஹுல்பாரி)
எழாம் அறிவு வேதஞானம்.

மனிதனை ஏன் இறைவன் படைத்தான்?
மனிதனை சிறந்த படைப்பு என்று இறைவன் ஏன் கூறுகின்றான்?
எத்தேவையும் இல்லாத இறைவன் ஏன் வணங்குமாறு கூறுகின்றான்?
இறைசட்டங்களின் நோக்கம் என்ன?
மனிதன் அடையவேண்டிய இறுதி இலக்கு என்ன?
இவைகளை வேதத்தில் அறிந்து சிந்திக்க ஆராய முற்படும் போதுதான் மனிதன் முழுமை பெறுகின்றான்.அதுவே இறைஞானம் எழாம் அறிவு!!
2:269. தான் நாடியவருக்கு அவன் ஞானத்தைக் கொடுக்கின்றான்; (இத்தகு) ஞானம் எவருக்குக் கொடுக்கப்படுகிறதோ, அவர் கணக்கில்லா நன்மைகள் கொடுக்கப்பட்டவராக நிச்சயமாக ஆகி விடுகிறார்; எனினும் நல்லறிவுடையோர் தவிர வேறு யாரும் இதைச் சிந்தித்துப் பார்ப்பதில்லை. (குர்-ஆன்2:269.)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக