சனி, 28 ஏப்ரல், 2012

சவூதி அரேபியப் பெண்களுக்கு வாக்களிக்கும் பூரண உரிமையும்,தனியாக அலுவலகங்களுக்கு சென்றுவரக்கூடிய உரிமையும் வழங்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் பாராளுமன்றம் அறிவிப்பு.


சவூதிஅரேபியா, பெண்களுக்கு 2015ஆம் ஆண்டு மாநகரசபைத் தேர்தல்களில்வாக்களிக்க ஆண் துணையொன்றின் அங்கீகாரம் அவசியப்படாததுடன், அலுவலகங்களுக்குத் தனியாகச் சென்று வரக்கூடிய உரிமையும் வழங்கப்பட்டுள்ளதாகசவூதி அரேபியா உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
சவூதி அரேபியாவின்தலைவர் மன்னர் அப்துல்லாஹ் அவர்களாலேயே,சவூதிப் பெண்களுக்கு
இவ் உரிமைகள வழங்கப்பட்டுள்ளதாக சூரா கவுன்ஸிலின் உறுப்பினர் ஒருவரானபஹத் அல் அன்ஸி பத்திரிகையொன்றுக்குத் தெரிவித்தார். மன்னர் அப்துல்லாஹ்வால்பெண்களுக்கு திறந்த தேர்தல்களில் மாத்திரமே வாக்களிப்பதற்கான உரிமையைவழங்கும் வரலாற்று ரதியான முடிவு எடுக்கப்பட்டுள்ளது.ஆண் பாதுகாவல் துணையின்றி பெண்களுக்கு தனியாக பயணம்செய்தல்,தொழில்செய்தல், வெளிநாடுகளில் சென்று படித்தல்மற்றும் பொதுவைத்தியசலைகளில் அனுமதிப்பத்திரம் பெறல் போன்றபாரம்பரியரிய ஆண் பாதுகாப்புத் துணை சட்டங்களில் மீண்டும் பாரிய மாற்றங்கள் இடம்பெற்றுள்ளன. சவூதி அரேபிய மிக முக்கியமான இஸ்லாமிய நாடாகவுள்ளதுடன்
அங்கு பராம்பரிய பழங்குடிமக்களின் மரபுரீதியான வழிமுறைகள் இன்னும் தொடர்ச்சியாக நடந்துவருகின்றன.


சவூதி அரேபியப் பெண்களுக்கு வாக்களிக்கவும்,அனுமதியின்றி வெளியில் செல்லவும்அனுமதி வழங்கப்பட்டுள்ளது பற்றி அறிவிக்கப்பட்டது முதல்,இது பற்றிய வாதப்பிரதிவாதங்கள் தோண்றியுள்ளதாக ரியாத்தைச் சோந்த வரலாற்றுத்துறை
பேராசிரியரான ஹதூன் அல் பாஸி தெரிவித்துள்ளார்.மேலும் பெண்களுக்கு வாகனங்கள்செலுத்தும் உரிமை வழங்குமாறும்,ஆண் பாதுகாப்புத்துணை சட்டத்தை இரத்துச்செய்யுமாறும், பெண்களுக்கு பல உரிமைகளைப் பெற்றுத்தருமாறும், சமூக சீர்திருத்தத்தை மேற்கொள்ளுமாறும் கோரி பேராசிரியர் ஹாதூன் உட்பட பலபெண்கள் சவூதி அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுத்துவருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக