கஹட்டோவிட்ட முஸ்லிம் பாலிகா வித்தியாலயத்தில் இரவு நேர காவல் பணி புரியும் தொழிலாளி 'தமது பணியை சரியாக செய்வதில்லை' என்ற முறைப்பாடு பல காலமாக முன்வைக்கப்பட்டு வருகிறது.
இந்த காவல் பணி, மாலை 6.00 மணி முதல் மறுநாள் காலை 6.00 மணி வரை இடம்பெற வேண்டும். இருந்தும், குறித்த காவல் தொழிலாளி, குறித்த நேரத்துக்கு வராமல் மிகவும் தாமதமாகி வருவதாகவும், அதிலும் சில போது, பணிக்கு வராமலேயே வருகை இடாப்பில் தமது வரவைப் பதிந்து, சம்பளத்தை மட்டும் சரியாகப் பெறுவதாகவும் தகவல்கள் கசிந்த வண்ணம் உள்ளன.
அரசாங்கம் நிரந்தரமாகத் தொழில் வழங்கி, சம்பளம் கொடுப்பது இவ்வாறு பொறுப்பின்றி நடந்து கொள்ளவா? குறித்த இந்தத் தொழிலாளி, இந்தப் பாடசாலை அதிபரின் கீழ் நிருவகிக்கப் படுபவர் எனின், அதிபர் இதில் கவனம் செலுத்துவதில்லையா? பாடசாலையின் அபிவிருத்திச் சங்க உறுப்பினர்களுக்கு இந்த விடயத்தில் அக்கறை இல்லையா? அல்லது தூங்குகிறார்களா?........ என்று விபரம் தெரிந்த பலர் விசனம் தெரிவிக்கத் தொடங்கியுள்ளனர்.
இந்தப் பாடசாலையின் பிரதான நோக்கங்களுக்கும் அதன் கல்விசார் நடவடிக்கைகளுக்கும் இந்தக் காவல் தொழிலாளியின் பிரச்சினை பாரிய ஒரு தடையாக இல்லாத போதும், இது, வெற்றிநடை போட்டு முன்னேறிவரும் இந்தப் பாடசாலையின் வளர்ச்சிக்கும் அதன் நிருவாகத்துக்கும் ஒரு "எச்சமாக" இருக்கலாம் என்பதே எமது கவலை.
பொறுப்பு வாய்ந்தவர்களே! இது உங்கள் கவனத்துக்கு.......
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக