பயனுள்ள தகவல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பயனுள்ள தகவல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 1 நவம்பர், 2012

உலகப் புகழ்பெற்ற லண்டன் நகரம்


டவர் பிரிட்ஜ்
லண்டன் இங்கிலாந்து நாட்டின் தலைநகரம். ஆம்! நம்மை ஆண்ட ஆங்கிலேயர் கப்பலேறிக் கையில் தராசு ஏந்தி வாணிபம் செய்ய இந்தியா புறப்பட்டது இங்கிருந்தான். லண்டன் இன்றும் பழமைமாறாமல் அதே வேளையில் புதுமைச் சிறப்புக்குன்றாமல் இருக்கிறது. சுமார் இரண்டாயிரம் ஆண்டுப் பழமை வாய்ந்தது எப்படி?

புதன், 24 அக்டோபர், 2012

சிந்தனைக்காக!


"முயற்சி இல்லாதவன் சந்தோசப்பட முடியாது. பொறுமை இல்லாதவன் இன்பங்களை அனுபவிக்க முடியாது. கஷ்டப்பட முடியாதவன் அருட்கொடைகளைப் பெற்றுக்கொள்ள மாட்டான். களைப்படைய முடியாதவன் ஓய்வை உணர மாட்டான். ஒருவன் சிறிது நேரம் களைப்படைந்தால் நீண்ட நேரம் ஓய்வெடுக்க முடியும். சில மணி நேரம் கஷ்டங்களைச் சகித்துக்கொண்டால் நிரந்தர வாழ்க்கைக்கு அது போதுமானதாகும்." நன்றி: பயணம் (இதழ் 35)

வெள்ளி, 19 அக்டோபர், 2012

துல் ஹஜ் ஆரம்ப நாட்களைப் பயன்படுத்திக் கொள்வது எப்படி?(அஷ்ஷெய்க் ஆஸாத் அப்துல் முஈத்)


அல்லாஹ்தஆலா அனைத்தையும் ஒரு தரத்தில் படைக்காது ஏற்றத்தாழ்வுடன் படைத்துள்ளான். சிலதை விட மற்றும் சிலதுக்கு சிறப்புக்களைக் கொடுத்துள்ளான். இந்த வகையில் மாதங்களில் புனித மாதங்களாக துல் கஃதா, துல் ஹிஜ்ஜா, முஹர்ரம், ரஜப் ஆகிய நான்கு மாதங்களையும் ஆக்கியுள்ளான். இவற்றில் துல் ஹஜ் மாதத்தில் புனித ஹஜ் கடமை வருவதனால் ஏனைய மாதங்களை விட இந்த மாதம் சிறப்பாகின்றது.

திங்கள், 18 ஜூன், 2012

உங்கள் மகளை/ மகனை படிப்பில்-பண்பில் சிறந்தவராக வளர்ப்பது எப்படி?

குழந்தைகளைக் கொடுத்த இறைவனுக்கு, இயற்கைக்கு நன்றி! ஏனென்றால், அவர்கள் நம் வாழ்வினைச் சந்தோசமாக்க குதூகலமாக்க வந்தவர்கள்! நம் சந்ததியை விருத்தி செய்ய வந்தவர்கள்! அவர்கள் தான் குடும்பத்தில் இணைப்புப் பாலங் கள். நம்மின் மறுபதிப்பு! நம் வாழ்வுத் தோட்டத்தில் பூத்த இனிய புது மலர்கள்!

புதன், 9 மே, 2012

உங்கள் உணவில் நீங்கள் உப்பையும் சர்க்கரையையும் குறைக்கிறீர்களா? இதயம் கவனம்!

அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பார்கள். அதேபோல உப்போ, சர்க்கரையோ, தேவையான அளவு இல்லாவிட்டாலும் அது ஆபத்துதான் என்கின்றனர் மருத்துவர்கள். உணவுப்பொருட்களில் உப்பு அதிகம் சேர்த்தால் உயர் ரத்த அழுத்தம் வரும் என்று பயமுறுத்துகின்றனர். இதை தவிர்க்க உப்பை குறைத்தாலும் இதயநோய் வரும் என்று சமீபத்திய ஆய்வு ஒன்று தெரியவந்துள்ளது.

ஞாயிறு, 15 ஏப்ரல், 2012

பொறுத்திருப்போம் இன்னொரு பைசல் பிறக்கும் வரை ...

"நாமும் எமது மூதாதையர்களும் பேரித்தம் பழம் உண்டும், பாலைக் குடித்தும் வாழ்ந்தவர்கள். மேற்கு நாடுகள் எமக்கு பொருளாதாரத் தடை விதித்தால் நாம் மீண்டும் பேரித்தம் பத்தோடும் பாலோடும் வாழ்ந்து கொள்வோம்"

 மன்னர் பைசல் (ரஹீமஹுல்லாஹ் ) அவர்கள் "இஸ்ரேலுக்கு" எதிரான ஒக்டோபர் யுத்தத்தின் போது, மேற்கு நாடுகளுக்கு "பெட்ரோல்" விநியோகிப்பதை "நிறுத்திய" போது சொன்ன பிரபல்யமான கூற்றுதான் இது.

வெள்ளி, 6 ஏப்ரல், 2012

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கு வயது 135


கிரிக்கெட் போட்டிகளின் பிரதான வகையான டெஸ்ட் போட்டி ஆரம்பித்து 135 ஆண்டுகள் பூர்த்தியடைகின்றது. 1877ஆம் ஆண்டு மார்ச் 15ஆம் திகதி அனைத்து இங்கிலாந்து அணிக்கும், நியூ சௌத் வேல்ஸ், விக்டோரியப் பிராந்தியங்கள் இணைந்த அணிக்குமிடையில் இடம்பெற்ற போட்டியே முதலாவது டெஸ்ட் போட்டியாகக் கருதப்படுகிறது.

திங்கள், 23 ஜனவரி, 2012

உலகிலேயே மிகப்பெரிய அல்குர்ஆன் ஆஃப்கானில்

largest-quranஉலகிலேயே மிகப்பெரிய அல்குர்ஆனின் கையெழுத்து பிரதி ஆஃப்கானில் வெளியிடப்பட்டது. 2.28 மீட்டர் நீளமும், 1.55 மீட்டர் அகலமும் கொண்ட திருக்குர்ஆன் 500 கிலோ எடை கொண்டது. 218 தாள்கள் உள்ளன. 5 லட்சம் டாலர் செலவான இந்த அல்குர்ஆன் பிரதி உலகிலேயே மிகப்பெரியது என ஆஃப்கானிஸ்தானின் ஹஜ் மற்றும் மார்க்க விவகாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

கொகா கோலா ரகசியம் மக்களே உஷார்! உஷார் !!


மக்களே உலக குளிர்பான வரலாற்றில் ஒரு மைல்கல் என்று வர்ணிக்கப்படும் கொகா கோலா குளிர்பானத்தின் ரகசிய பார்முலா வெளியாகியுள்ளது.

ஞாயிறு, 18 டிசம்பர், 2011

கண்மூடித்தனமான பின்பற்றல்.....

ஒரு தாயும் ஒரு மகளும் சமையலறையில் சமையல் வேலையில் ஈடுபட்டிருந்தார்கள். 'சொஸேஜஸை' கழுவி சுத்தப்படுத்திய தாய், அதனை சமைக்கும் பாத்திரத்தினுள் இடும் போது, இரு நுனிகளையும் வெட்டி விட்டாள்.

மகள் கேட்டாள்

வியாழன், 14 ஜூலை, 2011

கலப்புக் கல்வி தொடர்பிலான ஒரு பத்வா

ஆண், பெண் கலந்து கல்வி கற்பது தொடர்பில் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு ஷெய்க் பின் பாஸ் அவர்கள் வழங்கிய பதிலை, முஸ்லிம் சமூகத்தின் நன்மை கருதி இங்கு பிரசுரிக்கிறோம். தமிழில் மொழியாக்கம் செய்ய நேரம் இடம் கொடுக்காததால் ஆங்கிலத்திலேயே வெளியிடுகிறோம். தமிழ் பிரசுரம் விரைவில் வெளிவரும் இன்ஷா அல்லாஹ்.

ஞாயிறு, 17 ஏப்ரல், 2011

நோன்பும் சுக வாழ்வும்

நோன்பு முஸ்லிம்களாகிய நமக்கு ஒரு புனித அமல். இறைவனின் கட்டளை என்பதற்காக அதன் நன்மைகளைப் பற்றி அறியாமலேயே நாம் நோன்பு வைக்கிறோம். ஆனால், வல்ல நாயன் நோன்பின் மூலம் நமக்கு தரும் நன்மைகள், ஏராளம், ஏராளம்! அவற்றுள் சில இதோ... 

 நோன்பு என்றவுடன் உடலுக்கு தீங்கு விளைவிக்கும், சத்து குறைந்து போகும், உடல் மெலிவு உண்டாகும் என்று பல வகைகளில் கருதுபவர்கள் உண்டு. இயற்கை மருத்துவத்தில் நம்பிக்கை கொண்ட பலர் நோன்பை சீராக கடைப் பிடித்து, நோயின் தாக்குதலின்றி ஆரோக்கியமாக வாழ்ந்து கொண்டிருப்பது உண்மை.

செவ்வாய், 12 ஏப்ரல், 2011

THE TEN PRICIPLES OF SUCCESS

1. Begin from the possible
2. Find the advantage in every disadvantage
3. Change the place of action
4. Find the good in people
5. Turn a negative into positive
6. The power of peace is stronger than violence
7. Don't be a dichotomous  thinker
8. Bring the battle to your field
9. Gradualism instead of radicalism
10. Be progmatic in controversial matters (www.alrisla.org)

வியாழன், 17 மார்ச், 2011

பலன் எதிர்பாரா நற்செயல் பலன் தரும்

ஒரு முறை ஒரு மன்னரும் அவர் அமைச்சரும் மாறுவேடத்தில் நகரை வலம் வந்தனர்.

அப்போது வயதான முதியவர் ஒருவர் பழச்செடி ஒன்றை நடுவதைக் கண்டனர்

மன்னர் முதியவரை நெருங்கிதாங்கள் மரணத்தை நெருங்கும் முதியவராக இருக்கிறீர்இந்த செடி மரமாய் வளர்ந்து பழத்தை நீங்கள் உண்ணவா போகிறீர்கள் ...... இச்செடியின் பழத்தை உண்ணும் அளவுக்கு வாழ பேராசை ஏன்? என்றார்

அம்முதியவரோஇப்படி ஒவ்வொருவரும் பல ஆண்டு கழித்து விளையும் கனியை நாம் உண்ணவாப் போகிறோம் என்று எண்ணி செடிகளை நடாமல் இருந்தால் பூமியில் பழ மரங்கள் உண்டாகுமா என்றார்

அதைக் கேட்டு மகிழ்ந்த மன்னர் அவருக்கு ஒரு பொன்முடிப்பு தந்தார்

அப்போது அந்த முதியவர் என் செடி எனக்கு பலனளிக்குமா என்றீர்களே இதோ பாருங்கள் உடனே பலன் தந்துவிட்டதே என்றார்

அதைக் கேட்டு மகிழ்ந்த மன்னர் அவருக்கு மீண்டும் ஒரு பொன்முடிப்பு தந்தார்

அப்போது அந்த முதியவர் ஒரு மரம் வருடத்தில் ஒரு முறை தான் கனி தரும் ஆனால் நான்  நட்ட இந்த செடியோ ஒரே நேரத்தில் இரண்டு முறை பலன் அளித்து விட்டதே என்றார்

அதைக் கேட்டு மகிழ்ந்த மன்னர் மூன்றாம் முறையாக அவருக்கு ஒரு பொன்முடிப்பு தந்தார்

பிறகு தன் அமைச்சரிடம் “இந்த இடத்தில் நாம் இருந்தால் இந்த முதியவர் இப்படி புத்திசாலித்தனமாகப் பேசிப் பேசியே நம் மொத்த கஜானாவையும் காலி செய்திடுவார் “ என்று சொல்ல இருவரும் அந்த இடத்தை விட்டு அகன்றனர்

இக்கதையிலிருந்து  ”பலன் எதிர்பாராமல்  செயல் நற்செயல் உடனே பலன் தரும்என்பதாகும்

கதை வடிவில் எழுதியவர்– கமால் Kamal

சனி, 5 மார்ச், 2011

மன அழுத்த வீதம் ஆண்களிடையே அதிகம்

தமது வாழ்வில், ஆண்களை விட பெண்கள் இரண்டு மடங்கு மன அழுத்தத்துக்கு உள்ளாகின்றனர் என்ற கருத்து பரவலாக இருந்த போதிலும், மேலை நாடுகளில் தற்போது ஏற்பட்டு வரும் சமூக, பொருளாதார மாற்றங்களினால் இந்த நிலை துரிதமாக மாற்றமடைந்து வருவதாக ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.

ஆண்கள் குடும்பத்தின் பொருளாதார அச்சாணியாக இருந்த வழமை, இப்போது, பெண்கள் பட்டப் படிப்புகளை மேற்கொள்வதாலும், உயர் பதவிகள் வகிப்பதாலும், ஏன், உற்பத்தித் துறைகளில் தொழில் புரிவதாலும் பாரிய மாற்றமடைந்துள்ளது. ஆண்களின் தொழில் வாய்ப்புகள் இதனால் வெகுவாகக் குறைந்துள்ளன.

எனவே, பெண்கள் வருமானம் ஈட்டுவதில் முனைப்புடன் செயல்படும் வீதத்துக்கு ஏற்ப, ஆண்களிடையே மன அழுத்தம் அதிகரிக்கும் வீதமும்  கூடும்  என இந்த ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.

வெள்ளி, 25 பிப்ரவரி, 2011

படி, போராடு, சேவை செய்!

இன்று, உற்பத்திக் காரணிகளில் முக்கியத்துவம் வாய்ந்த உற்பத்திக் காரணியாக அறிவு (நொலேஜ்) மாறி இருக்கிறது. ஒரு காலத்தில் நிதி மூலதனம், உழைப்பு, ஊதியம் முதலான உற்பத்திக் காரணிகள் பெற்ற முக்கியத்துவத்தை விடப் பன்மடங்கு முக்கியத்துவம் உள்ளதாக அறிவு மாறியுள்ளது. அதனால்தான் இன்றைய உலகில் முதன்மை பெறுபவர்களாக, ஜாம்பவான்களாக இருப்பவர்கள் 'நோலேஜ் வேர்க்கர்ஸ்' என்று சொல்லப்படுகின்ற அறிவுத்துறையிலே தேர்ச்சி பெற்றவர்கள்தாம் என்பதை நாம் அறிவோம். இன்றைய உலகில் செல்வந்த நாடுகளைப் பார்க்கிறபோது அந்த நாடுகளின் வருமானத்திலே 85 விழுக்காடு அறிவின் மூலம் பெறப்படுகிறது. ஒரு 15 விழுக்காடு வருமானம்தான் ஏனைய பாரம்பரிய உற்பத்திக் காரணிகளின் ஊடாகப் பெறப்படுவதை நாம் பார்க்கிறோம். எனவே ஒரு சமுதாயம் முன்னேற வேண்டுமா, ஒரு சமுதாயத்தின் பொருளாதார நிலை சீராக வேண்டுமா, தார்மிக, ஆன்மிக, ஒழுக்கப் பண்பாட்டு நிலை சீராக வேண்டுமா அதற்கு வழி அந்தச் சமுதாயத்தின் இளைஞர்கள் படித்தவர்களாய் உருவாவதுதான். அது தவிர மாற்றுவழி கிடையாது.

