கிரிக்கெட் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கிரிக்கெட் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 6 ஏப்ரல், 2012

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கு வயது 135


கிரிக்கெட் போட்டிகளின் பிரதான வகையான டெஸ்ட் போட்டி ஆரம்பித்து 135 ஆண்டுகள் பூர்த்தியடைகின்றது. 1877ஆம் ஆண்டு மார்ச் 15ஆம் திகதி அனைத்து இங்கிலாந்து அணிக்கும், நியூ சௌத் வேல்ஸ், விக்டோரியப் பிராந்தியங்கள் இணைந்த அணிக்குமிடையில் இடம்பெற்ற போட்டியே முதலாவது டெஸ்ட் போட்டியாகக் கருதப்படுகிறது.

சனி, 19 பிப்ரவரி, 2011

உலக கிண்ண கிரிக்கட் போட்டிகள் ஆரம்பம்.

உலக  கிண்ண கிரிக்கட் போட்டிகள் இன்று ஆரம்பமாகின. ஆரம்ப ஆட்டத்தில் பங்களாதேசம் இந்தியாவிடம் 87 ஓட்டங்களுக்குத் தோல்வி கண்டது. ஆட்டத்தின் விபரங்களை அறிய கீழுள்ள இணைப்பைக் "க்ளிக்" செய்யுங்கள்.

செவ்வாய், 7 செப்டம்பர், 2010

இலங்கை கிரிக்கெட் - ஆட்ட நிர்ணய சூதாட்ட சர்ச்சை

இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீதும், ஆட்ட நிர்ணய சூதாட்ட சர்ச்சை திரும்பியுள்ளது. அண்மையில் பாகிஸ்த்தானில் மூவர் ஸ்பார்ட் பிக்சிங் சூதாட்டம் செய்தது உறுதிப்படுத்தப்பட்டதால் ஐசிசி அவர்களுக்கு இடைக்கால தடை விதித்தது. மும்பையின் சூதாட்டக்காரர்கள் சிலர் எம்மை மேட்ச் பிக்ஸிங்கிற்காக அழைத்தது வங்கதேசம், அஸ்திரேலியா என்பனவும் பரபரப்பு புகார் கொடுத்தன.

இந்நிலையில் கடந்த வருடம் இங்கிலாந்தில் நடைபெற்ற டுவெண்டி20 உலக கிண்ண போட்டிகளின் போது, இலங்கை அணி வீரர் ஒருவரின் நடவடிக்கை தொடர்பில் சர்வதேச கிரிக்கெட் சபையின் ஊழல் எதிர்ப்பு பிரிவு கூர்ந்து கவனித்திருக்கிறது.

சட்டவிரோத சூதாட்ட முகவர் என சந்தேகிக்கப்படும் நபர் ஒருவருடன் இரவு நேரத்தில் அதிக நேரம் பழகிவந்ததை அடுத்து தமக்கு சந்தேகம் ஏற்பட்டதாக அப்பிரிவு முறையிட்டுள்ளதென த கார்டியன் இணையம் செய்தி வெளியிட்டுள்ளது.

இது தொடர்பில் கிரிக்கெட் சபை ஊழலுக்கு எதிரான பிரிவினரால் இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் குமார் சங்ககாரவிடம் தெரிவிக்கப்பட்டது. குறித்த வீரர் மீது உள்நாட்டு விசாரணை மேற்கொள்ளும் படி உத்தரவும் இட்டது.

எனினும், இவ்விசாரணையில் முன்னேற்றமில்லை என ஐசிசியின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஹாருன் லோகார்ட் இவ்விடயத்தில் தனது பொதுவான ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளார்.