வியாழன், 14 ஜூலை, 2011

கலப்புக் கல்வி தொடர்பிலான ஒரு பத்வா

ஆண், பெண் கலந்து கல்வி கற்பது தொடர்பில் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு ஷெய்க் பின் பாஸ் அவர்கள் வழங்கிய பதிலை, முஸ்லிம் சமூகத்தின் நன்மை கருதி இங்கு பிரசுரிக்கிறோம். தமிழில் மொழியாக்கம் செய்ய நேரம் இடம் கொடுக்காததால் ஆங்கிலத்திலேயே வெளியிடுகிறோம். தமிழ் பிரசுரம் விரைவில் வெளிவரும் இன்ஷா அல்லாஹ்.

வியாழன், 7 ஜூலை, 2011

கஹடோவிட மகளிர் கல்லூரியின் பிறிதொரு சாதனை

சமீபத்தில் நடைபெற்ற மாகாண மட்டங்களுக்கிடையிலான கணிதப் போட்டியில் கஹடோவிட மகளிர் கல்லூரி மூன்று முதலிடங்களைப் பெற்று அகில இலங்கை ரீதியாக நடைபெற இருக்கும் தேசிய கணிதப் போட்டிக்குத் தெரிவாகியுள்ளது. மேற்படி சாதனைகளைப் புரிந்து பாடசாலைக்கும்  ஊருக்கும் பெருமை தேடித்தந்த சகோதடிகளான; எம்.ஏ.எப். பஹ்ஜத்(தரம் 6), எம்.எஸ்.எப். ஸமீரா (தரம் 9), ஏ.ஆர்.எப். மித்ஹா (தரம் 10) ஆகியோரை நாம் மனதார வாழ்த்துகிறோம்.

கம்பகா வலய-மட்ட ஆரம்பப் பிரிவுப் போட்டிகள் - 2011

2011ம் ஆண்டில் ஆரம்பப் பிரிவுகளில் தமிழ் மொழி மூலம் கல்வி கற்கும் கம்பஹா வலய மாணவ மாணவியருக்கான ஆரம்ப தினப் போட்டிகள் இன்று 07.07.2011. புதன் கிழமை காலை 9.00 மணியளவில் கஹடோவிட முஸ்லிம் மகளிர் கல்லூரியில்கோலாகலமாக

ஞாயிறு, 3 ஜூலை, 2011

அல் ஹிமா கல்வி நிறுவனத்தில் A/L உயர்தர கலை, வர்த்தக பாடங்கள் ஆரம்பம்


A/L உயர் தர மாணவர்களுக்கான கலை, வர்த்தக பாடங்களுக்கான பிரத்தியேக வகுப்புக்களை நடாத்துவதற்கான பூர்வாங்க ஏற்பாடுகளை மேற்கொள்வது தொடர்பான ஓர் அங்குரார்ப்பணக் கூட்டம்

பைத்துல் முகத்தஸ்


நீண்ட பெரும் வரலாற்றுப் பாரம்பரியத்தைக் கொண்ட பலஸ்தீனிலுள்ள ஜெரூஸலம் நகரில் அமைந்துள்ள இறையருள் பெற்ற இறை இல்லமே பைத்துல் முகத்திஸ் மஸ்ஜிதாகும். இதனை பைதுல் மக்திஸ் எனவும் குறிப்பிடுவது வழக்கம். இதன் கருத்து தூய இல்லம், புனித இல்லம் என்பதாகும். இங்கு நபி ஸுலைமான் (அலை), தான் வாழ்ந்த காலத்தில் ஓர் இறையில்லத்தை நிறுவினார்கள். அந்த இறையில்லத்தை அன்றைய  ஹீப்ரு மொழியில் "பெத்ஹம்மிக்தாஷ்" எனப் பெயரிட்டு அழைத்தனர். அப்பெயரே அரபு மொழியில் பைத்துல் முகத்தஸ் என ஆயிற்று. காலப்போக்கில் இந்தப் புனித இல்லம் அமைந்திருந்த முழுப் பிரதேசமும் இப்பெயராலேயே அழைக்கப்படலாயிற்று. பொதுவாக இந்த மஸ்ஜிதை அல் அக்ஸா அல்லது மஸ்ஜிதுல் அக்ஸா எனவும் அழைப்பர்.