'படி, போராடு, சேவை செய்' என்ற தலைப்பில் அஷ்ஷெய்க் அகார் முஹம்மத் அவர்கள் ஆற்றிய உரையிலிருந்து ...........

செவ்வாய், 1 பிப்ரவரி, 2011

போலியான வீடியோ பதிவுகளை உருவாக்கும் முயற்சியில் CIA உளவு பிரிவு!

இஸ்லாம்  சார்த்த அமைப்புகளையும் நபர்களையும்   மிகவும் கேவலமாகவும் பயங்கரமாகவும்  சித்தரிக்க  போலியான நாடகங்களை அரங்கேற்றி வருவது CIA உளவு அமைப்பில் கடமையாற்றிய உறுப்பினர்கலாலேயே அவ்வப்போது  வெளிப்படுத்தப்  பட்டுவருகின்றது. முன்னால் CIA உளவுத்துறை நிபுணர்கள் தமது அனுபவங்களை  வெளியிட்டு வருகின்றனர். அண்மையில் வெளிப்படுத்தப்பட்ட   தகவல்களை  நீண்டகால புலனாய்வு ஊடக அனுபவம் கொண்டவரான ஜெப்  ஸ்டீன்    Jeff Stein- மேலும் வெளிச்சத்துக்கு கொண்டுவந்துள்ளார்.

வியாழன், 27 ஜனவரி, 2011

புவிக்கு இரண்டாவது சூரியன்? ஓரிரு வாரங்களுக்கு இரவும் பகலாகலாம்!

பூமிக்கு மற்றொரு சூரியன் சீக்கிரத்தில் உதிக்க இருப்பதாக இணையங்கள் வாயிலாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சூரியன் குறைந்தது ஒரு வாரமாவது வானத்தில் பிரகாசிக்கும் என்று அவிஸ்திரேலியாவின் தென் குயீன்ஸ்லாந்து பல்கலைக் கழகப் பேராசிரியரான பிராட் காட்டர் கூறினார்.

ஞாயிறு, 23 ஜனவரி, 2011

மாவீரன் நெப்போலியன் இஸ்லாத்தில் !?

அன்பான வாசகர்களே! இதில் நீங்கள் வாசிக்கப் போகும் நெப்போலியன் தொடர்பான - அவர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார் என்ற - விடயம் உண்மயில்  வெறுமனே ஒரு கதையல்ல; மாற்றமாக ஒரு நிஜம்; இதுகாலவரை வெளியிடப்படாத ஒரு நிஜமான நிஜம். 2000ம் ஆண்டு இந்திய சஞ்சிகையான "சமரசத்தில்" வெளி வந்தது. இந்த வரலாற்று உண்மையை இதோ உங்களோடும் பகிர்ந்து கொள்கிறேன்.

சனி, 22 ஜனவரி, 2011

சட்டத்தின் முன்னே

அப்பாஸியப் பேரரசின் முதல் கலீபாவான அபுல் அப்பாஸ் அஸ்ஸப்பாஹ்வின் சகோதரர் அபூ ஜ ஃபர் அல்-மன்ஸூர் (இவரும் அப்பாஸியப் பேரரசின் கலீபாவாக இருந்தவர்) ஒரு சமயம் ஒரு பிரயாணத்தில் ஈடுபட்டார். இடையே ஓரிடத்தில் இரவு தங்கவேண்டி ஏற்பட்டது. எனவே அங்குள்ள விடுதியொன்றை அணுகினார்.