வாழ்வும் விஞ்ஞானமும் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வாழ்வும் விஞ்ஞானமும் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 28 ஆகஸ்ட், 2012

தேனின் மருத்துவ குணங்கள்


தேன், தேன், தேன்!
உன்னைத் தேடி அலைந்தேன்.........

தேன் மிகசிறந்த உணவு பொருளாகும். தேன் மூலம் எல்லா நோய்களையும் குணப்படுத்த முடியும். தேனை பொதுவாக வயிற்றின் நண்பன் என கூறுவது உண்டு. தேன் வயிற்றில் உருவாகும் அழற்சி, புண், பித்தப் பை மற்றும் ஈரல் நோய்கள் அனைத்திறக்கும் மருந்தாக உள்ளது. தினமும் வெறும் வயிற்ட்ருடன் காலை அல்லது இரவு நேரத்தில் உணவு உண்பதற்கு முன் சுத்தமான தேனை ஒன்று முதல் மூன்று தேக்கரண்டி தேனை எடுத்து கொண்டு ஆறிய சுடு தண்ணியுடன் அதை கலந்து அருந்தி வர வேண்டும். இவ்வாறு செய்தால் இரைப்பை அழற்சி ஈரல், வயிற்று புண், பித்தப்பை நோய்கள் குணமாகும்.
தேன் இரைப்பையில் அளவுக்கு அதிகமாக சுரக்கும் அமிலத்தின் தன்மையை கட்டுப்படுத்துகிறது , இதனால் வயிற்றுப் புண்ணிற்கு அமிலத்தால் ஏற்படுத்தப்படுகிற தூண்டுதலை குறைத்து, வயிற்று வலி மற்றும் எரிச்சலை நீக்குகிறது
எலுமிச்சம் பழச்சாறுடன் தேனை கலந்து அருந்தினால் குமட்டல், வாந்தி, மற்றும் தலை வலி சரியாகும்.
கண்பார்வை பிரகாசமாக தெரியத் தேனுடன் வெங்காயச் சாரைக் கலந்து சாப்பிட்டு வரவேண்டும். தேனுடன் முட்டை மற்றும் பாலைக் கலந்து சாப்பிட்டால், ஆஸ்துமா உபாதையிலிருந்து தப்பலாம

சூரியனைப்பற்றிய அறிவியல் தகவல்கள்


சூரியனைச் சுற்றியுள்ள வெளிப்பகுதி மூன்று படலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. அவை வருமாறு:

1. போட்டோ ஸ்பியர்
2. குரோமோ ஸ்பியர்
3. கொரோனா

சூரியனை ஒரு டென்னிஸ் பந்தாக கருதினால் அதைச் சுற்றிக் காணப்படும் திசுப் பேப்பரை விட அடர்த்தி குறைந்தது இப்படலம் என கணிக்கப் பட்டுள்ளது. இதன் தடிப்பும் 500  இலும் குறைந்தது ஆகும்.

ஞாயிறு, 18 டிசம்பர், 2011

கண்மூடித்தனமான பின்பற்றல்.....

ஒரு தாயும் ஒரு மகளும் சமையலறையில் சமையல் வேலையில் ஈடுபட்டிருந்தார்கள். 'சொஸேஜஸை' கழுவி சுத்தப்படுத்திய தாய், அதனை சமைக்கும் பாத்திரத்தினுள் இடும் போது, இரு நுனிகளையும் வெட்டி விட்டாள்.

மகள் கேட்டாள்

ஞாயிறு, 17 ஏப்ரல், 2011

நோன்பும் சுக வாழ்வும்

நோன்பு முஸ்லிம்களாகிய நமக்கு ஒரு புனித அமல். இறைவனின் கட்டளை என்பதற்காக அதன் நன்மைகளைப் பற்றி அறியாமலேயே நாம் நோன்பு வைக்கிறோம். ஆனால், வல்ல நாயன் நோன்பின் மூலம் நமக்கு தரும் நன்மைகள், ஏராளம், ஏராளம்! அவற்றுள் சில இதோ... 

 நோன்பு என்றவுடன் உடலுக்கு தீங்கு விளைவிக்கும், சத்து குறைந்து போகும், உடல் மெலிவு உண்டாகும் என்று பல வகைகளில் கருதுபவர்கள் உண்டு. இயற்கை மருத்துவத்தில் நம்பிக்கை கொண்ட பலர் நோன்பை சீராக கடைப் பிடித்து, நோயின் தாக்குதலின்றி ஆரோக்கியமாக வாழ்ந்து கொண்டிருப்பது உண்மை.

ஞாயிறு, 27 மார்ச், 2011

காற்று

ஆழமாக ஒரு முறை சுவாசியுங்கள். உங்களது நெஞ்சு எப்படி விரிவடைகிறது? நீங்கள் சுவாசித்த காற்றினால் நுரையீரல்கள் நிரம்புவதால்தான் நெஞ்சு விரிவடைகிறது. காற்றை உங்களால் காண முடியாது. என்றாலும், உங்களைச் சுற்றி காற்று உண்டு. காற்றடிக்கும் வேளைகளில் காற்று இருப்பதை நாம் உணரலாம்.

சனி, 30 அக்டோபர், 2010

விஞ்ஞானப் பேராசிரியரும் ஒரு மாணவனும்

அல்லாஹ் பற்றிய ஓர் உரையாடல்

ஒரு நாத்திக விஞ்ஞானத்துறைப் பேராசிரியர், தமது வகுப்பில் புதிதாக சேர்ந்த ஒரு முஸ்லிம் மாணவனுடன் உரையாட விரும்பி, அந்த மாணவனை எழுப்பினார்.

Professor : நீங்கள் ஒரு முஸ்லிம், இல்லையா ?   
Student : ஆம், ஸேர்.
Professor : அப்படியென்றால், உங்களுக்கு அல்லாஹ் மீது நம்பிக்கை இருக்கிறது ?

செவ்வாய், 1 ஜூன், 2010

படைப்புகளில் இறை அத்தாட்சி


மாவனல்லை Tharbiya Centre இல் மாதாந்தம் நடைபெறும் Akeeda வகுப்பில் DR. MSM Faique அவர்கள் "படைப்புகளில் இறை அத்தாட்சி"  எனும் தலைப்பில்  நிகழ்த்திய விளக்க வகுப்பிலிருந்து ஒரு பகுதியை இங்கு தருகிறோம்.

இதன் தொடர்சியை முழுமையாக பெற்றுக்கொள்ள தொடர்பு கொள்ளுங்கள்.....


நன்றி: அன்வர் ஸதாத்

செவ்வாய், 18 மே, 2010

ஸலாம் சொல்வோம்.



ஸலாம் எனும் பதம் உண்மையில் சாந்தி, சமாதானம் எனும் கருத்துகளில் பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டாலும் சமனிலை எனும் கருத்தும் அதற்கு உண்டு என்பதை அறபு  மொழி நிபுணர்கள் அறிவர். யதார்த்தத்தில் சாந்தி சமாதானம் என்பன கூட சமனிலை எனும் ஆழ்ந்த கருத்தையே உணர்த்தும் என்பதையும் சிந்தனைத் தெளிவு உள்ளவர்கள் சிறப்பாக உணர்ந்துகொள்வர்.
ஒரு குறிப்பிட்ட இடத்தில் வாழும் மக்களிடையே பிரச்சினை ஏற்படுகிறது என்பதன் பொருள் அவர்களிடையே சமாதானம் இல்லாமையே என்பது வெளிப்படை உண்மை.  பிரச்சினையில் சம்பந்தப் பட்டவர்கள் தத்தமது கடமைகளில் , பொறுப்புகளில் தவறுவிடும்போதுதான் இந்த நிலை ஏற்படுகிறது . அதாவது தனக்குறிய கடமையை குறைவகவோ அல்லது மேலதிகமாகவோ நிறைவேற்ற விளையிம்போதுதான் பிரச்சினை தலைகாட்ட ஆரம்பிக்கிறது. 
அதாவது நிர்நயிக்கப்பட்ட அளவைவிட கூடுவது அல்லது குறைவதுதான் குழப்பத்தின் மூலம். எனவே குழப்பம் அல்லது பிர்ச்சினை நீங்கவேண்டுமாயின்   (சாந்தி சமாதானம் ஏற்பட வேண்டுமாயின்) தனக்குறிய நிர்ணயிக்கப்பட்ட அளவை கூடாமலும் குறையமலும் பேணவேண்டியது அத்தியாவசியமாகும். மற்றொரு வார்த்தையில் சொல்வதானால் தனக்குறிய விடயங்களில் சமனிலயைப் பேணவேனண்டும்.

இந்த அடிப்படையில் சமாதானம் நிலவ சமனிலை அவசியம் என்பது தெளிவாகியிருக்கும். அதேபோல் சமனிலைதான் சமாதனம் என்பதும் புலனாகியிருக்கும்.

இன்ஷா அல்லாஹ் மேலும் சில விளக்கங்களுடன் மீண்டும் பதியும்வரை ...
அனைவருக்கும் சாந்தி எனும் சமனிலை அல்லாஹ்வின் புற்த்த்இல் இருந்து கிடைக்க வேண்டும் என வேண்டி விடைபெறுகிறேன்.

நன்றி.
வஸ்ஸலாம்.
  
Aboo Azma