வியாழன், 17 மே, 2012

சீர்கெட்ட நாகரிக நடைமுறைகளுக்கு அமெரிக்காவில் தடை!.....?

தனது சிகை அலங்காரமாக தனக்கு விருப்பமான ஒரு விளையாட்டு விரரின் தோற்றத்தை தலையில் சிரைத்துக்கொண்ட ஒரு மாணவனுக்கு, அமெரிக்க பாடசாலையொன்று வகுப்புத்தடை விதித்துள்ளது.

முழு விபரம் அறிய இங்கே க்ளிக்குங்கள்.  

 'சுதந்திரம், மனித உரிமை.....' என்று வாய் கிழியக் கத்தும் அமெரிக்க நாகரிகத்திலும் இவ்வாறான விடயங்கள் பேணப்படுவதை நினைக்கும் போது ஆச்சரியமாக இருக்கிறது.

அதே நேரம், மேல் நாட்டு நாகரிகத்தைப் பின்பற்றி, எமது நாட்டிலும், மாணவர்கள் - விசேடமாக முஸ்லிம் மாணவர்கள் - ஒவ்வொரு விதமான சிகை மற்றும் உடை அலங்காரங்களுடன் பாடசாலைக்கு வருவதை, எமது பாடசாலை நிருவாகிகள் தடை செய்துள்ளார்களா? என்ற கேள்வியும் எழுகிறது. 

ஒழுக்கத்தை நடைமுறப் படுத்துவதற்காக நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு, மாணவர்களால் பல வேளைகளில் விடுக்கப்பட்ட அச்சுறுத்தல்களும் சவால்களுமே எமது நினைவுகளில் நிற்கின்றன.  

இதன் விளைவை இன்று நாம் பல முனைகளிலும் காண்கிறோம்.

பல இளைஞர்கள் தொழுகிறார்கள். ஆனால், அவர்களது தொழுகை, அவுரத்தை மறைத்தல் என்ற ஒரு முக்கியமான நிபந்தனையை பூர்த்தி செய்யத் தவறி விடுகிறது.  

குளிக்கப் போய் சேறு பூசிக்கொண்ட கதைதான் இது. 

'நவீன நாகரிகம் எல்லை மீறியுள்ளது' என்பதற்கு மிகச் சிறந்த உதாரணமாக மேலுள்ள செய்தி இருப்பதுடன்,  'அந்த நாகரிகத்தை வளர்த்தவர்களையே அது உறுத்துகிறது' என்ற உண்மையும் நமக்கு விளங்குகிறது.

நம்மையும் உறுத்திக்கொண்டிருக்கும் இந்த சீர்கெட்ட நாகரிக நடைமுறைகளுக்கு, 'தடை' , எங்கிருந்து, எப்போது வரும்?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக